ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, 26 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுவோரில் ஒருவரான பேரறிவாளனுக்கு முதல் முறையாக ஒரு விடுப்பு (பரோல்), ஒருமாத காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இளமையின் வசந்தங்கள் எல்லாம் சிறையில் எரிந்து போனதற்குப் பிறகு, இப்போதுதான் அவர் பரோலில் வெளிவருகின்றார்.

அவர்களின் வாக்குமூலம் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தன் மனசாட்சி உறுத்தலால், அதனைப் பதிவு செய்த காவல் உயர் அதிகாரியே சொன்னபிறகு, விடுதலையே அளித்திருக்க வேண்டும்.  ஆனால் இப்போதுதான் சிறு விடுப்பாவது கிடைத்துள்ளது.

அவரை நேரில் சென்று பார்க்க அனைவரையும் போல நம் உள்ளமும் அவாவுகின்றது. எனினும் பிரிந்த தன் குடும்பத்தினரோடு அவர் சில நாள்களாவது சேர்ந்து இருக்கட்டும். 10, 15 நாள்களுக்குப் பிறகு நாமெல்லாம் சென்று அவரைச் சந்திக்கலாம். அதுவரையில் காத்திருங்கள் தோழர்களே!