(1888-1945)

-2007

kasupillai_250மிக முக்கியமான தமிழறிஞர்களில் ஒருவரான கா.சு.பிள்ளை தம்முடைய கல்விப் பயணத்தைத் திண்ணைப் பள்ளியில் துவக்கியவர். திருநெல்வேலியில் காந்திமதிநாதபிள்ளை. மீனாட்சியம்மை தம்பதியருக்குப் பிறந்தவர் கா.சு.பிள்ளை. 1906ல் மெட்ரிக் தேர்வில் மாகாணத்தில் முதல் மாணவராக வந்தார். மேலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் தேர்வில் முதல் மாணவனாக வந்து பரிசு பெற்றார். இதில் முதல் மாணவராக வந்ததற்குப் பவர் முர்பெட் என்ற ஆங்கிலேயர் தமிழ் ஆராய்ச்சிக்கென அமைத்த பரிசை வென்றார். சட்டம் பயின்ற பின் சென்னை சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து பின்னர் பேராசிரியராகப் பணியாற்றினார். 1927ல் சட்டக்கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட விதிமுறையின் காரணமாக அங்கிருந்து விலகினார். அதன் பிறகு திருநெல்வேலியில் தங்கி இலக்கியம், வரலாறு பற்றி அரிய நூல்களை எழுதினார்.

1927 பிற்பகுதியில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக ஒரு ஆண்டு பணிபுரிந்தார். அதன் பிறகு நெல்லை மாநகராட்சி உறுப்பினராகவும், நெல்லையப்பர் கோவில் தர்மகர்த்தாவாகவும் பணியாற்றினார். அப்போது தேவார ஆகம பாடசாலைகளைத் தோற்றுவித்தார். 1943ல் சென்னை மாகாணத் தமிழர் முதலாவது மாநாட்டின் வரவேற்புக் கழகத் தலைவராகத் பணியாற்றினார். இதற்குப் பிறகு நிறுவப்பட்ட சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். இவரது நூல்களைத் தமிழ் இலக்கிய நூல்கள், சமயநூல்கள், வரலாற்று மொழிபெயர்ப்பு நூல்கள், சட்டநூல்கள் என வகைப்படுத்தலாம். நுண்மான் நுழைபுலச் செம்மல் என்று சிறப்புக்களைப் பெற்ற, கா.சு.பிள்ளை என்று அழைக்கப் பெற்ற பேரா. கா.சுப்பிரமணியப்பிள்ளை நினைவாகத் திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் அருகேயுள்ள நகர்மன்றப் பூங்காவில் நடுகல் 13.10.1947 அன்று நாட்டப்பட்டது.

கா.சு. பிள்ளையின் நூல்கள்

1. தமிழ் இலக்கிய வரலாறு

2. உலகப் பெருமக்கள் பதினால்வர் வரலாறு

3. நால்வர் வரலாறு

4. அப்பர் வரலாறு

5. திருஞான சம்பந்தர் வரலாறு

6. சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

7. மாணிக்கவாசகர் வரலாறு

8. சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்

9. தாயுமான சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்

10. பட்டினத்தார்கள் வரலாறும் நூலாராய்ச்சியும்

11. குமரகுருபர அடிகள் வரலாறு

12. சிவஞானமுனிவர் வரலாறும் நூலாராய்ச்சியும்

13. மெய்கண்டாரும் சிவஞான போதமும்

14. திருஞானசம்பந்தர் தேவார இயற்கை பொருளழகு

15. இறையனார் அகப்பொருள்

16. பழந்தமிழர் நாகரீகம்

17. மொழிநூற் தொகையும் தமிழ் மொழியமைப்பும்

18. அறிவு விளக்கம் வரலாறு

19. திருச்சோலையார் துறை விளக்கம்

20. செகப்பிரியர் வரலாற்று நாடகக் கதைகள்

21. இந்து சமயங்களின் சுருக்க வரலாறு

22. திருநான் மறை விளக்கம்

23. சைவ சித்தாந்த விளக்கச் சுருக்கம்

24. முருகன் பெருமை

25. சைவச் சடங்கு - விளக்கம்

26. மெய்கண்ட நூல்களின் உரைநடை

27. தமிழர் சமயம்

28. சிவஞான போத பொழிப்புரை

29. தியானமும் வாழ்க்கை உயர்வும்

30. கடவுளும் வாழ்க்கை நலமும்

31. உலக நன்மையே பூருவன் வாழ்வு

32. மக்கள் வாழ்க்கை தத்துவம்

33. வாழ்க்கை இன்பம்

34. உடல் நூல்

35. வான நூல்

36. சிவப்பிரகாசம் ஆங்கில மொழிபெயர்ப்பு

37. நீதிநெறி விளக்கம் ஆங்கில மொழிபெயர்ப்பு

38. Metaphysics of the Saiva Siddhanta System

39. A Short Sketch of the Hindu Religion

40. A Note on Hindu Religion Endowment Bill

41. Tamil Blooms

42. Nature of Thevaram and ancient Tamil Scripture

43. பொருட் சட்டம்

44. பதிவு விதி

45. குற்றச் சட்டம்

46. இந்திய தண்டனைத் தொகுதி

47. Principles of Criminology

48. Lectures on the Indian Penal Code -2007

Pin It