சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் :

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 1907ஆம் ஆண்டு முதல் ஒரு வழக் கறிஞராகப் பணியாற்றி னார். அப்பொழுது பாரதி யார், தொழிற்சங்கத் தலை வர்கள் சர்க்கரைச் செட்டி யார், திரு.வி.க. ஆகியோ ரோடு சிங்கார வேலருக் குத் தொடர்பு ஏற்பட்டது. 1920ஆம் ஆண்டில், சென்னைத் தொழிலாளர் வர்க்கம் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்களில் தீவிர அக்கறை கொள்ளத் தொடங்கினார். ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தில் பங்குகொண்டு, சென்னையில் பல பேரணிகளை நடத்திடப் பேருதவி புரிந்தார். 1922இல் சென்னையில் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரானார். அகில இந்தியக் காங்கிர கமிட்டி உறுப்பினராகவும் ஆனார்.

இரஷ்யப் புரட்சியினால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் 1919ஆம் ஆண்டிலேயே கம்யூனிசம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். 1921ஆம் ஆண்டில், “மகாத்மா காந்திக்கு ஒரு பகிரங்கக் கடிதம்” (அது, தி இந்து, சுதேசமித்திரன் நாளேடு களில் வெளிவந்தது) எழுதினார். “நிலமும் இதர முக்கியத் தொழில்களும் சமூகவுடைமை ஆக்கப்பட்டால்தான் மக்களின் விருப்பங்கள் நிறைவேறும்” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார். இவ்வாறு 1921ஆம் ஆண்டிலேயே கம்யூனிசக் கருத்துக்களால் கவரப்பட்ட சிங்காரவேலருடன், எம்.பி.எ. வேலாயுதன் என்பவரும் இணைந்து பணியாற்றினார்.

சிங்காரவேலர், உழைக்கும் வர்க்கமே அரசியல் போராட்டத்துக்கு முன்னணிப் படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார். அதனால் 1923இல் “இந்துஸ்தான் தொழிலாளர் - விவசாயிகள் கட்சி”யைத் தொடங்கினார். “இந்துஸ்தான் லேபர் அண்டு கிசான் கெஜட்” என்ற ஆங்கில மாத இதழை யும், ‘தொழிலாளி’ என்ற தமிழ் மாத இதழையும் தொடங்கி நடத்தினார்.

1925 முதல் 1927 வரை சென்னை நகராட்சி உறுப்பி னராக இருந்த போது, நலிவுற்ற மக்களுக்குப் பல திட்டங் களை அவர் கொண்டு வந்தது அவருடைய மானுட நேயத்தைப் புலப்படுத்தும். பொதுநல ஈடுபாடு, அரசியல் பணிகள், தொழிற்சங்கப் பணிகள் ஆகியவற்றுடன் தத்துவம், பொருளியல், உளவியல், வானியல் போன்ற துறைகளில் அந்நாளிலேயே தமிழில் சிறந்த படைப்புகளை எழுதினார். அவர் எழுதிய கட்டுரைகளில் பாதிக்குமேற்பட்டவை அறிவியல் சார்ந்த கட்டுரைகளே ஆகும்.

காலராவும், பிளேக்கும் சிங்காரவேலர் காலத்தில் பெரும் பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தும் நோய்களாக இருந்ததால், அவற்றைப் பற்றி நிறைய எழுதினார். 1918இல் சென்னை நகரத்தைப் பிளேக் நோய் அச்சு றுத்திய போது, சிங்காரவேலர் தன் இல்லத்தில் (எண்.22, தெற்குக் கடற்கரை சாலை - இப்போதைய வெலிங்டன் சீமாட்டிக் கல்லூரி வளாகம்) சாதி, மதம் பாராது நோயாளிகளுக்கு மருத்துவர் களைக் கொண்டு சிகிச்சை அளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமண்டூரில் நடைபெற்ற கூலி விவசாயிகள் போராட்டத்துக்கு, சிங்காரவேலர் தம் தொண்டர் கள் துணையோடு ஆயிரம் பேருக்கு ஒரு வண்டி நெல்லை அனுப்பி வைத்தார். 1926இல் கர்நாடக மாநிலத்தில் கொங்கணக் கடற்கரை, பெரும் புயலால் பாதிக்கப்பட்டது. அந்த மக்களுக்கு சென்னை நகராட்சியின் சார்பில், ஒரு பெருந்தொகையை அனுப்பச் செய்து அவர்களுக்கு உதவி புரிந்தார்.

ம. சிங்காரவேலு ஒரு சுதந்தரப் போராட்ட வீரர்; தொழிற்சங்க இயக்கத் தலைவர்; பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி; பன்மொழி அறிஞர்; சமுதாயப் போராளி; பல்துறை வித்தகர். இவ்வாறு பல பரிமாணங்களைக் கொண்டிருந்த சிங்காரவேலர், தம் வாழ்வின் இறுதிவரை ஏழை, எளிய மக்களுக்காகவே சிந்திப்பதையும், எழுதுவ தையும், செயல்படுவதையும் ஒரு தவமாகவே ஏற்றிருந்தார். 1927ஆம் ஆண்டில் கயா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டில், முழுச் சுதந்தரம் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த போது, தொழிலாளி - விவசாயி குறித்து அரசியல் திட்டம் வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சிங்காரவேலர் சென்னையில் தாம் வாழ்ந்த தெற்குக் கடற்கரைச் சாலை இல்லத்தில், ஒரு மிகப் பெரிய நூலகத்தை வைத்திருந்தார். தனிப்பட்டவர்கள் வைத்திருந்த நூலகங் களில், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக அன்று அது திகழ்ந்தது என அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த நூலகத்தில் படித்துத் தங்களை வளர்த்துக் கொண்ட வர்கள் பாரதியார், திரு.வி.க., அறிஞர் அண்ணாதுரை, ஏ.எஸ்.கே. அய்யங்கார், எல்.வி. காட்டே, கே. முருகேசன், பாரதிதாசன், டி.என். இராமச்சந்திரன், குத்தூசி குருசாமி, கவிஞர் சுரதா முதலானோர் ஆவர்.

தடை செய்யப்பட்ட நூல்கள் உலகம் முழுவது மிருந்து, கடத்தல் மூலம் சிங்காரவேலருக்குக் கிடைத்தன; குறிப்பாகப் புதுச்சேரி மூலம் சிங்காரவேலரை அடைந்தன.

1902இல் இலண்டன் சென்று, சிங்காரவேலர் அங்கேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். இலண்டனிலிருந்து திரும்பிய போது, நிறைய புத்தகங்களுடன் வந்தார். படிப்பதில் சிங்காரவேலர் தணியாத வேட்கை கொண்டிருந்தார். தன் இறுதிக்காலத்தில் பார்வை பழுதுபட்ட நிலையிலும் விடாப் பிடியாகப் படித்தார் என்று சமதர்மம் சுப்பையா கூறியுள்ளார்.

1900களில் சென்னையில் மகாதேவன் புத்தகக் கம்பெனி என்பது மிகப் பிரபலமானதாகவும், மிகப் பெரிய கம்பெனியாகவும் இருந்தது. அக்கம்பெனிக்கு உலகில் இருந்து வருகின்ற உன்னதமான புத்தகங் களில் முதல் புத்தகத்தைப் பெறுபவன் நான்தான் என்று சிங்காரவேலர் குறிப்பிட்டுள் ளார். அவருடைய நூலகத்தில் 20,000க்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன.

கம்யூனிஸ்டுகள் முன்வைத்த முழுவிடுதலைக் குறிக்கோளும்-சிங்காரவேலர் தெரிவித்த வாழ்த்துரையும் :

பஞ்சாபின் லாகூரில் குலாம் உசேன் என்பவர் கம்யூனி சக் கருத்துக்களால் கவரப்பட்டார். அவர் பெஷாவர் கல்லூரி யில் பேராசிரியாக இருந்தார். தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை அமைத்தவர்களில் ஒருவரான முகமது அலியுடன் (அகமது ஹாசன்) காபூலில் 1922ஆம் ஆண்டு குலாம் உசேன் சேர்ந்தார். குலாம் உசேன் கம்யூனிஸ்டாக மாறினார். காபூலிலிருந்து கொண்டே அகமதுஹாசன், லாகூரில் குலாம் உசேனை இயக்கினார். லாகூரில் இரயில்வே தொழி லாளர் சங்கத்தில் இணைந்த குலாம் உசேன் கம்யூனிசக் கொள்கைகளைப் பரப்புவதற்காக ‘இன்குலாப்’ எனும் பத்திரி கையை நடத்தி வந்தார்.

1921-22ஆம் ஆண்டுகளிலேயே தாஷ்கண்டில் அமைக்கப் பட்ட கட்சிக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் குழுக்களுக்குமிடையே நல்லதொரு தொடர்பு உருவாக் கப்பட்டுவிட்டது.

மாஸ்கோ பல்கலைக்கழகத்துக்குச் சென்ற இந்தியர் களில் கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினரானவர்களை இந்தியா வுக்கு அனுப்பி, கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டும் பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அவர்களில் சவுகத் உஸ்மானி உள்ளிட்ட பதினொரு பேர் பனிப்புயலைத் தாங்கி, பனிமலை களைக் கடந்து, காட்டாறுகளைத் தாண்டி, பல்வேறு வழிகளில் 1922 இறுதியிலும் 1923ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இந்திய எல்லையை நெருங்கினர். ஆனால் ஆங்கிலேயக் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. அவர்களின் சவுகத் உஸ்மானி மட்டும் தப்பிவிட்டார். மற்ற பத்துப் பேர் மீது அரசு வழக்குத் தொடுத்தது. இவ்வழக்குக்கு ‘மாஸ்கோ-தாஷ்கண்ட் சதி வழக்கு’ என்று பெயர். பத்துப் பேரும் தண்டிக் கப்பட்டனர்.

1922 நவம்பர் 5 முதல் திசம்பர் 5 வரை நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் நான்காவது மாநாட்டுக்குப்பின், எம்.என்.ராய், இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட் குழுக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு மாநாட்டைப் பெர்லின் நகரில் கூட்ட வேண்டும் என்றும், அம்மாநாட்டில் கட்சியின் திட்டம் பற்றியும், அமைப்புச் சட்டம் பற்றியும் விவாதிக்கலாம் என்றும் கருத்துரைத்தார். இந்த ஆலோசனையை டாங்கேவும், சிங்காரவேலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை வரவேற்ற முசாபர் அகமது பெர்லினுக்கு இரகசியமாகச் செல்ல முயன் றது இயலாமற் போயிற்று.

