(வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணிகள் குறித்து, புதிய தலைமுறை தொலைக்காட்சியில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியனுக்கும், சி.பி.எம். கட்சியின் தமிழ்மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினாருக்கும் இடையில் நடைபெற்ற விவாதத்தின் ஒரு சிறு பகுதி கீழே தரப்பட்டுள்ளது)

subavee

புதியதலைமுறை - இன்றைய நாளேடுகளில், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்ற தி.மு.க.வின் திட்டவட்டமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. கூட்டணியில் தி.மு.க.வின் இரட்டை நிலை என்று சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. இராமகிருஷ்ணனின் அறிக்கையும் வந்துள்ளது. இப்படி தி.மு.க.,வுக்கும், சி.பி.எம்.முக்கும் அடிக்கடி ஒரு சொற்போர் நடப்பதற்குக் காரணம் என்ன-?

ஆ.நயினார் - முதலில் அவருடைய (கலைஞர்) நிலைப்பாட்டை வரவேற்கி றோம். பா.ஜ.க.,வோடு கூட்டணி என்பதில் ஒரு ஊசலாட்டம் தி.மு.க., விடம் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தேர்தலுக்கு முன்பே அப்படி ஒரு ஊசலாட்டம் இருந்தது என்றால், தேர்தலுக்குப் பின்பு, யார் எங்கே போவார்கள் என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது. அதைத்தான் மரியாதைக்குரிய கலைஞர் அவர்களின் நிலைப்பாட்டிலும் இரட்டை நிலை காணப்படுவதாக எங்கள் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

சுபவீ - ஊடகங்கள் சொல்வதை யெல்லாம் உண்மை என்று அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. தி.மு.க., சார்பில் இருந்து பா.ஜ.க., உடன் அணிசேர்வதற்கான எந்தவிதமான சைகையும் காட்டப்பட வில்லை. தி.மு.க.,வை சி.பி.எம்., தொடர்ந்து கடுமையாகத் தாக்குவதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. தி.மு.க.,வைத் தாக்கினால்தான், போயஸ் தோட்டத்துக் கதவுகள் கொஞ்சமாவது திறக்கும்.

ஆ.நயினார் - இது அபாண்டம்

சுபவீ - உண்மை கொஞ்சம் கசப் பாகத்தான் இருக்கும்.

ஆ.நயினார் - ஏற்காடு இடைத் தேர்தலில் பா.ஜ.க.,வின் ஆதரவைக் கேட்டுத் தி.மு.க., கடிதம் கொடுத்தது உண்மையா இல்லையா?

சுபவீ - உண்மைதான். பா.ஜ.க.,வுக்கு மட்டுமில்லை. மனித நேய மக்கள் கட்சிக் கும்தான் கடிதம் கொடுத்தார்கள். ஒரு இடைத் தேர்தலில், ஆளும் கட்சியை எதிர்த்து மற்ற கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டு வதற்காக முயற்சி எடுப்பது எப்போதும் இயல்புதான். இதற்கும் கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வரும் தேர்தலில் உங்கள் கூட்டணி நிலைப்பாடு என்ன?

ஆ.நயினார் - சொல்கிறேன். மாநிலக் கட்சிகளுடனான எங்களின் கூட்டணி என்பது,  அகில இந்திய அளவிலான நிலைப் பாட்டினை ஒட்டியதாகத்தான் வருகிறது. இன்று மத்திய அரசினுடைய மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கை களைத் தொடர்ந்து ஓராண்டாக அ.தி.மு.க., எதிர்த்து வருகிறது-. அதைத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

சுபவீ - உண்மைதான். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை ஏற்றினால் அ.தி.மு.க., எதிர்க்கிறது. ஆனால் இவர்கள் உயர்த்தியு-ள்ள பால் விலையை யும், மின் கட்டணத்தையும் யார் எதிர்ப்பது? அதாவது, மக்கள் விரோத மாக மத்திய அரசு எதையும் செய்யக் கூடாது. நாங்கள் மட்டும்தான் செய் வோம் என்பதுதான் இங்கே உள்ள நிலை. அ.தி-.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொள்வதாக நீங்கள் முடிவு எடுத்துள் ளீர்கள். சரி, ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறீர்களா? இல்லை என்று சொன்னால், நீங்கள் போயஸ் தோட்டத்துத் தெருவில் கூட நடக்க முடியாதே?

