தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த ஆறாவது மாதத்தில் தமிழக உள்ளாடசி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 19, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடந்து முடிந்து, தேர்வு பெற்றவர்களும் பதவிகளில் பொறுப்பேற்று இருக்கி றார்கள்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர் தல்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முந்தைய இரண்டும் அரசின் கொள்கைகள் கோட்பாடுகளை உரு வாக்குகிற அமைப்பு. உள்ளாட்சி அப் படியில்லை. உருவாக்கப்படும் கொள் கைகளை, நலத் திட்டங்களை செய லாக்குகிற அமைப்பு. இத னால், சட்ட மன்ற, நாடாளு மன்றத் தேர் தல்களில் கட்சி அடையாளம் முக்கியம் பெறு வதும், உள் ளாட்சி அமைப் புகளில் தனி நபர் அடை யாளம் முக்கியம் பெறுவ தும் இயல்பாக நேர் கிறது.

இந்த வேறுபாடு இருப்பதனாலும், வேறு பல கார ணங்களாலும்தான், சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர் தல்களுக்கு கூட்டணி அமைத் துப் போட்டியிட்ட கட்சிகள், இந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கூட்ட ணிகளுக்கு முக்கியத்துவம் தராமல் தனித்து நின்று போட்டி யிட்டன.

கருணாநிதி உள்ளாட்சித் தேர்த லில் கூட்டணி இல்லை என்று வெளிப் படை யாகவே அறிவித்தார். ஜெயலலிதா இப்படி வெளிப்படையாக ஏதும் அறி விப்பு தராமலே 10 மாநகராட்சி களுக்கான தன் கட்சி வேட்பாளர்களை அறிவித்து கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சிக்குள் ளாக்கினார்..

தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் இரண்டும் இப்படிப்பட்ட நிலைப் பாட்டை மேற்கொள்ளக் காரணங்கள் உண்டு.

சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி எதையும் சாதிக்க இயலாது படுதோல்வி அடைந்த நிலையில், தேவையில்லாமல் காங்கிரசுக்கு அதன் பலத்தை மீறி இடம் தந்து, அதைத் திமுக சுமக்க வேண்டுமா என்பது கருணாநிதிக்கு. அதேபோல ஜெ.வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பாக தேமுதிகவுக்கு அதன் பலத்தை மீறி இடம் தந்து அதை வளர்த்து விட்டோமோ என்கிற மதிப்பீடு. இவை எல்லாமும் சேர்ந்துதான் இப்படித் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு இக்கட்சிகளைத் தள்ளின.

பாமகவும் விசிகவும் ஏற்கெனவே தனித்துப் போட்டியிடுவது என்கிற முடிவை அறிவிக்க, தனித்து விடப் பட்டது இடது சாரிக் கட்சிகளும் தேமுதிகவும்தான். அதாவது பிற எல்லாக் கட்சிகளும் அவரவரும் தனித்துப் போட்டியிடுவது என்கிற நிலையில் இருக்க, அப்படி ஏதும் தானாக முடி வெடுக்காமல், தனித்துப் போட்டி யிடும் திட்டத்தில் இல்லாமல், நம்பியிருந் தவர்கள் கை விட்டதனால் நிர்ப்பந்தத்தில் முடிவெடுக்கவேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டன இக்கட்சிகள். இந்நிலை யில் கைவிடப்பட்டோர் கூட்டணி யாக ‘மலர்ந்ததே’ இ.க.க.மா. தேமுதிக கூட்டணியும்

