கூடங்குளத்தில் அணுமின் உற்பத்திக் கூடத்தை அனுமதிக்கக் கூடாது என்று தென் மாவட்ட மக்கள் அணி திரண்டு போராடி வருகின்றனர். அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் மக்களின் உயிர், உடைமை, வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் மக்களிடம் நாளுக்குநாள் பெருகி வருகிறது. அணுஉலைக் கூடத்தைச் சேர்ந்த உயர் அலுவலர், சோதனைக்காக, சில அவசர நடவடிக்கைகளை விபத்துக் காலத்தில் எப்படி மேற்கொள்வது என்று 2011 ஆகஸ்ட் மாதம் ஒரு ஒத்திகையை நடத்தினார். இந்த ஒத்திகை நடைபெறுவதை உள்ளூர் மக்களிடம் தெரியப்படுத்த வில்லை. இந்த ஒத்திகையின் போதுதான் அச்சம் கொள்கிற அளவிற்கு அணுஉலைக் கூடத்திலிருந்து பெரிய வெடிச்சத்தம் கேட்டது. இதன் தொடர்ச்சியாக வாயுக்கள் வெளியேறின. கூடங்குளம் அணுஉலையில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் மக்களை நம்பி இதுபோன்ற ஒத்திகையை நாங்கள் மேற்கொள் கிறோம் என்றும் கூறவில்லை.

அணுஉலை கூடாது என்று 1990ஆம் ஆண்டிலி ருந்தே மக்கள் எதிர்ப்புக் காட்டினாலும், சிலர் வாதிட் டாலும், அணுஉலைப் பாதுகாப்புக் குறித்துப் பல அய்யங் களை அறிஞர்கள் எழுப்பினாலும், இன்று நடைபெறுவது போன்ற மாபெரும் மக்கள் போராட்டம் இதுவரை நடை பெறவில்லை. மக்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள். ஒத்திகைக்கே எங்களுக்குத் தெரியப்படுத்தாதவர்கள், விபத்து ஏற்பட்ட பிறகு தெரிவிப்பார்களா? என்ற அய்யம் மக்களிடம் வலுப்பெற்றது. அதன் பிறகுதான் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல் களை ‘இந்து’ நாளேட்டின் செய்தியாளர் ஊர் மக்களிடம் சென்று திரட்டி, 2011 நவம்பர் 13ஆம் நாள் ஒரு இதழில் கட்டுரையைத் தீட்டியுள்ளார்.

குறிப்பாக, அக்டோபர் 7ஆம் நாள், பிரதமர் மன் மோகன் சிங்கைச் சந்திக்க டெல்லிக்குச் சென்று, தங் களின் கோரிக்கைகளைப் போராட்டக் குழுவினர் முன் வைத்தனர். இக்குழுவினர் பிரதமரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, தமிழ்நாட்டு முதல்வர் செல்வி. செயலலிதாவிற்கு அணுஉலைக் கூடம் இயங்குவ தற்கு மாநில அரசு உதவிட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய பிரதமரின் மடல் ஊடகங்களில் வெளி வந்தது. அதனால் மக்கள் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்தனர் என்று இச்செய்தியாளர் மேலும் குறிப்பிடு கிறார். ஆனால் தமிழக முதல்வர் அம்மடல் தனக்குக் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

ஒரு பக்கம் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் திரு. நாராயணசாமி மக்கள் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் எந்த முடிவையும் மேற்கொள்ளமாட்டோம் என்று உறுதி கூறிய பிறகு, இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. ‘பாண்டிச்சேரி அரசியலின் நரி’ என்று குறிப்பிடப்படுகிற திரு. நாராயணசாமி, தனது வாலை ஆட்ட ஆரம்பித்துள்ளார் என்றே மக்கள் கருதுகிறார் கள். “போராட்டக் குழுவினருக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது. மத்திய அரசு இதுபற்றிக் கண்காணித்து வருகிறது; உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஒரு புதிய பொய்க்குண்டை-களம் அமைத்துப் போராடும் மக்கள் மீது அவர் வீசினார். ரூபாய் இலட்சம்-இலட்சம் கோடியாக அந்நிய வங்கிகளில் பதுக்கி வைத் திருக்கும் கருப்புப் பண முதலைகளின் சட்டவிரோத மான பணத்தை இந்தியாவிற்குக் கொண்டுவர எவ்வித நடவடிக்கையும் எடுக்க வக்கில்லாத நாராயணசாமி களும், மன்மோகன்களும் இதுபோன்ற கூக்குரல்களைத் தான் எழுப்ப முடியும்.

