இந்திய அரசை ஒரு சிறிதும் நம்ப முடியாது என்பது மீண்டும் மெய்பிக்கப்பட்டு விட்டது. ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன் வைத்த இலங்கை குறித்த வரைவுத் தீர்மானம் விவாதத்திற்கு வரும் போது, அதில் இந்தியா உரிய திருத்தத்தை முன் மொழிந்து ஏற்கச் செய்யும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுதி கூறினார்.

ஆனால் நாட்டு மக்களுக்கு உறுதிய ளித்தவாறு ஒரு மெல் லிய திருத்தத் தைக் கூட சேர்க்க முனை யாமல் ஏற்கெனவே தான் நீர்த்துப்போகச் செய்த அமெரிக்கத் தீர்மானத்தை ஆத ரித்து இந்தியா ஐ.நா. மனித உரிமை மன் றத்தில் வாக்களித்தது.

இந்திய நாடாளு மன்றத்தில் நிறை வேற்றப்படும் தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டுப் படுத்தாது என்ற போதிலும் அந்த மன்றத்தில் கூட இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்றோ, இப்போதைய தேவை 2008 – 2009 இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற மனித குலத் திற்கெதிரான குற்றங்கள் மீது தற்சார்பான பன்னாட்டுப் புலன் விசாரணை என்றோ ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

இவ்வாறானதொரு தீர்மானத்தை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற மறுத்தது. காங்கிரசு கட்சி மட்டுமல்ல. பாரதிய சனதா, சமாஜ்வாதி, திரிணமூல், பகுசன் சமாஜ், மார்க்சிஸ்ட், ஐக்கிய சனதாதளம் போன்ற எதிர்க் கட்சிகளும்தான். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.

“இறையாண்மையுள்ள இலங்கை நாட்டிற்கு பாதகமான எந்தத் தீர் மானத்தையும் இந்திய நாடா ளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம்” என்று, பாரதிய சனதா கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் கொக்கரித் தார். “ஒரு நட்பு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது" என்று, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறினார். “தி.மு.க. வோடு ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்துக் கொள்ள எங்களை அழைக்கா தீர்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மக்களை வைக் குழுத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறினார். இவ்வாறு பல காரணங்கள் கூறி அனைத் துக் கட்சிகளும் தட்டிக் கழித்த தால். நாடாளுமன்ற அவைத் தலைவர் மீராக்குமார் தலை மையில் 20.3.2013 அன்று நடை பெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவேதும் எடுக்காமல் கலைந்தது.

ஐ.நா. மனித உரிமை மன்றத் தில் 21.3.2013 அன்று அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் எதையும் இந்திய அரசு வலியுறுத்தாதையும் இக்கட்சிகள் கண்டு கொள்ள வில்லை.

ஆளும் காங்கிரசும் வட நாட்டுக் கட்சிகளும்:

தமிழினத்திற்கெதிராக வன்மம் பாராட்டுவதில் இந்திய ஆளுங்கட்சியும் அனைத்திந்திய எதிர்க்கட்சிகளும் ஒரே நிலை யில்தான் இருக்கின்றன. எனத் தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி சொல்லி வருவது. உண்மை நிலைதான் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதே நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக 7.3.2013 அன்று விவாதம் நடந்த போது இக்கட்சிகளின் தலைவர்கள் இலங்கைப் படை அப்பாவித் தமிழர்களை பல்லாயிரக் கணக் கில் கொன்று குவித்ததையும், தமிழர்கள் இரண்டாம் தரக் குடி மக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை வேண்டுமென்றும், இலங்கையில் நடந்த அட்டூழி யங்களுக்கு இந்திய அரசு துணை செய்தது என்றும் பேசியதை தொலைக்காட்சியின் வழியாக மக்கள் பார்த்தார்கள்.

குறிப்பாக முதன்மை எதிர்க் கட்சியான பாரதிய சனதா கூற்று கவனிக்கத்தக்கது.

