உலக அளவில் நடைபெறுகிற விரல்விட்டு எண்ணத்தக்க பெரும் புத்தகக் காட்சிகளில் ஒன்று புதுடெல்லியில் நடைபெறுகிற புத்தகக் காட்சியாகும்.

அரசு சார்ந்த நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் இரண்டாண்டு களுக்கு ஒருமுறை இப்புத்தகக் காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 20 ஆவது உலகப் புத்தகக்காட்சி கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் புதுடெல்லியில் பிரசித்தி பெற்ற பிரகதி மைதானத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

delhi_book_fair_640

மக்கள் சிந்தனைப் பேர வையின் சார்பில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதத்தில் 12 நாட்கள் நடைபெற்று வரும் ஈரோடு புத்தகத் திரு விழாவை இன்னும் ஆண்டுக் காண்டு கூடுதல் சிறப்புகளு டன் நடத்த வேண்டும் என்ற நோக்கில் உலக முக்கியத் துவம் பெற்ற புத்தகச் சந்தை களுக்குச் சென்று புதிய அனு பவங்களைப் பெற்றுத் திரும்பு வதை வழக்கமாக வைத்துள் ளோம். அதனடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடைபெற்ற கொழும்பு உலகப் புத்தகச் சந்தைக்குச் சென்று வந்தோம். இந்த ஆண்டு புதுடெல்லி உலகப் புத்தகக் காட்சிக்கும் சென்று மூன்று நாட்கள் அதற்குள்ளேயே மூழ்கிக் கிடந் தோம்.

இந்த ஆண்டு சுமார் 45,000 சதுர மீட்டர் வளாகத்தில் இப்புத்தகக் காட்சி நடைபெற்றது. மொத்தம் 2,500க்கும் மேற் பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பதிப்பாளர்களாக, விற்பனையாளர்களாக, புத்தகங்களைப் பார்வைக்கு மட்டும் வைத்துப் புதிய விற்பனையாளர்களை ஈர்ப்பவர்களாக, புத்தக வர்த்தகம் செய்பவர்களாக மொத்தம் 1300 நிறுவனங்கள் வருகை புரிந்து இங்கு அரங்குகள் அமைத்திருந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் புத்தக நிறுவனங்களும் யுனெஸ்கோ, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங் களின் அரங்குகளும் அடங்கும்.

நமது ஊர்களில் நடை பெறும் புத்தகச் சந்தைகளில் உள்ளது போல் வரிசையாக ஒரே அளவில் சீராக அரங்கு கள் இங்கு அமைக்கப்படு வதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் குறிப்பிட்ட பரப்பளவு உள்ள இடத்தை அதற்குண்டான வாடகை கொடுத்துப் பெற்றுக் கொள் கின்றனர். அந்தக் காலி இடத் தில் அவர்களின் விருப்பம் போல் வாடிக்கையாளர் களைக் கவரும் விதத்தில் சிறப்பாக அலங்கரித்துள்ள னர்.

சில நிறுவனங்கள் புத்தகங்களை அடுக்கியும் குவித்தும் பரப்பியும் வைத் திருப்பதைப் பார்த்தால் புத்தகக் கடலாகவே காட்சி யளிக்கிறது. அடிநிலம் காலி யாக இருப்பினும் மேல் கூரை நிரந்தரமான கான் கிரீட் கூரையாக உள்ள தோடு பிரம்மாண்டமான முறையில் உள்ளது. எந்த மழைக்கும், எப்படிப்பட்ட வெயிலுக்கும் துளியும் அஞ்ச வேண்டியதில்லை.

பிரகதி மைதானம் இதுபோன்ற பிரம்மாண்ட கண்காட்சிகள் நடத்துவதற் கென்றே அரசால் உருவாக்கப் பட்டிருப்பதால் எல்லா வசதி களும் ஏற்பாடுகளும் வளாகத் திற்குள்ளேயே மிகச் சிறப் பாகவும் நிரந்தரமாகவும் செய்யப்பட்டுள்ளன.

மைதானத்திற்குள்ளேயே தனித்தனியாக உள்ள மிகப் பெரிய 14 அரங்குகளில் (Halls) உள்ளரங்குகள் (ளுவயடடள) அமைக்கப்பட்டிருந்தன.

