amen book 450கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தி லுள்ள சிரைக்கேக்காரன் சி.வி. ராபேலுக்கும், கொச்சு அன்னத்திற்கும் 1956- நவம்பர் மாதம் 6-ஆம் தேதி மகளாகப் பிறந்தவர் கன்னியாஸ்திரி  ஜெஸ்மி அவர்கள்.  தொடக்கக்கல்வியை புனித ஜோசப் லத்தீன் கான்வென்டிலும், கல்லூரிப் படிப்பை சேரூர் விமலா கல்லூரியிலும் (இளங் கலை), மெர்சி கல்லூரியிலும் (முதுகலைப்படிப்பு) முடித்தவர் - ஜெஸ்மி சிஸ்டர்.  சந்நியாசினியான பிறகும் கூட கல்வித்துறையை அவர் விடவில்லை. 

1980-இல், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் சேர்ந்து படித்தார், அவர்.  இதன்பிறகு, எம்.பில்; பி.ஹெச்.டி பட்டங்கள் போன்றவைகளைப் படித்துப் பெற்றார்.  விமலா கல்லூரியில் மூன்று ஆண்டுகள் துணை முதல்வராகப் பணிபுரிந்தார்.  பின்னர், புனித மேரிக்கல்லூரியில் மூன்று ஆண்டுகள் முதல் வராகப் பொறுப்பேற்றிருந்தார். 

இப்படி, தன் வாழ்நாளில் கன்னியாஸ்திரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றிய ஜெஸ்மி சிஸ்டர், தன்னை நிரந்தரமாக அவர் சேர்ந்திருந்த கன்னியாஸ்திரி மடத்திலிருந்தும், அந்த வாழ்க்கையிலிருந்தும் தன்னை முற்றாக விலக்கிக்கொண்டவர்; அதுவும் சபையின் அனுமதியோடு, இப்போது சந்நியாசினி யாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

 சிஸ்டர் ஜெஸ்மி அவர்கள், வெள்ளையங்கியை அணிந்து கொண்டு நடக்கும் வெறும் சிஸ்டர் மட்டுமல்ல; சிறந்த மனிதநேயமுள்ள ஒரு பெண்கவியும் கூட! மூன்று கவிதைத் தொகுதிகளை ஆங்கிலத்தில் எழுதி, இவர் வெளியிட்டிருக்கிறார்.  ஒரு கட்டுரைத் தொகுதியும் இவரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஜெஸ்மி சிஸ்டர் அவர்கள், சமீபத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு புத்தகத்தை எழுதி, வெளியிட்டிருக் கிறார்.  ‘தெய்வ ஊழியம் ஒன்றே எனது வாழ்க்கையின் லட்சியம்’ என்ற கொள்கையின் அடிப் படையில் கன்னியாஸ்திரி மடத்தில் போய்ச் சேர்ந்த இவருக்கு, அங்கு சில கசப்பான அனு பவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  அதனால் பல மன அதிர்ச்சிகளுக்கு ஆளாகியிருக்கிறார், இவர். 

அவைகளெல்லாம் உள்ளடக்கியதாக அமைந் திருக்கிறது இவரது சுயசரிதையான ‘ஆமேன்’ நூல்.  இந்நூல் தற்போது கேரளமெங்கும் வாசிக்கப் பட்டு வருவதோடு, மிகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

அதன் உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்! முதலில் ஜெஸ்மி சிஸ்டர், கன்னியாஸ்திரி மடத்தைப்பற்றியோ, கிருஸ்தவ மிஷினரிகளைப் பற்றியோ எதுவும் தெரியாதவராகத்தான் இருந்திருக்கிறார்.  இதைப் பற்றி, வீட்டில் வைத்து சிந்திக்கவோ அல்லது சர்ச்சை செய்ததோ கூடக் கிடையாது என்கிறார் இப்புத்தகத்தில் அவர்.

நாம் மேலே குறிப் பிட்டவைகளைப் பற்றி சில கிருஸ்தவக் குடும்பங்கள் மட்டுமே விவாதங்கள் செய்யலாம் என்றும், அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் மடங்களில் சேர்ந்து ‘தெய்வ ஊழியம்’ செய்யலாம் என்றும் ஜெஸ்மி சிஸ்டர் எண்ணியிருந்தாராம்!