இவ்விதமாகக் காட்சிக்குக் காட்சி முற்றிலும் முரணான நிகழ்வுகள் அரங்கேறி வரும் அணுஉலை சர்க்கஸ் கூடாரத்தில், திடீரென்று தாவிக் குதித்து உள்ளே புகுந்து தடுமாறி விழுந்திருக்கிறார் நமது மரியாதைக் குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழர் களுக்கு ராஜபக்சே-மன்மோகன்சிங் இரட்டையர் இணைந்து கொடிய இன்னல் விளைவித்த போது, இலட்சக் கணக்கான தமிழ்ப் பெண்களையும் குழந்தைகளையும் முதியோர்களை கொடிய கொத்துக் குண்டுகளால் கொன்று குவித்தபோது வாய் திறக்காத மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்கள், கூடங்குளத்திற்கு ஓடோடிவந்து அணு உலைக்கு ஆதரவு தருவதின் நோக்கம்தான் என்ன? இராமன் கட்டிய பாலம் கடலுக்குள் இடிந்துவிடும். எனவே சேதுசமுத்திரத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று, பாசிச இந்துமத வெறியர்கள் தடுத்தபோது, மத்திய அதனை அரசும் வேடிக்கை பார்த்தபோது, தானும் உடன் வேடிக்கை பார்த்த இந்த மாவீரர், இன்று, கூடங்குளம் திட்டத்திற்கு வக்காலத்து வாங்கி ரூ.250 கோடி, நலத்திட்டத்தை முன்மொழிகிறார். அணுஉலை யை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று துள்ளிக் குதிக்கிறார்.

1961இல் தி.மு.க.விலிருந்து பிரிந்து தமிழ் தேசியக் கட்சி என்ற அமைப்பைத் தொடங்கி ஊர் அறிஞர் அண்ணா வைப் பற்றிக் கடுமையான முறையில் தோழர் ஈ.வெ.கி. சம்பத் பேசிய போது - ‘துள்ளுகிற மாடு பொதி சுமக்காது’ என்று அண்ணா குறிப்பிட்டார். அணு ஆய்வுத் துறை யில் முறைப்படி ஆய்வு செய்யாத திரு. அப்துல் கலாம் அவர்கள் எவ்வாறு அணு அறிவியல் பொதியைச் சுமக்க முடியாமல் தடுமாறுகிறார் என்பதை இணைய தளங்கள் கருத்துகளாக வெளியிட்டுள்ளன.

திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற் பியல் இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்ற பிறகு, சென்னையில் இயங்கி வந்த தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வானூர்தியியல் துறையில் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கலாம். சராசரி கல்வித் தகுதிகளோடு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் திட்டஇயக்குநர் களில் ஒருவராகப் பணியில் சேர்ந்தார். இயற்பியலிலோ அல்லது அணுசக்தித் தொழில்நுட்பத்திலோ, ஆய்வுப் பட்டத்தைப் பெறாதவர் இவர். மேலும், இத்துறைகளில் ஒரு ஆய்வுக் கட்டுரையைக்கூட எந்த இதழிலும் அவர் எழுதியதில்லை. இவருக்கு அணுசக்தித் துறையில் நுட்ப மான அறிவியலை அறிந்துகொள்கிற திறன் கிடையாது. மேலும், இந்தியாவில் உள்ள அணுஉலைகள் அமைக் கும் பணிகளில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதே இல்லை. அணுக்குண்டுச் சோதனை ஆய்வுப் பணிகளுக் கும் அப்துல்கலாமிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. மேற்கூறிய கருத்துகளைக் கூறியவர் இந்தியாவின் அணுசக்தித் துறையின் தலைசிறந்த வல்லுநரும், பொக்ரானில் நடைபெற்ற (1974) முதல் அணுக்குண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியவரும், இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றிய வருமான முனைவர் ஹோமி சேத்னா ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னி, ஆகாஷ், பிரித்வி போன்ற ஏவுகணைகளை வெற்றிகரமான முறையில் விண்ணில் செலுத்தியதற் கும், கலாமிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஏவு கணைத் தொழில்நுட்ப வல்லுநரும், அக்னி ஏவுகணைத் திட்ட இயக்குநரும் அறிவியல் அறிஞருமான முனைவர் ஏ.என். அகர்வால்தான் இத்திட்டத்தின் முன்னோடி ஆவார். இந்தியப் பாதுகாப்பு ஆய்வு வளர்ச்சித் துறையில் பல அறிவியல் வல்லுநர்கள் ஒன்றிணைந்து ஏவு கணைகளை வெற்றிகரமாகச் செலுத்துவதற்கு உயர் ஆய்வு மேற்கொண்ட போது, திரு. அப்துல் கலாம் நிதி, நிர்வாகப் பணிகளை மட்டும்தான் செய்தார் என்பதை அத்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவில் சில நேரங்களில் சில மனிதர்கள் தகுதிக்கு மேல் போற்றப்படுகிறார்கள். ஊடகங்கள் இந்தப் பணியைச் செவ்வனே செய்து வருகின்றன என்பதை அறிஞர் அம்பேத்கர் “ரானடே-காந்தி-ஜின்னா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கர் எல்லா ஊடகங்களையும் பொதுவாகக் குற்றம் சுமத்தவில்லை. குறிப்பாக, சில ஊடகங்கள் காந்தியையும், ஜின்னா வையும் உயர்த்திப் பிடித்தன; ஆனால் ரானடே போன்ற முற்போக்கு எண்ணங்கொண்ட சீர்திருத்தச் செம்மல் களை உரிய முறையில் அடையாளம் காட்டவில்லை. இவர்கள் உருவாக்கிய மாபெரும் பேருருவங்கள்-உருவ (icons) வழிபாடுதான் சாதி, மத, இனச் சண்டைகள் நிலை பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது. ஊடகங்கள் உயர்த்திப் பிடித்த காந்தி, ஜின்னாவின் தொண்டர்கள் இவர்கள் மறைவிற்குப் பிறகும் இரு கூறாகப் பிரிந்து, தொடர்ந்து சண்டை யிட்டுக் கொள்வார்கள் என்று அறிஞர் அம்பேத்கர் அழகுறக் குறிப்பிட்டார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடந்த போதும் பிரச்சினைகள் முடியவில்லை. ஜின்னாவைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டதனால், இந்துத்துவா அத்வானியின் பதவியே பறிக்கப்பட்டது. இதற்கான காரணத்தையும் நுண்மாண் நுழைபுலத்தோடு அம்பேத்கர் சரியான முறையில் கணித்தார்.

‘இந்தியாவில் ஒரு காலத்தில் ஊடகத் துறை சிறந்த பணியாகப் போற்றப்பட்டது. இன்றைக்கு வணிகமாக மாறிவிட்டது. பொறுப்பு மிக்க பணிகளை மேற்கொள்வ தற்குப் பதிலாக, ஒரு சோப்பை உற்பத்தி செய்வதற்குச் சமமான பணியில் அது ஈடுபட்டுள்ளது. மக்களுக்குப் பொறுப்புமிக்க ஆலோசகராக விளங்குகிற தன்மை யைத் தானாகவே இழந்துவிட்டது.... தனிநபரை வழிபடுதலை அதன் முதன்மைக் கடமையாக ஏற்றுக்கொண்டது. இவ்வகையில் செய்திகள் வெறும் பரபரப்பு ஊட்டுகிற வகையில் அமைகின்றன. பகுத்தறிவைத் தூண்டுவ தற்குப் பதிலாகப், பகுத்தறிவற்ற முறையில் கவர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கின்றன. பொறுப்புள்ள மக்களுக்கு வேண்டுகோள் விடுவதற்குப் பதிலாகப் பொறுப்பற்ற வர்களின் உணர்வுகளைக் கிளறுகின்றன

அன்னா அசாரே, அப்துல் கலாம் ஆகியோர் இன்றைய ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படும் பேருருவங்கள். இதன் காரணமாகத்தான் அப்துல் கலாம் தன்னைத் தானே மாபெரும் அணு அறிவியல் அறிஞர் போன்று நினைத்துக் கொண்டு, தீபாவளி நேரத்தில் அணுக் குண்டு பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள் போன்று, கூடங்குளத்தைப் பற்றி அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை அளித்துள்ளார். கூடங்குளத்தின் அணு உலை வெடித்தாலும் எந்த ஆபத்தும் வராது என்று திருவாய் மலர்ந்துள்ளார் அப்துல் கலாம்.