அரங்கு எண் 1 முதல் 6 வரை ஆங்கிலப் புத்தகங்கள், அரங்கு 7B-C வெளிநாட்டு நிறுவனங்கள், அரங்கு 8 மற்றும் 9 சமூக அறிவியல் மற்றும் மனிதவியலுக்கான நூல்கள், அரங்கு எண் 10 பிராந்திய மொழிகளில் வெளியாகியுள்ள நூல்கள், அரங்கு எண் 11 இந்தி மொழியில் வெளியிடப்பட்ட நூல்கள், அரங்கு எண் 12 கல்வி உபகரணங்கள், கல்விக் குறுந்தகடுகள், கணினி விளையாட்டு போன்ற நூல்கள், அரங்கு எண் 12A அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நூல்கள், அரங்கு எண் 14 முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான நூல்களும், கல்வி சார்ந்த புத்தகங் களும் என வாசகர்கள் தங்களுக்கான புத்தகங்களை எளிதாகத் தேடிக் கண்டு பிடிப்பதற்கு வசதியாக இனம் பிரித்து வைக்கப்பட்டது தனிச் சிறப்பாகும்.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பிரகடனப்படுத்துவதோடு அல்லா மல் அதனைப் பிரதானப்படுத்தவும் செய் கின்றனர்.

இந்த ஆண்டு புத்தகக்காட்சியின் கரு ‘இந்திய சினிமா’ என்பதாகும். இதைத் தான் இந்த ஆண்டின் ‘Theme’ என்று அறி வித்திருந்தனர். இந்திய சினிமா தோன்றி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கொண்டாடும் பொருட்டு இந்த ‘Theme’ அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு ‘Theme Pavillion’ என்ற மிகப்பெரிய அரங்கமே ஒதுக்கப்பட்டிருந்தது.

சினிமா தலைப்புகளில் தினமும் கருத் தரங்கம், அரிய சினிமாக்களைத் திரை யிடுவது, பிரசித்தி பெற்ற சினிமா சம்பந்தப் பட்ட பிரமுகர்கள் நேரில் வந்து பார் வையாளர்கள் முன்னிலையில் கலந்துரை யாடுவது எனத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றுக் கொண்டே இருந்தன. இந்திய சினிமா குறித்து 400க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டி ருந்தன.

இதேபோன்று ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆவது ஆண்டைக் கொண்டாடும் பொருட்டு ‘Tagore Pavilion’ என்ற சிறப்பரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘டெல்லி - நூறு ஆண்டு கள்’ என்ற தனி அரங்கமும் இடம் பெற்றிருந்தது. நாட்டின் தலைநகராக டெல்லி செயல் படத் தொடங்கி நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி ‘Delhi Pavilion’ என்று இதற்குப் பெயரிட்டிருந்ததோடு, டெல்லி வரலாறு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் படங்களுடனும், குறிப்பு களுடனும் காட்சி அமைப் புக்கள் இவ்வரங்கில் இடம் பெற்றிருந்தன.

புத்தகக்காட்சி நடை பெறும் நாட்களில் ‘Fair News’ என்ற பெயரில் ஆங் கிலத்திலும், இந்தியிலும் இப்புத்தகக் காட்சியின் அன் றாட முக்கிய அம்சங்கள் மற்றும் அதனைச் சார்ந்த செய்திகளடங்கிய இதழ் ஒன்று தினசரி வெளியிடப் படுகிறது.

அரங்க வாடகையாக 10 x 10 அடி அளவுக்கு அரங் கிற்கு ரூ. 28,000/- நிர்ணயித் துள்ளனர். இந்திய மொழி களுக்கு ரூ. 14,000/-. இதனை அடிப்படையாக வைத்து அதிக இடம் கேட்டுப் பெற்று அவர்கள் விருப்பப்படி அலங் கார அமைப்புக்களை உரு வாக்கிக் கொண்டவர்களுக்கு வாடகை நிர்ணயித்திருந் தனர்.