என்றாலும், தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளதால் கன்னியாஸ்திரி மடத்தில் சேர்ந்து கடவுளுக்கும், பாவப்பட்ட ஏழை மக்களுக்கும் தொண்டு செய்ய நினைத்துதான் நான் மடத்தில் சேர்ந்தேன் என்கிறார் ஜெஸ்மி சிஸ்டர், தன்னுடைய ‘ஆமேன்’ புத்தகத்தில்.

மடத்தில் சேர்ந்து சில நாட்களிலேயே, அங்கே அவர் காண நேர்ந்த சில சம்பவங்கள் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கின்றன.

ஜெஸ்மி சிஸ்டர் அவைகளில் சிலவற்றைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

‘கன்னியாஸ்திரி மடத்திற்குள், கன்னியாஸ்திரி களால் சிரிக்கமுடியாது; எதையும் ரசிக்க முடி யாது.  ஏன், பெண்களைப் போல அவர்களால் நடக்கக் கூட முடியாது.  சிலர், அவர்களுடைய மார்புகளை அகற்றிக் கொள்ளும் போது எவ்வளவு வேதனையெடுக்கும்?’ (சில கன்னியாஸ்திரிகள் ஆண்களை வசீகரிக்காமல் இருப்பதற்காக வேண்டி தங்களுடைய மார்புகளை ஆபரேஷன் செய்து அகற்றிவிடுவார்கள் போலிருக்கிறது!) என, ஆரம்பக் காலத்தில் ஜெஸ்மி சிஸ்டர் தன் தாயிடம் கேட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது கருத்துப்படி ‘சிஸ்டர்களுக்கு முலைகள் தேவை கிடையாது.  பிறகு எதற்காக வேண்டி அவர்கள் அதை வைத்துக்கொண்டிருக் கிறார்கள்?’ என்பதாகும்.  அதற்குக் காரணமும் இருந்தது.  கல்யாணம் பண்ணி, குழந்தைகள் பெற்றுப் பாலூட்டுவதற்காக வேண்டியுள்ள தல்லவா, அது!’ என, ஜெஸ்மி சிஸ்டர் ஒரு கேள்வியையும் எழுப்புகிறார்.

அவர் சொல்கிறார்: “நான் மடத்தில் சேரு வதற்காக ஆசைப்பட்டது, கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக வேண்டி மட்டுமே!” என்று.

கன்னியாஸ்திரி மடத்தில், அடிக்கடி சிஸ்டர்கள் திருட்டுத்தனம் பண்ணுவதை எடுத்துக் காட்டுகிறார்.  மட்டுமின்றி, தேவ ஊழியம் என்ற பெயரில் மடத்தில் சேர்ந்து கொண்டிருக்கும்

பல கன்னியாஸ்திரிகளுக்கிடையே பாலியல் ரீதியான தகாத நடைமுறைகள் நடைபெறு வதையும் ஜெஸ்மி சிஸ்டர் சுட்டிச் செல்கிறார்.  (ஆமேன் - பக் - 37)

மடத்தில் அடிக்கடி குழுச்சண்டையும் நடை பெறுமாம்! மடத்தில் புதிதாக வந்து சேரும் இளம் கன்னியாஸ்திரிகள் இக்குழுக்களில் ஏதாவது ஒன்றில் சேர்ந்தே தீரவேண்டுமாம்.  ‘அப்படி சேராமல் மடத்தினுள்ளே இருக்க முடியாது’ என்கிறார் ஜெஸ்மி சிஸ்டர் (மேலது - பக்- 37).

இனி, பாவமன்னிப்பு கேட்கப் போகும் வேளையில் நடைபெறும் சில தில்லுமுல்லு களையும் இப்புத்தகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

பாவமன்னிப்புக் கேட்கப் போகும் வேளையில், பெண்களைப் பிடித்து முத்தம் கொடுப்பதாகவும், தனக்கு ஒரு முறை இப்படி, முத்தம் தர பாதிரியார் முயன்றதாகவும் சிஸ்டர் ஜெஸ்மி குறிப்பிடுகிறார்.  இது, பிரச்சினையாகவே, ‘நான், அவர்களின் சம்மதத்துடனேயே முத்தம் கொடுப்பேன்’ என, பாதிரியார் விளக்கம் சொன்னதாகவும் ஜெஸ்மி சிஸ்டர் சுட்டிச் செல்கிறார்.  (புத்தகம் மேலது, பக்- 45).  மேலும், புனித பாலின் வசனப்படியேதான் இவ்வாறு செய்கிறேன் என, பாதிரியார் தன்னை நியாயப்படுத்தியதாகவும் சிஸ்டர் எழுதுகிறார்.  (புத்தகம் மேலது, பக்- 45).