இப்படிப் போட்டியிட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சி களையும், திமுகவுக்கு ஒன்று கூடத் தராமல் அனைத்தையும் அதிமுகவே வென்றதுடன், தமிழகத்தில் உள்ள, 125 நகராட்சிகளில் 88 நகராட்சிகளையும் அதுவே கைப்பற்றியது. திமுக 23 நகராட்சிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. இதில் பரவலாக நன்மதிப்புப் பெற்றிருந்த சென்னை மாநகர முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியம், சைதை துரைசாமியிடம் 5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றதும், 100 வார்டுகள் உள்ள மதுரையில் 12ஐ மட்டுமே திமுகவால் கைப்பற்ற முடிந்தது என்பதும்தான் மிகப் பெரும் சோகம். மா.சுப்பிரமணியம் நன் மதிப்புள்ள வரானாலும், அவர் சார்ந்த கட்சியின் மீது சென்னை மாநகர மக்களுக்கு உள்ள வெறுப்பு, எதிர்த்துப் போட்டி யிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் பால் உள்ள தனிப்பட்ட நன் மதிப்பு, மாற்றம் வேண்டும் என்று கருதிய மக்களின் உணர்வுகள் இவை எல்லாமும் சேர்ந்தே இந்த வெற்றியை அதிமுகவுக்கு சாத்தி யப்படுத்தி உள்ளன.மற்ற கட்சி கள் பெற்ற வெற்றிகள் தனியே பெட்டிச் செய்தியில் காண்க.

இந்தத் தேர்தலில் கட்சி கள் அனைத்தும் தனித்துப் போட்டி யிட்டதில் கட்சிகள் தங்கள் சொந்த பலம் என்ன, தனி நபர்கள் செல்வாக்கு என்ன எப்தை ஓரளவு மதிப்பிட்டுக் கொள்ளலாம். இந்த பலத்தை வைத்து இவை அடுத்தடுத்த தேர்தல் கூட்டணி களில் பேரம் பேச முனையலாம். அது வேறு செய்தி.

ஆனால் தமிழகத்தில் இன்றும் பலம் பொருந்திய கட்சியாக அதிமுக, திமுகவே நீடித்துக் கொண்டிருக்கின்றன. அவற் றிற்கு மாற்றாக வேறு எந்தக் கட்சியும் உருவாகவில்லை என்பதோடு அமையும் கூட்டணிகளும் இவ்விரு கட்சிகளையும் மையப்படுத்தியே அமைகின்றனவே தவிர மாற்றாக, மூன்றாவதாக வேறு எந்த அணியும் உருவாகவிலலை என்பதே இன்றைய நிலை.இந்த உள்ளாட்சித் தேர்தலில் உருவான தேமுதிக, மார்க்சிஸ்ட் கூட்டணி, முன்னரே குறிப்பிட்டபடி கைவிடப்பட்டதனால் ஏற்பட்ட கூட்டணிதானே தவிர, மற்றபடி மாற்றுக் கொள்கையுடன் மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் கொள்கை அடிப்படையில் உருவாக்கப் பட்ட கூட்டணி அல்ல, அந்த இடம் இன்னும் வெற்றிடமாகவே உள்ளது என்பதுதான் இன்றைய தமிழக அரசியல் சூழலின் யதார்த்தம்.

இதற்கு அப்பால், இதற்கு நேர் எதிர் மாறான ஒரு போக்கும் தமிழகத்தில் தலை தூக்கி செல்வாக்குப் பெற்று வருகிறது. அரசியல் என்பது சமூக நோக்குடைய சமூக அக்கறையுடையவர்கள், மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கிறவர்களது தளம் என்பதான நிலை மாறி, அரசியல் என்பது விட்டுப் பிடிக்கிற, அல்லது இறைத்துப் பொறுக்குகிற ஒரு வணிகம் என்பதாக ஆகி, அரசியல் என்பது வருவாய் வளத்திற்கும், அதிகாரச் செல்வாக்கிற்கும் உரிய ஒரு மையம் என்பதாகச் சீரழிந்து போய் இருக்கிறது. இதனால் இந்த முறை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக் கல்களின் எண்ணிக்கையையும் இவை. கணிசமாகக் கூடியிருக் கின்றன.

அதாவது தன்னைச் சுற்றியுள்ள வர்கள் அரசியலில் புகுந்து, குறுகிய காலத்தில் வளமாக முன்னேறியிருக் கிறார்கள், வாழ்க்கை வசதிகளை, சொத்து சுகங்களைப் பெருக்கியிருக்கிறார்கள், சமூகத்திலும் அதிகாரத்தோடு வலம் வருகிறார்கள் எனக் கண் முன்னே இப் படிப்பட்ட வளர்ச்சிகளைக் காண்ப வர்கள் ஏன் நாம் மட்டும் சும்மாயிருக்க வேண்டும், நாமும் இந்தப் போட்டியில் முயன்று பார்ப்பமே என்கிற ஆர்வத்தால் தூண்டப் பெறுகிறார்கள். அவர்களும் இந்தப் போட்டிக்குத் தங்களை ஆயத் தப்படுத்திக் கொண்டு களம் இறங்கு கிறார்கள்.

இதனால்தான் இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை யும் மீறி ஒரு வாக்குக்கு 500, 1000 என்று மிகச் சாதாரணமாக பணத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.தென் மாவட்டங் களில் சில கிராமப் பஞ்சாயத்துகள் சில இலட்சங்களுளளளளளளக்கு ஏலம் போயுள்ளன. பத்து இருபது ஆண்டுகள் முன்பானால் பணத்தை வாங்க மக்களிம் ஒரு கூச்சம் இருந்தது. கை நீட்டி காசு வாங்கிவிட்டால் வாங்கிய காசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமே என்று ஒரு உறுத்தல் இருந்தது. இதனால் ஒரு இடத்தில் கை நீட்டி காசு வாங்கி விட்டால், அடுத்த இடத்தில் வாங்க மறுக்கும் நேர்மையான போக்கு இருந்தது. இப்போது நிலைமை அப்படியில்லை.

ஏன் ஒரு இடத்தில் வாங்கி, மறு இடத்தில் மறுத்து தேவையில்லாமல் பொல்லாப்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று கொடுக்கிற இட மெல்லாம் வாங்கிக் கொள்வது, விரும்பிய இடத்தில் போட்டுக் கொள்வமே என்பதான போக்கு பெருகியுள்ளது கொள்ளையடித்து சம்பாதிக்கிறானே கொடுக்கட்டுமே என்பதுமான போக்கும் இயல்பாகி வருகிறது.

வேட்பாளர்களும் அதற்கு முன் பானால் மக்களை மந்தைகள் போல வாக்கெடுப்புக்கு முதல் நாள் இரவே திரட்டித் தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்வது, அவர்களது தேவைகளை நிறைவு செய்து மறு நாள் வாக்களிப்புக்குப் பயன்படுத்திக் கொள்வது என்கிற நிலை இருந்தது. இத்துடன் காசு கொடுக்கும் போதும், சாமிப் படங்களின் மீது கை வைத்து சத்தியம் வாங்குவது என்கிற பழக்கமும் இருந்தது. இப்போது யாரும் அப்படி மக்களை மந்தைகள் மாதிரி மேய்க்க முடியாது என்பதோடு காசு கொடுத்தாலும் சத்தியம் எல்லாம் கேட்கவும் முடியாது என்கிற நிலைக்கு மக்கள் தேறியிருக்கிறார்கள். நவீன வாழ்க்கை முறை, ஊடாக வளர்ச்சி, பிற பயன்பாட்டு சாதனங்கள் மக்களைத் தேற்றியிருக்கிறது. அதோடு மட்டுமல்ல, வேட்பாளர்களுக்கு, வெற்றி பெற்றவர் களுக்கு தொண்டர்கள், பொதுமக்கள் துண்டு, சால்வை போர்த்துவது என்கிற நிலை மாறி, வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வீடு வீடாகப் போய் வாக்காளர் களுக்கு அவரவர் தரம் செல்வாக்குக்கு ஏற்ப துண்டு, சால்வை அணிவிக்கும் அதிசயமும் நிகழ்ந்துள்ளது.

ஆக மொத்தத்தில் இந்த உள்ளாட் சித் தேர்தல், வாக்காளப் பெருமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியும், குதூகலமுமாக இருந்ததுடன், தேர்தலுக்கு அடுத்து 26ஆம் தேதி வந்த தீபாவளிப் பண்டிகை யையும், வேட்பாளர்கள் தயவில் வெகு விமரிசையாகக் கொண்டாட வைத்தது.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ கத்தில் ஒரு ஆரோக்யமான மாற்று அரசியலை உருவாக்க நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றி சனநாயக உணர்வாளர்கள் சிந்திக்கவேண்டும். இந்த சீரழிவிலிருந்து மக்களை மீட்டு மக்கள் நல நோக்கிலான ஒரு நேர்மையும் அர்ப்பணிப் பும் மிக்க அரசியலை வளர்த் தெடுக் கப்பாடுபட வேண்டும் .