நாடாளுமன்ற மக்களவையில் பா.ச.க. சார்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சின்கா பேசினார். அவர் தனது பேச்சைத் தொடங்கும் போதே “மிகக் கனத்த நெஞ்சோடு இந்த விவாதத்தில் கலந்து கொள்கி றேன். இலங்கையில் தமிழர் களுக்கு நேர்ந்த பேரழிவு நம் காலத்தில் நடந்த கொடுமையான பேரவலமாகும்" என்றார். “வெளி யுறவுத்துறை அமைச்ச ராக சில காலம் பணியாற்றிய பட்டறி விலிருந்து சொல்கிறேன் இலங் கையைக் கையாள்வது மிகக் எளிதான செயலாகும். அதனை இந்திய அரசு செய்யத் தவறி விட்டது" என்று குற்றம் சாட்டி னார்.

என்.டி.டிவி ஊடகவியலாளர் நித்தின் கோக்கலே எழுதிய “போரிலிருந்து அமைதி வரை இலங்கை" (srilanka from war to peace) என்ற நூலை மேற்கோள் காட்டி பேசிய யஸ்வந்த் சின்கா 2008 -2009 இல் அங்கு நடந்த போரை நடத்திய ஆறுபேர் கொண்ட உயர் மட்டக் குழுவில் மூன்று பேர் இந்திய அரசின் உச்சமட்ட அதிகாரிகள் ஆவர் என்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முதுகெலும்பாக விளங்கிய கடற் புலிகளை அழித்தது இந்தியா தான் என்றும் கடற்புலிகளுக்கு உரிய ஆயுதக் கப்பல்களை அழித் ததன் மூலம் எல்.டி.டி.ஈ இயக் கத்தின் முதுகெலும்பை முறித்து இலங்கையின் வெற்றிக்கு வழி சமைத்தது இந்தியாதான் என்றும் விளக்கினார்.

“இலங்கையில் நிலவும் இன முரண்பாட்டுக்கு இராணுவ தீர்வுக் கிடையாது என்று அது வரை இருந்த இந்திய அரசின் மையமான கொள்கை கைவிடப் பட்டது. புலிகளை வெல்ல அப் பாவி மக்கள் எவ்வளவு பேரைக் கொன்றாலும் தாழ்வில்லை என்ற நிலைக்கு இந்திய அரசு சென்று விட்டது. இப்படியான அடிப் படைக் கொள்கை மாற்றத்திற்கு என்ன காரணமென்பது நாட் டிற்கு விளக்கப்படவே இல்லை.

அது மட்டுமல்ல 2011 ஜூன் 1 அன்று இலங்கையின் படைத் துறை அமைச்சர் (கோத்தபய இராசபட்சே) ஒரு நேர்காணலில் கூறியது கவனிக்கத்தக்கது. அவர் கூறினார் ‘1987 இல் வடமராட்சி போரின் போது இலங்கை அரசு செய்த தவறை இந்த முறை எங்களது குடியரசு தலைவர் செய்யவில்லை. இப் போரில் இறங்குவதற்கு முன்பா கவே இந்திய ஆட்சியின் உச்ச மட்டத் தலைவர்களோடு பேசி இந்திய அரசின் ஒத்துழைப்பைப் பெற்றோம். அரசியல் வழியிலும் பொருளியல் வழியிலும் வேறு நாடுகளின் அழுத்தம் இலங்கை யின் மீது பாயாமல் இந்தியா பார்த்துக்கொண்டது’ என்றார்.”

“இந்த கொள்கை மாற்றத் திற்கு இந்திய ஆட்சியாளர்கள் சொல்லக்கூடிய ஒரே காரணம் நாம் ஒதுங்கினால் சீனா வந்து விடும் சீனா வந்து விடும் என்பது தான். அச்சத்தின் அடிப்படை யில் அயலறவுக்கொள்கை வகுக் கப்படக் கூடாது. இந்தியா என்ற நமது மிகப் பெரிய நாடு தன்னம் பிக்கையின் அடிப் படையில் தனது வெளியுறவுக் கொள் கையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.”

“தமிழ்நாட்டைச் சேர்ந்த எனது நண்பர்கள் இங்கே எடுத் துக் காட்டியது போல் போரின் போது மட்டுமின்றி போர் முடிந்த பிறகும், இப்போதும், அங்கு வாழும் தமிழ்ச் சகோதரர்களுக்கு எதிராக அக்கிரமங்கள் தொடர் கின்றன. இனப்படுகொலைத் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதும் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீதும் இலங்கை அரசுதானே ஒரு தற்சார்பான பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணை நடத்த முன் வரவேண்டும். அதன் முடிவுப் படி குற்றவாளிகள் என அடையாளம் காணப்படுவோர் களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.” என்று யஸ்வந்த் சின்கா பேசினார்.

சமாஜ்வாடி கட்சி முலாயம் சிங் பாலச்சந்திரன் படுகொலைப் பற்றி உருக்கமாக எடுத்துரைத்து இதற்கு நீதி கிடைக்க அழுத் தங்கள் தர வேண்டும் என்று கூறினார்.

திரிணமுல், இந்திய கம்யூ னிஸ்ட், மார்க்சிஸ்ட் உறுப்பினர் களும் போருக்குப் பிந்தைய நிலைகளை சுட்டிக்காட்டி தமி ழர்கள் இலங்கையில் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படு வதைக் கண்டித்தனர்.

ஆனால் தாங்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு மனதான தீர் மானம் ஒன்றை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண் டிய சூழல் வந்த போது இக் கட்சிகள் தங்களது உண்மை முகத்தை காட்டிவிட்டன.

காங்கிரசுக் கூட்டணியிலி ருந்து தி.மு.க. விலகி, மன்மோகன் சிங் ஆட்சி பெரும்பான்மையை இழந்து ஆட்டம் கண்ட சூழலில் கூட இந்த ஆட்சிக் கவிழ்ந்து விடாமல் முட்டுக் கொடுத்து நிற்கின்றன.

தமிழர்களின் இனப் பிரச் சினை காரணமாக இந்த ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது என்ப தில் வடநாட்டுக் கட்சிகள் கண் ணும் கருத்துமாக இருக்கின்றன. அனைத்திந்தியக் கட்சிகளின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆதர வான கருத்துக் கொண்டிருந் தாலும் அது அக்கட்சிகளின் அனைத்திந்திய முடிவாக வராது. என்பது மீண்டும் வெளிப்பட் டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்சினை யில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளை யும், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்திந்திய செயலாளர்களில் ஒருவரான தோழர் து.இராசாவும் அக்கறைக் காட்டினாலும் அக் கட்சியின் நாடாளுமன்ற மக்க ளைவைக் குழு தலைவர், அக் கட்சியின் அனைத்திந்திய தொழிற்சங்கத் தலைவர் குரு தாஸ்தாஸ்குப்தா இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதையும் மக்களவையில் அனுமதிக்க முடி யாது என்று கூறினார்.

இதற்கு முன்னர் அக் கட்சி யின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் பரதனோ, இப் போதைய தோழர் சுதாகர் ரெட்டியோ இதை ஒரு அனைத் திந்திய பிரச்சினையாக உரிய அழுத்ததோடு சொல்வதே கிடையாது.

இதே தோழர் குருதாஸ் தாஸ்குப்தா கேரள மீனவர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட இத்தாலி நாட்டைச் சேர்ந்த இரண்டு மாலுமிகளை இந்தியாவுக்கு கொணர்வதில் சிக்கல் நேர்ந்தபோது நாடாளு மன்ற மண்டபம் அதிர குரல் எழுப்பினார்.

பா.ச.க. தமிழகத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத் தீர்மானத்தை கோரிய போதும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுஷ்மா சுவராஜ் அவ்வாறான தீர்மானம் வருவதைக் கடுமை யாக எதிர்த்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தளவில் அதன் அனைத் திந்தியத் தலைமையும், அதன் தமிழகக் கிளையும் ஈழத்தமிழர் களுக்கு எதிராக சிங்களப் பேரின வாதத்திற்கு ஆதரவாக ஒரே குரலில் பேசி வருகின்றன.

இலங்கையில் தமிழின அழிப்பு நடந்ததை அவர்களுக்கு நாம் உரியவாறு எடுத்துக் கூறா ததால் ஏற்பட்ட நிலை அல்ல இது. ஏனெனில் இதே தலைவர் கள் 7.3.2013 அன்று நாடாளு மன் றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பி னர்களோடு இணைந்து அங்கு நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் பற்றி உரத்துப் பேசியவர்கள்தாம். தமிழ்நாட்டு உறுப்பினர்களோடு சேர்ந்து வெளிநடப்பு செய்தவர்கள் தாம்.

