ஏறத்தாழ 30 ஆண்டுகள் (1996இல் ஏற்பட்ட 6 மாத தற்காலிகப் பிரிவைச் சேர்த்தோ சேர்க்காமலோ) தன் நிழல்போல் தொடர்ந்து வந்துகொண்டிருந்த உயிர்த்தோழி சசிகலாவை, அடியோடு தன்னைவிட்டு அப்புறப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. நிழல் நிஜமாக முயற்சித்ததால்தான் இந்த நடவடிக்கை என்று காரணம் சொல்லப்படுகிறது. சசிகலா மட்டுமல்ல, அவருடைய உறவினர்கள் அனைவரும் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியே பறிக்கப்பட்டு, போயஸ் தோட்டத்திலிருந்து வெளி யேற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகப் பல்வேறு மட்டங்களில், பல ரோடும் விவாதங்கள், கருத்துக் கேட்டல்கள் என்று பரபரப்பு தொடர்கிறது. காங்கிரசிற்குத் தாவிவிட்ட, எஸ்.வி. சேகர், இதை மகிழ்ச்சி யோடு வரவேற்கிறார். ஓ..போடும் ஞானி ஓகோ என்று பாராட்டு கிறார். தினமல(ர்)ம், சோவின் பேட்டியை அரைப்பக்கத்தில் போட்டுத் தன் ஆதர வினைத் தெரிவிக்கிறது. தி ஹிண்டு தினமல(ர்)ம் பேட்டியை அப்படியே வழிமொழிந்து மகிழ் கிறது. மொத்தத்தில், சசிகலா குடும்பத்தின ரின் நீக்கம் அ.தி.மு.க.வினரைவிட, "அவாள்'களுக்குத்தான் அதிக மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்று சொல்லலாம்.

1996 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவே தோற்றுப்போனார். அதன்பிறகு, சசிகலா குடும்பத் தினருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிவித்து, 6 மாத காலம் உயிர்த்தோழியை விட்டுப் பிரிந்திருந்தார் (ஒரு வேளை சோசியக்காரன் சொன்ன பரிகாரமாகக்கூட இருக்கலாம்). பிறகு சேர்த்துக் கொண்டார். அதன்பின், முதல்வரான போதும், சொத்துக்குவிப்பு வழக்கு, சிறை என்று ஜெயலலிதாவின் சோதனையான காலகட்டங் களிலும், அவரைப் பிரியாமல் இருந்து வந்தார் சசிகலா.

மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டு பேரின் நட்பு தொடர்பான பிரச்சனை, இதில் நாம் பேசுவதற்கும், எழுதுவதற்கும் என்ன இருக்கிறது என்றுதான் தோன்றும். சசிகலாவை வெளியேற்றிய தோடு இந்தப்பிரச்சினை முடிந்து போயிருந்தால், இது வேதா நிலையத்தின் உள்விவகாரம் என்று சொல்லிவிடலாம். ஆனால்,  சசிகலாவின் இடத்தில், "துக்ளக் சோ' வந்துவிட்ட பிறகு, "இனப்பிரச்சினை' என்ற அடிப்படையில் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை நாம் உணரவேண்டும். காரணம், ஜெயலலிதா தமிழ்நாட்டு முதலமைச்சர் ‡ சோ தமிழின எதிரி.

பத்திரிகையாளர் என்ற போர்வையில், தமிழர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துகளை பரப்பி வருபவர். தமிழர்களின் அடையாளங்களை இருட்ட டிப்பு செய்வதில் முனைந்து நிற்கும் ஆரிய அரவம். சமச்சீர்க்கல்வி, தமிழ்ப் புத்தாண்டு என ஜெயலலிதா அரசின் தமிழின விரோத நடவடிக்கை களுக்குப் பின்னால் இருக்கும் பார்ப்பனியப் பஞ்சாங்கம் இந்த சோ. அதோடு, மரணதண்டனைக்கு ஆதரவான, ஈழத்தில் நடந்திருக்கும் இனப்படுகொலைகளை நாள்தோறும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதாபிமான மற்றவர். இடஒதுக்கீடு என்னும் சமூகநீதிக்கு எதிராக நிற்கும் இந்துத்துவவாதி. மத அடிப்படைவாதி.

எனவேதான், இந்தப் பிரச்சினையில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 2011 தமிழகச் சட்டமன்ற தேர்தல், ஜெயலலிதாவுக்குக் கொடுத்திருக் கும் பெரிய அளவிலான வெற்றி, தனிப்பெரும் பான்மை அவரின் எதேச்சதிகாரப் போக்கை அதிகரித் திருக்கிறது என்பதைக் கடந்த 6 மாதங்களாகத் தமிழகம் உணர்ந்து வந்திருக்கின்றது. இன்னும் அய்ந்தாண்டுகளுக்கு அசைக்க முடியாத பலத்துடன் அரியணை ஏறியிருக்கும் ஜெயலலிதாவின் அதிகாரத் தைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பனீய சக்திகள் முடிவெடுத்து, திட்டமிட்டுக் காய்களை நகர்த்தி வந்துள்ளனர். அவாள்களுடைய உள்விளையாட்டின் உச்ச கட்டம்தான், இன்று போயஸ்கார்டனில் துக்ளக் சோவின் அமர்வு.

"...எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோ­ங்களை ஜெயலலிதா ஏற்கவில்லை. தன்னுடைய நம்பிக்கை களை அந்தப் பாரம்பரியம் ஏற்கும்படி செய்தார். இது சமீபகால அரசியல் அற்புதம் !'' (துக்ளக்:21.09.2005). சோ சொன்ன அந்த அற்புதம் இன்று தமிழ்நாட்டில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. சோ வகையறாக்கள், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை எப்போதும் பார்ப்பனியத்தின் அரசியல் பிரிவாக (Political wing)த்தான் பார்த்து வந்திருக்கிறார்கள். ஜெயலலிதாவும் அப்படித்தான் இருந்துவருகிறார்.

"எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூசனல் அத்தாரிட்டியாக (சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம்) யாராவது செயல்பட்டால், அது அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல'' என்று தின மல(ர்)ம் பேட்டியில் சோ சொல்லியிருக்கிறார். சட்டத்துக்கு அப்பாற் பட்ட அதிகார மையம் என்பதே அவாள்களின் "ஏற்பாடு'தானே ! அந்த ஏற்பாடுகளில் கவிழ்க்கப்பட்ட பேரரசுகள் எத்தனை என்பதை வரலாறு சொல்லுமே! எனவே இங்கே பிரச்சினை, சட்டத்துக்கு அப்பாற் பட்ட அதிகார மையம் அன்று. யார் அந்த அதிகார மையம் என்பதுதான். வேதா நிலையத்தில் அந்த அதிகார மையமாகச் "சூத்திரச்சி' இருந்ததுதான் பிரச்சினை. அந்த இடத்திற்கு இப்போது ஒரு "பார்ப்பனன்' வந்ததும் எல்லாம் சரியாகிவிட்டது என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. அதிகார மையத்தில் பார்ப்பனத் தலைமை இருக்க வேண்டும் அல்லது பார்ப்பனீயத் தன்மையுள்ள தலைமை இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை. அந்த வகையில்தான் குஜராத்தின் மோடியை சோவும், ஜெயாவும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும், தலைவாழை இலை போட்டு விருந்துவைப்பதும்.

அப்படியானால், ஜெயலலிதாவின் அமைச்சர வையில் சூத்திர அமைச்சர்கள்தானே அதிக எண்ணிக் கையில் இருக்கிறார்கள் என்று சில அறிவு ஜீவிகள் கேட்கக்கூடும். அவர்கள் அதிகாரமற்ற (Powerless) அமைச்சர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் அவர்களுக்கே கூடத் தெரியும் !. அம்மாவின் ஆணைப்படி நடப்பவர்கள் அவர்கள். மக்களின் ஓட்டு எம்.எல்.ஏ.வாக்கும் அவ்வளவுதான். அம்மா மனது வைத்தால்தான் அமைச்சராக முடியும். ஓட்டுப்போட்ட மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களை உணர்ந்ததாகத் தெரியவில்லை. எப்போ தும் அம்மாவின் காலடியில் இருக்கும் தொண்டர் களாகத்தான் இருக்க வைக்கப்பட்டுள்ளனர்.

தினமல(ர்)த்திற்கு அளித்துள்ள பேட்டியில், சசிகலா நீக்கத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, துக்ளக் பாணியில் பதில் சொல்லியிருந்தாலும், அரசியல் பக்கம் திரும்பா தவர்கள் கூட, "அக்கரகாரத்தின் சாணக்கியத்தன'த் தைத் தெரிந்து கொண்டிருப்பர். அதிகார மையம் இடம்மாறிவிட்டதன் அடையாளமாக, அவரது அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; தரிசனத்துக்காக, வி.ஐ.பி.,க்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள் என்னும் தினமல(ர்)ம் கூறும் கட்டியம், ஜெயலலிதா வீட்டில் சோவின் இருப்பிடத்தை உறுதிசெய்கிறது.

ஜெயலலிதா யாருக்கும் அடிபணிய மாட்டார், பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பவரில்லை என்றெல்லாம் அவரைப் பற்றிப் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மைதான். யாருக்கும் அடிபணியமாட்டார், யார் சொல்வதையும் கேட்க மாட்டார். ஆனால், "பார்ப்பனியத்திற்குப் பணிவார், அதன் அரசியல் சகுனியான சோ சொல்வதைக் கேட்பார்'. எனவே இனி, தமிழ்நாட்டை ஆரியம் முழுமையாக ஆட்சி செய்யப்போகிறது.

தேர்தலுக்கு முன் ஈழம் பெற்றுத் தருவேன் என்று முழங்கிய புரட்சித் தலைவி, இன்று மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தக்கூட அனுமதி மறுக்கிறார். அன்றும் இன்றும் என்றும் அம்மா அப்படித்தான். பாவம் அண்ணன்களும், அய்யாக்களும்தான் அல்லாடுகின்றனர். கண்மூடித்தனமான திராவிட எதிர்ப்பு என்னும் மனோநிலையில் அமிழ்ந்து போய், குருதிச் சோதனை செய்யாத குறையாகத் தமிழர்களைத் தரம்பிரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஜெயலலிதாவுக்கு விதிகளைத் தளர்த்தினர். விளைவு, தமிழ் அடையா ளங்கள் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்படுவதைத் தடுக்க இயலாத நிலையை ஏற்படுத்திவிட்டனர்.

குஜராத்தில் நடக்கும் இந்துத்துவ ஆட்சியே முன்மாதிரி ஆட்சி, மோடிதான் சிறந்த நிர்வாகி என்று பட்டயம் எழுதிக்கெ(V)டுக்கும், சோதான் இனி ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ அரசியல் ஆலோசகர். அதாவது தமிழ்நாட்டு ஆட்சியாளரின் ராஜகுரு.