1947வது வருடம் உருவாகிய இந்திய தேசிய குழந்தைக்காக வடகிழக்கு தேசங்கள் காஷ்மீர், பஞ்சாப் போன்ற தேசங்களின் எண்ணற்ற உயிர்கள் பலியிடப்பட்டன. இந்து, இந்தி, இந்தியா என்ற கற்பிதம் மிடுக்காய் நிலை நிறுத்தப்பட்டது. நம் மூளை, இரத்தம் நரம்பு நாளங்களில் பதிய வைக்கப் பட்டுள்ளது. ஒற்றுமை என்ற வார்த்தை எல்லோராலும் எளிதாக நேசிக் கக் கூடியவை.
ஆனால் நாகரிகமடைந்த மக்கள் சற்று ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியவை ஒற்றுமை என்பது சம அளவில் உரிமைகள், சம வாய்ப்புகள், பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கின்றதா என்பதையே, அப்படி இல்லை என்றால், சமத்துவத்திற்காக குரல் கொடுப்பதுமட்டும் எப்படி பிரிவினை வாதமாக கருதப்படுகிறது.
இந்த நியாயமற்ற பிரச்சாரத்தை ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, இந்திய ஒற்றுமை என்று ஏற்றுக் கொள்வது சோகத்தின் இன்னொரு பயங்கரம், வரலாற்றுப் பக்கங்களை திருப்பிக் கூட பார்க்க துணிச்சல் இல்லாமல் தேசிய மயக்க நீரோட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்றோம். கடந்த அரை நூற்றாண்டு காலம் திராவிட அரசியல் தாக்கத்தினால் தமிழ்த் தேச அரசியல் உரிமையைப் பற்றி சிந்தனைக்கே இடம் இல்லாமல் போய்விட்டது.
வர்க்க விடுதலைக்கு தீர்வினை தயாரிக்கும் தோழர்கள் அந்தரத்தில் தன் எதிரிகளைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர். வல்லரசுக்கும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு இந்தி இந்து என்ற கொள்ளை வெளிச்சத்தில் பிறந்த இந்திய உருவாக்கத்தை இவர்கள் ஏன் இன்று புரிந்து கொள்ளவில்லை. இந்தியா வெறும் அடையாள மட்டுமல்ல அது ஒடுக்கப்பட்ட தேசங் களின் குரல்வளையை நெறிக்கும் பாசிச கருத்தாக்க மாகும். இதை எதிர்த்து வஞ்சிக்கப்பட்ட அடையாளங்களை முன்னிறுத்த வேண்டியது நம்முன்னுள்ள கடமையாகும்.
ஈழ விடுதலையை நேசிக்கும் தமிழ் நாட்டின் தமிழர்கள் இந்திய அரசு, ஐ.நா. போன்ற நிறுவனங்களிடம் நம்பிக்கைபெறுவதின் மூலம் ஈழ மக்களுக்கு நியாயங்கள் பெற்று விடலாம் என்று நினைக்கின்றனர். 1947 ஆண்டிலிருந்து இன்று வரை இந்திய தேசிய ஒற்றுமைக்காக பலியிடப்படும் லட்சக்கணக்கான உயிர் பலிகளை வேடிக்கைப் பார்க்கும் ஐ.நா.விடம் நியாயத்தை எதிர்பார்ப்பது கோமாளித்தனமானது.
இப்படியாக இந்தியாவால் வஞ்சிக்கப்பட்ட பஞ்சாப் தேசத்தின் சோக வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது மூலம் தமிழர்கள் எதிர்காலத் திட்டம் எதுவாக இருக்கும் என்பதை எளிதாக புரியும் என்பதை நம்புகிறோம்.
பஞ்சாப் தேசம் வட கிழக்கு எல்லையில் பாகிஸ்தானையும், கிழக்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீரையும் வடகிழக்கில் அரியானாவையும் தென்கிழக்கில் ராஜஸ்தானையும் எல்லையாகக் கொண்டு அமைந்து இருப்பது அதன் மொத்தப் பரப்பளவு 5362 சதுர அடியாகும்.