உண்மையில் இச்சிக்கலில் இவர்களுக்கு அக்கறை இருந் திருக்குமானால் மன்மோகன் ஆட்சி பெரும்பான்மை இழந் ததை சாதகமாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான வலுவான தீர்மானத்தை வற்புறுத்தியிருக்க முடியும். ஆனால் நேர் மாறாக நடந்து கொண்டார்கள்.

கட்சி சிக்கலா? இந்தியத்தின் இனப்பகையா?

தமிழர்களுக்கு எதிரான கொள்கை ஒரு கட்சி சார்ந்த அல்லது சோனியா என்ற ஒரு தலைவரின் பழிவாங்கல் உணர்ச் சியை மட்டுமே சார்ந்த சிக்கலல்ல. இராசீவ் காந்தியின் கொலையை சாக்கிட்டு சோனியா மேற் கொள்ளும் பழிவாங்கும் அரசிய லுக்கு இச்சிக்கலில் முக்கியப் பங்குண்டு என்பதை மறுப்ப தற்கில்லை.

நாடாளு மன்றத்தி லேயே இலங்கையில் எனது கணக்கு இன்னும் தீர்க்கப்பட வில்லை என்று இராகுல் காந்தி கொக்கரித்ததை தமிழர்கள் மறந்து விடமுடியாது. ஆனால் ஈழத்தமிழர் தொடர் பான இந்திய அரசின் அணு முறையை வெறும் காங்கிரசுக் கட்சியின் பிரச்சினையாக அல்லது சோனியா காந்தி என்ற ஒரு தலைவரின் பழிவாங்கல் அரசியலாக மட்டுமே சுருக்கிவிட முடியாது. இவ்வாறான அணுகு முறை காங்கிரசுக்கு எதிரான தேர்தல் அரசியல் அணி வகுப்பில் இந்த இனச்சிக்கலை பயன்படுத் திக் கொள்ள சிலருக்கு உதவுமே அல்லாமல் இப்பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற உதவாது.

அதேபோல் இதை வெறும் கருணாநிதி எதிர்ப்பு அரசியலாக தாழ்த்திவிடக்கூடாது.

கருணாநிதியும், அவரது தி.மு.க.வும் ஈழத் தமிழர் இனப் படுகொலையில் செய்திருக்கிற துரோகம் மன்னிக்கப் பட முடியாத இரண்டகம் என்பதில் இருவேறு கருத்திற்கு இட மில்லை. 2009 இல் இன அழிப் புப்போர் உச்சத்தில் இருந்த போது சிங்கள – இந்திய கூட்ட ணிக்கு ஆதரவாக கருணாநிதி ஒரு உளவியல் போர் நடத்திக் கொண்டிருந்தார்.

தமிழீழமே பிணக்காடாய் மாறியிருந்த அந்த மே மாதத்தில், தமிழர்கள் இல்லங்களெல்லாம் இழவு வீடாக மாறியிருந்த சூழ லில் அவர் குடும்பத்தோடு தங்கி தில்லியில் பதவி பேரம் பேசிக் கொண்டிருந்தார். இதைச் சுட் டிக் காட்டி சில செய்தியாளர் கள் கேட்ட போது “ஓரில் நெய்தல் கறங்க, ஓரில் ஈர்ந்தன் முழவின் பாணி ததும்ப.." என்று தொடங்கும் புறநானூற்று பாடலை எடுத்துக்காட்டி தமிழர் கள் அமைதியாக இருக்கு மாறு கூறினார்.

ஒரு வீட்டில் சாவுப் பறை ஒலித்துக் கொண்டிருக்க இன்னொரு வீட்டில் திருமண குதூகலத்தோடு மணவிழாப்பறை ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு வீட்டில் தலைவி பொருள் தேடிச் சென்ற தலைவன் வீடு திரும்பாததால் கண்ணீரோடு நிற்க, இன்னொரு வீட்டில் புது மணத்தில் இணைந்த ஆணும் பெண்ணும் கொஞ்சிக் கொண்டிருந்தனர். இந்த இரு வேறு சூழலும் உலகத்தின் இயற்கை இந்த இயல்பை உணர்ந்து அமைதி அடைய வேண்டும் என்று மாபெரும் மெய்யியியலைக் கூறிய பாடல் அது.

