subavee_copyதிராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைமை அலுவலகத்தில், 12.02.2011 சனிக்கிழமை காலை 11 மணிக்குப் பேரவையின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தப் பேரவையின் நிலைப்பாடு, செயல்பாடு பற்றி விரிவாகப் பேசப்பட்டன. இறுதியில் எதிர்வரும் மார்ச் திங்கள் 12ஆம் நாள், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்து “மீண்டும் தி.மு.க. ஆட்சி தொடரவேண்டும் ‡ ஏன்? ” என்று விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அவைத்தலைவர் கயல் தினகரன், அவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி மா.உமாபதி, மாநிலப் பொருளாளர் எழில். இளங்கோவன், மாநில இளைஞரணி செயலாளர் மகிழன், பொருளாளர் இளஞ்சித்திரன், சென்னை மாவட்டத் தலைவர் அ.இல.சிந்தா, செயலாளர் குமரன், மத்திய சென்னை அமைப்பாளர் எட்வின், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சூரியா, செயலாளர் வீர.வளவன், காஞ்சி மாவட்டச் செயலாளர் இ.இளமாறன், நெல்லை மாவட்டச் செயலாளர் இரா. சந்தானம், பொன்னேரி நகரச் செயலாளர் கோ. வினோத், மீஞ்சூர் ஒன்றியச் செயலாளர் இரகுபதி, திருவொற்றியூர் நகரச் செயலாளர் புதியவன், அம்பத்தூர் நகரச் செயலாளர் இராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.