14ம் நூற்றாண்டில் சாதி மத வெறி தாண்டவமாடிய அக்காலத்தில் இவை களை ஈடுகட்டும் வகையில் சமத்து வத்தை முன் வைத்து குருநானக்கால் உருவாக்கப்பட்ட போதனைகளே சீக்கிய மதத்தின் துவக்கமாகும்.
பல்வேறு ஆட்சி முறைக்குப் பிறகு மகாராஜா ரஞ்சித் சிங் தலைமையில் (1801 முதல் 1849) உறுதி மிக்க ஆட்சி கட்டி அமைக்கப்பட்டது. இந்த ஆட்சியில் எல்லை மேற்கில் கைபர் பாஸ் வரைக்கும் தெற்கில் காஷ்மீர் வரையிலும் வடகிழக்கில் சிந்துவரையிலும் கிழக்கில் திபத்து வரையிலும் எல்லை விரிவடைந்து இருந்தது.
லாகூர் பஞ்சாப்பின் தலைநகரமாக விளங்கியது. 1839 அன்று ரஞ்சித் சிங் மரணமடைந்த பிறகு அரசாங்கம் வலு இழக்கத் தொடங்கியது. பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்தது. இதன் விளைவாக பிரிட்டீஸ் இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு யுத்தங்களைத் தொடுக்க ஆரம்பித்தது.
இறுதியாக லாகூர் ஒப்பந்தத்தின் மூலம் 1849ம்ஆண்டு பஞ்சாப் பிரிட்டீஸ் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டது. ஹென்றி ஆர்டிங் முதல் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். பிரிட்டீஸ் ஆட்சிக்கெதிராக, பஞ்சாப்பியர் நடத்திய வரலாற்றுச் சாகசங்களாக பதியப்பட வேண்டியவை பிரிட்டீசை எதிர்த்து இந்தியத் துணைக் கண்டத்தில் அதிகமான உயிர்த் தியாகம் செய்த தேசமாக பஞ்சாப் விளங்கியது.
குறிப்பாக பாபா ராம்சிங் துவங்கிய நாம் தாரிய இயக்கம் மற்றும் 1913ல் ஆர்டியா, சோயாசிங், பக்காங் வாஷ்கா போன்றவர்களால் தொடங்கிய கதார் கட்சி மக்களை பெறும் அளவிற்கு பிரிட்டீஸ் அரசுக்கு எதிராக திரட்டியது. ஜிக்சிங், லாலா லஜபதிராய், பிங்காரா ம்றும் பாய் பர்மன்ட் போன்றவர்கள் துவங்கி நடத்திய இயக்கங்கள் அடக்கு முறையைச் சந்தித்து எண்ணற்ற உயிர் தியாகங்களை செய்திருக்கின்றது.
அடுத்ததாக சிங்கசபா அகாலிதல் ரத்தி கிவுன்சபா போன்றவைகள் வெள்ளையருக்கெதிராக போராட்டம் நடத்தியது. சுபாஸ் சந்திரபோஸ் நடத்திய இந்திய ராணுவத்தில் ஜெனரல் மோகன்சிங் கேப்டன் பியான் போன்ற சீக்கியர்களின் பங்கு மிக முக்கியமானது. பிரிட்டிசுக்கு எதிராக நடத்தி போராட்டத்தில் அதிக அளவில் உயிர் தியாகம் செய்தவர்கள் பஞ்சாபியர்கள்.
உதாரணமாக ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 ஏப்ரல் 13 பஞ்சாபியர்கள் தங்கள் எதிர்கால மென்பது மதசார்பற்ற கூட்டாட்சி என்று நம்பி இருந்தனர். நேரு மற்றும் காந்திய நயவஞ்சகத் தத்துவத்தில் மயங்கி இருந்தனர். 1929ம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் "இந்திய விடுதலைக்குப் பிறகு சீக்கியர்கள் சம்பந்தமில்லாமல் அரசியல் சட்டம் நிறைவேற்றப்படாது' என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
பிரிட்டிஷ் தன் ஆட்சியை விலக்கிக் கொள்வது என்று தீர்மானித்தபின் சீக்கியர்கள் இந்து முஸ்லீம் பிரதிகளை கொண்டுபல்வேறு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது எல்லா நேரங்களிலும் அகாலிதள் இந்திய தேசிய காங்கிரஸ் வழியைப் பின்பற்றியது.
