1. 'வெட்டுப்புலி' நாவலின் ஆசிரியர் யார்?

2. 'மேற்கத்திய கொம்பு மாடுகள்' யாருடைய சிறுகதைத் தொகுதி?

3. சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் சமீபத்திய சிறுகதைத் தொகுதி?

4. 'கரையைத் தேடும் கட்டு மரங்கள்' எனும் ஈழத்து நாவலின் ஆசிரியர் யார்?

5. 'வீடியோ மாரியம்மன்' சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் யார்?

6. யாழினி முனுசாமி தொகுத்த தலித் அரசியல் கதைத் தொகுதியின் தலைப்பு என்ன?

7. 'அதீதத்தின் ருசி' கவிதை தொகுதி யாருடையது?

8. நோபல் பரிசுபெற்ற ஓரான் பா முக்கின் என் பெயர் சிகப்பு' நூலைத் தமிழாக்கம் செய்தவர் யார்?

9. சமீபத்தில் மலேசியாவில் டான்ஹ§ மாணிக்க வாசகம் பரிசுபெற்ற சிறுகதைத் தொகுதி எது?

10. கரன் கார்க்கி எழுதி வெளிவந்துள்ள சமீபத்திய தலித் நாவல்?

11. சமீபத்தில் வெளிவந்துள்ள நேரு வழக்குகள் நூலின் ஆசிரியர்?

12. 'புரட்சி நாட்களில் ஒரு அரசியல் போராளியின் நினைவலைகள்' யாருடைய சுயசரிதை நூல்?

13. 'நாயக்கர் காலம்' எனும் வரலாற்று நூலின் ஆசிரியர் யார்?

14. எழுத்தாளர் குமார செல்வாவின் சிறுகதைத் தொகுதி?

15. 'பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும்' எனும் பௌத்த மத நூலின் ஆசிரியர் யார்?

16. 'வியாழக்கிழமையை தொலைத்தவன்' யாருடைய கவிதை தொகுதி?

17. 'நாளைக்கு செத்துப்போனவன்' யாருடைய சிறுகதைத் தொகுப்பு?

18. 'வேதியியல் கதைகள்' - அறிவியல் நூலின் ஆசிரியர் யார்?

19. 'மழையை மொழிதல்'- ஈழத்துக் கவிதை தொகுதி யாருடையது?

20. 'நம் தந்தையரைக் கொல்வதெப்படிஎனும் வித்தியாசமான நூலின் ஆசிரியர் யார்?

21. காசியப்பன் எழுதி வெளிவந்துள்ள நாவல் எது?

22. 'அமெரிக்கக் காரி' யாருடைய சிறுகதைத் தொகுதி?

23. 'நிலாவும் குரங்குகளும்' எனும் சிறுவர் கதைகளின் நூலாசிரியர்?

24. 'ஒரு கலகக்காரனின் கதை' நூலாசிரியர்?

25. 'மீதி வெள்ளித்திரையில்' எனும் சினிமா நூலின் ஆசிரியர் யார்?

26. 'துருக்கித் தொப்பி' நாவலின் ஆசிரியர் யார்?

27. சமீபத்தில் வெளிவந்துள்ள கொங்கு குறுநாவல் தொகுதி ஆசிரியர் யார்?

28. 'உணவோடு உரையாடு' நூலின் ஆசிரியர் யார்?

29. 'மகா அலெக்சாந்தர்' எனும் வரலாற்று நூல் யாருடையது?

30. 'வெளிச்ச விழுதுகள்' யாருடைய மரபுக் கவிதை நூல்?

31. 'தமிழக வரலாற்றில் தடம் பதித்த தோழர்கள்நூலின் ஆசிரியர் யார்?

32. 'மானுடவீதி' யாருடைய கட்டுரைத் தொகுதி?

33. சமீபத்தில் ஜெயகாந்தன் சிந்தனைகளைத் திரட்டி தமிழில் வெளியிட்டுள்ளவர் யார்?

34. 'சூதாட்டம்' எனும் தலைப்பில் பிடல் காஸ்ட்ரோவின் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்தவர் யார்?

35. 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை' சிறுகதைத் தொகுதி யாருடையது?

36. இயக்குநர் தங்கர்பச்சானின் சமீபத்திய சிறுகதைத் தொகுதி?

37. 'வார்ஸாவில் ஒரு கடவுள்' நாவலின் ஆசிரியர்?

38. 'கதைகதையாம் காரணமாம்' எனும் தலைப்பில் நேர்காணல்களைத் தொகுத்துள்ளவர் யார்?

39. 'அஞ்சு வண்ணம் தெரு' நூலின் ஆசிரியர் யார்?

40. 'மனித குண்டுகளும் மரண வண்டிகளும்' கட்டுரைத் தொகுதியின் ஆசிரியர் யார்?

 

விடைகள்:

1. தமிழ்மகன்

2. ந. முத்துசாமி

3. அ / மனிதன்

4. கே.எஸ். பாலச்சந்திரன்

5. இமையம்

6. குரலற்றவனின் குரல்

7. மனுஷ்யபுத்திரன்

8. ஜீ. குப்புசாமி

9. பயாஸ்கோப்காரனும் வான்கோழிகளும்

(சை. பீர்முகம்மது)

10. அறுபடும் விலங்கு

11. ஞாலன் சுப்பிரமணியன்

12. கேப்டன் லெட்சுமி

13. அ. ராமசாமி

14. கயம்

15. ஓ.ரா.ந. கிருஷ்ணன்

16. விக்கிரமாதித்யன்

17. ம. காமுத்துரை

18. பேரா. மோகனா

19. கவிஞர் அலறி

20. மாலதி மைத்ரி

21. அசடு

22. அ. முத்துலிங்கம்

23. செ. யோகநாதன்

24. ஜான் ஆப்ரஹாம்

(தொ.ஆர்.ஆர். சீனிவாசன்)

25. சு. தியடோர் பாஸ்கரன்

26. ஜாகீர் ராஜா

27. பழமன்

28. அ. உமர்பாருக்

29. ஆத்மாரவி

30. ப. ஜீவகாருண்யன்

31. வ. மோகன கிருஷ்ணன்

32. கமலாலயன்

33. திலகவதி

34. கி. ரமேஷ்

35. எஸ். ராமகிருஷ்ணன்

36. அம்மாவின் கைபேசி

37. தமிழவன்

38. சூரியசந்திரன்

39. தோப்பில் முகமதுமீரான்

40. எஸ்.வி. ராஜதுரை