“மாறுதல் ஒன்றே மாறாதது” என்பது மார்க்சியத்தின் மணிமொழி. உலக வாழ்வில் மாறுதல் என்பது மறுதலிக்கமுடியாத ஒன்று. ஆனால், அந்த மாற்றம் என்பது முன்னேற்றத்தை நோக்கியதா அல்லது ஏமாற்றத்தை நோக்கியதா என்று கேள்வி எழுப்புவது முக்கியமானது.

“மாற்றம் வேண்டும்” இதுதான் மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலின் போது மம்தா பானர்ஜியும், அவருக்குப் பக்கபலமாக நின்ற ஊடகங்களும் முன்வைத்த கோஷம். இது மக்களிடம் ஓரளவு எடுபட்டுள்ளது என்பதை தேர்தல் முடிவு உணர்த்தியது.

மேற்குவங்கத்தில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி வெற்றிபெற்று ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. அப்போது துவங்கி தொடர்ச்சியாக நடைபெற்ற அத்தனை சட்டமன்றத் தேர்தல்களிலும் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது இடதுமுன்னணி. இந்திய ஜனநாயக வரலாற்றில் மட்டுமல்ல, உலக ஜனநாயக வரலாற்றி லும் இது ஒரு மகத்தான சாதனையாகும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளை யாட்டுப்போட்டி ஊழல், ஆதர்ஸ் ஊழல், கர்நாடகத் தில் எடியூரப்பா வகை யறாவின் ஊழல் என பத்திரிகைகளின் பக்கங் களை ஊழல் குறித்த செய்திகளே அடைத்துக் கொள்கின்றன. இந்த நிலையில் இந்த பின் னணியில் மேற்குவங்கத்தில் இடது முன்னணி அரசில் இடம்பெற்ற முதல்வர்கள் மீதோ, அமைச்சர்கள் மீதோ ஊழல் செய்தார்கள் என எதிர்க்கட்சிகள்கூட சுட்டுவிரல் நீட்டி குற்றம் சாட்ட முடிந்ததில்லை என்பதிலிருந்தே நின்று நிலைபெற்றிருந்த இடது முன்னணி ஆட்சியின் மேன்மையை புரிந்துகொள்ளமுடியும்.

மேற்குவங்கத்தில் இடது முன்னணி ஆட்சியில் நிலச்சீர் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்பட்டது. இதனால், எளிய மக்களின் கைகளுக்கு நிலம் வந்து சேர்ந்தது. இந்தியா முழுவதும் உபரி நிலமாக அறிவிக்கப் பட்டது 73 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர். இதில் கையகப்படுத்தப் பட்டது 64 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர். இதில் விவசாயத்திற்கு பிரித்துக் கொடுக்கப் பட்டது 54 லட்சத்து 2 ஆயிரம் ஏக்கர். மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சிக் காலத்தில் மட்டும் 11 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலம் 30.4 லட்சம் ஏக்கர் ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளது. அதாவது, நாடு முழுவ தும் பகிர்ந் தளிக்கப்பட்ட மொத்த நிலத்தில் 24 சதவீதம் மேற்குவங்கத்தில் மட்டும் பிரித்துத் தரப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏழை களுக்குத் தர தரிசுநிலமே இல்லை என ஆண்டவர்களும், ஆள்பவர்களும் மாறிமாறி சாதித்துவரும் பின்னணியில் இந்த சாத னையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எளிய மக்களுக்கு நிலம் கிடைத்ததால் அவர் களது நில தாகம் தணிந்தது மட்டுமல்ல, விவசாய உற்பத்தியில் மேற்கு வங்கம் தன்னிகரில்லா சாதனைகளைப் புரிந்தது. அரிசி மற்றும் காய்கறி உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம் பிடித் தது.

இவ்வாறு நிலம் பெற்றவர் களில் 64 சத வீதம் பேர் தலித்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள். நிலக்குவியல் உடைந்தது மட்டுமின்றி, ஜாதி ஆதிக்கத்திற்கான ஆதாரமும் உடைக்கப் பட்டது.