கன்னியாஸ்திரிகளில் பலர், மடத்திற்குள் பாலியல் ரீதியான வக்கிரத்தனங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக வேண்டி மடத்தை விட்டு வெளி யேற்றப்பட்டதையும் சிஸ்டர் எடுத்துக்காட்டு கிறார்.

கன்னியாஸ்திரி மடத்திற்குள் நடைபெறும் தீண்டாமையைப் பற்றியும் இப்புத்தகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.  மடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தலித் மக்களுக்காக வேண்டி ஒதுக்கப்பட்டுள்ள சீட்டுக்களை மேனேஜ் மென்ட் தட்டிப் பறித்து, சில தில்லுமுல்லுகள் நடத்தி, அவைகளை மேனேஜ்மென்ட் சீட்டுக் களாக மாற்றி ‘நன்கொடை’ என்ற பேரில் பிற சாதிப்பிரிவினருக்குக் காசுக்காக வேண்டி விற் பதையும் ஜெஸ்மி சிஸ்டர் சுட்டிக் காட்டுகிறார்.

ஜெஸ்மி சிஸ்டர் மேலும் தொடருகிறார்:

“சிஸ்டர் விமி.  (பெயர் மாற்றப்பட்டிருக் கலாம்) இவர், கல்லூரியில் மலையாளம் டிபார்ட் மெண்டிலே சீனியர் சிஸ்டர்; ஆசிரியையாக இருந் தார்.  நான் காலதாமதமாகத்தான் இவரோடு அறிமுகமானேன்.  இவர் ஹோமோ செக்ஸில் அதிக நாட்டமுள்ளவராக இருந்தார்.  ஹாஸ்டலில் தங்கியிருந்த மாணவி ஒருத்தியுடன் ‘பாலியல் சேட்டை’யில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஒருமுறை கையும் களவுமாகப் பிடிக்கப் பட்டார்,” என்கிறார், சிஸ்டர் ஜெஸ்மி.  (புத்தகம், மேலது - பக்கம் - 54).

மாலு என்ற பெண்ணுடன் இந்தத் தகாத பாலியல் உறவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண் டிருந்ததாகவும், மாலு படிப்பு முடிந்து போனதும், அந்த சீனியர் சிஸ்டரின் கவனம் தன் பக்கமாகத் திரும்பியதாகவும் ஜெஸ்மி சிஸ்டர் கூறுகிறார்.  பாலியல் விவகாரங்களில் அதிக விருப்பம் இல்லாத ஜெஸ்மி சிஸ்டர் இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறார்.  இதையறிந்ததும், விஷயம் தெரிந்த பிற சிஸ்டர்கள் சீனியர் கன்னியாஸ்திரியின் ஆசைக்குக் கட்டுப்படுமாறு உபதேசம் பண்ணு கிறார்கள்.  அப்படி கட்டுப்படவில்லையெனில், அவர் மடத்திலுள்ள எல்லா சிஸ்டர்களையும் பார்த்து, வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவார் களாம்! எனவே, அவரது காம உணர்வைத் தணித்துக் கொள்ள, சீனியர் சிஸ்டருக்கு ‘ஒத்துழைக்க’ வேண்டியதாயிற்றதாம்! (புத்தகம் மேலது, பக்கம் - 55)

நம் நாட்டில் இதுவரையில் எந்தவொரு கன்னியாஸ்திரியும் வெளிப்படுத்தாத சில விஷயங் களை ஜெஸ்மி சிஸ்டர் துணிச்சலோடு வெளிப் படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.  இது, சர்வ சாதாரண விஷயம் ஒன்றுமல்ல! காரணம், தமிழ் நாட்டில் பாமா சிஸ்டர் எழுதி வெளியான ‘கருக்கு’ நாவல் கூட துணிச்சலோடு இம்மாதிரி எழுதப்பட்டிருக்கிறதா? என்றால் ‘இல்லை’ என்று தான் சொல்லத் தோன்றும்.  அந்த அளவுக்கு ‘ஆமேன்’ வாழ்க்கை வரலாற்று நூல் தைரியமாக சில விஷயங்களைத் திறந்து காட்டுகிறது.

