உரிமைக்குப் போராடுவோர், ஊழல்களை வெளிப்படுத்துவோர் மீது அடக்குமுறைகளை ஏவி அழித் தொழிக்கும் முயற்சியில் ஆதிக்கங்கள் தொடர்ந்து முயன்று வருகின்றன. காட்டாக, பாதிப்புக்குள்ளான சிலர்.

சத்திஸ்கர் மாநிலம், மக்கள் மருத்துவர், மனிதநேயப் போராளி பினாயக்சென் சமீப நாள்களாக அன் றாடம் செய்தியாக இடம் பெற்று வரும் ஒரு பெயர்.

செய்திக்குக் காரணம், செய்தித் தாள் படிக்கிற அனைவரும் அறிந்தது தான். அவர் செய்த ஒரே குற்றம் சத் திஸ்கர் மலைவாழ் மக்களுக்கு மருத் துவம் பார்த்தார், அம்மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக மனித உரிமைக்கு குரல் கொடுத்தார். மக்கள் சேவை செய்தார் என்பதுதான்.

இதற்காக அவர் மீது பொய்யான குற்றச் சாட்டுகள் சுமத்தி தேசத் துரோகக் குற்றத்தில் அவரைக் கைது செய்து, வழக்குத் தொடுத்தது சத்தீஸ்கர் அரசு. வழக்கை விசாரித்த இராய்ப்பூர் நீதிமன்றம் சென்னுக்கு வாழ்நாள் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பு அநீதியானது, அவரை விடுதலை செய்யவேண்டும் என்று சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள மனித உரிமைப் போராளிகள் கோரி வருகின்றனர்.

இக்குரல்கள் எதையும் கண்டு கொள்ளாத சத்தீஸ்கர் அரசு பினாயக் சென்னின் மனைவி இலினா சென்மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டி வழக்கு பதிவு செய் துள்ளது. இது ஒன்று.

அடுத்தது, 2005இல் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல்களை, முறைகேடுகளைக் களைய நடவடிக்கை கள் மேற்கொண்டு அவற்றை வெளிக் கொண்டு வந்து அம்பலப்படுத்தி னார்கள் என்பதற்காக இந்த 5 ஆண்டுகளில் பல பேர் ஆதிக்க சக்திகளால் கொல்லப்பட் டுள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டுமே குஜராத் அமிஜ் ஜேத்வா (33), மகாராஷ்டிரா தத்தராய பட்டீல் (47), வித்தில் கை கைத் (39), அருண் சவாத், சதீஷ் ஷெட்டி (39), ஆந்திரா சோலா ரங்காராவ் (30), பிஹார் சசிதர் மிஸ்ரா (35), குஜராத் விஸ்வம் லட்மண் தோடியா (50) உள்ளிட்டு ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஊழலை வெளிக் கொணர்பவர் கள் ஆதிக்க சக்திகளால் இப்படிக் கொல்லப்படுவதைப் பாதுகாக்க விரைவில் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் என அரசு சொல்லி வரு கிறதே தவிர இதுவரை இப்படு கொலைகளைத் தடுக்கவோ, இனி இவ்வாறு நடக்காமல் இருக்கவோ, தக வல் கோருபவர்களுக்கு எந்தப் பாது காப்பும் அளிக்கவோ முயலவில்லை.

இந்திய அளவில் இப்படி என் றால், உலக அளவில் அமெரிக்க அர சின் ஆதிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கை களை, தூதரக உறவு என்பதன் பேரால் நடக்கும் போலித் தனங்களை, சர்வதேச நெறிமுறைகளை மீறிய அதன் போர்ச் செயல்களை, மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வந்தார் என்பதற்காக விக்கி லீக் எனப்படும் இணையதளத் தின் நிர்வாகி ‘ஜூலியன் அசஞ்’ என்பார் மீது பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இப்படி உலகம் முழுவதும் ஆதிக் கங்களை எதிர்த்து ஆங்காங்கே மனித உரிமைக்குரல் எழுவதும், ஆதிக்கங்கள் ஈவு இரக்கமற்ற குரூரமான வஞ்சகமான நடவடிக்கைகள் கொண்டு அவற்றை ஒடுக்க முயல்வதும் நாடுகள் தோறும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நாம் ஊன்றி நோக்கி அதில் அக்கறை காட்டவேண்டும். இப்படிப்பட்ட மனித உரிமைப் பேராளிகளுக்கு நாம் ஆதரவாக நிற்க வேண்டும். அநீதிக்கெதிரான அவர் களது செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பாக நாம் குரல் எழுப்ப வேண்டும். இதன்வழியே ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்த சமத்துவ சனநாயக வாழ்வை நிறுவ பாடுபட வேண்டும்

Pin It