ஆனால் இப்பாடலைத் தனது தன்னலத்திற்குத் துணையாக்கிக் கொண்டார் கருணாநிதி.

தமிழர்களின் இல்லங்கள் இழவு வீடாக இருந்த போதும் என்னுடைய வீடு பதவி ஏற்பு விழாவில் மகிழ்ச்சிக் கொண்டி ருப்பதைக் கண்டு கலங்காதீர்கள். இதுதான் உலகத்தின் இயற்கை. எனக்கூறி தமிழகத்தில் கணிச மான மக்களை மடைமாற்றம் செய்ய ஒரு உளவியல் போர் நடத்தியவர்தான் கருணாநிதி.

“போரை நிறுத்து" என்ற ஒற்றை முழக்கத்தில் தமிழகமே கொந்தளித்த போது அந்த போராட்டத்தில் ஈடுபட்ட தனது தோழமைக் கட்சியான விடு தலைச் சிறுத்தைகள் கட்சியினர் உட்பட தமிழின உணர்வாளர் கள் மீது கடும் அடக்கு முறை யைக் கட்ட விழ்த்து விட்டது தான் தி.மு.க. ஆட்சி.

காங்கிரசுக் கூட்டணியிலி ருந்து அன்றைக்கு விலகுவதாக அறிவித்திருந்தால் மன் மோகன் ஆட்சிக்கு ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். என்ற வாய்ப்பை மறுப்பதற்கில்லை. அவ்வாறு செய்யாமல் பதவி அரசியலில் மூழ்கித் திளைத்தார் கருணாநிதி. என்றக் குற்றச்சாட்டு சரியானது.

ஆனால் தி.மு.க. விலகியிருந் தால் அந்த ஆட்சிக் கவிழ்ந் திருக்கும் என்ற கணக்கு வட நாட்டு தலைவர்களின் கொள்கை களை சரியாக அறிந்து கொள் ளாததால் போடுகிற கணக்கு. இப்போது நேர்ந்தது அப்போதும் நிகழ்ந்திருக்கும். உடனடியாக மீண்டும் ஒரு தேர்தலை நாடு தாங்காது. என்ற கூடுதல் காரண மும் அப்போது சொல்லப் பட்டி ருக்கும். தமிழர்களின் இனப்பிரச் சினை காரணமாக இந்திய ஆட்சிக் கவிழ்வதை வட நாட் டுக் கட்சிகள் ஒரு போதும் அனு மதிக்க மாட்டா.

எனவே இது ஒரு கட்சி சார்ந்த சிக்கலல்ல. இன உறவு தொடர்பான சிக்கல். இந்தியா என்ற கட்டமைப்பே தமிழினப் பகைக் கட்டமைப்பு.

புவிசார் அரசியலும், இனப் பகையும்:

கட்சிக் கடந்து இந்தியா ஈழத்தமிழர்களுகெதிராக பகைப் பாராட்டுவதற்கு என்ன காரணம்? கட்சிகள், கூட்டணிகள் என்ற வேறுபாடு மேம்போக்கான சிற் சில அழுத்த மாறுபாடுகளை அளிக்கக் கூடுமென்றாலும், ஈழத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் அணுகுமுறை கட்சி மற்றும் கூட்டணி கடந்த ஒன்று என் பதை மேலே பார்த்தோம்.

இந்தியப் பெருங்கடலில் இலங்கை தீவின் புவிசார் இருப் பிடம் முகாமையானது. எனவே இந்தியப் பெருங்கடலில் தங்க ளது புவிசார் ஆதிக்க நலனை பாதுகாத்துக் கொள்ள சீனா, பாகிஸ்தான், இரஷ்யா, அமெ ரிக்கா போன்ற நாடுகளோடு போட்டிப் போட்டுக் கொண்டு இந்தியா களமிறங்கு கிறது. என்ற மதிப்பீடு இங்கு சில தோழர்களால் முன் வைக்கப்படுகிறது.