இனி, கேரள மாநிலம் மதவிஷயங்களைப் பொறுத்தமட்டில் பிற மாநிலங்களைப் போல் இல்லை.  மதநிறுவனங்களும், சாதிச் சங்கங்களும் இப்போது, கேரள மாநிலத்தில் மிக வலுவாகக் காலூன்றி நின்றுகொண்டு செயல்படும் காலம்.  சமூக, அரசியல் சக்திகளின் போக்கைக் கூட அவைகளால் இன்று கேரளத்தில் திசைதிருப்ப முடியும்.  இவைகளின் எதிர்ப்பை உதாசீனப் படுத்திக் கொண்டு இன்றைய கேரளத்தில் எதுவும் செய்யவியலாது.  கிருஸ்தவ மத நிறுவனங்கள் நினைத்தால் கேரள அரசியலின் போக்கையே நிர்ணயிக்க முடியும்.

கிருஸ்தவ மதங்களின் சக்தி இப்படியிருக்க, அவைகளையெல்லாம் மீறிக் கொண்டு மடங் களுக்குள் மறைமுகமாக சமூகத்திற்குக் கொண் டிருக்கும் விஷயங்களை சமூகத்திற்கு புத்தகம் வாயிலாக எடுத்துக்காட்டுவதென்பது அல்லது வெளிப்படுத்துவது அவ்வளவு சுலபமான காரியம் ஒன்றுமல்ல!

நாம் புனிதமானதாக எண்ணிக் கொண் டிருக்கும் கன்னியாஸ்திரி மடங்களுக்குள், பல கன்னியாஸ்திரிகளுக்கும் பாதிரிமார்களுக்கும் இடையே திருட்டுத்தனமான முறையில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உடலுறவை இந்த ‘ஆமேன்’ புத்தகத்தின் வாயிலாக ஜெஸ்மி சிஸ்டர் நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.  (புத்தகம் மேலது, பக் - 55).  மடத்திற்குள்ளே கன்னியாஸ்திரிகள் போடும் ‘குடுமிப்பிடி’ச் சண்டையினையும் இப் புத்தகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

மடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு கன்னி யாஸ்திரியின் கர்ப்பப்பை ஆபரேஷன் சென்று அகற்றப்படுகிறது.  இதுபற்றி மதர் சுப்பீரியர் ஒருவர் கீழ்க்கண்டவாறு கூறுவதாக வருகிறது:

“இந்தக் கன்னியாஸ்திரியின் கர்ப்பப்பை சிகிச்சை செய்து அகற்றப்படாமல் இருந்தால், மடத்திற்குக் ‘கெட்ட பெயர்’ வந்திருக்கக் கூடும்” என.  காரணம் இவர், ஒரு பாதிரியாரோடு ஒரு முறை உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டிருந்தார்.  இதுபற்றி, கேரளாவிலுள்ள ‘க்ரைம்’ பத்திரி கையில் செயதி வெளியாகியிருந்தது.  ஆனால், அந்தக் கன்னியாஸ்திரிக்கு மேலிடத்தில் ‘நல்ல பிடிப்பு’ இருந்ததால், ‘அந்தக் கேஸ்’ அப்படியே அமுக்கப்பட்டு விட்டது.  ஆனால் அதே வேளையில் மடத்தில், ஒரு பாவப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒரு சின்னத்தவறு செய்தால் கூட அவர்களுக்குத் தண்டனை மிகக்கடுமையாக வழங்கப்பட்டதையும் இப்புத்தகம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது (பக்கம் - 78).

ஜெஸ்மி சிஸ்டருக்கு பதவி உயர்வு கிடைக் கிறது, கல்வித்துறை சம்பந்தமாக இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், அவர் கர்நாடக மாநிலத்தி லுள்ள தார்வார் பல்கலைக்கழகத்திலுள்ள நோட்டி பிகேசன் சென்று ஒரு ரிஃபிரஷர் கோர்சில் பங்கெடுக்க வேண்டும்.  எனவே, ஜெஸ்மி சிஸ்டர் அங்கு மூன்று வாரங்கள் தங்கவேண்டும்.  லூஸி சிஸ்டர் அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முனைகிறார்.  அதற்காக வேண்டி, அங்கேயுள்ள இயக்குநரைக் கூப்பிட்டு அருகிலிருக்கும் மடத்தின் முகவரியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, ஜெஸ்மி சிஸ்டருக்கு தங்குவதற்கான வசதி செய்துகொடுக்க வேண்டும் என்றொரு காகிதமும் போடுகிறார்.  சாதகமான பதில் வரவே, அந்தப் பாதிரியாரின் முகவரியைப் பெற்றுக் கொண்டு ஜெஸ்மி சிஸ்டர் கர்நாடக மாநிலத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

