இது கணிப்பொறிகளின் யுகம். கைபேசிகளிலும் கணிப்பொறி. கற்றுக்கொள்ள வேண்டிய காலம்.

கவனியுங்கள் இப்புதிய தொடரை!

1. GOOGLE HANDWRITING INPUT - Tamil Typing Without Keyboard

தமிழில் உரையாடுவதற்குப் பலபேருக்கு விருப்பம். ஆனால் சரியான தமிழ்த் தட்டச்சுச் செயலியை நிறுவி அதில் பதிவுகளைத் தட்டச்சு செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல எந்த விசைப்பலகை என அவர்கள் தேர்வு செய்து உள்ளிடுவது என்பதில் மிகப்பெரிய குழப்பமும் அவர்களுக்கு வருகிறது. அவர்களது இடர்பாடுகளை போக்க நல்ல செயலி ஒன்று இருக்கிறது.

Google Handwriting Inputஉங்களது ஆன்ராய்ட் மொபைலில் play store செல்லுங்கள். Google Handwriting input என தட்டச்சுங்கள். இப்போது இந்தச் செயலியை நிறுவுங்கள். இதில் language inputல் தமிழ் எனத் தேர்வு செய்து முயற்சி செய்யுங்கள். 99 விழுக்காடு துல்லியமாக வேலை செய்கிறது. உங்கள் ஆள்காட்டி விரல்கொண்டு எழுத ஆரம்பியுங்கள். கோழி கிறுக்கல் கையெழுத்தைக் கூட அழகாக எழுத்துருவாக TEXT ஆக மாற்றுகிறது. இது ஒருங்குறி எழுத்தாக மாறுவதால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ, வாட்ஸ்ஆப் செய்தியோ தமிழில் தங்கு தடையின்றிப் பகிரலாம்.

அது மட்டுமல்ல இது Bilingual அதாவது இருமொழியும் உணர்ந்து அதற்கேற்றார் போல் Text ஆக மாற்றிக் கொடுக்கும். அதாவது தமிழில் எழுதினால் தமிழிலும், ஆங்கிலத்தில் எழுதினால் ஆங்கிலத்திலும் எழுத்துரு அமையும்.

இத்தொழில் நுட்பம் வெகு வேகமாக அனைவரையும் கவருகிறது. விரைவில் தட்டச்சு முறை என்பதே ஒழிந்து விடும் அளவிற்குத் தொழில் நுட்பம் புலிப்பாய்ச்சல் அடைந்துள்ளது.

தமிழ் எல்லாத் தொழில் நுட்பத்திற்கும் அணியமாகி வருகிறது. அது மட்டுமல்ல நாம் எழுதும் எழுத்து அப்படியே ஒருங்குறி எழுத்தாக (Unicode Font) மாறுகிறது. எனவே நீங்கள் மின்னஞ்சலாகவோ, வாட்ஸ்ஆப் மற்றும் குறுஞ்செய்தியாகவோ எப்படி அனுப்பினாலும் தெளிவாகப் படிக்கும் வகையில் அமையும். தமிழில் தமது கருத்துகளைத் தெரிவிக்க விரும்புவோருக்கு மிகச்சிறப்பான செயலி இதுவாகும்

https://youtu.be/D7wnsG6jIcI இந்த இணைப்பினைச் சொடுக்கி காணொளி மூலம் இந்த செயலியை (Apps) - எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் அறியாலாம்

***

2. DAILY HUNT

ஆண்ட்ராய்டு போன் எனில் வாட்ஸ் ஆப் தாண்டிய வேறெந்த செயலியும் இருப்பதாகப் பல பேர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் பல பயனுள்ள செயலிகள் நம் ஆண்ட்ராய்டில் பொதிந்து கிடக்கின்றன.

dailyhuntஅதில் முக்கியமான செயலி டெய்லி ஹன்ட் Daily Hunt.. இதில் ஒரு கல்லில் நான்கு மாங்காய்.

ஆம்.. நீங்கள் செய்தி வாசிக்கலாம்..

புத்தகம் வாசிக்கலம்,

வேலைக்குப் படிக்கலாம்..

வேலை வாய்ப்பைத் தேடலாம்

ஆனந்த விகடன், நக்கீரன், குங்குமம் உட்பட நடப்பு வாரம், கடந்த வாரம் எனப் புத்தகங்களை டிஜிடல் வெர்சனாக நீங்கள் வாங்கி மொபைலிலேயே படிக்காலம். 25% மேல் தள்ளுபடியில் நிறைய நூல்கள் கிடைக்கின்றன். உங்களிடத்தில் டேப் (TAB) இருந்தால் படிப்பதற்கு இன்னும் வசதியாக இருக்கும்.

அதற்கான தொகை நீங்கள் கிரிடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து கூடச் செலுத்த வேண்டிய தேவையில்லை. உங்களது சிம் கார்டில் இருக்கும் தொகையில் இருந்தே பிடித்துக் கொள்வார்கள். ஒரு ரூபாய்க்குக் கூடப் புத்தகங்கள் கிடைக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அளிக்கும் செயலிகள் பல இருக்கின்றன. செய்திகளைவிட இதில் கூடுதலாக நாம் காண்பது இலவசப் புத்தகங்கள். தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் அளிக்கபட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் பைசா செலவில்லாமல் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஆப் லைனில் இருக்கும் போதும் படிக்கலாம். தமிழ் ஆங்கிலம், மலையாளம் என 15 மொழிகளில் இந்த செயலி இயங்குகிறது. இப்போதே தரவிரக்கம் செய்து இலவச நூல்களைப் பெற்று மொபைலில் படித்துப் பாருங்கள்.

புத்தகத்தில் படிக்கும் நேர்த்தி மொபைலில் படிப்பதில் இல்லை என்றாலும் காத்திருக்கும் நேரத்தில் விரும்பியதைப் படிக்கலாமே.

எத்தனை நாள்தான் Forward செய்யும் மொக்கை செய்திகளை நாம் படித்துக்கொண்டு இருப்பது.

https://play.google.com/store/apps/details?id=com.eterno இதில் சொடுக்கி உங்கள் திறன்பேசியில் செயலியை நிறுவித் தொடருங்கள் உங்கள் வாசிப்பை.

 புதியன விரும்பு என்ற பாரதியின் வாக்கினைப் பின்தொடர்வோம்.