அப்போது எல்லா நேரங்களிலும் இந்திய தேசிய காங்கிரசையே பின்பற்றியது. நேரு, ஜின்னாவின் தவறான அணுகுமுறையினால் பஞ்சாப் மொழி தேசம் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இரண்டாக பிளக்கப்பட்டது.
உலக வரலாற்றிலேயே இல்லாத அளவு இரண்டு எல்லைகளும் உயிர்பலிகள், வீடுகள், விளை நிலங்களை விட்டு இடம் பெயர்ந்தனர்.
மத வெறி என்பது பஞ்சாபில் விதைக்கப்பட்டது. இந்திய அரசு குடும்பத்தின் முதல் கதாநாயகன் நேரு இந்தப் பாவச் செயலின்தந்தையாகத் திகழ்ந்தார். ஆனால் ஜின்னா பஞ்சாப் தேசத்திற்கு முழுமையாக அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
ஆனால் அதையும் மறுத்து அகாலிதள் இந்திய அரசிடம் கைகோர்த்து நின்றது. விடுதலைப் போராட்டத்தில் அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதி யையும் காங்கிரஸ் மதிப்பதாக இல்லை. இதன் விளைவாக இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தும் சரத்தில் மூன்று முக்கிய பிரதிநிதிகள் கையெழுத்திட மறுத்தனர். இதுவே இந்தியாவின் ஒரு அங்கம் இல்லை என்பதற்கு ஒரு சான்றாகும்.
மீண்டும் மொழி உரிமையை கூட தரமறுத்து விட்டது இந்திய அரசு. 1944 சர்சார் குழுவின் முடிவின்படி பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதாவது இந்தி மற்றும் பஞ்சாப் மொழிபேசும் பகுதிகளாக.
பின்னாட்களில் இமாச்சல் பிரதேசம், அரியானா, பஞ்சாப் மாநிலங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.
இந்து மத வெறி அமைப்புகள் அரசு துணையுடன் பஞ்சாப்பை தாய் மொழியாகக் கொண்ட இந்துக்களை கட்டாயமாக இந்தியைத் தாய் மொழியாக பதிவு செய்ய வைக்கப்பட்டனர்.
மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட மொழிவாரி உரிமை கூட பஞ்சாப் மொழிக்கு மறுக்கப்பட்டது. சீக்கியர்கள் தங்கள் மொழி உரிமையை நிலைநாட்ட 15 வருட காலம் போராட வேண்டி இருந்தது. 1966ல் மாநில சீரமைப்பு குழு பஞ்சாப்புக்கு சாதகமாய் இருந்தபோதிலும், அதானல் அகாலிதள், பஞ்சாப், சூபா என்ற பிரம்மாண்ட போராட்டத்தைக் கட்டி அமைத்தது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். இறுதியாக 1966 செப்டம்பரில் பஞ்சாப் மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் பல்வேறு பஞ்சாப் மொழி பேசும் பகுதிகள் அரியானா இமாச்சல் பிரதேசத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டது. முன்னரே சொன்னபடி பஞ்சாப் மொழி பேசும் இந்துக்கள் 1967 கணக்கெடுப்பில் இந்தி தாய் மொழியாக பதிவு செய்விக்கப்பட்டனர். 1973 அக்டோபரில் அனந்தபூர் சாகிப் மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில் அகாலிதளம் அமைதியான முறையில் போராட்டங்களை ஒருங்கிணைத்து, அதன் 7 அம்சக் கோரிக்கை பின்வருமாறு:
1. ஒருங்கிணைந்து நிறுவிக்கப்பட்ட தலைநகரம் சண்டிகர் பஞ்சாபிடம் திருப்பி அளிக்கப்படவேண்டும்.