அப்துல் கலாமைப் பற்றி, அறிஞர் அமர்த்தியா சென் கூறிய கருத்து சிந்தனைகளைக் கிளறக்கூடியதாகும். 2005இல் “வாதிடும் இந்தியன்” (The Arugmentative Indian P.251-257) என்ற தனது நூலில், 1998ஆம் ஆண்டு மே 11, 13ஆம் தேதிகளில் இராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் நிகழ்த்தப்பட்ட அணுக்குண்டு வெடிப்பைத் தொடர்புபடுத்திக் குறிப்பிட்டுள்ளார். “இந்தியத் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட திரு. அப்துல்கலாம் அவர்களுடன் 1990ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதை நினைவுகூர்கிறேன். அவரின் தொண்டுள்ளத்தைப் பற்றியும், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர் செய்யும் கருணை அடிப்படை யிலான பணிகளையும் நான் (சென்) அறிந்துள்ளேன்.”

“எங்களின் காலடியின்கீழ் புவி பேரொலி எழுப்பி இடித்ததைக் கேட்டேன். எங்களுக்கு முன்னால் பேரச்சம் தரும் வகையில் அது மேலெழுந்தது. இது ஒரு அழகான காட்சியாக இருந்தது” என்று இந்த அணுக்குண்டுச் சோதனையைப் பற்றி, திரு. அப்துல்கலாம் குறிப்பிடு கிறார். இளகிய மனம் கொண்ட மனிதர் (கலாம்), படு மோசமான இச்சக்தியை வன்மையாகப் போற்றுவதற்கு, ஒரு வேளை சக்திமிக்க ஆயுதங்கள் உருவாக்குவதால் ஏற்படுகின்ற பொதுவான கவர்ச்சியோடு வலிமையான நாட்டுப்பற்றும் இணைவதும் காரணமாக இருக்கலாம்” என்று வியந்து சென் குறிப்பிடுகிறார்.

பொக்ரான் குண்டு வெடிப்புப் பற்றி ஆனந்தக் கூத்தாடிய அப்துல் கலாமின் செயல், உண்மையில் வெற்றி பெற்றதா என்பதை அண்மைக்காலத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளும், அறிவியல் அறிஞர் களின் ஆணித்தரமான கருத்துகளும் நம்மை அதிர வைக்கின்றன.

பொக்ரானில் அணுகுண்டு சோதனைகள் 5 முறை நடத்தப்பட்டன. அடுத்த இரண்டு நாள்களில் பாகிஸ்தான் சகாய் குன்றுகளில் 6 அணுகுண்டு வெடிப்புச் சோதனைகளைச் செய்தது. “இதன் விளைவு, அணு குண்டு சோதனைகளை நடத்தியவர்களின் பகுதியான இந்தியத் துணைக்கண்ட வீட்டிலேயே 1000 சூரியன் கள் குடி புகுந்துவிட்டன”. பாகிஸ்தான் அரசோ ‘மலை முழுவதும் வெண்மை யாக மாறிவிட்டது’ என்று வீண் பெருமை பேசியது. அதன் விளைவு என்ன? 2005 அக்டோபர் மாதம் பாகிஸ்தான் மலைப் பள்ளத்தாக்குகளில் பெரும் பூமியதிர்ச்சி தோன்றியது. மேலும், பொக்ரான் அணு குண்டு சோதனை தோல்வியில் முடிந்தது என்று தற்போது அணு அறிவியல் அறிஞர்கள் ஆணித்தர மாகச் சுட்டுகின்றனர். இந்தக் குறைந்த அளவு வெடிப் பிற்கு இமயமலையின் பள்ளத்தாக்குகள் வெடித்தது என்றால், இந்தியா எதிர்பார்த்த அளவிற்கு அணு குண்டு சோதனை வெற்றி பெற்றிருந்தால் இன்னும் மோசமான விளைவுகளைத்தான் மக்களுக்கு ஏற் படுத்தியிருக்கும். இந்த அணுகுண்டு சோதனையின் அதிர்வு இலக்கு 45 கிலோ டன் அளவாகும். ஆனால், 25 கிலோ டன் அளவிற்குத்தான் அதிர்வு ஏற்பட்டது. இந்தத் தகவலைப் பொக்ரான் அணுக்குண்டுச் சோதனை முதன்மைத் திட்ட இயக்குநர் சந்தானம் அறிவித்த போது, பலர் வியந்தனர்.

பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி வெடித்த அணுகுண்டு சோதனை எதிர்பார்த்த பலனைக் கொண்டுவரவில்லை. இதற்குப் பிறகுதான் அணுக் சக்தித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த அறிவியல் அறிஞர்களான சீனிவாசன், பி.கே. அய்யங் கார், எ.என். பிரசாத் போன்றோர் பொக்ரான் அணு குண்டு சோதனை பற்றி ஒரு நடுநிலையான ஆய் வினை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத் தினர். ஆனால், அப்துல் கலாமோ மத்திய அரசுத் துறை யைச் சார்ந்த அணு அறிவியல் அறிஞர்களுடன் இணைந்து கொண்டு, 45 கிலோ டன் வெடிப்பு நிகழ்ந்ததாகச் சாதிக்க முற்பட்டார். இதுவும் தவறு என்று இயற்பியல் அறிஞர் சந்தானம் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தார்.