மாற்றம் வேண்டும் என்று முழங்கி ஆட்சிக்கு வந்த மம்தாவின் நிர்வாகத்தின்கீழ் என்ன நடக்கிறது தெரியுமா? ஊடகங்கள் அந்த உண்மையின்மீது வெளிச்சத்தை வீசாவிட்டாலும் கசிந்துவரும் செய்திகள் உண்மையை உணர்த்து கின்றன. ஏற்கெனவே, நிலத்தை இழந்த முதலைகள் வாய் பிளந்து மீண்டும் ஏழை விவசாயிகளின் நிலத்தை விழுங்க துவங்கியுள்ளனவாம். இதன் தீவிரம் எதிர்காலத்தில் முழுமையாக தெரியவரும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளின் வழியாக செலவிடப் பட்டது. இதனால், ஜனநாயகத்தின் அடிவேர் வரை அதிகாரம் எனும் நீர் சென்றது. இதில், வெந்நீர் ஊற்றப்படுமா, வேர்கள் வெட்டப்படுமா என்பதற் கெல்லாம் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

இந்திய பிரிவினையின்போது நேரடியாக துண்டாடப்பட்டு ரத்தபூமியாக மாறிய நிலங்கள் வங்கமும், பஞ்சாப்பும். வங்க மண்ணில் நிகழ்ந்த மதக்கலவரங்கள் வரலாற்றில் ரத்தவரிகளால் எழுதப்பட்டுள்ளது. ஆனால், இடது முன்னணி ஆட்சியில் மேற்குவங்க மண்ணில் ஒரு மதக்கல வரம்கூட நடந்தது இல்லை. ஒரு உயிர்கூட பறிக்கப்பட்டதே இல்லை. மதச்சார்பின்மையின், மத நல்லிணக்கத்தின் சின்னமாக ஜொலித்தது வங்கம்.

இந்தியாவின் பிற மாநிலங்களோடு குறிப்பாக, குஜராத்தோடு ஒப்புநோக்கி உணரப்படவேண்டிய செய்தி இது.

மாற்றம் என்ற சொல்லை மந்திரமாக உச்சரித்த மம்தா ஆட்சியில் என்ன நடக்கிறது. நாடாளு மன்றத் தேர்தலில் இடது முன்னணிக்கு தோல்வி ஏற் பட்ட உடனேயே துவங்கிவிட்டது திரிணாமுல் - மாவோயிஸ்ட் கும்பலின் படுகொலைத் தாண்ட வம். நாடாளுமன்றத் தேர்தல் முதல் சட்ட மன்றத் தேர்தல் வரையிலான காலத்தில் இடது முன்னணி யின் தலைவர்கள், ஊழியர்கள் 388பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு மாத காலத்திற்குள் 17 தோழர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் போலீசார் துணைநிற்க திரிணாமுல் குண்டர்களால் ஊரை விட்டு அடித்துத் துரத்தப்படுகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின் அலுவல கங்கள் நிர்ப்பந்தமாக கைப்பற்றப்படுகின்றன. அலுவலகங்களில் அவர் களே ஆயுதங்களை வைத்துவிட்டு ஆயுத தொழிற்சாலை நடத்திய தாக அபாண்டமான குற்றம் சாட்டி அலுவ லகங்களை தரைமட்ட மாக்குகின்றனர். பெண் கள் பாலியல் வல்லுற வுக்கு கொடூரமான முறையில் உட்படுத்தப் படுகிறார்கள். அதிகார போதையில் திரிணா முல் காங்கிரசார் நடத் தும் வன்முறைத் தாக்கு தல்களில் பச்சிளம் குழந் தைகள்கூட தப்ப முடிய வில்லை.

மனித உரிமை குறித்து வாய் கிழிய பேசும் அறிவுஜீவிகள் தங்கள் வாய்களுக்குப் பூட்டு போட்டுக் கொண் டார்கள். முதலாளித்துவ ஊடகங்களோ மம்தா வின் செருப்பணிந்த பாதங்களைக் காட்டு கின்றனவேயன்றி, நெருப்பை ஏந்தி அழிவு வேலையில் ஆனந்தமாக ஈடுபட்டுள்ள அவரது கட்சி குண்டர்களின் பக்கம் திரும்ப மறுக்கின்றன.

மேற்குவங்கத்தில் இடதுமுன்னணிக்கு தோல்வி ஏற்பட்டாலும் தேர்தலில் 1 கோடியே 90 லட்சம் வாக்காளர்கள் அந்த அணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆலமரத்தின் இலைகள் உதிர்ந்திருக் கலாம். ஆனால், வேரும் விழுதுகளும் மண்ணில் தான் பதிந்திருக்கின்றன.

34 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் தவறுகளே நடக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியோ இடதுமுன்னணியோ சாதிக்கவில்லை. மாறாக, விலகிச்சென்ற மக்களின் விசுவாசத்தை மீட்பது எப்படி என்ற ஆழமான விசாரணையில் இறங்கி யுள்ளனர். தவறுகளை திருத்திக்கொள்வோம். மக்களின் நம்பிக்கையை மீட்போம் என்று மனம் திறந்து கூறியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தடமாற்றம் நிகழவில்லை. அடி களை அளந்துவைத்து அந்த இயக்கம் முன்னேறும்.

தோல்வியும்கூட கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு ஆசான்தான்.

Pin It