சூலூரில்

30.1.2011 ஞாயிறு மாலை 6 மணிக்கு கோவை மாவட்டம், சூலூர் அண்ணா சீரணி மேடையில், சனவரி 30 காந்தி படுகொலை நாள் பொதுக் கூட்டம், சூலூர் ஒன்றிய கழகம் சார்பாக நடைபெற்றது. பொதுக் கூட்டத்தின் முதல் நிகழ்வாக, மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியோடு துவங்கியது. மேட்டூர் கோவிந்தராஜ் மற்றும் திருப்பூர் தியாகு ஆகியோர் பகுத்தறிவு பாடல்களையும், சாதி ஒழிப்புப் பாடல்களையும் பாடினர். தோழர் முனியப்பன் பொதுக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். சூலூர் வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் இரா. பன்னீர்செல்வம், கோவை ஆறுச்சாமி, திருப்பூர் மாவட்ட தலைவர் துரைசாமி, தமிழ்நாடு மாணவர் கழகம் அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றிய பின்பு இறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

 

புதுக்கோட்டையில்

1.2.2011 செவ்வாய் மாலை 6 மணிக்கு, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப் பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், தமிழக மீனவர் படுகொலையைக் கண்டித்து பொதுக் கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் இயக்கத்தின் மணல்மேடு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பா. சாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக் கூட்டத்தில், அறங்தாங்கி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கா. சத்யா வரவேற் புரை ஆற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், நாம் தமிழர் இயக்க மாநில பரப்புரையாளர் திலீபன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

 

மடத்துக்குளம்

30.1.2011 ஞாயிறு அன்று மடத்துக் குளம் ஒன்றிய கலந்தாய்வுக் கூட்டம் கடத் தூரில் கதிரவன் இல்லத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு கடத்தூர் கிளை செயலாளர் அய்யப்பன் தலைமை வகித் தார். மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

 

கூட்டத்தில் கடந்த மாதம் மடத்துக் குளம் ஒன்றியத்தில் நடைபெற்ற இயக்க நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின் தொடர்ந்து மாதமொருமுறை கலந் தாய்வுக் கூட்டம் நடத்துவது, மடத்துக்குளம் ஒன்றியத்தில் மாதம் இரண்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தோழர் சரவணன் நன்றி கூற கூட்டம் முடிவடைந்தது.

 

கூடட்டத்தில் ஒன்றிய தலைவர் ந.ப. கதிரவன், ஒன்றியச் செயலாளர் சு. சிவனாந்தம், துணைச் செயலாளர் மா. மோகன் குமார், அமைப்பாளர் துரை. இராஜேந்திரன், காரத் தொழுவு கிளை அமைப்பாளர் கு. மயில்சாமி, நாத்திகன் பாலு, பழனிச்சாமி, மருதராஜ், வடிவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

 

வில்லிவாக்கத்தில்

ஜனவரி 30 ஞாயிறு அன்று சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் காந்தியார் படுகொலை நாள் விளக்கப் பொதுக் கூட்டம் எழுச்சியுடன் நடை பெற்றது. நிகழ்ச்சி துவக்கத்தில் தோழர் சி. அருள்தாஸ், பகுத்தறிவு பாடல்களை பாடி உற்சாகமூட்டினார். சி.ஞா.ஆதவன் தலைமையேற்க நா. பாஸ்கர் வரவேற் புரையாற்றினார். அவரை தொடர்ந்து மாவட்ட கழகத் தலைவர் ஏ. கேசவன், வேலவன், உடுமலை தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.

