ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டுக் குழந்தை களிடமே உள்ளது. எனவே அந்த எதிர்கால சந்ததி யினரை நல்லொழுக்கம் மிக்கவராகவும், நற்பண்பு களையுடையவராகவும் உருவாக்கும் கடமை பெற் றோர், ஆசிரியர் மட்டுமல்லாமல் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை ‘வானொலி அண்ணா’ என்.சி. ஞானப்பிரகாசம் ‘பாட்டி சொல்லாத கதைகள்’ என்னும் நூல் மூலம் தெளிவாக உணர்த்தியிருக்கிறார். இந்நூலில் வரும் சிறுகதைகள் அனைத்தும் சிறார்களுக்கான சிறந்த கதைகள்.

gnanaprakasam_451ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எதை இழந் தாலும் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. அப்படி நம்பிக்கை குறைந்தால் என்ன நடக்கும் என்று தனது கதை மூலம் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் நம்பிக்கையூட்டிள்ளார்.

ஒருவருக்கு இரண்டு கண்களும் முக்கியம் என் பதை மையக் கருத்தாகக் கொண்டு வானொலி, தொலைக்காட்சி இரண்டின் முக்கியத்துவம் அழ காகவும் ஆழமாகவும் புரிய வைக்கப்பட்டுள்ளது.

நல்ல திறமைசாலிகள் கூடத் தமது அச்சத்தால் பலர் முன்னிலையில் வெட்கித் தலைகுனியும் சூழ் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதை விளக்கி, அச்சத்தைப் போக்குவது எப்படி என்று ஆசிரியக் கதாபாத்திரத்தின் வாயிலாகச் சிறுவர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

முயற்சி என்ற ஆயுதம் மட்டும் மனிதனுக்கு இல்லை என்றால் அவனால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை அடைய முடியாதென்பது இன்னொரு கதையில் அழுந்த வலியுறுத்தப்படுகிறது.

நாம் எதைக் கொடுக்கின்றோமோ, அதற்கான பலன் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்ற தத்து வத்தை ஒரு சிறுவனின் ரேங்க் கார்டு மூலம் ஆசிரியர் தெளிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் சிறுவர்கள் தங்களின் பணிகளைச் செவ்வனே செய்யப் பெரிய வர்கள் கட்டாயமாகத் துணைபுரிய வேண்டும் என்பதையும் கூறியுள்ளார்.

அன்றைய பணிகளை அன்றே செய்ய வேண்டும். இன்று பெரியவர்களுக்குக்கூட அத்தகைய நற் பண்புகள் குறைந்துகொண்டே செல்கின்றன. ஆனால் குழந்தைகள் அத்தகைய சூழலில் சிக்கக்கூடாது என்பதைத்தான் “ஒன்றே செய்! நன்றே செய்! இன்றே செய்!” என்னும் கதை அறிவுறுத்துகிறது.

குழந்தைகள் தங்களது சுட்டிக்குணங்களால் சில குறும்புகள் செய்வதுண்டு. ஆனால் அவற்றை யெல்லாம் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்காமல் அவர்களின் நற்குணங்களைப் பாராட்டி அவர்களை உயரக் கூட்டிச் செல்ல வேண்டும். அவர்களைக் கண்டிப்பதும் தண்டிப்பதும் அவர்களை நெறிப் படுத்தாது; மாறாக, தீமையையே விளைவிக்கும். எனவே, அவர்களை நல்வழிப்படுத்தி நாமும் பழகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தந்த பாட்டி பாராட்டுக்குரியவர்.

ஒரு மனிதன் வாழ்க்கையில் யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக்கூடாது என்பதையும் அத்தகைய திறமையைக் கூட நல்ல நூல்களைப் பயில்வதன் மூலம் தான் பெறமுடியும் என்றும் அடையாளம் என்னும் கதை வாயிலாகக் கூறும் நூலாசிரியர், நாம் ஒரு செயலைச் செய்யும் முன் பலமுறை யோசித்துச் செய்யவேண்டும் என்ற கருத்தை உலகப் புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை வைத்தே வலியுறுத்தியுள்ளார்.

மனிதன் என்பவன் எப்போது முழுமையானவன் ஆகிறான்? அவன் தன்னைப் போல பிறரையும் பாவிக்கும் குணம் கொள்ளும் போதுதான்! பதவி கிடைத்தால் அதை மற்றவரின் நலனுக்காகப் பயன் படுத்தியவர்தான் நாளை மக்கள் முன்னிலையில் மிகப்பெரிய தலைவராக இருப்பர் என்பது தலை சிறந்த தலைவர்களின் ஆளுமைகளை வைத்தே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கலைகளிலேயே மிகவும் சிறந்த கலை, கடின மான கலை எதுவென்றால் குழந்தைகளை வளர்க்கும் முறைதான்! அதில் பெற்றோர் தேர்ச்சி பெற்றிருந் தால்தான், அவர்கள் தங்கள் குழந்தைகளைச் சிறந்த குடிமக்களாக உருவாக்க முடியும். அந்த வகையில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உதவக்கூடியவையே இந்நூலில் உள்ள கதைகள்.

 ***

பாட்டி சொல்லாத கதைகள்

ஆசிரியர் : ‘வானொலி அண்ணா’ என்.சி. ஞானப்பிரகாசம்

வெளியீடு : அறிவுப் பதிப்பகம்

விலை : ரூ.45.00

Pin It