திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் சி.பி. சிற்றரசு. சுயமரியாதை இயக்கத் திலும், நீதிக்கட்சியிலும் பணியாற்றிய ‘சின்னராசு’ என்ற இயற்பெயர் கொண்ட சிற்றரசு, எழுச்சி மிக்க தம் எழுத்துகளாலும் பேச்சுகளாலும் சிந்தனைச் சிற்பியாக அறியப்பட்டார். உலக வரலாறுகளைத் தேடித் தேடிப் படித்து அவற்றை உணர்ச்சியூட்டும் தம் வலிமையான எழுத்து நடையால் தமிழ் மக்களுக்கு உவப்புடன் வழங் கினார். அருள்பாரதி பதிப்பகம் அவருடைய படைப்புகளை ஆறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது.

முதல் தொகுதியில் உலக மதங்கள் என்ற வரிசையில் இந்து, ஜைனம், புத்தம், கிருத்துவம், சோரோஸ்டிரியம் உள் ளிட்ட மதங்கள் ஆராயப்பட்டுள்ளன. உலகைத் திருத்திய உத்த மர்கள் என்ற வரிசையில் சாக்ரடீசு, சன்யாட்சன், மார்க்சு, முகமது நபி, கரிபால்டி உள்ளிட்டோர் வரிசைப்படுத்தப் பட்டுள்ளனர். புரட்சி செய்த ‘பேனா வீரர்கள்’ என்ற தலைப் பில் ரூசோ, வால்டேர், எமிலிஜோலா உள்ளிட்டோர் காட்டப் பட்டுள்ளனர்.

இரண்டாம் தொகுதியில் ‘விஷக் கோப்பை’ என்ற தலைப்பில் சாக்ரடீசின் வரலாறும், ‘சாய்ந்த கோபுரம்’ என்ற தலைப்பில் மாவீரன் மாஜினியின் வரலாறும் சொல்லப் பட்டுள்ளன.

மூன்றாம் தொகுதியில் மார்டின் லூதர், கவுதம புத்தர், கொலம்பஸ் முதலிய மாமனிதர்கள் நம் கண் முன்னே உயிர் பெற்ற வரலாற்று நாயகர்களாக நிறுத்தப்படுகின்றனர்.

நான்காம் தொகுதி முழுவதிலும் பிரஞ்சு நாட்டின் புகழ்பெற்ற புரட்சி எழுத்தாளர்எமிலி ஜோலாவின் வரலாறு இரண்டு பாகங்களாகப் பீடுமிக்க நடையில் சொல்லப்பட்டுள்ளது.

அய்ந்தாம் தொகுதியில் அடிமை விலங்கொடித்த விடு தலை வீரன் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் கைவிளக்கேந்திய காரிகையார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆகிய பெருமக்களின் வாழ்வு பேசப்படுகிறது. சி.பி. சிற்றரசுவின் சிந்தனை முத்துக் களும் இந்நூலின் இறுதிப் பகுதியில் கோக்கப்பட்டுள்ளன.

ஆறாம் தொகுதியில் ‘தங்க விலங்கு’ என்று வரலாற்றுக் கற்பனை நாடகம் பார்ப்பனியப் பசப்புகளால் முடியாட்சிகள் எங்ஙனம் வேரற்று முறிந்து வீழ்ந்தன என்கிற வரலாற்றைச் சுவைபடச் சொல்கிறது. ‘சீனத்தின் குரல்’ என்ற தலைப்பில், விரிவான சீன வரலாறு குறுகத் தரித்த குறள் போலக் குன்றாச் சுவையுடன் கூறப்பட்டுள்ளது.

மொத்தத் தொகுப்புகளின் விலை ரூ.500/-.

நூல்கள் பெற : தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்

4/11. சி.என்.கே. சந்து, சேப்பாக்கம், சென்னை - 5.

பேச : வாலாசா வல்லவன்

7299214554. 9444321902, 044-30066564