அக்கடிதத்தில் பாதிரியார் ‘ராஜகம்பீரமான வரவேற்பை’ அளிப்பதாக உறுதியளித்திருந்தார்.  ஆனால், உண்மையில் ஜெஸ்மி சிஸ்டர் நினைத் திருந்ததோ, அங்குள்ள பெண்கள் விடுதியில் சென்று, மூன்று வாரமும் தங்க வேண்டுமென! ஆனால் இந்த ஆசையை அவர் வெளியிட, பிற கன்னியாஸ்திரிகள் அதற்குச் சம்மதிக்கவில்லை.  அங்குள்ள பாதிரியார் விடுதியில்தான் தங்க வேண்டுமென கட்டாயப்படுத்துகிறார்கள்.

தங்க விருப்பமில்லாத ஜெஸ்மி சிஸ்டர் வேறு வழியின்றி ‘கடவுளே, இப்போது திடீரென்று எனக்குக் காய்ச்சல் வராதா, அதைக் காட்டி யாவது தப்பிவிடலாமே’ என உள்ளூர ஜெபிக் கிறார்.  அவர் நினைத்தது மாதிரியே விஷக் காய்ச்சல் வருகிறது.

அப்போதும் பிற கன்னியாஸ்திரிகள் ஜெஸ்மி சிஸ்டரை விடவில்லையாம்! ‘நீ, போயே ஆக வேண்டும்’ என்று நிர்ப்பந்திக்கிறார்கள்.

‘நீ, போகவில்லையெனில் உனக்காக ஒதுக்கப் பட்டிருக்கும் கல்லூரியின் பணம் பாழாகிவிடும்’ எனச் சொல்லி ஜெஸ்மி சிஸ்டரை வற்புறுத்து கிறார்கள்; குறிப்பாக, சுப்பீரியர்.

‘வேகமாகப் புறப்படு; பயணத்துக்குத் தயாராகு’ என்று.

அவர்கள் கட்டாயப்படுத்தியதன் பேரில் ஜெஸ்மி சிஸ்டர் புறப்படுகிறார்.  தான் மேற் கொண்ட பயணத்தையும், அங்கே சந்தித்த அனு பவங்களையும் ஒரு கதை போல் அவர் சித்திரிக் கிறார்.

“நான், அதிகாலையில் ரயில் நிலையத்தில் போய் இறங்கியதும், அந்தப் பாதிரியார் என் வரவைக்காத்து ரயில் நிலையத்தில் நின்றுகொண் டிருப்பதைக் கண்டேன்.  நான், ரயிலிலிருந்து இறங்கியதும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு ஓடிவந்து, அவருடைய உடலோடு சேர்த்து, அரவணைத்தார்.  பின், ராஜ வரவேற் போடு என்னை அவர் தங்கியிருந்த அறைக்குள் அழைத்துக் கொண்டு போனார்.  என்னை அவர் அங்கே கூட்டிக் கொண்டு போவதற்குச் சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.  பஸ் பயணத்தின் போது, கல்லுரி வளாகத்தில் மரங் களுக்கு அடியில் ஆண்களும் பெண்களும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து சிரித்துப் பேசிக்கொண் டிருப்பதை என்னிடம் சுட்டி, உடலின் மீது காட்ட வேண்டிய அன்பைப் பற்றிப் பாதிரியார் எனக்கு அறிவுரை சொன்னார்.  திருமணம் செய்து கொள்ளாமலே பெண்களுடன் (திருட்டுத் தனமாக) உடலுறவில் ஈடுபட்டுவரும் பாதிரியார் களைப் பற்றியும், பிஷப்புகளைப் பற்றியும் எனக்கு அவர், கதை கதையாகச் சொன்னார்.

“ஒரு பிஷப், ஒரு பெண்ணுடன் ஒன்றுகூடி தாம்பத்திய உறவில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், அந்தக் குழந்தையை வளர்ப்பதற்குரிய பண உதவியை அவர் செய்து வருவதாகவும் பாதிரியார் உதாரணத்துடன் பேசினார்.”

“அதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் நினைத்தேன்; ‘நம்ப, பாரதிரியாருக்கு என்னாச்சு? ஏன், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இப்படி உளறிக் கொண்டிருக்கிறார்?’- என்று, எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.  பிறகு, அவர் போட்டு வைத்திருந்த காபியைக் குடிப்பதற்காக வேண்டி என்னை அறைக்குள் அழைத்துச் சென்றார்.  நான், கட்டிலில் உட்கார்ந்து காபியைக் குடித்துக் கொண்டிருந்தேன்.  உள்ளே உட்காருவதற்கு அந்த ஒரு கட்டில் மட்டும் கிடந்தது.  அந்த வேளையில் என்னருகே வந்து உட்கார்ந்து கொண்ட பாதிரி யார், திடீரென்று மூச்சு முட்டும்படியாக என்னை இறுகக் கட்டிப் பிடித்தார்.  நான், அவருடைய பிடியிலிருந்து தப்பிப்பதற்காக வேண்டி முயற்சித்த போது, என்னுடைய இரண்டு மார்புகளையும் அவர் தன் கைகளால் இறுகப் பற்றிப் பிடித்தவாறு, அவைகளை அவருக்குத் திறந்து காட்டும்படி என்னை வற்புறுத்தினார்.  நான் கோபத்தோடு அவருடைய கோரிக்கையை நிராகரித்துக் கொண்டு எழுந்த போது, என்னைப் பிடித்து அவர் பல வந்தமாக உட்காரவைத்துக் கொண்டு கேட்டார்:

“எப்போதாவது நீ, ஒரு ஆணைப் பார்த் திருக்கிறாயா?” பாதிரியார் என்னை நோக்கிக் கேட்டார்.

“நான் அதற்கு ‘இல்லை’ யெனத் தலை யாட்டினேன்.  உடனே அவர், தன்னுடைய ஆடை களை அவிழ்த்தெறிந்தார்.  அதைக் காண, எனக்கு வெட்கமாக இருந்தது.  நாவல்களில் இது மாதிரி யான விஷயங்களைப்பற்றி நான் வாசித்திருந் தாலும் கூட, இதுவரையில் நான் என்னுடைய கண்களால் ஒரு போதும் இக்காட்சிகளைக் காண விரும்பியது கிடையாது.  ஆனால், நான் இப் போது இதைக் கண்டவுடனே என் நினைவுக்கு வந்தது, சில்வியாப்பிலாத்தினுடைய ஒரேயொரு நாவல் மட்டுமே! ‘ஆமையினுடைய தலை’போல் என்று அவர் தன்னுடைய ‘பெல்ஜார்’ என்ற நாவலில் விவரித்தது எனக்கும் இவ்வேளையில் ‘சரி’ யென்றே பட்டது.”

“சற்று நேரம் கடந்த போது ‘பால்’ போன்ற ஒரு திரவத்தை எடுத்துக்காட்டிக் கொண்டு, அதனுள்ளேயுள்ள ஆயிரக்கணக்கான உயிரணுக் களைக் குறித்து எனக்கு பாதிரியார் வகுப்பெடுத் தார்.”

“பிறகு, என்னை, எனது உடைகளை அவிழ்த்துப் போடுமாறு வற்புறுத்தினார்.  எனக்கு தப்பிச் செல்வதற்கு வேறு வழி தெரியவில்லை.  கடைசியில், ஒரு நிமிடம் வரையில் நான் என்னுடைய உடம்பை நிர்வாணமாக்கிக் கொண்டு அவர் முன்னால் நின்றேன்.  பின், ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டு நான் மீண்டும் அவருடன் என் பயணத்திற்குத் தயாரானேன்.  அவர், என்னை ரயில் நிலையத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்.  இம்மாதிரி சம்பவத்தை ஒருபோதும் விரும்பாத நான், எதிர்பாராமல் நடந்த இதைப்பற்றி பச்சா தாபத்தோடு நினைத்துப் பார்க்கமுடியும்.  வாழ்க் கையில் சின்ன வகையான மானபங்கத்தைக்கூட நாங்கள் கன்னியாஸ்திரி மடத்தில் எதிர்பார்த்தது கிடையாது! நான் விஷக் காய்ச்சலினால் பாதிக்கப் பட்டிருந்த போதும் கூட, என்னை அந்தப் பாதிரி யார் தங்கியிருக்கும் இடத்திற்குக் கட்டாயப் படுத்தி அனுப்பிவைத்த கல்லூரி முதல்வரைத் தான் நான் குற்றம் சாட்ட நினைத்தேன்.”  (புத்தகம் மேலது, பக்- 88, 89)