1922 திசம்பர் இறுதியில் கயாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசு மாநாட்டுக்கு எம்.என். ராய், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு திட்டம் தயாரித்து அனுப்பினார். இத்திட்டமானது சரித்திர ரீதியாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் திட்டம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமயத்திற்கு ஏற்ப சுயராஜ்ஜியம் என்கிற வார்த்தைக்கு வியாக்கியானம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து தெளிவாக மாறுபட்டு நின்று, “முழு மையான தேசிய சுதந்தரமே நமது குறிக்கோள்” என்று திட்டவட்டமாக அறிவித்தது இத்திட்டம்.

கயாவில் நடந்த காங்கிரசு மாநாட்டில் டாங்கேயுடன் சிங்காரவேலரும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் சிங்கார வேலர் பேசியது :

“மகத்தானதொரு உலக நலனைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மகத்தான உலகக் கம்யூனிஸ்டு அமைப்பின் ஒரு பிரதிநிதியாக உங்களிடம் பேசுகிறேன். உலகத் தொழிலாளர் களுக்குக் கம்யூனிசம் வழங்கும் மகத்தானதொரு செய்தியினை உங்களுக்குச் சொல்லிட இங்கே நான் வந்திருக் கிறேன். நீங்கள் சுதந்தரம் பெறுவதில், நீங்கள் உணவு, உடை, உறையுள் பெறுவதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள உலகத் தொழிலாளர்களின் வாழ்த்துகளை, சோவியத் இரஷ்யக் கம்யூனிஸ்டுகளின் வாழ்த்துகளை, ஜெர்மன் கம்யூனிஸ்டு களின் வாழ்த்துகளை உங்களுக்குத் தெரிவிக்க இன்று நான் உங்கள் முன்னால் வந்துள்ளேன்” எனப் பிரகடனம் செய்தார்.

காங்கிரசுக் கட்சியின் வரலாற்றிலேயே தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு ஒருவர் பேசியது இதுதான் முதல் முறை. காங்கிரசு மாநாட்டில், ‘தோழர்களே’ என ஒருவர் விளித்துப் பேசியதும் கூட இதுவே முதன்முறையாக இருக்கலாம்.

கயா காங்கிரசில் சிங்காரவேலர் கலந்துகொண்டது பற்றி 1923 மார்ச் மாதம் “வேன்கார்ட்” ஏடு பின்வருமாறு எழுதியது :

“பல்வேறு சித்தாந்தப் போக்குகள் கொண்டவர்கள் வந்திருந்த கயா காங்கிரசு மாநாட்டில் அவர் (சிங்கார வேலர்) பங்குகொண்டது ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சியாக நினைக்கப்படும். ‘மரியாதைக்குரிய தேசியத் தலைவர்கள்’ எனும் அந்தஸ்து பறிபோய் விடுமோ அல்லது அரசு நடவடிக்கை எடுத்திடுமோ என்று இளம் இரத்தங்கள் எல்லாம் நடுங்கிக் கொண்டிருக்கையில், இந்த அறுபது வயதுக்கு மேற் பட்ட வெண்தாடி வீரர், வெளிப்படையாகத் தன்னை யொரு கம்யூனிஸ்ட் என அழைத்துக் கொண்ட அந்தத் துணிச்சலை மாநாட்டில் இருந்தவர்கள் இன்னும் வியந்து பாராட்டியிருக்க வேண்டும்.” 

- தொடரும்

Pin It

காலனி ஆதிக்கச் சக்திகளிடமிருந்து பல ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் 20ஆம் நூற்றாண்டில் விடுதலை பெற்றன. பல நாடுகள் இன்னும் பல காலனிய மாயைகளிலிருந்து விடுதலை பெறவில்லை. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, வெள்ளையர்களால் ஊக்குவிக்கப்பட்ட விளையாட்டுத்தான் மட்டைப்பந்து என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியத் துணைக்கண்டம் பிரித்தானிய காலனி நாடாயிருந்த போது, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், பர்மா, இலங்கை போன்ற நாடுகள் ஒரே நாடாகயிருந்தன என்பதை அண்மைக்கால வரலாறு நமக்குச் சுட்டுகிறது.

விருது வழங்குவதிலும், அதிலும் குறிப்பாக உயரிய விருதுகள் வழங்குவதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகள் ஒரே வழியைத்தான் கடைப்பிடித்து வருகின்றன. இந்த உயரிய விருதுகள் புவிசார் அரசியல் அடிப்படையிலும் (Geo-politics) மேற்கூறிய நாடுகளில் வழங்கப்படு கின்றன என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த இலங்கை அரசின் ‘இலங்கா ரத்னா’ விருதினை ‘இந்து’ ராம் உட்படப் பல இந்தியர்கள் பெற்றுப் பரவசம் அடைந்தனர். இலங்கை பாசிசத்திற்கு ‘ஜனநாயக’த் தங்க முலாம் பூசி மகிழ்ந்தனர்.

இங்கிலாந்தின் ஊடக ஒளிக்காட்சி 4 - இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையை, போர்க் குற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய பிறகு, இந்தப் ‘பன்னாட்டு தேசியவாதிகளின்’ முகங்கள் இருண்டு போயின. அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி, 2012 பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் புது தில்லியில் செய்தி ஏட்டாளர்களை நேரில் சந்தித்த போது கொடுங்கோலன்’ இராஜபக்சேவுக்கு ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டும் என்று நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2011ஆம் ஆண்டு வங்கதேசம் விடுதலை பெற்று 40ஆம் ஆண்டு விழாவை அந்நாடு கொண்டாடியபோது, வங்கதேசத்தின் உயரிய ‘எக்சே பதக்’ (Ekusney Padak Award) விருதினை மறைந்த இந்திரா காந்திக்கு வழங்கினார்கள். இந்திரா காந்தி குடும்பத்தின் சார்பில் சோனியா இவ்விருதினைப் பெற்றார். சோனியாவை மகிழ்விப்பதற்காக இராஜபக்சே இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்வாறாக விருதுக்கு முன்னும் பின்னும் பல அரசியல் பின்னணிகள் கைக்கோத்துக் கொண்டு நிற்கின்றன.

2013 நவம்பர் மாதம் நடுவண் அரசு இரண்டு இரத்தினங்களைக் கண்டுபிடித்தது. அறிவியல் இரத்தினமான அறிவியல் அறிஞர் ராîக்கு வயது 80. விளையாட்டு இரத்தினமான சச்சினுக்கு வயது 40. ‘இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்’ என்ற ‘முட்டாள் புகழ்’ ராகுலின் முழக்கம் ரத்தினமாக வெளிப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த முட்டாள் அரசியல் சொல்லாக்கம் நேருவின் அசல் கண்டுபிடிப்பாகும். 1950களில் பெரியாரை Nonsense என்று அவர் குறிப்பிட்டபோது ‘பிரதமர் நேருவே அதிர்ந்து போகும் அளவிற்கு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ‘நேருவே திரும்பிப்போ’ என்று கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியதைப் பலரும் அறிந்திருக்கலாம். நேருகும் ராகுலுகும் ஒரே ஒரு வேறுபாடு உள்ளது.

தந்தை பெரியாரோ காங்கிரசிலிருந்து வெளியேறிஇ காங்கிரசுக் கட்சியின் பிற்போக்குக் கருத்துகளைக் கடுமையாகச் சாடிய திராவிடர் கழகத்தின் தலைவர். தண்டனை பெற்றுச் சிறையிலிருக்கும், அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாகப் பறித்துவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் வலியுறுத்தியது. இதற்கு எதிராக, அரசியல்வாதிகள் பதவியில் நீடிக்கலாம் என்று நடுவண் அரசின் அமைச்சரவை முடிவு எடுத்து, சட்டத்திருத்தத்தை மேற்கொண்டது. இதில் சோனியாகு, மன்மோகன் சிங்குக்கும் பொறுப்புண்டு.

மேலும் மன்மோகன் சிங் ராகுல் துணைத் தலைவராக இருக்கும் காங்கிரசு கட்சியின் பிரதமர். இதையெல்லாம் உணராமல் Nonsense என்று காங்கிரசு கட்சியின் முடிவை ராகுல் குறிப்பிட்டார்.

எனவேதான் ரத்தினம் பட்ட அறிவிப்பு வந்தவுடன் ‘அரசியல்வாதிகள் முட்டாள்கள்’ என்ற அறிவியல் அறிஞர் ராவ் வெளியிட்டார். பின்னர் நான் அரசியல் தலைவர்களை Idiot என்று குறிப்பிடவில்லை, Idiot என்று குறிப்பிட்டேன் என்று மறுப்புரை வழங்கினார் ராவ். ‘முட்டாள்தன’க் கூத்துடன் தொடங்கிய ரத்தின பட்டத்தின் வரலாற்றினைத் திரும்பிப் பார்த்தால் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.

ரத்தின விருதினை 1954ஆம் ஆண்டு ராஜகோபாலச் சாரியாருக்கு வழங்கினார்கள். 1952ஆம் ஆண்டில் பொதுவுடைமைக் கட்சிகளை ஒழிப்பேன் என்று முழங்கி சென்னை மாகாண முதல்வர் ஆனார். குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த முயன்று தோல்வி அடைந்த பின் 1954ஆம் ஆண்டு பதவி விலகினார். ‘ரத்தினப் பட்டம்’ வருணாசிரம முறையை அறிமுகப்படுத்தியதற் காக வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

1954ஆம் ஆண்டு சர் சி.வி.ராமன் என்ற இயற்பியல் அறிஞருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது. முதல் தகுதி மாபெரும் இயற்பியல் அறிஞர். இரண்டாவது தகுதி தமிழ்நாட்டு அய்யர். அய்யாங்காருக்கு வழங்கிவிட்டுஇ அய்யரை எப்படி விட்டுவிடலாம் என்று தேடிப்பிடித்துக் கொடுத்திருக்கலாம். மூன்றாவது நபர் 1954இல் ரத்னா தகுதியைப் பெற்றவர், ஆந்திரப் பார்ப்பனர், வேதாந்த மெய்யியல் அறிஞர் சர்வப்பள்ளி ராதாகிருணுணன்.

1955ஆம் ஆண்டு மூவருக்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் முதல் பிரதமர் (காணுமீர் பார்ப்பனர்) நேருவுக்கு வழங்கப்பட்டது. எல்லாத் தகுதிகளும் ஒருங்கே அமையப் பெற்றவர் அவர் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இரண்டாவது ரத்தினத்தைப் பெற்றவர் சர் மோட்ச குண்டம் விசுவேசுவரய்யா, ஆசியாவின் முதல் நீர்மின் உற்பத்தி அணையை அமைத்த பொறியியல் அறிஞர்.

எல்லாத் தகுதிகளோடும் பார்ப்பனத் தகுதியும் இவருக்கு இருந்தது என்பதுதான் உண்மை. ரத்தின விருதினைப் பெற்ற மூன்றாவது நபர் பகவான் தாசு. உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரர். சமஸ்கிருதம், இந்தியில் பல நூல்களை எழுதியவர். இந்தி மொழி ஒன்று மட்டும்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று இறுதி வரை வாதாடியவர். 1956ஆம் ஆண்டு இந்தியாî¡கு நல்ல நேரம். யாருக்கும் ரத்தினம் கிடைக்கவில்லை.

1957ஆம் ஆண்டு மீண்டும் உத்திரப்பிரதேச மாநிலத்துக்;கு ரத்தினம் சென்றது. பெற்றவர் நேரு அமைச்சரவையில் இடம் பெற்ற கோவிந்த வல்லப் பந்த். இந்தியை ஆட்சி மொழியாக்குவதில் இவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது என்று தமிழ் இந்து நாளிதழ் பெருமிதம் கொண்டுள்ளது. ராணுவத்துக்கு ஜீப் வாங்கியதில் ஊழல் என்று எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் இவர்  பேரில்  குற்றம் சாட்டினார்கள். அனந்தசயம் அய்யங்கார் விசாரணைக்குழு (1951) நீதிபதியைக் கொண்ட விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று பரிந்துரையை வழங்கியது. நீதிபதி விசாரணை தேவையில்லை. எதிர்க்கட்சிகள் தேர்தலில் இப்பிரச்சினையை முன்னிறுத்திஇ காங்கிரசுக் கட்சியைத் தோற்கடிக்க முயன்று பாருங்கள் என்று ஊழலுக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தவர் பந்த் ஆவார். உத்திரபிரதேசப் பார்ப்பனர் என்ற சிறப்புத் தகுதியும் இவருக்கு உண்டு.

1958ஆம் ஆண்டிலும் ஒருவருக்கு மட்டும்தான் ரத்தினம் விருது வழங்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த தோண்டோ கார்வே சமூக சீர்த்திருத்தவாதி என்று போற்றப்பட்டவர். சித்பவன் பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர் என்ற சிறப்புத் தகுதியும் இவருடன் ஒட்டிப் பிறந்ததாகும். 1959-1960 ஆகிய இரண்டு ஆண்டுகள் ரத்தின விருதிலிருந்து தப்பித்துக் கொண்டன. 1961ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தைச் சார்ந்த மருத்துவ மாமேதை பி.சி.ராய்க்கு வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர்; மாநில உரிமைக்கு வாதாடியவர் என்ற பெருமையும் பெற்றவர். இவரும் வங்கப் பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர். உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த புருNõhத்தம் தாஸ் தாண்டனுக்கு 1962இல் ரத்தினம் விருது வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரர், அரசமைப்புச் சட்ட அவையில் இந்தி மொழி ஒன்றுதான் தேசிய மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்று வாதிட்டவர். ïவ® சமஸ்கிருத மொழியை உயர்க்கல்வி மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். ரத்தின விருது கொடுக்கத் தொடங்கி, 8 ஆண்டுகளுக்குப் பின்புதான், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத்துக்கு 1962ஆம் ஆண்டு ரத்தின விருது வழங்கப்பட்டது. இவருக்குப் பார்ப்பனர் என்ற சிறப்பத் தகுதி இல்லாதது காரணமாயிருக்கலாம். விருது பெற்ற அடுத்த ஆண்டிலேயே ராஜேந்திர பிரசாத் காலமானார்.

1963ஆம் ஆண்டு இருவருக்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. ஒருவர் பாண்டுரங்க வாமன் காணே. சமஸ்கிருத அறிஞர். தர்ம சாஸ்திரத்தின் வரலாற்றை வரைந்தவர். பண்டைய இந்தியாவில் மாட்டு இறைச்சியை மக்கள் உண்டனர். பெண்கள் பூணூல் அணிந்திருந்தனர் என்று முன்மொழிந்து பல கருத்து வேறுபாடுகளை ஆய்வுத் தளத்தில் உருவாக்கியவர். இவரும் சித்பவன் பார்ப்பனர் ஆவார். 1963ஆம் ஆண்டில் ரத்தின விருதினைப் பெற்றவர் நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய ஜாகீர் உசேன் ஆவார். ஜாமியா மிலியா இசுலாமியப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய நிறுவனத் தலைவர்களில் ஒருவர். உயிரோடிருக்கும் போதே ரத்தின விருதைப் பெற்ற முதல் இசுலாமியக் கல்வியாளர். 1964இல் நேரு மறைந்தார். லால் பகதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பேற்றார். 1964-65 ஆண்டுகளில் ரத்தின விருது வழங்கப்படவில்லை. 1966ஆம் ஆண்டு லால் பகதூர் மறைந்த பிறகு இவருக்கு ரத்தின விருது வழங்கப்பட்டது. பிறகு ரத்தின விருதுக்;கு 5 ஆண்டு கால விடுமுறை அறிவிக்கப்பட்டது எனலாம். 1971ஆம் ஆண்டில் பிரதமர் இந்திரா காந்திக்கு ரத்தின விருது வழங்கப்பட்டது. காணுமீர் பார்ப்பனர் என்ற சிறப்புத் தகுதியும் இவருக்கு இருந்தது.

1969இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் ‘மனச்சாட்சியின்படி’ காங்கிரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உட்பட மற்ற கட்சியினர் அளித்த வாக்கினால் வெற்றி பெற்றவர் வி.வி.கிரி. தானே முன்மொʪத மூத்த காங்கிரசுக் கட்சித் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியைத் தோற்கடித்தவர். ஆந்திரப் பார்ப்பனர் என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றவர். இவருக்கு உயிரோடு இருக்கும்போது ரத்தின விருது வழங்கப்பட்டது. 1976ïš பெருந்தலைவர் காமராசர் மறைî¡குப் பிறகு ரத்தின விருது வழங்கப்பட்டது. நெருக்கடி நிலை அறிவிப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவர். ïªâய விடுதலைப் போரில் ஒன்பது ஆண்டுகளுக்குமேல் சிறை சென்றவர். தன்னலமற்ற தன்மானத் தலைவர். 9 ஆண்டுகள் தமிழகத்தில் பொற் கால ஆட்சியை வழங்கியவர். இந்திரா காந்தியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தவர். உயிரோடிருக்கும் போது இவருக்கு இந்த உயரிய விருதினை வழங்காமல் இருந்ததற்;குப் பல அறிவியல் காரணங்கள் இருந்தன. நான்கு ஆண்டுகள் யாருக்கும் ரத்தின விருது வழங்கப்படவில்லை.

1980இல் அல்பேனியா நாட்டைச் சார்ந்த கிருத்துவத் தொண்டரான அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது. 1983இல் பூதான இயக்கத்தலைவர் வினோபாî¡கும் வழங்கப்பட்டது. இவரும் சித்பவன் (பார்ப்பனர்) என்ற சிறப்புத் தகுதியைப் பெற்றவர். 1982இல் இவர் காலமானார். 1987இல் எல்லை காந்தி என்று போற்றப் பட்ட கான் அப்துல் கபார் கானுக்கு வழங்கப்பட்டது. 1987இல் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். காலமானார். மூன்று முறை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றி ருந்தார். இவர் மறைî¡;குப் பிறகு ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் அதிமுக பிளவுபட்டது. ஜானகி அணிக்குக் காங்கிரசுக் கட்சி சட்டமன்றத்தில் எதிராக வாக்களித்து ஆட்சியைக் கவிழ்த்தது. சில மாதங்கள் முதல்வராக இருந்த ஜானகி முதல்வர் பதவியை இழந்த பிறகு, கணவர் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட விருதினைப் பெற்றார். விருது வழங்கிய பின்னர், 356ஆவது பிரிவில் மாநில ஆட்சியைக் கவிழ்த்து உச்சநீதி மன்றத்தின் கண்டனத்திற்கும் மத்திய அரசு உள்ளானது. குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் இந்த ரத்தின விருதினை ஜானகியிடம் வழங்கிய போது, அம்மையார் குடியரசுத் தலைவரைப் பார்த்து புன்னகை செய்யவில்லை என்று அந்நாளில் ஊடகங்களில் செய்திகள் வலம் வந்தன.

திமுக ஆட்சியை 1967இல் தோற்றுவித்த பேறிஞர் அண்ணாவிற்கு ரத்தின விருது வழங்காமல், எம்.ஜி.ஆரின் மறைî¡குப் பிறகு வழங்கியது அரசியலா? அல்லது அண்ணாவை விட எம்.ஜி.ஆர் ஆற்றிய தொண்டு உயர்ந்ததா? போன்ற வினாக்களுக்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

டெல்லி அரசியலில் 1989ïš பல மாற்றங்கள் ஏற்பட்டன. பாஜக உட்படப் பல எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு வி.பி.சிங் 1989 நவம்பர் திங்களில் பிரதமர் ஆனார். சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்றி நடுவண் அரசின் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்தார். பேரறிஞர் அம்பேத்கருக்கு நூற்றாண்டு விழா நடுவண் அரசின் சார்பில் எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்ணல் அம்பேத்கருக்கு ரத்தின விருது வழங்கப்பட்டது. விடுதலைப் போராட்டப் போராளி நெல்சன் மண்டேலாî¡கும் ரத்தின விருது வி.பி.சிங் ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதைப் பொறுத்துக் கொள்ளாத ஆதிக்கச் சக்திகளின் ஊடக எழுத்தாளர்கள் இந்த இரு பெரும் ரத்தினங்களை விருது¡கு வி.பி.சிங் பரிந்துரை செய்ததற்கு அவர் மீது கண்டனக் கணைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

1991ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய்க்கும், மறைந்த பிரதமர் இராஜிவிற்கும், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. 1990ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய்க்கு பாகிஸ்தானின் உயரிய நி~hன்-இ-பாகிஸ்தான் விருது அளிக்கப்பட்ட பிறகே, இந்தியா ரத்தின விருதினை அறிவித்தது. குஜராத் பார்ப்பனர் என்ற தனித் தகுதியும் உண்டு. இந்தியாவின் துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், காந்தியின் சீடர் என்ற பல தகுதிகளைப் பெற்ற வல்லபாய் பட்டேலுக்கு 1954இல் வழங்காத ரத்தின விருதை, 37 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கியது. இவர் பார்ப்பனர் வகுப்பில் பிறக்காதது காரணமாக இருக்குமோ என்ற ஐயம் எழுவது இயற்கைதானே.

