asifa

இது என்ன நாடா? இல்லை சுடுகாடா? சுடுகாட்டில் கிடைக்கும் அமைதி கூட இந்த நாட்டில் இல்லை.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எந்த மாநிலத்திலும் மக்கள் அமைதியாக இல்லை. குறிப்பாகப் பெண்களும், குழந்தைகளும்.

காஷ்மீர் மாநிலம். கதுவா மாவட்டம். ராசானா எனும் சிற்றூர். இந்தச் சிற்றூரில்தான் 8 வயது ஆசிஃபா என்ற குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து வீசியிருக்கிறார்கள் சமூகத் துரோகிகள்.

ஆசிஃபாவைக் கடத்தி ஒரு கோயிலில் அடைத்து வைத்துக் கதறக் கதறக் வன்புனர்வு செய்துள்ளனர் அந்தக் கயவர்கள்.

ஏன்-? அவள் ஒரு இஸ்லாமியப் பெண் என்பதாலா! அதுவும், காவல் நிலையத்தில் கூட கிடைக்காத ஒரு மகத்தான பாதுகாப்பு, கோயில் கருவறையில் கிடைக்கும் என்பதால்தான் கோயிலில் செய்துள்ளார்கள் இந்தக் கொடுமையை.

இது ஒரு சிறு பிரச்னையாம். வெளிநாட்டுச் சுற்றுலா வருமானம் போய்விடுமாம். இதைப் பெரிது படுத்தக்கூடாதாம், சொல்கிறார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி.

ஆசிஃபா வன்கொடுமை மற்றும் கொலைக்கு ஆதரவாக அங்கே செய்யப்படும் இந்து அமைப்புகளின் போராட்டங்களும், அம்மாநிலத்தின் முதல்வர் மெஹ்பூபா தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியின் சந்திரபிரகாஷ் கங்கா & லால்சிங் ஆகிய இரு அமைச்சர்களும் பின்னணியில் இருக்கிறார்கள்.

இது போதாது என்று உத்தர பிரதேசம், உன்னா மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங்கும், அவரின் சகோதரரும் நீதிமன்ற உத்தரவால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். என்ன காரணம்?

17 வயது இளம் பெண்ணை இந்த குல்தீப் சிங் சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வெளியே சென்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து கொலை செய்துவிட்டார்கள்.

முதலில் பாலியல் வன்கொடுமை, அடுத்தது கொலை. இதுதான் இந்த நாட்டின் இந்துக் கலாச்சரமா!

காஷ்மீரிலும், உத்தர பிரதேசத்திலும் நிகழ்ந்துள்ள பாலியல் இரு கொலைகளுக்கும் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று சொல்ல ஒரு பிரதமர் தேவையில்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கபட்டே ஆக வேண்டும்.

குழந்தை ஆசிஃபாவின் அலறல் சத்தம்... கதறும் குரல்... துடிக்கும் அந்த பிஞ்சு உடல்... அது என்ன கோயிலா, காமக்கூடமா?

நீதி கிடைக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். தப்பி விடக்கூடாது அந்த காமவெறிபிடித்த கயவர் கூட்டம்.

ஆசிஃபா! மகளே, இந்த நாடு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறது.