சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006-ன் கீழ் (Environmental Impact Assessment [EIA]),, பிரிவு A மற்றும் பிரிவு B என இருவகையான திட்டங்களுக்கு அனுமதி தரப்படுகிறது.

நியூட்ரினோ மையம் அமையவுள்ள இடம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் மதிகெட்டான் சோலை தேசியப் பூங்காவிலிருந்து வெறும் 4.9 கி.மீ தொலைவில் உள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில், இத்திட்டம் பிரிவு கி-ன் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.

2006 (EIA) அறிவிப்புப்படி பிரிவின் கீழ் வரும் திட்டங்களுக்கு, நடுவணரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து முன்அனுமதி (prior environmental cleareance)பெறப்பட வேண்டும். ஆனால் இத்திட்டத்திற்கு வெறும் ’’கட்டுமானப்பணி’’ மேற்கொள்ளப்படுவது போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் பிரிவு B-ன் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக இத்திட்டத்தை ”சிறப்புத் திட்டம்” என்று அமைச்சகம் வரையறை செய்துள்ளது.

            எந்தவொரு பிரிவின்கீழ் இத்திட்டம் கொண்டுவரப்பட்டதால், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததோ அதே பிரிவின்கீழ் இத்திட்டத்திற்கு அமைச்சகத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போன்ற சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பிற்கு (EIA, 2006) முரணானது.