பொதுமக்களிடமிருந்து நுழைவுக்கட்டணமாக ரூ. 20 வசூலிக்கப்படுகிறது. இப்புத்தகக் காட்சியில் புத்தக விலையிலிருந்து 10ரூ கழிவு வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் புத்தகங் கள் வாங்குவது மட்டுமல் லாமல் விற்பனை உரிமைப் பரிமாற்றம் செய்துகொள் வது இப்புத்தகக் காட்சி யின் முக்கிய அம்சமாகும். வெளிநாட்டிலிருந்து இச் சந்தையில் அரங்கு அமைத் துள்ள பல நிறுவனங்கள் தங்கள் புத்தகங்கள் விற்பதை விட இங்குள்ள வர்த்தகர் களிடம் அமர்ந்து பேசி விற் பனை உரிமை குறித்தும் தங்கள் மொழிக்குப் படைப் புகளை மொழிபெயர்ப்பது குறித்தும் பேசுகின்றனர். இதற்கான பல இருதரப்பு ஒப்பந்தங்கள் இச்சந்தையில் நிறைவேறுகின்றன.

வெளிநாடுகளில் உலகப் புத்தகச் சந்தை நடத்தக் கூடியவர்களும் இங்கு அரங் குகள் அமைத்து இங்குள்ள புத்தக நிறுவனங்களைத் தாங் கள் நடத்தவுள்ள புத்தகச் சந்தையில் பங்கேற்க அழைக் கின்றனர். உலகப் புத்தகச் சந்தைகளில் பங்கேற்க விரும் பும் உள்ளூர்ப் புத்தக நிறு வனங்கள் அதற்கான வழி முறைகள் அனைத்தையுமே இங்கு வந்து அதற்கென அரங்குகள் அமைத்துள்ள பிரதிநிதிகள் மூலம் தெளி வாகத் தெரிந்துகொள்ள லாம்.

‘ஆன்லைனில்’ புத்தகங் கள் அனுப்புவது குறித்து விளக்குவதற்கும் அவ்வா றான புத்தக வியாபாரத்தில் வந்துள்ள புதிய அணுகுமுறை குறித்து வாசகர்களுக்குச் சரியான கோணங்களில் அறிமுகப்படுத்துவதற்கும் மிகப் பிரபல மான ‘ஆன்லைன்’ புத்தக நிறுவனங்கள் அனைத்தும் இங்கு அரங்குகள் அமைத் திருந்தன.

குழந்தைகளுக்காகத் தனியாக அமைக்கப் பட்டிருந்த பிரம்மாண்டமான இந்தப் பெரிய அரங்கிற்குள் குழந்தைகளுக்கான புத்தகங் களையும், கல்விக் குறுந்தகடுகளையும் விற்கும் நிறுவனங்கள் விதவிதமான அரங்குகள் அமைத்திருந்தன.

இங்குப் புத்தக விற்பனை அமோக மாக நடப்பதோடு குழந்தைகளுக்குக் கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், குழந்தை கள் சினிமா போன்ற பிஞ்சு உள்ளங்களுக் கான பயிற்சிப் பட்டறைகளும் ஓயாமல் மாறி மாறி நடந்து கொண்டேயிருக்கின்றன.

புகழ்மிக்க எழுத்தாளர்கள், தலை வர்கள், அமைச்சர்கள், திரைத்துறைப் பிரமுகர்களின் தினசரி நிகழ்ச்சிகள் நடந்து கொண்டேயிருக்கும்.

பல பெரிய புத்தக நிறுவனங்களின் மிக முக்கிய பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் அவர்கள் வந்து அரங்குகள் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் கடிதம் கொடுத்து வலியுறுத்தினோம். அவ்வாறே டெல்லி யிலும் முயற்சித்தோம்! நீண்ட விளக்கங்களுக்கும் விவாதத்திற்கும் பிறகு சில நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடை பெறும் ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளன.

புத்தகக் கடலில் மிதப் பதில் ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்கிறது.

புத்தகங்கள் தனிமனி தனின் வாழ்வையும் சமூகத் தின் போக்கையும் புரட்டிப் போடும் வல்லமை படைத் தவை என்பதை நன்கு உணர்ந்துதான் முழுக்க முழுக்க சமூக நோக்குடன் ஈரோடு புத்தகத் திருவிழா வை நடத்தத் தொடங்கி னோம்; தொடர்ந்து நடத்தி யும் வருகிறோம்.

எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஈரோடு புத்தகத் திருவிழாவை மேலும் மெருகேற்று வதற்கும் தரப்படுத்துவதற்கும் புதுடெல்லி புத்தகக் காட்சி யின் அனுபவம் கைகொடுக் கும் என்பதில் சந்தேக மில்லை.

Pin It