புவிசார் ஆதிக்க நலன்கள் இந்திய வெளியுறவுக் கொள்கை யில் பொதுவாகவும், இலங்கை தொடர்பான அணுகு முறையி லும் செயலாற்றுகின்றன. என் பதை முற்றிலும் மறுப்பதற் கில்லை. ஆனால் ஈழத்தமிழர் இனச்சிக்கலில் இந்தியாவின் அணுகு முறைக்கு அதன் புவிசார் அரசியல்தான் முதன்மைக் காரணமா என்பது விவாதத்திற் குரியது.

‘புவிசார் அரசியல் நலன்களுக் காகத்தான் இலங்கை அரசோடு இணைந்து போகிறோம்’ என வேறுவேறு சொற்களில் இந்திய ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இலங்கைக்கு எதிராக பொருளா தார தடை விதித்தால் அந்த இடத்தை சீனா கைப்பற்றிக் கொள்ளும் என்றும், படை வகையில் இலங்கைக்கு உதவி செய்ய வில்லையென்றால் சீனா அங்கு இராணு வழியில் காலூன்றி விடும் என்றும், பன்னாட்டு அரங்கில் இலங் கைக்கு ஆதரவாக நாம் நிற்க வில்லையென்றால் சீனா இலங் கையோடு நெருங்கிவிடும் என் றும் இந்திய ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார்கள். இந்தியாவின் புவி சார் நலன்கள் என் பதைத் தான் ஆட்சியாளர்களும் கூறுகிறார்கள்.

இலங்கை குறித்த இந்தியா வின் கொள்கைக்கு அதன் புவி சார் ஆதிக்க நலன் ஒரு கார ணமாக இருந்தாலும் அது ஈழத் தமிழர்களுக்கு எதிராக வடிவம் கொள்வதற்கு புவிசார் அரசியல் முதன்மைக் காரணம் அன்று.

ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவின் புவிசார் நலன்களுக்கு எதிராக இருந்ததே இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க சுடுமலை உரையிலிருந்து 2008 மாவீரர்நாள் உரை வரை தமிழீ ழத் தேசியத் தலைவர் பிரபாகரன் இதனை மீண்டும் மீண்டும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

கடற்புலிகள் வலுவாக இருந்த வரை இந்தியாவுக்கு எதிரான எந்த சக்தியும் இலங்கை கடற் பரப்பில் தலை நீட்ட முடிய வில்லை. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் புவிசார் நலன் களை பாதுகாக்கும் நட்பு சக்தி யாக தமிழீழம் விளங்கும் என் பதை விடுதலைப்புலிகள் மீண் டும் மீண்டும் உறுதி கூறியி ருக்கிறார்கள். இந்திய வணிக நிறுவனங்களுக்கு, தொழில் நிறு வனங்களுக்கு முற்றிலும் எதிரான பொருளியல் கொள்கையை விடுதலைப்புலிகள் கொண்டிருக்க வில்லை. போரில் தரை மட்டமான ஒரு நாட்டை, பொருளி யல் முற்றுகையில் வைக்கப்பட்ட ஒரு நாட்டை புலம் பெயர் தமிழர்களின் நிதியை வைத்து மட்டும் மீளமைத்து விடமுடி யாது என்ற உண் மையை அறியா தவர்களல்ல புலிகள்.

எந்த விடுதலை இயக்கத் தையும் போல தற்சார்பான ஒரு தேசத்தை புலிகளும் கட்டி எழுப்ப முயல்வார்கள் என்பது உண்மையே ஆயினும் 1991 இல் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட புதிய நிலைமை களைக் கருத்தில் கொண்டு கலப்பு பொருளியலே சுதந்திர தமிழீழத்தின் பொருளியல் கொள்கையாக இருக்கும் என விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் பாலசிங்கம் பல முறை தெளிவுப்படுத்தியிருக்கிறார். எனவே இந்தியாவின் பொருளியல் நலன்களுக்கோ, புவிசார் அரசியல் நலன்களுக்கே எதிராக புலிகள் இல்லை என்பது தெளிவு.

