ஆந்திர, கருநாடக, கேரள நடிகர் சங்கங்கள் முறையே தெலுங்கு, கன் னட, மலையாள நடிகர் சங்கங்களாக இருக்க, தமிழ்நாடு நடிகர் சங்கம் மட்டும் “தென்னிந்திய நடிகர் சங்க மாக” இருக்கிறது. இதே போல்தான் தென் னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையின் கதையும். தெலுங்கு - கன் னட - மலையாளி இனத்தவர் அவரவராகவே இருக்கத் தமிழர்கள் மட்டும் திராவிடராக உணர்த்தப் பட்ட, படுகிற காரணத்தால், பிற மொழிகள் பேசும் தென்னிந்தியத் தேசிய இனங்கள் தத்தமக்கான மாநிலங்கள் பெற்றுப் பிரிந்து சென்று விட்டபோதும், தமிழ்த் தேசிய இனம் மட்டும் திராவிடப் பெயரடையாளத் தோடு (?) திகழ்கிறது. அதைப் போன்றே மேற்படி இரு சங்கங்களும் தென்னிந்திய அடை யாளத்தோடு இயங்குகின்றன. மேலும் பிற தென் னிந்திய மொழித் திரையுலகங்கள் தத்தம் மொழி அடையாளத்தோடு இயங்குவதால் அங்கு இயங்க நேரும் தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு நேரும் அந்நிய உணர்வு, இங்கு பணி யாற்ற நேரும் பிற மொழியாளர் களுக்கு நேருவதில்லை.

‘தென்னிந்தியர் எல்லோரும் திராவிடர்; திராவிடர் எல்லோரும் ஓர் இனம்’ என்று தமிழர்களிடம் மட்டும் சொல்லிச் சொல்லியே எல்லோரும் இந்நாட்டு மன்னரானார்கள். இன் னும் மன்னராகத் துடிக்கிறார்கள். மாநில எல்லைப் பிரிவினையின் போதும், தமிழர்களுக்குப் புகட்டப் பட்ட இந்த ‘இனப்பற்றே(?)’ தமிழர் பெருமளவில் வாழ்ந்த சித்தூர் மற்றும் திருப்பதியைத் தெலுங்கர்களும், கோலார், பெங்களூரு மற்றும் கொள் ளேகாலைக் கன்னடரும், பாலக்காடு, தேவிகுளம், பீர்மேடு மற்றும் நெய் யாற்றின் கரையை மலையாளிகளும் வம்பப் பறித்துச் செல்கையில் ஒரு பெரும் எண்ணிக்கைத் தமிழ்ச் சமூகம் வாளாவிருக்கக் காரணமானது; இழந் ததை மீட்க முனைவதற்கான எண்ணம் நுழையக்கூட வாய்ப்பற்றிருக்கச் செய்திருக்கிறது.

மண்ணோடும் மக்களோடும் பாலாறு, பெண்ணையாறு, காவிரி, ஆழியாறு, அமராவதி, முல்லைப் பெரி யாறு முதலான நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும் நீரட்டிக் கொடுத்து விட்டு எல்லைகளில் கையேந்தி நிற்கிறது தமிழகம்.

தெலுங்கரிடமிருந்து ம.பொ.சி. யின் போராட்டத்தால் சென்னை காப்பாற்றப்பட்டதும், தளபதி வினாயகம் மற்றும் மங்கலங்கிழாரு டனான அவரது போராட்டத்தால் திருத்தணி மீட்கப்பட்டதும், இதற்காக இத்தலைவர்களும் பல நூறு தொண் டர்களும் சிறைப்பட்டதும், சிறை யிலேயே இருவர் உயிரிழந்ததும் இன்று எத்தனைப் பேருக்குத் தெரியும்? மலை யாளிகளிடமிருந்து குமரி மாவட் டத்தை மீட்க நடந்த போராட்டத்தில் பதினோரு பேரைக் கேரள பட்டம் தாணுப் பிள்ளைப் படையணியின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி கொடுத்த வரலாறும்தான் எத்தனை பேருக்குத் தெரியும்?

சில மாதங்களுக்கு முன்பு கமல் ஹாசனுக்குக் கேரள அரசு சார்பில் விருது வழங்குகையில் அந்நிகழ்வை அவரது நண்பர்களான மோகன்லால், ஜெயராம் உட்பட ஒட்டு மொத்த மலையாளத் திரையுலகமே புறக் கணித்தது நினைவிருக்கலாம். அம் மலையாளத் திரையுலகத்தால் (பெரும் ஊதியம் வாங்குவதற்காகப் பெரு நடிகர்களை விமரிசித்ததால்) ஏற் கெனவே புறக்கணிக்கப்பட்ட திலகன் என்னும் நடிகர் மட்டுமே விதி விலக்காக அந்நிகழ்வில் கலந்து கொண்டார். நமக்குப் பெருமை மிக்க தும், நம்மை எள்ளலாக அழைக்க மலையாளிகள் பயன்படுத்துவதுமான ‘பாண்டி’ என்ற பெயரைச் சுட்டிக் காட்டித் தன்னைப் பாண்டிதான் என்று அந்நிகழ்வில் சொல்லிவிட்டு வந்தார் கமல்.

மலையாள நடிகர்களிலும் கூட ஜெயராம் தமிழகத்திலிருந்து கேரளத் திற்குக் குடி பெயர்ந்த தமிழ்க் குடும் பத்தில் பிறந்த தமிழர். ஆனால் சென் னையில் தன் வீட்டில் பணி புரியும் தமிழ்ப் பெண்ணைப் ‘போத்து’ (எருமை) என்று மலையாள ஊடகங் களுக்குச் சொல்லுமளவுக்கு மலை யாளி. அண்மையில் ஏஷியா நெட் தொலைக்காட்சிக்கு அளித்த நேர் காணல் ஒன்றில் “தமிழ்த் திரைப் படங்களில் மட்டும் தொடர்ந்து நடிக் கிறீர்களே? மலையாளப் படங்களில் ஏன் நடிப்பதில்லை?” என்று கேட்கப் பட்ட கேள்விக்கு நடிகர் ஆர்யா இப்படிப் பதில் சொன்னார்.

“மலையாளத் திரைப்படங்களில் நடிப்பதற்கு நடிப்பு நன்றாகத் தெரிந் திருக்க வேண்டும். எனக்குக் கொஞ் சம்தான் நடிக்கத் தெரியும். ஆனாலும் எனக்குத் தோதான பாத்திரங்கள் வழங் கினால் நடிப்பேன். ஏனெனில் நான் ஒரு மலையாளி..”

நடிப்பின் உச்சத்தைத் தொட்ட சிவாஜி கணேசனும் கமல்ஹாசனும் தமிழ்த் திரையுலகினரே என்பதை இவர் அறிந்திருக்கவில்லையா என்ன? இதற்கு ஆர்யாவை வருத்தம் தெரி விக்க வலியுறுத்தவில்லை தென்னிந் திய நடிகர் சங்கம். ஆனால் வேறொரு நிகழ்வில் மேற்படி கருத்துக்காக ஆர்யாவைப் பெயர் சொல்லாமல் குறிப்பிட்டுக் கண்டித்த தமிழ்த் தயாரிப்பாளர் வி.சி.குகநாதனுக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது அது.

ஆனாலும் மலையாளிகளைப் போலத் தெலுங்கர்கள் நேரடியாகப் பேசிச் சிக்கிக் கொள்வதில்லை. பிற்காலப் பாண்டியர்களின் வீழ்ச் சிக்குப் பின் தமிழகத்தில் புகுந்து கோலோச்சிய விஜயநகர / நாயக்க ராட்சி காலந்தொட்டு இன்று வரை அரசியல், வணிகம், நிலவுடைமை, ஆட்சியியல் என்று அதிகாரத்தில் பெரி தும் அவர்களது கையிலிருந்திருப் பதனாலேயோ என்னவோ?

அண்மையில் சென்னை- தியாக ராய நகரில் நடந்த உள்ளரங்கக் கூட்ட மொன்றில் இயக்குநர் வி.சேகர் சொன்னார்: “தமிழ்த் திரைப்படங் களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று அரசு கொண்டுவந்த ஆணையை வரவேற்று ஒரு தயாரிப் பாளர் - விநியோகஸ்தர் கூட்ட மொன்றில் பேசினேன். பலரது முகங் களில் எள்ளல் கலந்த புன்னகை வெளிப்பட்டது. பார்த்தால் அனை வரும் தெலுங்கர்கள். இப்படித்தான் இருக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் உலகம்” என்று.

