(1872-1936)

1998

chithamparanar_300இந்திய அரசியலில் நாம் தலைவணங்கி ஏற்றுக் கொள்ளக்கூடிய முக்கியமான தலைவர். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தில் மக்கள் தலைவராக, தொழிற்சங்கத் தலைவராக இருந்தவர். ‘பொது மக்கள் கருத்து’ என்ற ஒன்றை அரசியல் சார்ந்து உருவாக்குதல் என்ற சாதனையை நிகழ்த்திக் காட்டியவர். மேடைப்பேச்சு என்பது ஒரு கலையாக, துறையாக ஆற்றல் மிக்கப் படைக்கலனாகப் பின்னாளில் தழைத்தோங்கப் புதுப்பாதை வகுத்தவர். இவர் கப்பல் ஒட்டியதும், செக்கிழுத்ததும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் பட்ட துன்பங்களும், அதனால் அவரது குடும்பம்பட்ட சிரமங்களும் கொஞ்சநஞ்சமல்ல. இந்திய தேசிய காங்கிரசில் எந்தப் பெரிய பதவியும் இவருக்குக் கொடுக்கப்படவில்லை. ஆனால் எந்தவிதமான தியாகமும் செய்யாமல் இவரின் சமகாலத்தவரான ராஜாஜி மிகப் பெரிய பதவிகளைப் பெற்றார் என்பது நகை முரண். நேர்மையான தொண்டனுக்கு ஒரு வித இடமும் இல்லாமல் நேர்மையில்லாத தொண்டனுக்கு மிகப் பெரிய பதவி வந்ததையும் இதன் மூலம் உணரமுடியும். அரசியல் சீர்கெட்டது என்பது இதிலிருந்து தொடங்கியது எனலாம். 

..சி.யின் நூல்கள் (காலவரிசை)

1. மனம் போல வாழ்வு 1909

2. அகமே புறம் 1914

3. மெய்யறம் 1914

4. மெய்யறிவு 1915

5. பாடல் திரட்டு 1915

6. வலிமைக்கு மார்க்கம் 1916

7. இன்னிலை (பதிப்பு) 1917

8. திருக்குறள் - அறத்துப்பால் - மணக்குடவர் உரை (பதிப்பு) 1917

9. எனது அரசியல் பெருஞ்சொல் 1927

10. தொல்காப்பியம் - இளம்பூரணம் - பொருளதிகாரம் (அகத்திணையியல், புறத்திணையியல்) - இரண்டாம் பதிப்பு - 1928

11. தொல்காப்பியம் - இளம்பூரணம் - எழுத்ததிகாரம் (பதிப்பு) 1928

12. சாந்திக்கு மார்க்கம் 1934

13. சிவஞான போதம் 1935

14. திருக்குறள் - அறத்துப்பால் - வ.உ.சி. உரை 1935

15. தொல்காப்பியம் - இளம்பூரணம் - பொருளதிகாரம் (ஒன்பது இயல்களும் அடங்கியது) - எஸ். வையாபுரிப்பிள்ளையுடன் இணைந்து பதிப்பித்தது 1936

16. சுயசரிதை 1946

17. வ.உ.சி. கண்ட பாரதி 1946

..சி.யின் கட்டுரைகள் (காலவரிசை)

1. ‘கடவுளும் பக்தியும்’, விவேகபாநு (குற்றாலம்), செப்டம்பர் 1900

2. ‘விதி அல்லது ஊழ்’, மேலது, அக்டோபர் 1900

3. ‘ஈசை’, மேலது, டிசம்பர் 1900

4. ‘கடவுள் ஒருவரே’, மேலது, பிப்பிரவரி 1901,

5. ‘சுதேசாபிமானம்’, விவேகபாநு (மதுரை), பிப்பிரவரி 1906

6. ‘சுதேச ஸ்டீமர் விக்ஞாபனம்’, மேலது, நவம்பர் 1906

7. ‘மனிதனும் அறிவும்’, ஞானபாநு, ஏப்பிரல் 1913

8. ‘மனமும் உடம்பும்’, மேலது, மே 1913

9. ‘வினையும் விதியும்’, மேலது, சூன் 1913

10. ‘தமிழ் எழுத்துக்கள்’, மேலது, செப்டம்பர் 1915

11. ‘தமிழ்’, சுதேசமித்திரன், 29.10.1915

12. ‘தமிழ் நூல்கள்’, சுதேசமித்திரன் (வருஷ அனுபந்தம்), 1918

13. ‘திருவள்ளுவர் திருக்குறள்’, தமிழ்ப்பொழில், 1929 - 30, 1930 - 31.

14. ‘திலக மகரிஷியின் வரலாறு’, வீரகேசரி (ஞாயிறுதோறும் வெளிவந்த தொடர்), கொழும்பு, 1933-34

15. ‘கடவுளைக் காண்டல்’ ஊழியன் ஜனவரி 1934

16. ‘சிவஞான போத ஆறாம்சூத்திர ஆராய்ச்சி’ தினமணி (நாளிதழ்) 6.12.1935

17. ‘உலகமும் கடவுளும்’ தினமணி (நாளிதழ்) 17.1.1936

(வ.உ.சி.யின் அனைத்து ஆக்கங்களும் பேரா. வீ. அரசு அவர்கள் தொகுத்து சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)
Pin It