தந்தை பெரியாரிடம் 1938 முதல் 1973 டிசம்பரில் அவர் மறையும் வரை அணுக்கத் தொடர்பு கொண்டி ருந்தவரும் 1950 முதலாகத் தோழர் வே. ஆனை முத்துவிடம் நெருங்கிய தோழமை கொண்டவரும், திருச்சியில் 7.3.1970-இல் நிறுவப்பட்ட திருச்சி சிந்த னையாளர் கழக நிறுவனர்களில் ஒருவரும், அக் கழகத்தின் தோழர் வே. ஆனைமுத்து அவர்களுடன் செயலர்களில் ஒருவருமாக விளங்கிய தோழர் து.மா. பெரியசாமி 03.07.1925இல் பிறந்தவர். அவர் 12.03.2013 மாலை 4.00 மணியளவில்  தம்முடைய 88ஆம் வயதில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் மறைவால் ஆழ்ந்த துயருக்குள்ளாகி யிருக்கும் அவருடைய அன்புத் துணைவி பெ. பத்மா, மகன்கள் பெ.தமிழ்மணி, பெ.காமராஜ், பெ.கலைமணி, மகள்கள் நாகமணி, சவாய்மணி ஆகியோருடன் ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

அன்னாரது மறைவுச்செய்தி கேட்டவுடன் திருச்சி சிந்தனையாளர் கழகத் தலைவர் கு.ம. சுப்பிர மணியன், பொருளாளர் கோ. பார்த்தசாரதி, ச. இராதா கிருட்டிணன், அரங்க தமிழ்மணி, மு. நரசிம்மன், மு. வெங்கடேசன், பா. துரைராஜ், இரா. கலியபெருமாள், பல் மருத்துவர் எஸ்.எஸ். முத்து ஆகியோர் அன்னாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தோழர் வே. ஆனைமுத்து, அனைத்திந்தியப் பேரவையின் புதுதில்லி மாநாட்டு ஏற்பாடு தொடர்பாக 14-ஆம் தேதி புறப்படும் பிரயாணத்தை உறுதி செய் திருந்ததால், அவர் நேரில் வர முடியாத இக்கட்டான சூழலை விளக்கி அவருடையத் துணைவி மற்றும் அவருடைய மக்கள் அனைவரிடமும் தம் ஆராத்துயரை வெளிப்படுத்தி, தன் ஆழ்ந்த அனுதாபத் தையும் அவர்கட்கு தெரிவித்துக் கொண்டார்.

1971இல் மன்னார்குடியில் இருநாள்கள் நடை பெற்ற திராவிடர் கழகத் தோழர்களின் சுயவிமர்சனக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து திராவிடர் கழகத் தோழர்களிடம் ஓர் மீட்டு நிர்வாகத்தை ஏற்படுத்திய முதன்மையானவர்களில் தோலி சுப்பிரமணியம், வாசுதேவன், வே. ஆனைமுத்து முதலியோருடன் இவரும் ஒருவராக விளங்கியவர்.

அக்கருத்தரங்கின் இரண்டாவது நாள் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிறைவுரை இன்றும் நினைவு கூறத் தக்கது.

17.09.1978 முதல் 19.10.1978 முடிய 33 நாட்களும் பீகார் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொண்ட பெரியார் நூற்றாண்டு விழா சுற்றுப் பயணக்குழுவில் சீர்காழி மா. முத்துசாமி, வே. ஆனைமுத்து, நா.பா. செந்தமிழ்கோ ஆகியோருடன் இவரும் இடம்பெற்று பரப்புரை செய்தவர் ஆவர்.

தந்தை பெரியார் செல்லும் ஊருக்கெல்லாம் அவரின் உரையைப் பதிவு செய்வதற்காக, அப்போது பெரியப் பெரிய பெட்டி போல இருந்த அந்தக் கருவி யை எடுத்துச்சென்று பெரியாரின் உரையைப் பதிவு செய்தவர்.

இவரின் உடலுக்கு என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் சி. மருதை, தந்தை பெரியாருக்கு ஒரு காலகட்டத்தில் செயலாளராக விளங்கிய மகாலிங்கம், திருச்சி மாவட்டத் தி.க. தலைவர் சேகர், விடுதலைச் செல்வம், லால்குடி வால்டேர், அந்தநல்லூர் மாவடி யான், பிச்சாண்டார் கோயில் கலியான், சோமரசம் பேட்டை தியாகராசன், ஆசிரியர் நற்குணம், உண்மை கிருஷ்ணன், போலீ°காலனி பிச்சை, அட்டலிங்கம், ஆரோக்கியராஜ், மதிவாணன், ஆல்பர்ட் மற்றும் மகளிரணி பெரியார் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மாலை 2.30 மணியளவில் திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இரங்கலுரை ஆற்றினர்.

3.00 மணியளவில் ஓயாமாரி இடுகாட்டிற்கு இயக்கத் தோழர்கள், உறவினர்கள், நண்பர்கள், புடைசூழ இறுதி ஊர்வலம் புறப்பட்டு அவர் விரும்பிய படியே, அங்கு எந்தவிதமான மதச்சடங்குகளும் இன்றி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

-இரா.கலியபெருமாள்,திருச்சி சிந்தனையாளர் கழகச் செயற்குழு உறுப்பினர்

Pin It