1992ஆம் ஆண்டில் ரத்தன் டாடாஇ மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத், மேற்குவங்கத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே ஆகியோருக்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. ரத்தன் டாட்டா உயிரோடு இருக்கும்போது அளிக்கப்பட்டது. முதன் முதலாக ஒரு பெரும் முதலாளிக்கு ரத்தின விருதினை நரசிம்மராவ் அரசு வழங்கியது. 1955ஆம் ஆண்டிலேயே ஆசாத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆசாத் ரத்தின தேர்வுக் குழுவில் இடம் பெற்று இருந்ததனால், அவ்விருதினைப் பெற மறுத்து விட்டார். இந்தப் பெருந்தன்மையை ஏற்று 1958ஆம் ஆண்டிலேயே ரத்தின விருதினை ஆசாதுக்கு வழங்கியிருக்கலாம். 36 ஆண்டுகள் தாமதித்து இந்த விருதினை வழங்கியது இன்று வரை புரியாத புதிராக உள்ளது. இயக்குநர் சத்யஜித் ரேî¡கு ரத்தின விருது அறிவிப்பதற்கு முன்பே 31 பன்னாட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 1967ஆம் ஆண்டு மகசேசே விருது வழங்கப்பட்டது. உலகப் புகழ் பெற்ற முற்போக்குக் கலைஞரான சார்லி சாப்லினுக்குப் பிறகு 1978இல் சத்யஜித் ரேî¡கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முதுமுனைவர் பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. 1991ஆம் ஆண்டு ஆஸ்கார் பரிசினை அறிவித்தார்கள். மருத்துவமனை யிலிருந்து இந்த விருதினை ரே பெற்றார். காணொளி வழியாக மருத்துவமனையிலிருந்து ஏற்புரையை நிகழ்த்தினார். இதற்குப் பின்புதான் மருத்துவமனையில் சத்யஜித் ரே நினைவு இழந்த பிறகு 1992ஆம் ஆண்டு மரணப் படுக்கையில் ரத்தின விருது வழங்கப்பட்டது. இவரும் வங்கப் பார்ப்பனர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிட்டார்களோ.

மீண்டும் 5 ஆண்டுகள் ரத்தின விருது¡கு ஓய்வு வழங்கப்பட்டது. 1997ஆம் ஆண்டில் அப்துல் கலாம்இ விடுதலைப் பேராட்ட வீராங்கனை ஆருணா ஆசிப் அலி (மறைî¡குப் பிறகு) மேன்மையாளர் குல்சாரி நந்தாவிற்கு 99 வயதில் ரத்தின விருது வழங்கப்பட்டது. பார்ப்பனரல்லாதவர் என்பதால் இவருக்குத் தாமதமாக வழங்கப்பட்டிருக்கலாம்.

1998ஆம் ஆண்டில் சி.சுப்ரமணியம், இசைப் பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமி ஆகியோர்க்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. 1999இல் வாஜ்பாய் பிரதமாயிருந்த போது 1998இல் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்தியா சென், விடுதலைப் போராட்ட வீரர் அசாம் மாநிலத்தின் முதல் முதல்வர் கோபிநாத் போர்டோலாய் (மறைவுக்குப் பிறகு), சர்வோதயத் தலைவர் விடுதலைப் பேராட்ட வீரர் ஜெயப் பிரகாணு நாராயண் (மறைî¡குப் பின்) சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் (பார்ப்பனர்) ஆகியோர்க்கு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன. 2001இல் லதா மங்கேணுகர், உஸ்தாத் பிஸ்மில்லாகான் ஆகிய கலைஞர்களுக்கு ரத்தின விருதுகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

1954இல் தொடங்கி 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர் களான ராவ், சச்சினுக்கு வழங்கியதால், இந்திய மண்ணில் பார்ப்பனியம் ரத்தின செல்வாக்கோடு, செருக்கோடு வலம் வருகிறது என்பதுதான் உண்மை. சச்சின் வட மாநில ஏட்டில் தனது தாய் தூய பார்ப்பனர் (pure brahmin) என்று பெருமிதம் கொண்டார் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

தகுதி மிக்க, பொதுவாழ்î¡கு இலக்கணம் வகுத்த, தொண்டின் இலக்கியமாய் வாழ்ந்த பல இந்தியச் சாதனையாளர்களுக்கு ரத்தின விருதுகள் வழங்கப்படவில்லை. ஆனால் சச்சினுக்கு என்றே விதிகளை மாற்றிஇ ரத்தின விருது வழங்கியதைச் செய்தி ஒளி ஊடகங்கள் கண்டனம் தெரிவிப்பதற்குப் பதிலாக, இவரை விட்டால் இந்தியாவில் வேறு விளையாட்டு வீரர் இல்லை என்ற கருத்தை வெளியிடுவது வெட்கக்கேடான செயலாகும்.

காரணம் மட்டைப் பந்து விளையாட்டு முதலாளித்துவத்தின் பிடியில் சிக்கி, மக்களை மாயையில் ஆழ்த்தி, இளைஞர்களைப் போதையில் ஆழ்த்திச் சீரழித்து வருகிறது. மற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளை அடித்து நொறுக்கி வருகிறது. பல முதலாளிகள் உழைக்காமலேயே பணம் கொட்டும் தொழிலாக மட்டைப்பந்து விளையாட்டை மாற்றி வருகின்றனர். விளையாட்டு என்ற நிலையிலிருந்து தடுமாறி, ஊக வணிகத்திற்கும், சூதாட்டத்து¡கும், மோசடிக்கும் இருப்பிடமாக மட்டைப்பந்து விளையாட்டு மாறிவிட்டது என்பதற்கும் மும்பை நீதி மன்றத்தில் நடைபெறும் வழக்கே சான்று பகர்கின்றது.

இந்த விளையாட்டில் எவ்வளவுதான் திறமையான விளையாட்டு வீரராக சச்சின் இருந்தாலும், அவர் கோடிக்கணக்கான பணம் ஈட்டியுள்ளார். வரிவிலக்குப் பெற்ற பல கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த வெளிநாட்டு மகிழுந்தை வணிக நோக்கோடு விற்றுவிட்டார் என்ற குற்றச்சாட்டும் சச்சின் மீது உள்ளது. இதுதான் பொது சேவை என்றால், விளையாட்டுத் திறமைக்கு உச்சம் என்றால், இதைவிட மானம் இழந்த செயல் வேறு ஒன்று இருக்க முடியாது.

பாரத ரத்னவா-பார்ப்ப ரத்னாவா என்ற ஐயமும் அச்சமும் எழுகின்ற இந்த வேளையில், தந்தை பெரியாரைப் புதிய தலைமுறை ஒளி ஊடகத்தில் பாஜகவின் தலைவர்களில் ஒருவர் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்தார். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் காங்கிரசு இயக்கத்தில் ஈடுபட்ட காரணத்தினால் 28 பதவிகளைத் துறந்தவர் தந்தை பெரியார். எந்தப் பட்டத்தையும், எந்த விருதினையும் விரும்பாத உலகம் போற்றும் மாபெரும் புரட்சியாளர். பெரியாருக்காகப் பெரியார் நெறிப்படி அவர் மறைî¡குப்பின் ரத்தின விருதை யாரும் கோரவில்லை என்பதை பாஜகவின் அந்தப் பாம்பு நபர் அறியாமையிலும் காழ்ப்புணர்ச்சியிலும் நச்சைக் கக்கினார்.

அண்டை நாடான பாகிஸ்தானில் உயரிய விருதினை வழங்கும் போது கடை¥பிடித்து வரும் உயரிய மரபு களை, நெறிகளைக்கூட இந்தியா ஏன் பின்பற்றவில்லை? என்பதைப் பலர் சுட்டியுள்ளனர்.

உண்மையான மக்கள் குடியரசாக இந்தியா வளர வேண்டுமென்றால், இது போன்ற விருதுகளை வழங்குவதைச் சட்டபூர்வமாகத் தடை செய்து விடலாமே!

Pin It

மல்லிகா இளநிலை அதிகாரியாக சென்னையில் உள்ள அந்த அலுவலகத்தில் சேர்ந்த போது, சுப்பராயன் அவளுக்கு மேலதிகாரியாக இருந்தார். மல்லிகாவின் கல்வித் தகுதியைப் பார்த்ததும், இதற்கு அடுத்த உயர்நிலைப் பதவிக்குத் தகுதி இருக்கும் பொழுது இந்த வேலையில் சேர்ந்தது ஏன் என்று அவர் கேட்டார். தான் இரண்டு பதவிகளுக்கும் தேர்வில் கலந்து கொண்டதாகவும், முதலில் இந்த வேலைக்கான நியமன ஆணை கிடைத்ததாகவும் உடனே வேலையில் சேர்ந்துவிட்டதாகவும் மல்லிகா கூறினாள்.