அணுசக்தி என்றாலே கண்மூடித்தனமாக ஆதர வைத் தரும் அப்துல் கலாமிற்கு, அணு அறிவியல், இயற்பியல் துறையிலேயே போதிய படிப்பறிவும், பட் டறிவும், பயிற்சியும் இல்லாத போது, கூடங்குளம் அணு உலையின் நீண்டகால எதிர் விளைவுகளைப் பற்றியும், பொருளாதார இழப்புகளைப் பற்றியும் உண்மை விவரங்களை எவ்வாறு கணக்கிடுவார்? அணுமின் உலை வெடித்தால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதைச் சோவியத் ஒன்றியத்தில் செர்னோபில் நகர அணுஉலை விபத்தும் (1986), புக்கிஷிமாவில் (2011) நடந்த விபத்துகளும் நம் கண் முன்னே காட்சியாக விரிக்கின்றன.

1986 செர்னோபில் அணுஉலை விபத்திற்குப் பிறகு பல நாடுகளின் ஆய்வு நிறுவனங்களும், குறிப் பாக, உலக சுகாதார நிறுவனமும் பல அதிர்ச்சி தரும் விவரங்களை வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த பிறகு உடனடியாகப் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரி ழந்தார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல இலட்சம் பேர். தைராய்டு, நுரையீரல், இரத்தப் புற்று நோய்கள் பெருமளவில் மக்களைத் தாக்கின. செர் னோபிலைச் சுற்றியுள்ள பகுதிகள், பெலாரஸ், உக்ரைன், மால்தோவா, அய்ரோப்பாவின் சுவீடன், பின்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, பல்கேரியா, சுவிட்சர்லாந்து, கிரிஸ், சுலோவேனியா, இத்தாலி ஆகிய நாடுகளில் ஒரு இலட்சத்து 62 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றள வுக்கு நிலம், நீர், காற்று மாசு படிந்தது.

‘செர்னோபில்’ என்ற ஆய்வு ஏட்டின் தகவல்படி இவ்விபத்தால் 1986ஆம் ஆண்டிலிருந்து 2004 வரை 9,85,000 மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் இடர் துடைப் புப் பணிகளுக்காக இதுவரை ரஷ்ய நாடு செலவு செய்த தொகை 1800 கோடி ரூபில்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை ரஷ்யாவில் இயங்கி வருகிற அணு ஆலைகளின் ஒட்டுமொத்த மூலதன மதிப்பிற்குச் சமம் என்று குறிப்பிடுகின்றனர். 2005 மதிப்பீட்டின்படி பாதிக்கப்பட்ட பெலாரஸ் நாடு, எதிர்வரும் 30 ஆண்டுகளில் 9 இலட் சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டால்தான் துயர் துடைப்புப் பணிகளை நிறைவாக நிறைவேற்ற முடியும் என்று மதிப்பீடு செய்துள்ளார்கள். மூன்று நாடுகளைச் சேர்ந்த 70 இலட்சம் மக்களுக்கு இது வரை துயர் துடைப்புப் பணிகளுக்காகச் செலவிடப்பட்ட தொகை இந்திய ரூபாய் மதிப்பில் பல இலட்சம் கோடிகளைத் தாண்டுகிறது.

1986இல் நடந்த அணுஉலை விபத்திற்குப் பிறகு 2011இல் ஜப்பான் நாட்டின் புக்கிஷிமா அணுஉலை யில் பூகம்பத்தால், சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பு, தற் போது கணக்கிடப்பட்டு வருகிறது. எனவே, மக்களுக் கும், நாடுகளுக்கும், பொருளாதாரத்திற்கும் பெரும் இழப்பையும், துன்பத்தையும் ஏற்படுத்தும் இந்த அணு மின் உற்பத்தி ஆலையை மூட வேண்டும் என்று உலக அளவில் மக்கள் இயக்கங்கள் நடைபெற்று வரு கின்றன. ஜெர்மனி நாடு படிப்படியாக அணுஉலை களை மூடிவிடப்போவதாக அறிவித்துள்ளது.