மறுபுறம் இந்தியா எவ்வள வுதான் உதவி செய்தாலும் சிங்கள ஆட்சியாளர்கள் சீனாவின் பக்கமே அதிகமாக சாய்ந்தார்கள் என்பதும் வெளிப்படை உண்மை.

இந்திய அரசுக்கு இந்த உண்மைகள் தெரியாததல்ல. இந்திய பெருங்கடலில் தங்களது பொருளியல் நலன்களையும், புவிசார் நலன்களையும் விடு தலைப்புலிகளின் துணையோடே அவர்கள் பாதுகாத்துக் கொண்டி ருக்க முடியும். சிங்கள ஆட்சி யாளர்களை விட விடுதலைப் புலிகள் நம்பகமான நண்பர் களாக இருந்திருப்பார்கள்.

இவ்வளவு இருந்தும் தமிழினப்படுகொலைக்கு இந்தியா துணை செய்ததற்கு முதன்மைக் காரணம் இந்தியாவின் தமிழினப் பகைக் கொள்கையே ஆகும். எந்த ஒரு அரசுக்கும் ஒரு வர்க்கச்சார்பு இருப்பது போலவே இனச்சார்பும் இருக்கும். வரலாறு நெடுகிலும் இது தவிர்க்க முடியாதது. இந்திய அரசானது இந்திய மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகளுக்கு சார்பான வர்க்க கொள்கை மட்டும் கொண்ட அரசு அன்று. ஆரிய இனச்சார்பான இனக் கொள்கைக் கொண்ட அரசும் ஆகும்.

அரசமைப்புச் சட்டத்தில் இந்தியாவிற்கு சூட்டப்பட்டுள்ள பாரதம் என்ற பெயரும், சக்கரம், சிங்கம், பத்மபூஷன், ஆரிய பட்டா, போன்ற குறியீடுகளும் ஆரிய இனச்சார்பானவையே. இந்தியாவின் அடையாளமாக ஆரியக் குறியீடுகளும், சமற் கிருத மயமான இந்தியும் முன்வைக் கப்படுகிறது. ஆரியப் பெருமை களே இந்தியாவின் வரலாற்று பெருமைகளாக வலியுறுத்தப் படுகிறது.

பார்ப்பன வேத மதம் மட்டுமின்றி ஜைன, புத்தமதங் களும், ஆரிய மதங்களாக இருப் பதால்தான் வடநாட்டவர்கள் சாதி பேதமின்றி தமிழினத்திற்கு எதிராக அணி திரளமுடிகிறது.

ஆரிய அடையாளங்கள் ஒட்டு மொத்த இந்தியாவின் அடையாளங்களாக மேலாண்மை செய்து தமிழின அடையாளங்களை, தமிழ் மொழியை நசுக்குகின்றன. வரலாறு நெடுகிலும் ஆரிய ஆதிக் கத்திற்கும், சமற்கிருத மேலாண் மைக்கும் எதிராக தமிழினமும், தமிழ்மொழியும் மட் டுமே இந்த துணைக் கண்டத்தில் போராடி வந்திருக்கிறது. மற்ற மொழியினங்கள் பெரும்பாலும் ஆரியத் தோடும், சமற்கிருதத் தோடும் வெவ்வேரு அளவுகளில் கலந்து விட்டதால் இந்தியத் தோடு அவர்களால் சமரச வாழ்வு நடத்த முடிகிறது.

இந்தியத்தோடு மோதிக் கொண்டிருக்கிற காசுமீர், நாகா, மணிப்பூரி போன்ற தேசிய இனங்கள் ஆரிய வளையத்திற்கு வெளியில் இருப்பவை என்பது தற்செயலானதல்ல.

ஆரிய இந்தியத்தின் உள் நாட்டுத் தமிழினப்பகைக் கொள் கையின் நீட்சியே. ஈழத் தமிழர் களுக் கெதிரான இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையாகும். காவிரி, முல்லைப்பெரியாறு, மூன்றுதமிழர் சாவுத்தண்டனை, போன்ற பல சிக்கல் களிலும் அது தெளிவாக வெளிப்படுகிறது.