பின் அலுவலகத்தில் வேலை செய்வதற் குப் பயிற்சி அளித்த சுப்பராயன், இப்பொழுது கிடைத்த வேலையில் மனநிறைவு பெற்றுவிடக் கூடாது என்றும், அவளுடைய தகுதிக்கு ஏற்ற அடுத்த உயர்நிலைப் பதவியை அடைய முயன்று கொண்டே இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

ஒரு மாதம் கழிந்த பிறகு, மாலதி என்பவள் இளநிலை அதிகாரிக்கு அடுத்த உயர்நிலைப் பதவியில் வேலைக்குச் சேர்ந்தாள். மாலதி வேலையில் சேர்ந்தது மல்லிகாவிற்கு அதிர்ச்சியை அளித்தது. ஏனெனில் அவ்வேலைக்கான தேர்வின் போது மாலதியைவிட மல்லிகாதான் நன்றாகச் செயல்பட்டு இருந்தாள். எழுத்துத் தேர்வில் இதை ஓரளவு தான் யூகிக்க முடிந்தாலும், குழு விவாதத்தில்

இது தெள்ளத் தெளி வாகவே தெரிந்தது. நேர்முகத் தேர்வு பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை என்றாலும், கல்லூரிக் கல்வி யில் மல்லிகா தங்கப் பதக்கங்கள் பலவற்றைப் பெற்றி ருப்பதும், மாலதி எதிலும் முதன்மை பெறவில்லை என்பதும், மாலதியைவிட மல்லிகா தான் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதைத் தெளிவாகக் காட்டின. அப்படி இருக்கும் போது மாலதி உயர்நிலைப் பதவிக் கும், மல்லிகா இளநிலைப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டது எப்படி? மல்லிகாவால் பொறுக்க முடியவில்லை. சுப்பராயனிடம் தன்னுடைய மன உளைச்சலைக் கொட்டி அழுதேவிட்டாள். சுப்பராயனும் விவரங்களை விசாரித்துச் சொல்வதாகக் கூறினார். பின் நிர்வாக அதிகாரியிடம் விசாரித்த போது இந்திய நாட்டின்- இந்து மதத்தின் கொடூரமான இழிவான நோய் தான் இதற்குக் காரணம் என்று தெரிந்தது.

மல்லிகா, மாலதி உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு வேலைகளுக்குமான தேர்வுகளில் கலந்து கொண்டுள்ளனர். மல்லிகா தான் இரண்டு வேலை களுக்குமான தேர்வுகளில் முதன்மையாகத் தேர்வு பெற்று இருக்கிறாள். ஆனால் பார்ப்பனரான மேலாண்மை இயக்குநர் பார்ப்பனத்தியாகிய மாலதியை உயர்நிலைப் பதவிக்கும், மல்லிகாவை இளநிலைப் பதவிக்கும் தேர்ந்தெடுக்க விரும்பி இருக்கிறார். அப்படிச் செய்ய முடியாது என்று நிர்வாக அதிகாரி தெரிவித்த பொழுது உயர்நிலை அதிகாரி நியமனம் தொடர்பான கோப்பைக் கிடப்பில் போட்டு வைக்கும் படியும், இளநிலை அதி காரிக்கான தேர்வில் முதன்மை பெற்றிருக்கும் மல்லி காவிற்கு வேலை நியமன ஆணை அனுப்பும்படியும் கூறியிருக்கிறார்.

அதன்படி அனுப்பியதில் மல்லிகா வேலையில் சேர்ந்தவுடன், அவள் ஏற்கெனவே வேலை யில் சேர்ந்துவிட்டதால் உயர்நிலை அதிகாரி வேலைக் கான தேர்வில் இருந்து மல்லிகாவின் பெயரை நீக்கி விட்டு, மாலதிக்கு வேலை நியமன ஆணை அனுப்பும் படி கூறியிருக்கிறார். நிர்வாக அதிகாரியும் அதன்படியே செயல்பட வேண்டி இருந்திருக்கிறது.

விவரங்களைத் தெரிந்துகொண்ட மல்லிகாவிற்கு இது மேலும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் மல்லிகாவும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் தான். பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் தங்களுடைய வாய்ப்பைப் பறித்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு இருந்த அவளுக் குப் புதிய அனுபவமாக இருந்தது. முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குள்ளேயே பிரிவினையா? அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்4லை. சுப்பராயன் அவளைத் தேற்றினார். ஆனாலும் அவளால் அமைதி யடைய முடியவில்லை.

“சார்! ரிசர்வேஷன் தான் நம்ம வாய்ப்பைக் கெடுக்குதுன்னு இதுவரைக்கும் நெனச்சிட்டு இருந் தேன். இதென்னா சார்! கொடுமையா இருக்கு?”

“இல்லே மல்லிகா! ரிசர்வேஷன் நல்லபடியா இம்பிளிமெண்ட் ஆனா நமக்கு நல்லதாத்தான் இருக் கும்” என்று சுப்பராயன் சொல்லவும் “நமக்கும் தான் இன்னா, அப்படீன்னா நீங்களும் ஃபார்வர்ட் கம்யூனி டியா சார்?” என்று மல்லிகா கேட்டாள். சுப்பராயனும் ஆம் என்று பதிலளித்தார்.

“அது சரி சார்! ரிசர்வேஷன் இருந்தா நமக்கு சான்° கொறையத்தானே சார் செய்யும்? அது நமக்கு நல்லதுன்னு எப்படிச் சொல்றீங்க?” என்று மல்லிகா கேட்டாள்.

“உங்க அனுபவமே காட்டுதுல்லே? உங்களுக் குத் தகுதியும் திறமையும் இருந்தும், உங்களைவிட தகுதியிலேயும், திறமையிலேயும் கொறஞ்ச மாலதியை உங்களுக்கு மேலே உட்கார வச்சுட்டாங்க இல்லே? பவர் சென்டர்லே பிராமின் டாமினேஷன் இல்லாட்டி இந்த மாதிரி செய்ய தைரியம் வருமா? பவர் சென்டர்லே பி.சி.யும், எஸ்.சி.யும் நெறைஞ்சிருந்தா நம்ம மாதிரி நான் பிராமின் ஃபார்வார்ட்காரங்களுக்கு இப்ப கெடைக் கிறதைவிட அதிகமாகவே கெடைக்கும்” என்று சுப்பராயன் கூறியதை மல்லிகா சிறிது குழப்பத்துடன் உள் வாங்கிக் கொண்டாள்.

சரி! பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் களுக்கும் உரிய பங்கைக் கொடுத்தால்தான் பார்ப்ப னரல்லாத மற்ற முற்பட்ட வகுப்பு மக்களுக்கு உரிய பங்கு கிடைக்கும் என்று தனக்குத் தோன்றாதபோது சுப்பராயனுக்கு எப்படித் தோன்றியது? மல்லிகா கேட்டேவிட்டாள்.

வ.உ.சி. சேலத்தில் 5.11.1927இல் ஆற்றிய ‘அரசியல் பெருஞ்சொல்’ என்ற உரையில் இருந்தும், அதன் தொடர்ச்சியாக ஈ.வெ.ரா.வின் நூல்களில் இருந்தும் உணர்வுபெற்றதாக சுப்பராயன் கூறினார்.

இதுவரைக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும்தான் தங்கள் வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்த மல்லிகாவுக்கு, சுப்பராயனுடைய விளக் கம் வியப்பை அளித்தது. சமுதாயத்தைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருப்பதாக உணர்ந் தாள். சுப்பராயன் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் மட்டுமல்ல; தன் சமூகத்தையே சேர்ந்தவர் என்பதும் தெரிந்த பிறகு அவருடன் இன்னும் நெருக்கமாகப் பழகலானாள்.

சுப்பராயன் திருநெல்வேலிக்காரர் என்பதும், அவருக்குத் திருமணமாகி மனைவியுடனும் இரு குழந்தைகளுடனும் இருப்பதையும் தெரிந்து கொண்டாள். சுப்பராயன், மல்லிகா இவ்வலுவலகத் தில் சேரும் முன்பே திருமணமாகி, ஆறு மாதங்களில் கணவனை இழந்தவள் என்று அறிந்த போது மிகவும் வருத்தப்பட்டார். மல்லிகாவை மறுமணம் செய்து கொள்ளும்படி கூறிய போது, ஆறு மாத திருமண வாழ்க்கையில் மாமனார், மாமியார், நாத்தனார் மட்டுமல்லாது கணவன் வழி உறவினர்கள் பலரால் தொல்லைப்பட்டு இருப்பதாகவும், ஆகவே இனியும் திருமணம் செய்துகொண்டு இதுபோன்ற தொல்லை களுக்கு உட்படத் தயாராக இல்லை என்றும் கூறி விட்டாள்.

இப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த அலுவலகத்தில் மீண்டும் உயர்நிலை அதிகாரிப் பதவிக்கு ஒருவர் தேவைப்பட்டார். வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெயர்களை அனுப்பும்படி நிர் வாகத்தினர் கேட்டிருந்தனர். மல்லிகா தானும் அப்பதவிக் குத் தகுதி பெற்றவள் என்றும் தன்னையும் அத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறும் கோரி அனுமதியைப் பெற்றாள்.

இப்பொழுது பழைய மேலாண்மை இயக்குநர் மாற்றலாகிப் போய், வேறு ஒருவர் இருந்தார். இவரும் பார்ப்பனர்; மேலும் பழையவரை விட அதிகமான பார்ப்பன ஆதிக்கப் பற்று உடையவர். மல்லிகா மிகவும் கவலை அடைந்தாள். இம்முறை தனக்கு இவ்வேலை கிடைக்காவிட்டால், தன்னைவிட வயதில் குறைந்தவர்கள் தனக்கு மேலதிகாரிகளாக வந்துவிடு வார்களே என்ற ஆதங்கத்தில் எப்படியாவது இத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பி னாள். தன்னுடைய நலனில் அக்கறை கொண்ட சுப்பராயனிடமே யோசனை கேட்டாள்.

 சுப்பராயனும் இவ்வேலைக்கான தேர்வில் கலந்துகொள்ள இருப்ப வர்களைப் பற்றிய விவரங்களைப் பெற்று வரச் சொல்லி அவற்றை ஆராய்ந்து பார்த்தார். இவ்வேலை பொதுப் பிரிவிற்கு உரியது என்றும், இவ்வேலைக்குப் போட்டியிடுபவர்களில் பார்ப்பனர் யாரும் இல்லை என்பதும் தெரிய வந்தது.

உடனே மல்லிகாவிடம் மேலாண்மை இயக்குநரை தனிமையில் சந்திக்கும் படியும், அப்பொழுது, தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த வள் என்று கூறி, இவ்வாய்ப்பில் தனக்குக் கிடைக்கா விட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக் குக் கீழ், தான் பணிபுரிய நேரும் என்று கூறும்படியும் அறிவுரைத்தார். மல்லிகாவும் அவ்வாறே செய்ய, பார்ப்பனர் யாரும் அத்தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தினால், மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுப்பதைவிட மல்லிகாவையே தேர்ந்து எடுக்கலாம் என்று மேலாண்மை இயக்குநர் முடிவு செய்தார்.

அதன்படியே மல்லிகாவும் உயர்நிலை அதிகாரி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அப்படித் தேர்ந்தெடுக்கப் பட்டதும் அவள் வேறு பிரிவில் பணியமர்த்தப்பட்டாள். அப்படி வேறு பிரிவுக்கு மாறிய பொழுது, வேறு ஓர் அதிகாரிக்குக் கீழ்ப் பணியாற்றும் போது பல இக் கட்டுகளைச் சந்திக்க நேர்ந்தது.

