இன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசியல் வாதிகளும் வாக்களித்த அனைவரையும் இழிவு செய்கின்றனர். அப்பாவி மக்கள் இதை இன்றும் உணர வில்லை.

காட்டு :

1. இலவயமாகக் கொடுக்கும் அனைத்து பொருட்களும் அரசியல்வாதியின் சொந்தப் பணமல்ல, மக்கள் கட்டும் வரிப்பணமே, வரிப்பணம் என்பது பணக்காரர் மட்டும் கட்டும் பணமல்ல. பணக்காரரும் அப்பணத்தை மக்களிடம் இடைத்தரகு வேலை செய்து குவித்ததுதான். நீங்கள் வாங்கிய தொலைக்காட்சி பெட்டியில் உங்கள் மூலம் விற்பனை விலையில் 14 1/2விழுக்காடு வரி சேர்த்துதான் விற்கப்படுகின்றது. இதன்மூலம் கொழுத்த இடைத்தரர்களும் பெரிய கம்பெனியாளர்களும் கட்டும் வரியை நம்மிடம் வாங் கப்படும் வரியில் கழித்து கொண்டுதான் உபரிவிலை (VAT) மதிப்புக்கூட்டு வரி என்ற பெயரில் கட்டுகின்றனர். விற்பனை வரி என்பது முழுக்க முழுக்க நுகர்வோருடையது. இதுபோல் பல பொருட்களில் வரியை வாங்கிக்கொண்டு அரசு கருவூலத்தில் சேர்த்து நமக்கு இலவயமாக கொடுக்கின்றனர். பல திட்டங்களும் தீட்டி திருடுகின்றனர். இலவயம் கொடுத்து நம்மை இழிவு படுத்துவது அரசியல்வாதிகளே.

2.    பொங்கல் இலவயம் வாங்க ஓட்டளித்த மக்கள் காலையில் 9 மணிக்கு சென்றவர்கள் மாலை 3.30 மணிக்கு வாங்கிக் கொண்டு வந்தனர். சூடுசுரணை இருப்பின் இதை அனைவரும் மறுத்திருக்க வேண் டும். ஒருநாள் முழுக்க ஒருவர் கொத்தனார் வேலை செய்தால் ரூ.500 கூலி கிடைத்திருக்கும். இவ்வாறு உங்களை இழிவுபடுத்திய இவர்களை நீங்கள் எப்படி தண்டிக்க போகின்றீர்கள்?

இதற்கு எல்லாம் தீர்வு: அனைவருக்கும் இலவச மாக நல்ல மருத்துவம் (நவீன வசதிகளுடனான) அரசே கொடுக்க வேண்டும். திருவல்லிக்கேணி, நந்தனம், அடையாறு போன்ற இடங்களில் கடவுள் பெயரால் இயங்கும் மருத்துவமனைச் செயல்களை அரசு கவனித்தால் உண்மை விளங்கும். ஒரு நோயாளிக்கு, நோய்ச் சிக்கலை அதிகப்படுத்தி ஒரே மருந்தை பலமுறை விற்பனை செய்தும் கொள்ளை யடிக்கின்றன. இந்த நிலை ஒழிய அரசே மருத்துவம் வழங்க வழி வகுக்க ஏற்க வேண்டும்.

* இலவயமாகக் அனைத்துக் கல்வியையும் அரசே  கொடுக்க வேண்டும். கொள்ளையடிக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி அரசுக்குத் தெரியாமல் இல்லை. இதைத்தடுக்க இலயமாக அனைத்துக் கல்வியும் கொடுக்கலாம்.

* அனைவர்க்கும் எளிதில் வேலை கிடைக்க வேண்டும். தொழில் பயிற்சிகள் அனைத்தும் இலவசமாகக் கொடுக்க வேண்டும்.

* பாமர மக்களுக்குக் கற்று பயனுள்ள அனைத்து நலத் திட்டங்கள் கொடுக்க வேண்டும். இனாம் சோறு போடுவதை நிறுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருவாய்க்கு வழி வகுத்து உழைப்பை ஊக்குவிக்க வேண்டும்.

* செத்துக் கொண்டு இருக்கும் விவசாயத்தைக் காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றி அவற்றில் ஒன்றுமே செய்யாமல் இருப்பவறனை மீண்டும் விவசாய நிலமாக மாற்றுங்கள். இதற்குத் துணைபோகும் அனைத்து அரசியல்வாதிகளையும் ஒழிக்க இவர்களைத் தேர்வு செய்யாதீர்கள்; நல்லவர்களைக் கண்டுபிடியுங்கள்; மானத்துடன் வாழுங்கள்.

Pin It