இந்திய தேசிய இயக்கம் ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்தது; வளர்ச்சிப் போக்கில் நீண்டகால மாறுதல்களைக் கண்ட பெருமை அதற்குண்டு. காந்தியடிகன் தலைமையில் பல வடிவங்கல் அவை எழுந்தன: அரசியலமைப்பு சார்ந்த இயக்கம், நிர்மாணப்பணி, செய்தி இதழ்கள் மூலம், இலக்கியங்கள் மூலம், பாடல்கள் மூலம் பிரச்சாரம். ஆயினும் அந்த மாறுதல்கள் பிரிட்டனின் நடவடிக்கைகளுக்கு ஓர் எதிர்வினை என்றே அமைந்தன. வெகு மக்கள் பெருமளவில் பங்கு பற்றிய போதுதான் தத்துவார்த்த விசாரணை தொடங்கியது; ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு கூர்மை பெற்றது; மார்க்சிய, சமதர்ம, பொதுவுடைமை சக்திகள் மேடை அமைக்க முடிந்தது. அதாவது, போராட்டம் சமாதானம் போராட்டம் என வளர்ந்து, சட்டங்களுக்கு அப்பால் என விரிந்து, புதிய உத்திகளையும் போர்த்திறன்களையும் பயன்படுத்தி வெற்றிபெற்ற இயக்கம். இந்த இயக்கத்தில் சமதர்ம சக்திகன், குறிப்பாகக் கம்யூனிஸ்டுகன் பங்கப்பு குறிப்பிடத்தக்கது.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு உரமூட்டி, உயிர்பெய்து வளர்த்தவர்கள் பலர். சென்ற நூற்றாண்டில் மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்வது இந்திய மேல்தட்டு நடுத்தட்டுக் குடும்பங்கன் கனவுகல் ஒன்று. அன்றைய வெள்ளை நிர்வாகத்துறை (ஐ.சி.எஸ்.) அதிகாரியாக வேண்டும் என அங்கு சென்றவர்களே அதிகம். ஆயினும் சிலர் வேறுபட்ட திறத்தினராக நாடு திரும்பினர். அரவிந்தர், நேதாஜி போன்றோர், ஐ.சி.எஸ். தேர்வுபெற்றும் அரசுப்பணியில் நாட்டம் கொள்ளவில்லை. அடுத்து 1930கல் இங்கிலாந்து சென்ற இந்திய மாணவர்கல் பலர் விடுதலை இயக்கப் போராகளாக, மார்க்சிஸ்டுகளாக, கம்யூனிஸ்டுகளாகச் சிறந்தனர்; தம் வாழ்நாள் முழுவதையும் மக்கள் பணியில் செலவிட்டனர். (பிரிட்டனில் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்படுவதற்கு முன்பு Independent Labour party என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. அதில் தோழர் ரஜனி பாமி தத் பெருங்கடமை ஆற்றிவந்தார். இங்கிலாந்து வந்த இந்திய மாணவர்கல் பலரும் சக்லத்வாலா, பாமிதத் ஆகியோரால் ஈர்க்கப்பட்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்க தோழர்கள் ரேணு சக்ரவர்த்தி, நிகில் சக்ரவர்த்தி, ரஜனி படேல், மொஹித் சென், ஜோதி பாசு, இசட்.ஏ. அஹமது, பி.என். ஹக்ஸார், பூபேஷ் குப்தா, என்.கே. கிருஷ்ணன், பார்வதி, மோகன் குமாரமங்கலம், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ரோமேஷ் சந்திரா.....) இவர்கல் ஒருவர்தாம் சி.எஸ். சுப்பிரமணியன். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் போற்றும் சிறந்த மாணவர்கல் ஒருவராகத் திகழ்ந்தார். ஐ.சி.எஸ். அதிகாரியாக இடம் பெற்றிருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட்டாகத் தமிழகம் திரும்பினார். அன்றிலிருந்து நூற்றாண்டு கண்டு இன்றுவரை சிறந்த ஒரு கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து வழிகாட்டுகிறார்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுச் செயல்படத் தொடங்கியதும் கிளைகள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு முதன்முதலில் அமைக்கப்பட்ட கிளையின் உறுப்பினர்கல் சி.எஸ். ஒருவர். கம்யூனிஸ்ட் இயக்கம் வீறார்ந்தது, வீரத் தியாகிகளால் உருவாக்கப்பட்டது, தொடர்ந்து வளர்க்கப்படுவது. கோடானுகோடி உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒ ஊட்டுவது. மானுடத்தின் உயர் விழுமியங்களை, உயர் நெறிகளைக் காத்து வருவது. இந்த இயக்கம்தான் சி.எஸ். போன்ற தோழர்களைப் பெறமுடியும். அவர் சிறந்த ஒரு கம்யூனிஸ்ட், சிறந்த ஒரு தோழர்; புகழ்க்காதலில்கூட சிக்கிக் கொள்ளாதவர், உற்றார் உறவினரினும் ஊர்உலக மக்களை நேசிப்பவர்.