2. பஞ்சாப் மொழி பேசும் பகுதிகள் பஞ்சாபில் இணைக்கப்பட வேண்டும்.
3. இந்திய அரசியல் சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மத்திய அரசின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும்.
4. நிலச் சீர்திருத்தம் முறைப்படுத்தப்பட வேண்டும். பஞ்சாப் தொழில் மயமாக்கப்பட வேண்டும். அதேசமயம் எளிய மக்களின் பாதுகாப்பு உறுதி அளிக்கப்பட வேண்டும்.
5. அனைத்திந்திய குருத்துவார் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
6. இந்தியா முழுவதும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிக்கப்பட வேண்டும்.
7. அரசு சீக்கியர்களை இராணுவத்தில் குறைந்த அளவே நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலையை மாற்றி அமைக்கப்படவேண்டும்.
இப்போராட்டத்தின் உச்சத்தில் தொடக்கத்தில் இருந்தே பஞ்சாப் தேசிய உரிமையை திசை திருப்பிய இந்திய சமாச்சார் பத்திரிகை ஆசிரியர் லால்ஜக்நாரின் படுகொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலையை செய்ததாக பஞ்சாப் தேசம் மூளை முடுக்கெல்லாம் பிரபலமாக திகழ்ந்த உறுதிமிக்க தலைவர் பிந்தரன்வாலே கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
1982 ஆகஸ்டில் அரீஜன் சிங் லோங்வால் (அகாலிதள தலைவர்) மற்றும் பிந்தரன்வாலே தலைமையில் நியாயத்தின் யுத்தம் என்ற அடிப்படையில் போராட்டம் துவக்கப்பட்டது.
அதே ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருந்தஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்த அகாலிதளம் முடிவு செய்து இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போலி மோதல்களிலும், காவல் நிலையத்திலும் எண்ணற் றோர் கொல்லப்பட்டனர்.
இறுதியாக 1984 மே மாதம் பிந்தரன் வாலே தலைமையில் ஆயுதங்கள் பதுக்கி வைத்து இருப்பதாக சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவில் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் புளுஸ்டார் என்ற தலைப்பிட்டு இராணுவத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் காரணம் இருந்த போதிலும் அதை ஆராய்வது நமது நோக்கமல்ல. தொடர்ச்சியாக பஞ்சாப் வஞ்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மூலை முடுக்கெல்லாம் தேச பக்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டனர். இத்தாக்குதலின் நோக்கம் என்பது பஞ்சாப் தேசிய உணர்வை அழிப்பதாக அமைந்தது. பொற் கோயில் தாக்கப்பட்டபோது 50க்கும் மேற்பட்ட புனித தலங்கள் தாக்கப்பட்டது. சொந்த நாட்டு மக்கள் என்று கூறப்படும் பஞ்சாபியர்களை கொல்வதற்கு டாங்கர்கள் பயன்படுத்தப்பட்டது. 400 வருட சீக்கிய வரலாற்றில் பொற்கோயில் தாக்கப்பட்ட போதெல்லாம் தாக்கிய வர்கள் பழிவாங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் காந்தி வாக்குறுதி பின்வருமாறு:
"கடவுள் நம் பந்தத்திற்குச் சாட்சியாகஇருப்பார். காங்கிரஸ் உங்களுடன் இருக்கும். ஒருவேளை காங்கிரஸ் தன் நிலையை விட்டு விட்டால், சீக்கியர்கள் தங்கள் வாள்களால் நிலை நிறுத்தி விடலாம். குரு கோவிந்சிங் வழிகாட்டுவது போல,
