51
உனது சிலை நொறுக்கித் தூசியாக்கப்பட்டது
கடவுளின் தூசி உனது சிலையை விட
மிகப் பெரியது என் நிரூபிக்க.
52
மனிதன் அவனது வரலாற்றில்
தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை,
அவன் அதன்மூலம் போராடுகிறான்.
53
சிம்னி விளக்கு மண் விளக்கைத்
தனது ஒன்றுவிட்ட சகோதரியாய்
ஏற்க மறுத்து வெறுக்கிறது,
நிலா எழுகிறது, சிம்னி விளக்கு
மென்சிரிப்புடன் மண்விளக்கை
"என் அன்பே, அன்புச் சகோதரியே"
என்று அன்பாய் அழைக்கிறது.
54
கடல் பறவைகள் கூடிச் சந்திப்பது போல்
அலைகளை நாம் அருகில் சந்திக்கிறோம்
கடல் பறவைகள் பறந்துவிட்டன
அலைகள் புரண்டு ஓடிவிட்டன
நாம் அதைவிட்டு விலகுகிறோம்.
55
நான் கரையேறிய படகு போல்
எனது தினசரி வேலை முடிந்தது
மாலை நேர அலைகளின் இசையை
மனதில் அசை போட்டதோடு.
56
வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டது
நாம் உழைத்து அதற்கு வழங்குகிறோம்.
57
மகத்தானவற்றை மிக நெருக்கமாய்
நாம் நெருங்குகிறோம், நாம்
பணிவில் மகத்தான வராகும் போது.
58
மயிலின் தோகைச் சுமையைப் பார்த்து
சிட்டுக்குருவி வருத்தப்படுகிறது.
59
நிலைமாற்றங்கள் குறித்து ஒருபோதும்
பயப்படாதே-முடிவற்ற காலம்
இப்படித்தான் தன்குரலில் பாடுகிறது.
60
சூறாவளி வழியற்ற சாலையில்
குறுக்குச் சாலையைத் தேடுகிறது
திடீரென ஏதுமற்ற வெளியைத்
தேடி முடிந்து போகிறது.
61
எனது மதுவை எனது கோப்பையிலேயே
அருந்து நண்பனே
மற்றவர் கோப்பைக்கு மாற்றினால்
நுரைக்குவியலை இழந்து விடும்.
62
குறைவற்ற காதலுக்காக
நிறைவு அழகு மேடையில் ஏறுகிறது.
63
கடவுள் மனிதனுக்குச் சொல்கிறார்
"நான் உன்னைக் குணப்படுத்துவதால்
உன்னைக் காயப்படுத்துகிறேன்
நேசிப்பதால் தண்டிக்கிறேன்.
64
ஒளிதருவதால் சுடருக்கு நன்றி
ஆனால் அதன் நிழலில் விளக்கை
நிலையாய் நின்று சுமப்பவனை
மறவாதே ஒருபோதும்
65
சிறுபுல்லின் மீது சிறுநடை உனது
ஆயினும் நீ மிதித்து நசுக்குகிறாய் பூமியை.
66
இளமலர் மொட்டவிழ்த்து அழுகிறது
"அன்பு உலகமே மங்கி விடாதே"
67
கடவுள் மாபெரும் அரசாட்சிகளால்
அணிகலனோடு வளர்கிறார்
ஒருபோதும் சிறு மலர்களால் அல்ல.
68
தவறானது தோல்வியைத்
தவிர்க்க முடியாது, ஆனால்
சரியானது வென்றே தீரும்.
69
நீர்வீழ்ச்சி பாடுகிறது, எனது
நீர் முழுவதையும் மகிழ்வோடு தருகிறேன்
தாகம் தணிக்க சிறிது போதுமென்றாலும்.
70
இடைவிடாத இன்பத்தில் திளைக்கும்
இந்தப்பூக்களை எங்கிருந்து
நீருற்று வீசி எறிகிறது?
71
விறகு வெட்டியின் கோடரி
மரத்திடம் காம்பு கேட்டது
மரமும் கொடுத்து விட்டது
72
என் இதயத்தின் தனிமையில்
இந்த விதவையான மாலை நேரப்
பெருமூச்சை நான் உணர்கிறேன்
மூடுபனியும் மழையும் முகத்திரையாய்.
73
நிறைவான காதலிலிருந்துதான்
கற்பு எனும் ஒரு செல்வம் வருகிறது.
74
மூடுபனி காதலைப் போல
குன்றுகள் மீது விளையாடுகிறது
அழகின் வியப்பை அள்ளுகிறது.
75
உலகை நாம் தவறாக வாசிக்கிறோம்
ஏமாற்றுவதாய்ச் சொல்கிறோம்.