மாற்று எரிசக்திகளை ஆய்வு செய்து விரைவாகப் பயன்படுத்த வேண்டும் என்று பல அறிவியல் வல்லு நர்களும், பொருளாதார அறிஞர்களும் குறிப்பிடுகின் றனர். பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் பால் குருக்மென், நவம்பர் 8ஆம் நாள் 2011 அன்று, ஒரு கட்டுரையைத் தீட்டியுள்ளார். அக்கட்டுரையில் மாற்று எரிசக்தி உற்பத்தித் துறையில் முதலீடு செய்வதற்குப் பெரும்பாலான அரசியல் வர்க் கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். குறிப் பாக, கடந்த ஓராண்டில் எரிசக்தியின் உற்பத்திச் செலவு 30 விழுக்காட்டிற்கு மேல் குறைந்து வருகிறது என்பது, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இளம் அறிவியலாளர்கள் அமெரிக்காவில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவேதான் பால் குருக் மென் சூரிய ஒளிச் சக்தியைப் பயன்படுத்தி மின் பற்றாக் குறையைத் தீர்ப்போம் என்று அறிவித்துள்ளார். மேலும், சூரிய ஒளிச் சக்தியைப் பயன்படுத்துவதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை என்பதையும் அறுதி யிட்டுக் கூறியுள்ளார்.

2011, நவம்பர் 12ஆம் நாள் ‘இந்து’ நாளிதழில், இயற்பியல் ஆய்வாளர்களான சுவ்ரத் ராஜ், ரமணா, இருவரும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஏன் இயங்க முடியாது என்ற ஒரு கட்டுரையில் பல வினாக் களை எழுப்பியுள்ளனர்.

சான்றாக, இந்தியாவினுடைய அணுசக்தித் துறை 1970ஆம் ஆண்டில் இன்னும் 30 ஆண்டுகளுக்குள் 2000க்குள் 43,500 மெகாவாட் மின்சாரத்தை அணு உலைகளின் வழியாக உற்பத்தி செய்ய முடியும் என்று மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் வெறும் 2720 மெகா வாட் மின்சாரத்தைத்தான் உற்பத்தி செய்ய முடிந்தது. மேலும், ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் அணு மின் உற்பத்தி 2.8 விழுக்காடுதான் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக அரசு களும், அரசுத் தலைவர்களும் தலையிட்டுங்கூட, குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்ய முடிந்தது. “மொத்தத்தில் அணு மின் உற்பத்தி தோல்வியாகவே முடிவடைந்துள்ளது.”

அணுமின் உற்பத்திக்குத் தேவையான தோரியத் தைப் பெறுவதில் பல அரசியல் தடங்கல்கள் உள்ளன. அமெரிக்கா போன்ற மேலாதிக்க நாடுகள் அணு உற் பத்தித் துறைக்கு உதவி செய்கிறோம் என்ற போர் வையில் தங்களுடைய அரசியல் மேலாதிக்கத்தைத் திணிப்பதற்குத்தான் முற்படுவார்கள். மேலும், கூடங் குளம் மின் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள கருவிகள் 100 விழுக்காடு பாதுகாப்பானவை அல்ல என்பதை, பல்கேரியா நாட்டில் அணுமின் உலையில் பயன்படுத்தப்பட்ட கருவிகளும், ஏற்பட்ட மின் தடைக் கோளாறுகளும் நமக்குப் படிப்பினையைக் கற்பிக்கின் றன. எனவே, கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் 100 விழுக்காடு பாதுகாப்பு உடையது என்பது உண்மை யல்ல என்று இந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அணுமின் உற்பத்தி நிலையங்கள் மின்சாரத்தைப் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்தாலும், இயற் கைப் பேரிடர்கள் காரணமாக விபத்து ஏற்பட்டால் இது ஒர் அணுக்குண்டு வெடிப்பிற்குச் சமம் என்பதை எல்லோரும் உணர்ந்துள்ளார்கள்.

எனவே, தமிழ்நாட்டின் நன்மைக்காக - எதிர்காலச் சந்ததியினரின் நல்வாழ்விற்காகக் கூடங்குளம் அணு உலையை மூடுவதே சிறந்த முடிவாக இருக்கும். இல்லாவிடில், இடிந்தகரை மட்டுமல்ல - தென்மாவட் டங்களே இருக்கும் இடம் தெரியாமல் முடிந்தகரை யாகி (Black smoke shadow) மாறி இந்தியாவின் ஹிரோஷிமா - நாகசாகி ஆகிவிடும்.

Pin It