1981 அக்டோபர் 31 காலை 9.40 மணிக்கு இந்திரா காந்தியின் பாதுகாவலர் பியாந்சிங் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு என் கடமை முடிந்து விட்டது. உங்கள் கடமையைச் செய்யுங்கள் என்றார். பின்னர் அவரும் சட்வன் சிங்கும் பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்படன்னர். ஒன்றரை மணி நேர வாக்குவாதத்திற்கு பின் உயர் அதிகாரிகளால் இருவரும் சுடப்பட்டனர். பியான்சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சப்தங்சிங் தீவிர காயமடைந்தார். நீண்ட வழக்கு விசாரணைக்குப் பிறகு சப்தர்சிங் மற்றும் பியான்சிங் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் பியான்சிங் கொன்றவர்கள் மீது எந்த வழக்குப் பதிவும் செய்யப்படாது என்பது இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம். இந்திரா காந்தி இறந்த சில நாட்களிலேயே கிட்டத்தட்ட 1 லட்சம் சீக்கியர் களுக்கு மேல் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலகோடி சீக்கியர்களின் சொத்து நாசமாக்கப்பட்டது.இந்தக் கலவரத்தை ராஜீவ் காந்தி உட்பட அரசு நிர்வாகத் துறை, காவல் துறை அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தியது. இந்தக் கொடுமை செய்தவர்களுக்கு பல்வேறு சன்மானம் வழங்கப்பட்டது. மத்திய முக்கிய மந்திரி அந்தஸ்து உட்பட 1984 கலவரத் தின் கொடுமையைப் புரிந்து கொள்ள பின்வரும் ஒரு சம்பவம் சான்றாகும். தங்கள் முன்னே கணவர் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப் பட்டதை பார்த்த குருதிக்கோர் 45 வயது கொடுத்த வாக்கு மூலம் பின்வருமாறு நவம்பர் 1 காலையில் இந்திரா காந்தியின் உடல் தீன்மூர்த்திக்கு கொண்டுவரப்பட்டது.
எல்லோரும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தோம். கிட்டத்தட்ட மதியம் என் குழந்தைகள் உணவு தயாரிக்கச் சொன்னார். அவர்கள் மிகவும் பசியாக இருந்தனர். அன்று நான் சமைக்கவே இல்லை. அனைவரும் விரதத்தில் இருக்கிறோம். இறந்தவர் நம் தாய் போன்றவர். நாம் இங்கு குடிபுக (டெல்லியில்) உதவியவர். ஆதலால் அடுப்பு எரிக்க எனக்கு மனமில்லை. திடீரென்று எங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. என் கணவரும் என் குழந்தை களும் தெருவுக்கு ஓடிச் சென்றனர்.
அங்கேயே அவர்கள் தீயிட்டுக் கொளுத்தப் பட்டனர். என் இளைய மகன் முடியை வெட்டிக் கொள்ள துவங்கினான். 16ல் இருந்து 20 வயதுள்ளோர் என் வீடு புகுந்தனர். அவர்கள் என் மகனை இழுக்க முயற்சித்தனர். அவன் என் பின்னே ஒளிந்து கொண்டான். அவர்கள் என்னை முழு நிர்வாண மாக்கினார்கள். அப்போது என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். என் மகன் அவர்களிடம் அழுது கொண்டே சொன்னான். அண்ணா என் தாய் உங்கள் தாய் போன்றவர்கள். இப்படிச் செய்யாதீர்கள். ஆனால் என் மகன் எதிரிலேயே வன் புணர்ச்சிக்கு ஈடுபடத் துவங்கினர். அவர்கள் ஒருவன் என்னை புணர்ந்து கொண்டு இருக்கும்போது சொன்னேன், மகனே நீ என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள். ஆனால், நினைவில் வைத்துக் கொள். இவ்வழியே என் குழந்தைகளை ஈன்றுள்ளேன். என் அனுமதியுடன் என்னை அலைக்கழித்த பின் என் மகனை என்னுடன் தெரு முனையில் அமர வைத்துக் கொண்டேன். திடீரென்று என் மகனை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொன்றனர். நான் காப்பாற்ற முயன்றேன். முடியவில்லை. அந்நேரத்தில் நான் முழு நிர்வாணமாக நின்றேன்.
இப்படியாக இதுபோன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்கள் கலவரத்தின் போது நடந்தேறியது. 1947ம் ஆண்டிலிருந்து 1992 ஆண்டுக்குள் 7 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி படுகொலைக்கு பிறகும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது சீக்கிய கலவரத்தின் கதாநாயகன் ராஜீவ்காந்தி ஆட்சியைப் பிடித்த பின் அகாலதள் தலைவர் லோங்காவலுக்கும் ராஜீவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அவ் ஒப்பந்தத்தின் சாராம்சம் பின்வருமாறு:
1. இறந்துபோன அப்பாவிகளுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால் இன்றுவரை அளிக்கப்படவில்லை.