நர்மதை ஆற்று நீர்ப் பகிர்வு சிக்கல், கிருஷ்ணா ஆற்று நீர்ச் சிக்கல் ஆகியவற்றில் சட்டத்தைச் செயல்படுத்தும் இந்திய அரசு காவிரிச் சிக்கலில் சட்ட விரோதமாக செயல்படுவதைப் பார்க்கிறோம். தமிழினப் பகை அணுகுமுறை இது.

மீனவர் சிக்கலில் அது மேலும் துல்லியமாகத் தெரிகிறது. கேரளத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொலை தொடர்பான பிரச்சினையில் இத்தாலியோடு தூதரக உறவைக் கூட துண்டிக்கத் துணிந்துள்ள இந்திய அரசு, இத்தாலித் தூதரை பிணைக் கைதி போல் வைத்த இந்திய அரசு 600 தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைப்படை கொன்ற பிறகும் அசையவில்லை. இலங்கை அரசுக்கு எதிராக “கண்டனம்” என்ற சொல்லைக் கூட உச்சரிக்க முன்வராதவர் தான் இந்தியப் பிரதமர். கேரள மீனவர் சிக்கலில் இத்தாலிக்கு எதிராகக் கூச்சல் எழுப்பிய வட நாட்டுத் தலைவர்கள் தமிழக மீனவர்கள் தொடர்பாக இலங் கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியதே இல்லை.

உள்நாட்டு தமிழர் தொடர்பான பகைப்போக்கே வெளியுறவிலும், ஈழத்தமிழர் சிக்கலிலும் வெளிப்படுகிறது. ஆரியத்தின் இன்றைய நவீன வடிவம் இந்தியா. ஆரியத்தின் இன்னொரு கிளை சிங்களம். எனவே ஆரிய இந்தியாவோடு, இலங்கை சிங்களமும் இயல்பான கூட்டாளியாக செயல்பட்டு தமிழினத்தை அழிக்கிறது.

இந்த இந்தியத்திற்கும் சிங்க ளத்திற்கும் இடையிலான இன உறவு பல்வேறு வரலாற்று ஆய்வுகளால் மெய்பிக்கப் பட்டி ருந்தாலும் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் இணையங் களில் வெளிப்படுத்தியுள்ள கருத்து இதற்கு அண்மைய சான்றாகும். “சிங்களர்கள் வட இந்திய பூர்வீக வாசிகள்" என்று குறிப்பிட்டுள்ள கரியவாஸம் சிங் களர்களின் உரிமைகளுக்காகவே இந்தியா அதிகம் கவலைப்பட வேண்டும் என்று உரிமையோடு இந்தியாவை கேட்டுக் கொண் டுள்ளார்.(காண்க: தினமணி, சென்னை, 27.3.2013)

எனவே தமிழின உணர் வாளர்கள் தமிழர் சிக்கல்களை ஒரு கட்சி சார்ந்த அல்லது ஒரு கூட்டணி சார்ந்த சிக்கலாகப் பிறழ்ச்சியாக புரிந்துகொள்ளக் கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியத்தின் இனக்கொள்கை என்ற உண்மையை உணர வேண்டும். இந்தியத்தின் இந்த தமிழினப்பகைப் போக்கு கட்சிக் கடந்தது. எனவே எக்காரணம் கொண்டு தேர்தல் பதவி அரசியலுக்குள் வைத்து இனச் சிக்கலுக்கு தீர்வுகாண முயலும் உதவா தப் பாதைக்கு தமிழர்கள் சென்று விடக்கூடாது.

இந்தியா தமிழினத்தைப் பகையாகப் பார்க்கிறது. எனவே ஏதாவது கூட்டணித் தந்திரங்கள் செய்து இந்தியாவைப் புரிய வைப்பது இயலாது. இந்தியா வைப் பணிய வைக்க முடியுமே தவிர, புரிய வைக்க முடியாது.

இந்த அடிப்படை உண்மை யைப் புரிந்து கொண்டால்தான் உடனடிக் கோரிக்கைகளை அடைவதற்கு உத்தி வகுக்கவும் முடியும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் அடிமை நிலைக்கு எதிரான விடுதலைப் போராட்டமும், ஈழத் தமிழர்கள் விடுதலை போராட்டமும் ஒரு சேர நடைபெற வேண்டும்.

இதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவிக்கை நீட்ட வேண்டும்.

Pin It