ஆ.நயினார் - இந்தக் கேள்விக்கு, எங்கள் அகில இந்தியப் பொதுச் செயலாளர் நேரிடையாக விடை சொல்லி இருக்கிறார். நாங்கள் மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க.,வும் அல்லாத ஒரு ஆட்சியை அமைக்கக் கண்டிப்பாக முயற்சி செய்கிறோம்.

சுபவீ - அப்படியானால் காங்கிரஸ் அல்லாத, பா.ஜ.க.,வும் அல்லாத மம்தா பானர்ஜியை பிரதமராக ஏற்றுக் கொள்வீர்களா?

ஆ.நயினார் - அந்த அம்மா மிக மோசமான, ணீஸீtவீ பீமீனீஷீநீக்ஷீணீtவீநீ.

சுபவீ - அப்ப இந்தம்மா...?

ஆ.நயினார் - இரண்டையும் ஒப்பிடாதீர்கள். அங்கே எங்கள் தோழர்கள், எவ்வளவு கொடுமையாக இரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கப்பட்டார்கள் தெரியுமா-?

சுபவீ - இங்கேயும்தான் உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் தோழர்கள் அருவாளால் வெட்டப்பட்டார்கள்.

ஆ.நயினார் - ஆமாம்...இங்கேயும் நாங்கள்தான் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம்.  தி.மு.க., தேர்தலில் பங்கேற்கவில்லை என்று சொல்லி பல நேரங்களில் ஒதுங்கிக் கொள்கிறது.

சுபவீ - 1996 இல் என்ன நடந்தது? அப்போது நாடாளுமன்றத்தில், சி.பி.எம் - 32 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. சி.பி.ஐ. க்கு 9 உறுப்பினர்கள் இருந்தார் கள். இன்று நீங்கள் அதில் சரிபாதியாக 16 பேர்தான் இருக்கிறீர்கள். சி.பி.ஐ., பாதிக்கும் குறைந்து 4 பேர்தான் இருக்கிறார்கள். 41 பேர் இருந்தபோது, ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பும் வந்தபோது அதை நீங்கள் மறுத்து விட்டீர்கள். அது குறித்து அன்று ஜோதி பாசு அவர்கள் சொன்னதும், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ‘பிவீstஷீக்ஷீவீநீணீறீ தீறீuஸீபீமீக்ஷீ’ என்றார் அவர். தோழருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

பு.தலைமுறை - இது குறித்து அவர்கள் கட்சி சார்பில் ஏற்கனவே விடை சொல்லப்பட்டிருக்கிறது-. தங்களுக்கு முழுமையான பெரும் பான்மை கிடைக்காமல் ஆட்சி அதிகாரத்திற்கு வர விரும்பவில்லை என்பதுதான் அவர்களின் நிலைப் பாடு. இப்போதும், கூட்டணி பற்றி ஒரு கருத்தை ஜி.இராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கூட்டணி சேர்கிற கட்சிகளோடு நூறு சதவீதம் உடன்பாடு இருக்க வேண்டும் என்னும் அவசியமில்லை. எல்லா கூட்டணிகளின் நிலையும் அதுதான் என்று கூறியுள்ளார்.

சுபவீ - 1992இல் பாபர் மசூதியை இடிக்கும் கரசேவைக்கு ஆள் அனுப்பியவர் ஜெயலலிதா. இப்போதும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை அவர் கடுமையாக எதிர்க்கிறார்.

ஆ.நயினார் - எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறதா என்றால்... இருக்கிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில், அகில இந்திய அளவில் மாற்றுக் கொள்கைக்கான போராட்டத்தை  நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கான வலிமையும், முன்முயற்சியும் இன்று அ.தி.மு.க.,விடம்தான் இருக்கிறது- என்று நம்புகிறோம்.

(சுபவீ - அடேயப்பா... இனி உங்களுக்காக வருத்தப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது).