“1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவ தும் கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது அந்தப் பகுதி மட்டும் கலவரப்பட்டுக் கிடந்தது.”

இந்த மாதிரியான ஒரு துவக்கத்தோடு, நாவல் எழுதப் பட முடியுமா..? - எழுதி இருக் கிறார் சுபாஷ் சந்திர போஸ். அதுவும் வரலாற்று புதினம்-வர்க்கப் போராளிகளைப் பற்றிய நாவல். தமிழகத்தில் முதன் முதலாய் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ் வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான ‘வாட்டாக் குடி இரணியன்-சாம்பவான் ஓடைச் சிவராமன்’ இருவரின் வாழ்க்கைச் சரிதத்தை இரட்டைப் புதினங்களாகத் தமிழுக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

அனேகமாய் இந்த இரட் டைப் புதினம் என்பது தமிழி லக்கிய வரலாற்றில் புதிய வகை யினைச் சார்ந்தது எனக்கொள்ள வாய்ப்புண்டு. இரட்டைக் காப் பியம், இரு இதிகாசங்கள், இரட்டைப்புலவர் என அறிந் திருந்தாலும், புதின வகையில் இது புதிது. இது ஒருகல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, ஒரு வாசிப்பில் இரண்டு வரலாற்றுச் சான்றுகள் வாசக னுக்கு கிடைக் கின்றன.

1947 இல் இந்திய விடுத லைக்குப் பின் பண்ணையார்கள் காங்கிரசில் சேர, ஆளுங்கட்சி யின் ஆதரவோடு பண்ணை அடிமை முறை வளர்த்தெடுக்கப் படுகிறது. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும் பண் ணையாருக்கு ஏவல் துறையாய் துணை நிற்க, விவசாயக் கூலி களின் சொல்லொண்ணாத் துயரமோ வரலாறாய் நிற்கிறது.

இந்தச் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி தடைகள் பல கடந்து தலித்-பாட்டாளி மக்களுக்கு ஆதர வாய் ஆக்ரோஷமாய் போராடு கிறது. அந்தப் போராட்டச் சூழ லில் உதித்த சூரியர்கள் தான் இரணியனும் சிவராமனும். இரு வரது பிரவேசமும் உச்ச கட்ட மாய் 1940ல் துவங்குகிறது. 1950 மே மாதத் துவக்கத்தில் நிறை வடைகிறது. இடைப்பட்ட பத்து ஆண்டுகள் தஞ்சை மாவட்ட கிராமங்களில் குறிப்பாக தென் பரை, ஆம்பலாம்பட்டு முதலிய ஊர்களில் கட்சி கால்கோல் நாட் டப்பட்டு இயக்கமாய் வளர்ந்து, பலருக்கு வெளிச்சத்தையும் சில ருக்கு அச்சத்தையும் தெரிவிக் கிறது.

360 பக்க இந்நாவல் - வரலாற்றுச் செய்திகளை சம் பவங்களாக ஆக்கப்பட்டு காட்சி யாய் கண்முன் படருகிறது. மக் களின் மொழிநடையில் அவர் களது சொலவடையும் சொற் பிரயோகமும் நாவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத் துகின்றன.

சாதிய இயக்கங்கள் பெருகி வரும் இந்த நாளில் இந்தப் புதினத்திற்கு இன்னுமொரு சிறப்புண்டு. இரணியனும், சிவராமனும் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட - அகமுடையார் இனத்தவர்கள். அவர்கள் ஏற்றுக் கொண்ட பணியோ தாழ்த்தப் பட்ட மக்களின் விடியலுக்கான வீரஞ்செறிந்த போர். சொந்தச் சாதியினை எதிர்த்து மிக இளவயதில் தன் சுகம் மறுத்து வர்க்கப் போராட்டத்தின் வாசலைத் திறந்து வைத்த இரு வரும் 1950 மே 3 மற்றும் 5ம் நாள் ஒருவர் பின் ஒருவராய் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டு, விதை நெல் லாய் விதைக் கப்படுகிறார்கள். அதன் விளைச் சலை தேச மெங்கும் இன்று நம் மால் காண முடிகிறது. அனை வரும் வாசிக்கும் வகையில் கண் களை உறுத்தாத நூலின் அச்சாக் கம் மேலும் ஒரு சிறப்பு.

-ம.காமுத்துரை

வெளியீடு:

பாவை பப்ளிகேசன்ஸ், 142-ஜானி ஜான்கான் சாலை, ராய பேட்டை, சென்னை-14

விலை ரூ.150

Pin It