76
கவிதைக் காற்று கடலின் மேலே
கானகம் தன் குரலைத் தேடுகிறது
77
ஒவ்வொரு குழந்தையும் ஒரு செய்தியோடு
கடவுள் மனிதனை அவநம்பிக்கை
கொள்ள வைக்கவில்லை என்றே.
78
புல் தனது கூட்டத்தை
பூமியில் தேடுகிறது
மரம் தனது தனிமையை
வானில் தேடுகிறது.
79
மனிதன் அவனுக்கெதிராக
அவனே தடைவிதிக்கிறான்.
80
என் நண்பனே உனது குரல்
என் இதயத்தில் அலைகிறது
கடலின் சங்கேத ஒலிபோல்
ஊசி இலைமர ஓசைபோல்
81
இது என்ன இருளின் ஜூவாலை
கண்ணால் காண முடியாமல்?
விண்மீன்கள் யாருடைய தீப்பொறிகள்?
82
வாழ்வு கோடை மலர்கள் போல்
அழகாக இருக்கட்டும்
மரணம் இலையுதிர்காலத்து
இலைகள் போல் இருக்கட்டும்
83
நல்லது செய்ய விரும்புவோன்
வாசற் கதவைத் தட்டுகிறான்
நேசிப்பவனுக்கே வாசல் திறக்கிறது.
84
மரணத்தில் பலரும் ஒருவராவார்,
வாழ்வில் ஒருவர் பலராவர்
மதம் ஒன்றாகவே இருக்கும்
கடவுள் மரிக்கும் போது.
85
கலைஞன் இயற்கையின் காதலன்
அதனால் அவன் அவளின் அடிமையாகவும்
அவளது எஜமானனுமாய் இருக்கிறான்
86
என்னிலிருந்து எவ்வளவு தூரத்தில்
இருக்கிறாய், ஓ கனியே?
நான் உன் இதயத்தில் மறைந்து
இருக்கிறேன் மலரே.
87
இருளில் பேராவல் வீழ்கிறது
ஆனால் பகலில் அதைக் காணோம்
88
தாமரை இலைக்கீழ் நீயொரு
பெரும் பணித்துணியாய்
நான் அதன் மேலே ஏரிக்கு
சிறு பனித் துளியாய்.
89
உறையின் உள்ளடக்கம் தெளிவற்றது
வாளின் கூர்மையைக் காக்கும்போது
90
இருளில் ஒன்று ஒரே மாதிரி தெரிகிறது
ஒளியில் ஒன்று பல மாதிரி தெரிகிறது
91
புல்லின் துணையோடு மாபெரும் பூமி
விருந்தாளிகளை வரவேற்கிறது
92
இலைகளின் பிறப்பும் இறப்பும்
சுழிக்காற்றில் வேகமாய்ச் சுழல்கிறது
அது பெரு வட்டாங்களைத் தாண்டி
நட்சத்திரங்களூடே மெதுவாய்க் கலக்கிறது.
93
அதிகாரம் உலகுக்குச் சொன்னது
நீ எனக்கே சொந்தம்
அவளது ஆட்சியில் உலகம் கைதியாய்;
காதல் உலகுக்குச் சொன்னது
நான் உனக்கே சொந்தம்.
உலகம் அதற்கு சுதந்திரத்தை வழங்கியது.
94
மூடுபனி என்பது பூமியின் ஆசை
அது சூரியனை மறைக்கிறது.
யாருக்காக அது அழுகிறது?
95
உறுதியாய் இரு என் இதயமே
பெருமரங்கள் பிரார்த்திக்கின்றன
96
முடிவற்ற சங்கீதத்தின் மீது
நடவடிக்கையின் பேரொலி
வெறுப்பைத் தெரிவிக்கிறது
97
வாழ்வெனும் நீரோடையின் பாய்ச்சலில்
பிற சகாப்தங்களை நினைக்கிறேன்
காதலும் மரணமும் மறந்துபோயின
கடந்து போகும் சுதந்திரத்தை
நான் கடுகி உணர்கிறேன்.
98
மணப்பெண்ணின் முகத்திரை
என் ஆன்மாவின் துயரமாகும்
அது இரவில் அகற்றப்படும்
அதற்கே காத்திருக்கிறது.
99
வாழ்வெனும் நாணயத்தின் மதிப்பு
மரணமெனும் முத்திரையால்;
அதனால் உண்மையின் மதிப்புமிகு
வாழ்வினை வாங்கமுடியும்.
100
வானத்தின் ஒரு மூலையில்
மேகம் பணிவாய் நிற்கிறது.
காலை, உயர்ந்த மகுடம் சூட்டுகிறது.

Pin It