உள்ளாட்சியில் வேகாத தில்லி ஆட்சி

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போக மார்க்சிஸ்ட் ,தேமுதிக , பாஜக ஆகிய கட்சிகள் தலா இரண்டு நகராட்சிகளைக் கைப்பற்றி யுள்ளன.. மதிமுக ஒரு நகராட்சியையும் எட்டு பேரூராட்சிகளையும் வென்றுள்ளது இத்துடன் கணிசமான அளவு மாநராட்சி மன்ற, நகர் மன்ற, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களையும் கைப்பற்றி யுள்ளது. காங்கிரஸ் இருபத்து நான்கு பேரூராட்சிகளை வென்ற தாகச் சொல்லிக் கொண்ட போதிலும் அது ஒரு நகராட்சியைக் கூட வெலல முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆத தமிழகத் தேர்தல்களில் அகில இந்தியக் கட்சிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இல்லை மாறாக மாநிலக் கட்சிகளுக்தே முக்கியத்துவம் என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட் டுள்ளது. இந்த நிலையில் இந்த அகில இந்தியக் கட்சிகளுக்கும் தமிழகத்தில் உள்ள திமுக அதிமுக கட்சிகளுக்கும் மாற்றாக மூன்றாவது ஒரு அணியை உருவாக்குவது பற்றி தமிழக மக்கள் சிந்திக்க வேண்டுவது அவசியமாகிறது.

 

மராட்டியத்தின் மதுக் கொள்கை

மராட்டிய மாநிலத்தில் சட்டப்பூர்வ மதுவிற்பனை இருந்தாலும், அது சரியான வழியில் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக் குட்பட்டவர்களுக்கு மது வழங்கக் கூடாது என்பது சட்டம். ஏற்கெனவே இது 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்று இருந்ததை தற்போது 4 வயது கூட்டி 25 வயது என வரம்பை உயர்த்தியுள்ளது மராட்டிய அரசு.பீருக்கு மட்டும் ஒரு தளர்வு. அது பழையபடி 21 வயதாகவே நீடித்து வருகிறது.

இதுபற்றி மராட்டிய அரசின் சமூக நீதி மற்றும், போதை எதிர்ப்புத் துறை அமைச்சர் சிவராஜ் மோகே கருத்து தெரிவிக்கையில், “பூரண மது விலக்கை எங்களால் அமல் படுத்த முடியாது. அதற் காக மது விற்பனையை மானாங்கணியாய்த் திறந்து விடவும் முடியாது. எனவே இரண் டிற்கும் இடைப்பட்ட நடுப்பாதையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இனால் தான் நாங்கள் இதை மது எதிர்ப்புக் கொள்கை எனக் கூறாமல் போதை எதிர்ப்புக் கொள்கை என்கிறோம்.”

இதன்படி மதுவிற்பனைக்கு வயது வரம்பு மட்டுமல்ல. பொது நிகழ்ச்சிகளில் மதுபானங்களைப் பயன்படுத்தக்கூடாது, பள்ளிகள், கோயில்கள், பொது இடங்கள், சமூக நிறுவனங்கள், நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் மதுக்கடைகளுக்கு தடை விதிப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

முற்றாக மதுப்பழக்கத்தையே ஒழித்து விடும் நல்லொழுக்கக் காவலனாக அரசு முயற்சிக்கவில்லை. அது சாத்தியமு மில்லை எனவே எவ்வாறெல்லாம் இதை ஒழுங்கு படுத்தமுடியும் என்பதிலேயே அரசு அக்கறை கொண்டிருக்கிறது. என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் ஜெ. அரசு மதுக்சிக்கலில் குறைந்த பட்சம் மராட்டிய மாநில நடை முறைகளையாவது பின்பற்ற முயற்சிக் கலாம் என்று தோன்றுகிறது.

Pin It