சி.எஸ்., எழுதிக் குவிக்கவில்லை. அது நமக்குப் பேரிழப்பு. ஆயினும் அவர் தம் அறிவனுபவத்தை வாரி வழங்கத் தவறியதில்லை. நமது விடுதலை இயக்கம் பற்றி ஓரளவு முழுமையான வரலாறு வெளிவராதது பெருங்குறை என அவர் ஒருமுறை குறிப்பிட்டது நினைவில் இருக்கிறது. விடுதலைப் போரில் புரட்சிகர தேசிய இயக்கத்தின் பங்களிப்பு பற்றியும் ஆய்வுநூல்கள் அதிக அளவில் வரவில்லை என அவர் கருதுகிறார். (சிங்காரவேலர் பற்றி கே. முருகேசனுடன் இணைந்து ஆங்கிலத்தில் அவர் எழுதிய வரலாறு ஒரு பெருங்கொடை தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.) சி.எஸ். அளப்பரிய நினைவாற்றல் உடையவர். அவரைக் காணவருவோரிடம் அன்புடன், பரிவுடன் பயன்மிகு செய்திகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்வார். அனுஷிலான் பற்றி, புரட்சி இயக்கங்கள் பற்றி, 1900,1918 நிகழ்வுகள் பற்றி, குதிராம், பாதுகேஷ்வர் தத்தா, பகத்சிங், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா, வாஞ்சிநாதன், தூக்குத் தண்டனை அக்கப்பட்ட சங்கர கிருஷ்ண அய்யர், (இவரை நாம் முற்றாக மறந்துவிட்டோம்) ராஜா மஹேந்திர பிரதாப், வீரேந்திரநாதர், செண்பகராமன் பிள்ளை போன்றோர் பற்றி, அலிபூர் சதிவழக்கு, மச்சுவா பஜார் சதிவழக்கு, லாகூர் சதிவழக்கு பற்றி, 1929 இல் வைசிராயின் சிறப்பு ரயிலைத் தகர்க்கும் திட்டம்பற்றி, சிட்டகாங் புரட்சிபற்றி, ‘ஸ்வாதிநாதா’ இதழ்க் கட்டுரைகள் பற்றியெல்லாம் துல்லியமான கணிப்புடன் அவர் கூறக் கேட்க நம் நெஞ்சு விரியும், தோள் உயரும்; அவரது அந்த முன்னத்திறன் வியப்பூட்டும். உழைக்கும் வர்க்கத்திடம் காணும் சாதி மதவுணர்வுகள், நெருக்கடிகள் இல்லாத சமுதாயத்தைக் கட்டுவதில் தொழிலாவர்க்கத்தின் பங்கு, தொடர்ந்து, இடையறாது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதன் இன்றியமையாமை பற்றியெல்லாம் அவரது கருத்துகள் நமக்குப் பெரும் பயன் தரும்.

மதவெறியும் மதவேறுபாடுகளும் நம் மக்களைப் பிடித்துள்ள புற்றுநோய் எனும் நிலையில் சி.எஸ். ஒருமுறை கூறியது என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. அப்போது கல்பனா ஜோஷி (கல்பனா தத்தா) சென்னை வந்திருந்தது பற்றி அவரிடம் கூறினேன். உடனே சட்டகிராம் (சிட்டகாங்) பகுதியில் இளைஞர்கள் நிகழ்த்திய வீரப் போராட்டங்கள் பற்றியும் அங்கு 1930 முதல் முஸ்லிம்கள் தோளோடு தோள் நின்று களம் கண்டது பற்றியும் சி.எஸ். விவரித்தார். அதே முஸ்லிம்கள் இன்று அன்னியப்பட்டு நிற்பது ஏன் என நாம் சிந்தித்தோமா எனக்கேட்டார்.

சென்ற நூற்றாண்டின் அறுபதுகன் தொடக்க நாட்கள். பிற்பகல் வேளை. அன்றைய ‘ஜனசக்தி’ இதழின் வெளியூர்ப் பதிப்புப்பணி முடிந்தது. ஆர்.எச். நாதன், ஆர்.கே. கண்ணன், கே. முருகேசன், ஏ.எம். கோதண்டராமன், மாயாண்டி பாரதி, கே, ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். பௌத்தம் கூறும் ‘தசசீலம்’ பற்றி உரையாடல் எழுந்தது. அத்தகைய பத்துச் சீலங்களை இன்றைய நடப்பில் பின்பற்றி ஒழுக முடியுமா, இந்தச் சிகரெட் புகைப்பதைக்கூட விடமுடியவில்லையே என ஆர்.எச். நாதன் கேட்டார். “முடியும். நம்மிடையே ஒரு சீலர் வாழ்கிறார்’’ என முருகேசன் கூறினார். “சி.எஸ். ஐத்தானே குறிப்பிடுகிறீர்கள்?’’ எனப் பாரதி வினவ, “அவர் பௌத்தர் அல்லர். கம்யூனிஸ்ட்!’’ எனக் கண்ணன் வழக்கமான புன்முறுவலுடன் மெதுவான குரலில் சொன்னார்.

- ஞானவடிவேலன்