இந்நிகழ்வுகள் தொடக்கக் காலம் முதற்கொண்டுத் தமிழ்த் திரை யுலகில் இயங்கிய / இயங்குகிற பிற மொழியாளர்களைப் பட்டியலிட வைக்கின்றன. கூடவே, இந்த அள விற்குத் தமிழர்கள் பிறமொழித் திரை யுலகில் காலூன்ற முடிகின்றதா என்ற கேள்வியும் எழுகிறது.

தெலுங்கினத்தவர் : தயாரிப் பாளர்கள் டி.ராமா நாயுடு, எல்.வி. பிரசாத், ஸ்ரீஹரி, ஏ.எம்.ரத்னம், தாசரி நாராயணராவ், அல்லு அரவிந்த், இயக்குநர்கள் கோடி ராமகிருஷ்ணா, கிருஷ்ணவம்சி, கஸ்தூரிராஜா மற்றும் தோட்டாதரணி, நடிகர்கள் எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர்.ராதா, பாலையா, நாகையா, ராதாரவி, விஜயகாந்த், கே.பாக்கியராஜ், பானுச்சந்தர், சுதாகர், சின்னி ஜெயந்த், ரவிகிருஷ்ணா, தனுஷ், விஷால், ஜீவா, ரமேஷ், ஜெயம் ரவி, தருண், நடிகையர் சாவித்திரி, பி.கண்ணாம்பா, தேவிகா, ஜி. வர லட்சுமி, அஞ்சலிதேவி, விஜயநிர்மலா, ரோஜாரமணி, ராதிகா, விஜயசாந்தி, ரோஜா, பானுப்பிரியா, நிஷாந்தி, சில்க் ஸ்மிதா, மீனா, ரம்பா, அனுஷ்கா, பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனி வாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி. ஷைலஜா, பி. சுசீலா, எஸ். ஜானகி, ஜிக்கி....

(தெலுங்கினத்தவர் இந்த அளவு விரவியிருப்பதால் இதர மொழி இனத் தவரைப் பகடி செய்து தமிழ்த் திரைப் படங்களில் பாத்திரங்கள் உருவாக்கப் படுவது போல் பெரும்பாலும் தெலுங் கினத்தவருக்கு நேர்வதில்லை என் பதையும் இணைத்துக் காண்க.)

கன்னட இனத்தவர் : இயக் குநர் ஸ்ரீதர், நடன இயக்குநர் சுந்தரம், நடிகர்கள் நாகேஷ், முரளி, அர்ஜுன், ரமேஷ் அரவிந்த், பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, வினய், ரஜினிகாந்த் (கன்னட மராட்டியர்) நடிகையர் சரோஜாதேவி, ராஜஸ்ரீ, காஞ்சனா, ஐஸ்வர்யாராய், சங்கீதா..

மலையாள இனத்தவர் : ஃபாசில், ஷாஜி கைலாஷ், நடிகர்கள் எம்.ஜி.ஆர்., எம்.என்.நம்பியார், பிரதாப் போத்தன், திலகன், பரத், ஷாம், ஆர்யா, பிருதிவிராஜ், கேப்டன் ராஜ், கலாபவன் மணி, பாபு ஆன்டனி, நடிகையர் லலிதா, பத்மினி, ராகினி, அம்பிகா, ராதா, சுகுமாரி, நதியா, அமலா, நயன்தாரா, அசின், காவ்யா மாதவன், நவ்யா நாயர், பாவனா, மீரா ஜாஸ்மின், கோபிகா, கனிகா....

(தமிழினம் நடித்துள்ள பிற தெலுங்கு, கன்னட, மலையாள மொழி களின் பெரு நடிகர்கள் இங்கு குறிப் பிடப்படவில்லை)

வட இந்தியர் : குஷ்பூ, ஜோதிகா, சிம்ரன், நமீதா, சிரேயா, ஜெனிலியா, தமன்னா...

முடிவாக ஒரு நகைச்சுவை. நடப்பு தேதியில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சுபவரில் நகைச்சுவை நடிக - நடிகையரைப் பொறுத்த மட்டிலும் அனைவரும் தமிழர்.