ஜெஸ்மி சிஸ்டர் மேலும் தொடர்கிறார்: “தெரியாமல் செய்யும் சின்னச்சின்ன தவறுகளுக் காக வேண்டிக்கூட கன்னியாஸ்திரி மடத்திலுள்ள சுப்பீரியர் சிஸ்டர், முதல்வர், மதர் புரவின்சியல் போன்றவர்கள் என்னிடம் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  அவைகளிலுள்ள ஒரு தவறு அல்லது என் மீதுள்ள புகார் என்ன வென்று தெரியுமா? நான், எங்கள் மடத்திலுள்ள சமையற்காரப் பெண்ணுடன் சேர்ந்திருந்து அடுக் களைக்குள் உட்கார்ந்து சாப்பிட்டேன் என்ப தாகும்.  இது, ஒரு உதாரணம் மட்டுமே! இப்படி இன்னும் பல காட்சிகள், வெளியுலகத்திற்குத் தெரியாமல் விடுதியில் அரங்கேறிக் கொண்டிருந்தன என்று இப்புத்தகம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.”

அவர் சொல்கிறார்: “பொதுவாக என்னுடைய உறவினர்களை, என்னை வந்து பார்ப்பதற்கு வார்டன் அனுமதிக்க மாட்டார்.  எனவே, இதை யறிந்து அவர்களும் என்னைப் பார்ப்பதற்காக வேண்டி வருவது கிடையாது.  ஆனால், அதே வேளையில் என்னுடைய இன்னொரு தோழி, அவருடைய தோழியின் அம்மா இறந்து போனதன் காரணமாக எங்கள் விடுதியிலுள்ள பெண்ணை, அவளுடைய தாயாக நடிக்க வைத்துக்கொண் டிருக்கிறாள் என்ற சேதி எனக்குக் கிடைத்தது.  ரொம்பவும் சொடியுள்ள அப்பெண், முழு நேரமும் நான் மேலே குறிப்பிட்ட அவளுடைய ‘அம்மா’வுடன் இருப்பதினால், படிப்பில் ரொம்ப மோசமாகிக்கொண்டிருந்தாள். அம்மாவாக நடிக்க வந்த சீனியர் சிஸ்டர், எவருக்கு அம்மாவாக நடிக்க வந்தாளோ, அந்த இளம் சிஸ்டரின் வாய்க்குள் தன் மார்புகளைத் திணித்து, பல மணி நேரமாக அவளைச் சுவைக்கச் செய்வதை நான் தெரிந்து கொண்டேன்.  இந்த நாடகம் முழுவதும் என்னுடைய சொந்தக்காரப் பெண்ணின் அறைக்குள் வைத்துதான் அரங்கேறிக் கொண்டிருந்தது.  மார்பு வாயில் திணிக்கப்படும் அந்த ஜுனியர் பெண்ணும் என்னுடைய சொந்தக்காரப் பெண்ணும் ஒரே அறையில்தான் தங்கியிருந்தார்கள்.  சீனியர் கன்னியாஸ்திரி, அவர்களுடைய அறைக்குள் வரவும், தினசரி இந்த நாடகம் தொடங்கிவிடும்.  அந்த வருடம் படிப்பின் இறுதியாண்டு ஆனதால், நான் இந்த அம்மை - மகள் உறவில் தலையிட விரும்பவில்லை.  மட்டுமில்லை; இதை எப்படி, என்னால் வார்டனிடம் சொல்ல முடியும்? ஆனாலும் என்னுடைய உறவுக்காரப் பெண்ணைக் கூப்பிட்டு வைத்து, இது சம்பந்தமாக அவளுடைய அபிப்பிராயம் என்ன? எனத் தெரிந்து கொள்ள நினைத்தேன்.  இதை யாரிடம் தெரிவிக்கலாம் என, எண்ணி ஏங்கிக் கொண்டிருந்ததினால் நான் கேட்டதும், அவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு வந்துவிட்டது.”

“விஷயத்தை, அவளுடைய சம்மதத்தோடு நான் அவளுடைய ‘டாடி’யிடம் தெரிவித்து, எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னேன்.  பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டுத் திருமணத்தையொட்டி சிகிச்சைக்காக வேண்டி அவளை மனநிலை மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போகும்படி யாயிற்று.  அந்த அளவுக்கு, விடுதியில் நடைபெற்ற சம்பவம், அப்பெண்ணின் மனநிலையைப் பாதித் திருந்தது.” (புத்தகம் மேலது, பக்கம் - 99).