சிறு தவறுகள் நேர்ந் தாலும் கடிந்துகொள்ளும் மேலதிகாரிகளிடம் வேலை பார்ப்பது அவளுக்கு வருத்தத்தை அளித்தது. சுப்ப ராயனும் மல்லிகா தவறு செய்யும் போது எடுத்துக் காட்டி சரியானபடி கோப்புகளில் எழுதக் கற்றுக் கொடுத்திருக்கிறார். சில சமயங்களில் கண்டிப்புடனும் அறிவுரை கூறி இருக்கிறார்.

ஆனால் ஒரு பொழுதும் சீண்டியதில்லை. ஆனால் மற்றவர்கள் எப்பொழுது தவறு செய்வாள்; சீண்டிப் பார்க்கலாம் என்று காத்தி ருப்பது போல் இருந்ததைக் கண்ட மல்லிகா, வேலை யில் கவனம் செலுத்துவது என்பதைவிட மேலதி காரியிடம் சிக்காமல் எப்படி வேலை செய்வது என்ற திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

இச்சூழ்நிலை அவளுக்கு, சுப்பராயன் மேல் அதிக மாரியாதையை ஏற்படுத்தியது. இருந்தாலும் ஒரே அலவலகத்தில் இந்தப் பிரிவில் தான், இவருக்குக் கீழ் தான் வேலை செய்வேன் என்று கூறமுடியாது. எங்குப் பணியமர்த்தம் செய்யப்படுகிறார்களோ அங்கு தான் வேலை செய்ய வேண்டும். சுப்பராயனும் இதைத்தான் மல்லிகாவிடம் கூறினார். அவளும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்குத் தன்னைத் தகவ மைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டாள்.

காலம் இவ்வாறு சென்று கொண்டிருக்கையில், உச்சநீதிமன்றத்தில் 9.9.2013 அன்று அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்பு மல்லிகாவின் மனதில் சிறு அசைவை ஏற்படுத்தியது. வழக்கு இதுதான் :

ஒருவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணு டன் நட்பை வளர்த்துக் கொண்டு, அது கமுக்கமாக உடலுறவு கொள்ளும் வரை வளர்ந்துவிட்டது. இவ்வாறு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந் தாலும், தன் மனைவி, குழந்தைகளைக் கவனிப்பதில் ஒரு குறையும் வைக்கவில்லை.

ஆனால் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொண்டிருப்பதை அறிந்த அவ்வதிகாரியின் மனைவி தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். காவல் துறை யினர் அவ்வதிகாரியின் மேல் வழக்குப் பதிவு செய்ய, வழக்கை விசாரித்த நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேல்முறையீடு, அதன் மேல்முறையீடு என்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்ட போது, அந்த அதிகாரி இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தாலும், தன் மனைவி, குழந்தைகளைக் கவனிப்பதில் ஒரு குறையும் வைக்கவில்லை என்பதால் அவர் எந்தக் குற்றத்தையும் புரியவில்லை என்றுகூறி அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் படித்ததும், மல்லி காவின் மனதில், தான் சுப்பராயனுடன் இதுபோல் உறவு வைத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. இப்படித் தோன்றிய உடன் மறுபுறத்தில் இவ்வுறவில் தான் கருத்தரித்து விட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் கூடவே தோன்றியது. ஆனால் தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துள்ள இக்காலத்தில் உடலுறவு கொண்டாலும், கருத்தரிக்காமல் இருக்கும் வழிகளைத் தெரிந்து அவற் றைக் கையாளலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டாள்.

ஆனால் சுப்பராயனிடம் தன் எண்ணத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று வழி தெரியாமல் மயங்கினாள். அடிக்கடி அவருடைய அறைக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினாள். ஆனால் தன் எண்ணத்தை வெளியிட முடியாமல் திணறினாள். ஒரு வேளை அவர் சினத்து சீறிவிட்டால் என்ன செய்வது? அதுவும் மற்றவர்களுக்கும் தெரிந்துவிட்டால் என்ன செய்வது? அவள் மிகவும் திணறினாள். சுப்பராயனும் மல்லிகா வினிடத்தில் ஏதோ மாற்றம் இருப்பதைப் புரிந்து கொண்டார். ஆனால் என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருநாள் கேட்டேவிட்டார். ஆனாலும் மல்லிகா ஒன்றுமில்லை என்று கூறிச் சென்று விட்டாள்.

வேலைப்பளு அதிகமாக இருக்கும் சமயத்தில் சுப்பராயன் விடுமுறை நாளான சனிக்கிழமையன்று அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்வது வழக்கம். அப்படி விடுமுறையில் வேலை பார்க்கும் போது நிறைய அளவில் வேலைகள் முடிந்துவிடும்.

இது மல்லிகாவுக்குத் தெரியும். வேலை நாள்களில் தன்னுடைய எண்ணத்தை வெளியிட்டு, அதனால் அவர் சினத்து சீறிவிட்டால் அலுவலகம் முழுவதும் தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் தயங்கிய மல்லிகா, சனிக்கிழமையன்று அலுவலகம் சென்று அவரைப் பார்த்து, தன் உள்ளக்கிடக்கையைக் கூறுவ தால் அசம்பாவிதம் எதுவும் நிகழாது என்று நினைத் தாள்.

அதன்படி ஒரு சனிக்கிழமையன்று மல்லிகாவும் அலுவலகத்திற்குச் சென்றாள். சுப்பராயனை அவருடைய அறையில் சென்று சந்தித்ததும், அவர் அவளை வியப்புடன் ஏற இறங்கப் பார்த்தார். அவளும் அவரிடம் தனியாகப் பேச விரும்பி வந்ததாகக் கூறினாள்.

சுப்பராயனும் விவரத்தைக் கூறும்படி கேட்டவு டன் “சார் நான் சொல்றதைக் கேட்டு நீங்க கோவிச் சிக்கக் கூடாது” என்று அவள் பீடிகை போட்டாள்.

“சரி! விஷயத்தைச் சொல்லுங்க”

“நான் வயசிலே சின்னவதானே? என்னை ஏன் வாங்க போங்கன்னு மரியாதை குடுக்கிறீங்க? சும்மா வா, போன்னே சொல்லலாமே?” என்று மல்லிகா கூறியவுடன் சுப்பராயனுக்கு ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று புரிய ஆரம்பித்தது.

“இல்லீங்கம்மா! ஆபீ°லே எல்லாரையும் மரியாதை யாத்தான் நடத்தணும், கூப்பிடணும். ஆபீ° நடத் தைக்கு மாறா நீங்க என்ன சொல்ல வர்றீங்க?” என்று சுப்பராயன் சற்றுக் கடுமையான குரலில் கேட்டவுடன் மல்லிகாவிற்கு அழுகை வந்துவிட்டது. அவள் அழுவ தைப் பார்த்து மனமிரங்கிய சுப்பராயன் சற்றுத் தாழ்ந்த குரலில் சமாதானமாகப் பேசி, அவள் சொல்ல வந்த தைச் சொல்லும்படிக் கேட்டார்.

மல்லிகாவும் தயங்கித் தயங்கி, தன் உள்ளத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டாள். எல்லாவற்றையும் கேட்ட சுப்பராயனுக்கு ஒரு புறம் கோபம் வந்தாலும், இன்னொரு புறம் பரிதாபப்படவும் செய்தார்.

“அது தான் நான் அன்னைக்கே சொன்னேன். நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு” என்று சுப்பராயன் கூற, மொத கல்யாணம் பண்ணின வளையே எவ்வளவோ கொடுமைப்படுத்துறாங்க. ரெண்டாவது கல்யாணம்னா யாரும் மதிக்க மாட் டாங்க” என்று மல்லிகா கூறினாள்.

“இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தா மட்டும் மதிப்பாங்களா?”

“யாருக்குந் தெரியாம ரகசியமா வச்சுக்கலாம். அப்படியே தெரிஞ்சாலும் பின்னாலே தான் ஏதாச்சும் பேசுவாங்களே தவிர மாமனார், மாமியார், நாத்தனார் மாதிரி கொடுமைப்படுத்தமாட்டாங்க.”

இதைக் கேட்டவுடன் மல்லிகா தன் மனதில் ஆழமாக ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறாள் என்றும், பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கவில்லை என்றும் நினைத்தார். மேலும் இன்று அலுவலக வேலை பார்க்க முடியாது; அதற்கான மனநிலை வருவதற்கே நிறைய நேரம் தேவைப்படும் என்பதையும் உணர்ந்து கொண்டார்.

“மல்லிகா! நீங்க உங்க மனசுலே தவறான ஆசைய வளர்த்துக்கிட்டு இருக்கீங்க. இது நியாய மில்லே. எனக்கும் குடும்பம் இருக்கு. பெண்டாட்டி, பிள்ளைங்க இருக்காங்க. இந்த மாதிரி தப்பான ஆசைய வளர்த்துக்கிறதுக்குப் பதிலா நல்ல பையனாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கீங்க. அதுதான் நல்லது. இப்ப ஆபீஸ்லே வேலை பார்க்குறப்ப எவ் வளவு பேரை அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறீங்க. அதேபோல வாழ்க்கையிலும் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போறதுக்கு முடியும்” என்று அறிவுரை சொன்ன சுப்பராயன், இதுபோன்ற உறவுகள் சட்ட விரோதம் என்றும், இருவருடைய வேலைக்கும் உலை வைத்து விடும் என்றும் கூறினார்.

உடனே மல்லிகாவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இது ஒன்றும் சட்ட விரோதம் இல்லை என்று வாதாடினாள். சுப்பராயனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை. அவ்வழக்கில் விசா ரணை நீதிமன்றம் தண்டனை அளித்திருப்பதையும், அதிலிருந்து தப்பி உச்சநீதிமன்றம் விடுதலை செய்த காலம் வரையில் அனுபவிக்க நேர்ந்த துன்பங் களையும் விளக்கிய சுப்பராயன் எது எப்படியிருந் தாலும் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுத்தாமல் வாழ்வதுதான் வாழ்வு என்றும் கூறினார். மேலும் அவள் விரும்பினால் நல்ல பையனாகப் பார்த்துத் திருமணம் செய்வதற்குத் தானே பொறுப்பெடுத்துக் கவனிப்பதாகவும் கூறினார்.