 

அடுத்து வழக்கறிஞர் சு. குமாரதேவன், கழகப் பொதுச் செயலாளர் கோவை இராம கிருட்டிணன், கழக துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் சிறப்புரையாற்றினர். தட்சிணாமூர்த்தி நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது. நிகழ்ச்சி நடந்த இடத்தின் அருகில் தோழர்கள் வி.ஜனார்த்தனன், செல்வம் ஆகியோரின் முயற்சியில் காந்தி யார் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பை அம்பலப்படுத்தி விளக்கப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட் டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் பார்த்து தங்கள் செல்போன்களில் படம் எடுத்து சென்றவண்ணம் இருந்தனர். நிகழ்ச்சி யில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை கலையாமல் பங்கேற்றனர்.

 

நன்கொடை

 

மூத்த பெரியாரியல்வாதி ப. பூவராகவன்

மூத்த பெரியாரியல்வாதியும், செங்குட்டுவன் என்ற புனைப் பெயரில் பல பகுத்தறிவு அறிவியல் கட்டுரைகளை எழுதியவருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் ப. பூவராகவன் அவர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினர். கழக செயல்பாடுகளை பாராட்டி, கழக வளர்ச்சிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். சென்னை மாவட்டக் கழகத் தலைவர் உமாபதி, செயலாளர் தபசி குமரன் மற்றும் கழகத் தோழர் அன்பு தனசேகர் உடனிருந்தனர்.

 

கோபி தோழர் நாகப்பன்

கோபி நகர கழகத் தலைவர் தோழர் நாகப்பன், தனது 54வது பிறந்த நாள் மகிழ்வாக (பிப்2) கோபியில் நடந்த கழகக் கூட்டத்தில் கழகத் தலைவரிடம் கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.

 

கழகத் தோழர் டி.என். தமிழரசன் - டி. யுவராணி மணவிழா

சென்னை மயிலைப் பகுதி கழகத் தோழர் டி.என். தமிழரசன் (மறைந்த டி.நடேசன்-ஜெயராக்கினி ஆகியோர் மகன்) - டி. யுவராணி (மறைந்த திம்மூர் ஜி.தேவநாதன் - பேபி ஆகியோர் மகள்) ஆகியோர் வாழ்க்கைத் துணை ஏற்பு நிகழ்வு 6.2.2011 அன்று காலை 8.30 மணியளவில், சென்னை ழ்வார்பேட்டையில் சி.பி.ராமசாமி சாலையிலுள்ள சமுதாயக் கூடத்தில் கழகத் துணைத்  தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் சிறப்புடன் நடந்தது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் கேசவன் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டுக்கு மணமகன் ரூ.1000 நன்கொடை வழங்கினார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். 

 

கழகத் தோழர் தமிழ்ச் செல்வன்-ரஞ்சிதா சாதி மறுப்பு மணவிழா

சென்னை இராயப்பேட்டை கழகத் தோழர் எம். ஜெகதீஷ் எனும் தமிழ்ச் செல்வம், எம்.பி.ஏ. (மணிவண்ணன் - பரமேஸ்வரி ஆகியோரின் மகன்), பி. அனிதா, எம்.பி.ஏ. ஆகியோரின் சாதி மறுப்பு, காதல் மண விழா பிப். 9 ஆம் தேதி காலை சென்னையில் ஹேமமாலினி திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தேழர்கள், நண்பர்கள், மண விழாவில் பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மணமகன் கழக ஏட்டுக்கு ரூ.3000 நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் வழங்கினார். நன்றியுடன் பெற்றுக்கொண்டோம்.

 

ந. ரமேசுகுமார் - அ. மகேசுவரி மணவிழா

7.2.2011 திங்கள் அன்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பெரியார் படிப்பகத்தில், சேலம் மாவட்டம் தங்காயூர் ந. ரமேஷ்குமார் - ஈரோடு மாவட்டம் சிவகிரி ஆ. மகேசுவரி ஆகியோரது வாழ்க்கை துணை ஏற்பு விழா, ஒன்றிய தலைவர் க. ஈசுவரன் தலைமையில் நடைபெற்றது. மணமக்கள் கழகத் தலைவரை சந்தித்து மணவிழா மகிழ்வாக புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக ரூ.5000 வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.          (ஆர்) 

Pin It