சாதி, பொருளாதாரம், கல்வித்தகுதி என, இவைகளின் அடிப்படையிலும் கன்னியாஸ்திரி மடங்களில் வேறுபாடு பார்க்கப்பட்டது என் கிறார் ஜெஸ்மி சிஸ்டர்.

தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து வந்து சேர்ந்த கன்னியாஸ்திரிகள், மேல்சாதியிலிருந்து வந்த கன்னியாஸ்திரிகள் உட்காரும் நாற்காலியில் உட்காரக்கூடாது; அவர்கள், தங்களுடைய ‘டிரங்கு’ப் பெட்டியின் மீதுதான் உட்கார வேண்டும்.  இது போக, அவர்களுக்கு அநேகமாக அடுக்களையிலும், தோட்டத்திலும்தான் வேலைகள் கொடுக்கப்பட்டன.  தோலின் நிறம், சாதி, வறுமை என இவைகளை அடிப்படையாகக் கொண்டே மடத்தில் ஒவ்வொருவருக்கும் மதிப்பும், மரி யாதையும் வழங்கப்பட்டது, என்கிறார், ஜெஸ்மி சிஸ்டர் (புத்தகம் மேலது, பக் - 158).

நம் தமிழில் வெளிவந்த ‘கருக்கு’ நாவலில் (இதுவும் சுயசரிதை போன்று எழுதப்பட்ட நூல் தான்!) பாமா சிஸ்டர், கன்னியாஸ்திரி மடத்தில் நடைபெற்ற சில விஷயங்களை ஓரளவுக்குத் தொட்டுக் காட்டியிருந்தார்.  அது, வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.  ஆனால், இதுமாதிரி இன்னும் ஏராளமான காரியங்கள் மதம் என்ற போர்வையின் கீழ் வெளியே தெரியாமல் நடை பெற்றுக் கொண்டிருக்கலாம்! அவைகளெல்லாம் அந்நாவலின் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கு மானால் அது, இன்னும் பிரம்மாண்டமானதாக அமைந்திருக்கும் என, வாசகர்களை எண்ண வைத்தது.  மட்டுமின்றி, அந்நாவலில் பாமா சிஸ்டரின் கவனம், தீண்டாமை விஷயத்தில் மட்டுமே குவிந்திருந்தது. 

ஆனால் கேரளத்தில் பிறந்து, வளர்ந்த ஜெஸ்மி சிஸ்டரின் கவனமோ, கன்னியாஸ்திரி மடங்களுக்குள் மறைமுகமாக நடைபெற்றுவரும் தீண்டாமை, வறுமையின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு, பாலியல் வன்முறை, தகாத, பாலியல் உறவு-போன்றவைகள் மீதெல்லாம் குவிந்திருக்கிறது.  அங்கே நடைபெற்ற பாலியல் வன்முறையிலிருந்து தன்னாலும் தப்பித்துக் கொள்ள இயலவில்லை என்பதை அவர் மனந் திறந்து எழுதியிருப்பது ஜெஸ்மி சிஸ்டரின் நேர் மையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. 

ஒருவேளை அவர் நினைத்திருந்தால், அந்தப் பாலியல் வன் முறைக்கு அவர் ஆளானதை (அவர், தன் மார்பு களையும் உடலையும் காம வெறிபிடித்து நின்ற பாதிரியாருக்கு முன்னால் திறந்து காட்டியதை) இப்புத்தகத்தில் சேர்க்காமல் தவிர்த்திருக்கலாம்.  அல்லது மறைத்திருக்கலாம்! ஆனால், சிஸ்டர் ஜெஸ்மி அதைச் செய்யவில்லை!

சில உண்மைகளை வெளிப்படுத்துவதற்காக வேண்டி, அவர் தன்மான- அவமானத்தைக்கூடப் பொருட்படுத்தவில்லை. நம் மானம் போனாலும் பரவாயில்லை; கடவுளின் பெயரால் மடங்களுக்குள் நடைபெற்று வரும் கொடுமையினையும், அநியாயத்தையும் வெளியுலகத்திற்கு எடுத்துக்காட்டியே தீரவேண்டும் - என, ஜெஸ்மி சிஸ்டரின் உள்ளம் கொதித்திருக்க வேண்டும்! இதைத்தான் சிஸ்டரின் ‘ஆமேன்’ சுயசரிதை நூல் நமக்கு உணர்த்திச் செல்கிறது.

ஆமென்

ஆசிரியர்: சிஸ்டர் ஜெஸ்மி

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை,

நாகர்கோவில் 629 001.

விலை: ரூ. 150/-

Pin It