இதைக்கேட்ட மல்லிகா மனவருத்தத்துடன் விடை பெற்றுக் கொண்டாள். ஒருபுறம் சுப்பராயன் சொல்வது போல் மறுமணம் செய்துகொள்வதுதான் சரியான தீர்வு என்று தோன்றியது. ஆனாலும் சுப்பராயனைப் போல் ஒரு நல்ல ஆண் மகன் கிடைப்பான் என்று அவளுக்கு நம்பிக்கை வரவில்லை. இந்தஇருவகை நினைப்பிலும் அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

சுப்பராயனும் தன்னுடைய ஆளுமை ஒரு பெண்ணின் மனதை இவ்வாறு பாதித்திருப்பதை அறிந்து மனவருத்தம் அடைந்தார். உச்சநீதிமன்றத் தின் தீர்ப்பு ஒரு பெண்ணையே தவறான வழிக்குத் தூண்டியிருக்கிறது என்றால், தவறான வழிகளைக் கையாளும் ஆண்கள் எப்படி யெல்லாம் இதைப் பயன்படுத்துவார்களோ என்று திகைத்துப் போனார். பார்ப்பன ஆதிக்கப் பிடிப்பைத் தளரவிடாமல் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதிலுமே அக்கறை கொள் ளாத நீதிபதிகள் இருந்தால் நாடு எப்படி உருப்படும் என்று மனவருத்தமும் அடைந்தார்.

சிலகாலம் அவளுடைய கண்களில் படாமல் இருப் பது நல்லது என்று அவருக்குத் தோன்றியது. அப் பொழுதுதான் திருநெல்வேலியில் தொடங்கப்பட இருக்கும் ஒரு அலுவலகத்துக்குத் தலைமை அலுவலராகப் பணிபுரிய அயல்பணியில் (Deputation) செல்லத் தயாராக உள்ளவர்கள் தேவை என்று அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை வந்தது. உடனே அதற்கு ஒப்புதல் கொடுத்து ஒரு மூன்றாண்டு காலம் அயல் பணியில் வேலை செய்யத் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டார்.

Pin It

தமிழீழ விடுதலைப் போரில் சிங்கள இனவெறிப் படையுடன் போரிட்டு வீரமரணம் எய்திய மாவீரர் களின் ஈகத்தையும், 2009 மே மாதத்தில் இறுதிக்கட்டப் போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் குவிக்கப் பட்ட ஈழத்தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை விமானங்களிலிருந்து வீசி 1.4 இலட்சம் ஈழத் தமிழர் களைக் கொன்ற தமிழின அழிப்பின் கொடுமை களையும் சித்திரிக்கும் தன்மையில், தஞ்சை மாவட் டத்தில் விளாரில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ பல தரப்பனரின் கூட்டுழைப்பால் உருவாக்கப்பட்டது. உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலை மையில் இம்மாபெரும் வரலாற்றுச் சின்னம் உருவாக் கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்புவிழா நிகழ்ச்சி 2013 நவம்பர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு இவ்விழாவை நடத்தவிடாமல் தடுத்திடத் திட்டமிடுவதை அறிந்த விழா ஏற்பாட்டாளர்கள், முன்கூட்டியே 6-11-2013 அன்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் திறப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நவம்பர் 9, 10 ஆகிய நாள்களில் நடைபெற விருந்த கருத்தரங்கக் கூட்டத்திற்குக் கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. அதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை மூலம் நிகழ்ச்சியை நடத்திட அனுமதி பெற்றனர்.

9-11-2013 அன்று முதல்நாள் நிகழ்ச்சி இரவு 10 மணிக்குமேல் நடத்தப்பட்டது என்பதைக் காரணமாகக் காட்டி, ஒலிபெருக்கிகளைக் காவல் துறையினர் தூக்கிச் சென்றனர். இத்தகைய கடுமையான நெருக்கடிகளுக் கிடையே இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடத்து முடிந்தது. ஆயினும் முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழின எழுச்சிக்கு ஊற்றுக்கண்ணாக அமைந்திருப்பது, ஆளும் வர்க்கத் தினரின் நெஞ்சில் தைத்த முள்ளாய் உறுத்தியது.

எனவே முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முன் பகுதி யில் 2400 சதுர அடி பரப்பில் அழகிய நீரூற்று களுடன் அமைக்கப்பட்டுள்ள எழில்மிகு பூங்கா நெடுஞ் சாலைத்துறைக்குச் சொந்தமான நிலப்பகுதியில் அமைந்துள்ளது என்பதைக் காரணமாகக் காட்டி, பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து, பூங்காவையும் சிதைத்தது. ஈழத்தில் நடந்த கொடுமைகளை காண் போர் உள்ளங்களை உருக்கும் வகையில் அமைக்கப் பட்டிருந்த மாவீரர் துயிலும் இடங்களை இராசபக்சே அரசு தகர்த்து அழித்தது போன்றதல்லவா இது! இலங் கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்ககேற்கக் கூடாது என்று அவசரமாகக் கூட்டப்பட்ட தமிழகச் சட்டமன்றத்தில் இரண்டாவது தடவையாகத் தீர்மானம் நிறைவேற்றிய செயலலிதா அரசு, அதே நாளில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரையும் பூங்காவை யும் தகர்த்தது மாபெரும் கொடுமையல்லவா?

தமிழக அரசின் அடவாடிச் செயலைத் தடுக்க முயன்ற பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக அரசு. இப்போது இவர்கள் பிணையில் வெளிவந்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும். மேலும் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முன், பூங்கா அமைத்திட அனுமதி அளிப்ப துடன் அரசின் செலவிலேயே அது அமைக்கப்பட வேண்டும். இதுவே தமிழ்நாட்டு அரசு முள்ளிவாய்க் கால் முற்றத்தில் செய்த அடவாடித்தனத்திற்கு ஏற்ற கழுவாயாக அமையும்.

Pin It

இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் காலிகள் கலாட்டா

“திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் சுமார் 10,000 பேர்கள் கொடிகளுடன், வாத்தியங் களுடனும், ஊர்கோலம் போகும் போது காங்கிரசாரும், அவர்களுடைய அடியாட்களும் ஆத்திரத்தை மூட்டக்கூடிய வார்த்தைகள் கொண்ட நோட்டீசுகளைக் கூட்டத்தில் வீசியதல்லாமல், தலைவர்கள் கையில் கொண்டு போய்க் கொடுப்பதும், கோபமுண்டாகும் வண்ணம் ‘ஜே’ போடுவதுமான காரியங்களைச் செய்துகொண்டு வந்ததுமல்லாமல், கூட்டத்தில் கற்களையும் வீசினால் யார்தான் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள்? போலீசார் இந்தக் காலிகளை விரட்டிவிட்டார்களே ஒழிய, அவர்களைக் கைது செய்யவோ, பிடித்து வைக்கவோ சிறிதும் முயற்சி செய்யவில்லை.

ஊர்கோலம் மாநாட்டு மண்டபத்துக்கு வந்தபிறகும், மாநாட்டுக் கொட்டகை மீதும் கற்கள் எறியப்பட்டன. பொது ஜனங்களுக்கு எவ்வளவு பொறுமை இருந்திருந்தால் இந்தக் காலிகள் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” (‘குடிஅரசு’ தலையங்கம், 2.1.1938).

தினமணி’யின் குறும்புத்தனம்

“சென்ற மாதம் சேலத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அ. பொன்னம்பலனார் பேசும்போதும் காங்கிர° காலிகள், கூட்டத்தில் கல் போட்டு கலவரம் செய்தனர். அவர்களைத் தூண்டிவிடும் நோக்கில் ‘தினமணி’ தலையங்கங்களைத் தீட்டி வந்துள்ளது. ‘தினமணி’ யின் ஒரு தலையங்கத்தில் “இந்தி எதிர்ப்புத் தீர் மானம் நிறைவேறாமல் பொது ஜனங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று பச்சையாகத் தூண்டி விட்டிருக்கிறது. மற்றொரு சமயம் “பொது ஜனங் களுக்குக் கோபம் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?” என்று எழுதி இருக்கிறது. மற்றும் சில சமயம் “பொது ஜனங்களும் சும்மா இருப்பார்களா?” என்றெல்லாம் எழுதி, பொது மக்களை இந்தி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக உசுப்பிவிடுவதை “குடிஅரசு” ஏடு 2.1.1938 தலையங்கத்தில் கண்டித்துள்ளது.

வ.ஆ.மா. 2வது சுயமரியாதை மாநாடு ஆம்பூரில் நீதிக்கட்சியின் துணைத் தலைவர் கான்பகதூர் கலி புல்லா தலைமையில் 28.11.1937இல் நடைபெற்றது. கான்பகதூர் கலிபுல்லா தமது தலைமையுரையில் இராசாசி ஆட்சிக்கு வந்ததும் கடவுள் வாழ்த்து என்ற பெயரில் வந்தே மாதரம் பாடலைப் பாட வைத்ததைக் கண்டித்தார்.

மேலும் அவர் பேசுகையில் “வந்தே மாதர கீதப் பிரச்சனை ஒரு புறம் இருக்க, இந்தியைக் கட் டாயப் பாடமாக்கப் போகிறோம்” என்று வீண் சபதம் போட்டுக் கொண்டு அலைகின்றார்கள். அதற்கு அவசியம் என்னவென்று கேட்டால் “இந்தியைப் படித்துக் கொண்ட மாத்திரத்தில் வடஇந்தியாவுக்குச் சென்று சம்பாதிக்கலாம். துளசிதா° ராமாயணம் படிக்கலாம்” என்கிறார், கனம் ராஜகோபாலாச்சாரியர். “10,000க்கு ஒருவர் கூட வடஇந்தியா போகிறவர்கள் இல்லையே, அப்படியிருக்க ஒருவருக்காக வேண்டி 10,000 பேர் கல்வி கற்பதைக் கொலை செய்ய லாமா?” என்று கேட்டால், “இந்தியா முழுமைக்கும் ஒரு பொது பாஷை வேண்டும். அதற்காகத்தான் நான் இந்தி மொழியை வலுக்கட்டாயப்படுத்துகிறேன்” என்கிறார்.

உண்மையை விளக்க வேண்டுமானால் கனம் ராஜகோபாலாச்சாரியாரை நம்பி, பிழைப்பில்லாத ஏழை பிராமணர்கள் இந்தியைப் படித்துவிட்டுத் தெருத் தெருவாய் அலைந்து கொண்டிருப்பதாயும், அப்படி ஆயிரக்கணக்கான பிராமணர்கள் திண்டாடிக் கொண்டி ருப்பதைப் பார்த்துக் கொண்டு, சென்னை மாகாணப் பிரதம மந்திரி °தானத்தை வகிக்கும், கனம் ராஜ கோபாலாச்சாரியார் வாளாயிருக்க முடியாமல் அவர் களுக்கு எப்படியாவது பிழைப்புக்கு வழிகாட்ட வேண்டி யது அவரது கடமையாகையால், அவர் இந்தியைக் கட்டாயமாக்குவது என்று கங்கணங்கட்டிக் கொண்டு அலைகிறார் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்” என்று பேசினார்.

இந்தக் கருத்திலும் உண்மை இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. இராசாசி இந்தியைக் கட்டாய மாக்கி, 21.4.1938இல் ஆணையிட்டவுடன், 125 உயர்நிலைப் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுமுதல், முதல் மூன்று வாரங்களில் இந்தி கட்டாயப்பாடம் என்று ஆணைப் பிறப்பித்தார். அரசாணை எண். M.R.C. Miscellaneous, Public Education, G.O.No.911, Date 21 April, 1938 இந்தத் திட்டம் நிறைவேற, இராசாசி அரசு கூடுத லாக ரூ.20,000 நிதி ஒதுக்கி, அப்பணத்தை இந்தி ஆசிரியர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என ஆணையிட்டது (Mail 30 April, 1938).

இராசாசி ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன் என்று அறிவித்த நாள் முதல், தந்தை பெரியாரின் “குடிஅரசு” ஏடும் “விடுதலை”யும் தமிழர்களுக்குத் தன்மான உணர் வூட்ட வாளும் கேடயமும் போல் பயன்பட்டு வந்துள்ள தை வரலாறு நமக்குக் காட்டுகிறது.

குடிஅரசு 1937, திசம்பர் 19 இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. தமிழகம் கடந்தும் அயல்நாடு களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேயா, சிங்கப்பூரிலும் பல கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. 9.1.1938இல் சிங்கையில் சுயமரியா தை இயக்கத் தலைவர் கோ. சாரங்கபாணி அவர்கள் தலைமையில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. “இந்தி தமிழ்நாட்டில் அழிந்தேதீரும்” என்ற தலைப் பில் அவர் நெடிய சொற்பொழிவாற்றினார். (‘குடிஅரசு’, 28 சனவரி 1938).

திருச்சியில் கூடிய தமிழர் மாநாட்டின் தீர்மானத் தின்படி, ஒரு குழுவை அமைத்து கவர்னரிடம் சென்று முறையிடுவது என்று முயற்சி செய்தனர். அந்தக் குழுவினரைப் பார்க்கவும், அவர்களின் கோரிக்கை யை ஏற்கவும் கவர்னர் மறுத்துவிட்டார். இந்த நிகழ் வைக் கண்டித்துத் தந்தை பெரியாரின் “குடிஅரசு” இதழ் சீறிப் பாய்ந்தது.

“தமிழர்கள் இனி என்ன செய்யப் போகிறார் கள்?” என்று துணைத் தலையங்கத்தைத் தீட்டியது குடிஅரசு இதழ்.

“சரணாகதி மந்திரிசபை, தமிழ்நாட்டிலே, இந்தியைக் கட்டாயப் பாடமாக்கத் துணிந்து திட்டம் போட்டனர். சூழ்ச்சி, சுயநலம், விஷமம் வர்ணாச்சிரமமாகிய, விஷங்கலந்த இத்திட்டத்தை, தமிழர் உண்டு மாள்வ ரோ என நாம் பயந்தோம். அக்கிரகார மந்திரி சபை யின் அக்கிரமப் போக்கால், தமிழர் சமூகம் நசிக்கா திருக்க வேண்டுமே எனக் கவலை கொண்டோம். இத்திட்டம் அர்த்தமற்ற, அவசியமற்ற, மோசமான மனு ஆட்சித் திட்டம் என்றோம். நம்மை போன்றே தமிழ் உலகும் கருதிற்று.

தமிழர்கள் சீறி எழுந்தனர். எங்கும் ஒரு கொதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு கொந் தளித்தது. பலமான கிளர்ச்சி ஆரம்பித்தது. ஆயிரக் கணக்கான மக்கள் அடங்கிய கூட்டங்கள் கூடி, பிரதிதினம் இந்தி கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. “தமிழ்மொழி அழிக்கப்படுவதைக் கண்டும் நாங்கள் உயிரோடு இரோம்” என்ற முழக்கங்கள் மூலை முடுக்குகளிலும் எழும்பின.

தமிழர் கழகங்களென்ன, பாதுகாப்புச் சங்கங்களென்ன, இந்தி எதிர்ப்புச் சபைகள் எத்துணை, இவ்வளவும் தமிழ்நாட்டிலே தோன்றின. பண்டிதர்கள் பதறினார்கள். மாஜி கவர்னர்களும், மாஜி மந்திரிகளும், காங்கிரஸ் மீது காதல் கொண் டோரும், பிரபலஸ்தர்களும் வாலிபர்களும் பொது மக்களிடையே நிரந்தரமான தொடர்பைக் கொண்டுள்ள சு.ம. இயக்கத்தலைவரும், தோழர்களும் இத்திட்டத் தைக் கண்டித்துப் பலத்த பிரச்சாரத்தை இடைவிடாது தென்னாடு முழுவதும் நடத்தினார்கள். இக்கிளர்ச்சி யின் பயனாகவே பல பிரத்தியேக மாநாடுகள் நடை பெற்றன.

கிளர்ச்சி, கண்டனம் ஆகியவற்றைக் கண்ட மந்திரி கனம் சுப்பராயனே கோவையில் செய்தியாளர் களிடம், “இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி மிக மும்முரமாக இருப்பதாக ஒப்புக்கொண்டார். அதிகார அகம்பாவத்தில் அமிழ்ந்து கிடக்கும் ஆச்சாரியார் இந்த பலத்த கிளர்ச்சிக்கு விடுத்த பதில் “தமிழர்கள் அறிவிலிகள் - குரங்குகள்” என்பதேயாகும்.

1937-1938 இராசாசி ஆட்சிக் காலத்தில் டாக்டர் சுப்பராயன் தான் கல்வி அமைச்சராக இருந்தார்.

“தமிழர்கள் தமது கிளர்ச்சியைக் கூடுமான வரை யில் நல்ல முறையிலே நடத்திக் காட்டினார்கள். தமிழர் கள் தமது அதிருப்தியையும் தெரிவித்துவிட்டனர். இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்களுக்குக் கவர்னர் தந்த பதில் “தூது “கோஷ்டியைப் பார்க்க முடியாது” என்பதுதான். தமிழர்களே! இதுதான் உங்கள் நிலைமை; தமிழர்களைப் பற்றி கவர்னர் கொண்டுள்ள எண் ணமும் தமிழர்களிடம் நடந்துகொள்ளும் போக்கும் இதுதான்; இனி தமிழர்களே என்ன செய்யப் போகி றீர்கள் என்று கேட்கிறோம்” (‘குடிஅரசு’ துணைத் தலையங்கம், 23.1.1938)

(குறிப்பு : சென்னை மாகாண கவர்னர் இந்தி மொழிக்கு ஆதரவுதான். அவரைச் சந்தித்துப் பயன் இல்லை என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிலே பெரியார் கூறியிருந்தது உண்மையாகிவிட்டது.)

பெரியார் 16.01.1938இல் நீடாமங்கலத்தில் ஆற்றிய சொற்பொழிவில் “இப்போது உள்ள மந்திரிகள் காலேஜ் களை ஒழிக்க வேண்டும்; உயர்தரப் பாடசாலைகளை மூடவேண்டும்; 60 பிள்ளைகளுக்குக் குறைவாக உள்ள பள்ளிக்கூடங்களை எடுத்துவிட வேண்டும்; கட்டாய இலவசப் படிப்பு வேண்டியதில்லை; கல்வி மானியம் குறைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்...

இந்த லட்சணத்தில் இந்தித் திட்டம் எதற்காக? சுத்தத் தமிழ் - நல்ல அழகிய தமிழ் - பிறவித் தமிழ் - தினமும் பேசும் பாஷை நமக்கு சௌகரியமாக இருக்கும் போது, அதிலும் படித்த மக்கள் 100க்கு 8 பேரே தான் இருக்கிற நிலையில், இந்தி வந்தால் என்னவாகும்? ல, ழ, ள எழுத்து களுக்கு வித்தியாசமே நம்ம ஆட்களுக்கு இன்னமும் சரியாகத் தெரியவில்லை. பள்ளிக்குப் படிக்கவரும் நம் பிள்ளைகளைப் பார்த்து “உனக்குப் படிப்பு வராது வீட்டுக்குப்போய் வண்டியோட்டுகிறவன் மகனாயிருந் தால் வண்டியோட்டு; உழுகிறவன் மகனாயிருந்தால் உழு” என்றெல்லாம் சொல்லி விரட்டிவிட்டு, இப்போது மாத்திரம் இந்த இந்திக் கல்வியைக் கொண்டுவந்து அதையும் சேர்த்துக் கட்டாயமாகப் படிக்கும்படி சொன்னால் எப்படி நம் பிள்ளைகளால் படிக்க முடியும்?

‘ஏழையைக் கெடுக்க ஒரு யானையைக் கொடு’ என்று சொல்லுவார்கள். அதுபோல் படிப்பில் மிக ஏழையாய் இருக்கும் நம் மக்களுக்கு யானை போன்ற இந்தி உயர்வாயிருந்தாலும், அது இதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வருமா? அவர்கள் வாயில் நுழையுமா? ஒரு எழுத்துக்கு 4 சப்தமிருக்கிற உச்சரிப்பு கடினம்; எழுத்துகள் அதிகம். 12 வயதிலிருந்து 14 வயதுக்குள் நம் பிள்ளைகள் இரண்டு அந்நிய பாஷைகளைப் படிக்க முடியுமா? அதில் போதுமான மதிப்பெண் வாங்க முடியுமா? இந்த இந்தி படித்து நன்றாய்த் தேர்ச்சி பெறுகிற அந்தக் காலத்திற்குள்ளே ஒருவன் பி.ஏ. பட்டதாரியாக வந்துவிடலாம்” (குடிஅரசு, 6.2.1938) என்று பேசினார். தந்தை பெரியாரின் தமிழர் நல நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

- தொடரும்

Pin It