2. இராணுவ ஆள் சேர்ப்பில் சீக்கியர்களுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும்.
3. 1984ல் நடந்த கலவரத்திற்கு விசாரணை நடத்த வேண்டும்.
4. ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சீக்கியர் களுக்கு மறுவாழ்வு அமைக்கப்படவேண்டும்.
5. அனைத்து இந்திய குருத்துவார் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
6. ஆயுத சிறப்பு அதிகார படை சட்டம் தளர்த்தப்பட வேண்டும். அனைத்து வழக்குகளும் விசாரித்து முடிக்கப்பட வேண்டும்.
7. பஞ்சாப் மொழிபேசும் பகுதிகள் அரியானா உட்பட பஞ்சாப்பில் சேர்க்கப்படவேண்டும்.
மேற்சொன்ன வாக்குறுதிகள் கைவிடப்பட்டன.
ஒப்பந்தம் நடந்த சில காலத்திலேயே சீக்கிய போராளிகளால் அரிசந் லோங்வால் கொல்லப்பட்டார். அகாலிதல் தொடக்கத்தில் இருந்தே பல பிளவுகளைச் சந்தித்தது. நெருக்கடி அதிகமானதும் சில முக்கிய தலைவர்கள் விடுதலை காலிஸ்தானை இறுதி தீர்வு என்று முடிவெடுத்தனர்.
29.4.1981 தேதி விடுதலை காலிஸ்தான் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் ஊடாக நாடு கடந்த அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதை சார்ந்து பல்வேறு இயக்கங்களும் படைப் பிரிவுகளும் உருவாக்கப்பட்டன. மீண்டும் 11.6.1987ம் ஆண்டு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டது.
அதைச் சார்ந்து காலிஸ்தான்இயக்கம் தன் அரசியல் நடவடிக்கையை அமெரிக்கா, யு.கே., நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவுபடுத்தியது. இதன் மூலம் இந்தியாவின் கோர முகம் வெளி உலகுக்கு தெரியவந்தது. 1987ல் இருந்து 1992 சூன் இந்திய அரசியல் கொடுந் தாக்குதலில் எண்ணற்ற உயிர்கள் பலிவாங்கப்பட்டன.
பல்வேறு கறுப்புச் சட்டங்கள் மூலம் இந்திய பயங்கரவாதம் நிறைவேற்றப்பட்டது. பல அடக்கு முறைகளுக்குப் பிறகு மயான அமைதி நிலை நிறுத்தப்பட்டது.
பிரதாப் சிங் தேதி சீக்கிய முக்கிய தலவர் பிரதாப்சிங் தலைமையில் கைலாங் ராஜ் கட்சி உருவாக்கப்பட்டு கட்சி அறிக்கையும் வெளியிடப்பட்டது. அமைதியான முறையில் காலிஸ்தானை அமைப்பது குறிக்கோளாக அறிவித்தது. அமைதியை விரும்பாத இந்திய அரசு பிரதாப் சிங்கை உடனடியாக கைது செய்தது. அவர் விடுதலை கோரினார். மீண்டும் தடாவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடவுச் சீட்டும் முடக்கப் பட்டது.
இறுதியாக அவர் நேப்பாளம் வழியாக அமெரிக்கா தப்பிச் சென்றார். இன்றளவும் பஞ்சாப் தேசிய விடுதலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீரிலுள்ள வட கிழக்கு தேசத்தார்கள் பஞ்சாபியர்கள் தங்கள் தேசிய விடுதலையை கோரியதன் மூலம் இந்திய அரசால் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் மொழி அரசியல், பொருளாதார உரிமைக்காக தமிழர்கள் ஏன் குரல் எழுப்பவில்லை என்று சிந்தித்தாக வேண்டும்.