1. யு.ஆர். ஆனந்தமூர்த்தியின் ‘ஆங்கிலமும் இதரமொழிகளும்’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

2. ‘இலைகளை வியக்கும் மரம்’ கட்டுரைத் தொகுதி யாருடையது?

3. ‘வார்சாவில் ஒரு கடவுள்’ நாவலின் ஆசிரியர் யார்?

4. இந்திய உளவு நிறுவனம் ஸிகிகீ (ரா) பற்றிய பி. ராமனின் நூல் தமிழில் வெளிவந்துள்ளது. நூலின் தலைப்பு?

5. மலையாளஎழுத்தாளர் எம். முகுந்தனின் ‘கடவுளின் குறும்புகள்’ என்ற நாவல் தமிழில் வெளிவந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் யார்?

6. ‘முறிமருந்து’ நாவலின் ஆசிரியர்?

7. ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்’ நூலின் ஆசிரியர் யார்?

8. ஹர்கிஷன்சிங் சுர்ஜித் எழுதிய ‘இந்திய விவசாயிகள் இயக்கத்தின் வரலாறு’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர்?’

9. ‘பள்ளிக்கூடத் தேர்தல்’ நூல் யாருடையது?

10. சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ள 1000 பக்க நாட்டுபுறக் கதைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் யார்?

 

 

 

1. அ. குமரேசன்

2. எஸ். ராமகிருஷ்ணன்

3. தமிழவன்

4. நிழல் வீரர்கள்

5. தி.சு. சதாசிவம்

(கன்னட வழி)

6. எஸ். செந்தில்குமார்

7. மைதிலிசிவராமன்

8. பேரா. ஆர். சந்திரா

9. பேரா.நா.மணி

10. கி. ராஜநாராயணன்

Pin It