தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருப்பூர் கிளை சார்பில் 3-9-17 மாலை 5 மணி பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு மில் தொழிலாளர் சங்கத்தில் சுப்ரபாரதிமணியனின் “பசுமை அரசியல்Ó நூல் வெளியீடு நடைபெற்றது.

நூலை வெளியிட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் பேசிய தாவது:

“இன்றைக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மனிதன் வாழ முடியாதபடிக்கு அவனை இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இயற்கை சார்ந்த உணர்வுகளின் தேவை இன்னும் அதிகமாக உணரப்படும் காலம் இது. மக்களை அழுத்தும் காரணிகளில் முக்கியமாகச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. எழுத்தாளர்கள் அதை மறை பொருளாக படைப்பிலக்கியங்களிலும், வெளிப்படையாகக் கட்டுரைகளிலும் எழுதி வரும் செயலை  தொடர்ந்து செய்ய வேண்டும்.Ó

சுப்ரபாரதிமணியன் ஏற்புரை:

பசுமையியல் இன்று சிதைந்து விட்டது. வெளிறிப் போய்விட்டது. தாவரங்கள், பிராணிகள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றாக இணைந்து ஒரே வாழிடத்தைத் தேர்வு செய்து கூடி இருப்பதாகும் பசுமையியல் பல உயிரினங்கள் அவற்றின் வாழிடத்தில் ஆற்றலை ஒருங்கிணைத்து பரிமாறிக்கொண்டும் ஒரே உயிரினமாக வாழ்தலுக்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிற உயிரினங்களின் பிணைப்பே பசுமையியலாக தொடர்ந்து வடிவமைத்திருக்கிறது. அந்த வடிவமைப்பு வெகுவாக சிதைந்து வரும் காலம் இப்போது.

இந்தப் பசுமையியல்  சிதைவுக்கு பல காரணங் களை அரசியலாகக் கொள்ளலாம். வல்லரசுகளின் ஆதிக்கம், மூன்றாம் உலக நாடுகளின் அடிமைத்தனம், சுரண்டப்படுதல் அடிப்படைகளாகும். பின்நவீனத்துவ அரசியல் - விளிம்புநிலை மக்கள், விளிம்புநிலை இயக்கங்களை முன்னிலைப்படுத்தியது. அப்படித்தான் அதிலொன்றான பசுமை இயக்கமும், பசுமைக்கருத்துக் களும் மக்களிடம் இயற்கை வளங்களை  சுரண்டுவதற்கு, சுற்றுச்சூழல் கேட்டிற்கு எதிராக முன்வைக்கப்பட்டன. பசுமை அரசியல் பலரின் புருவங்களை உயர்த்தச் செய்தது. பசுமை இயக்கங்கள் சார்ந்த படைப்புகள், செயல்பாடுகள் தொடர்ந்தது.அந்தந்த பகுதி சூழல் கேடு பற்றிய பதிவுகள் நவீன இலக்கியத்தில் முன்வைக்கப் பட்டன. அந்தப்பதிவுகள் இலக்கியப்பதிவாகவும், விழிப்புணர்வு விசயங்களாகவும் தொடர்ந்து  எழுதப்பட வேண்டும். பூமி சூடாகியும் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு களை கண்டு வரும் சூழலில் இன்றைக்கு எழுத்தாளர் களின் முக்கிய கடமை அது.

Pin It