ஏழ்மை இருக்கும் வரை

இலவசங்கள் தொடருமென்று

சாகசச் சிரிப்போடும்

சந்திக்கிற தேர்தல்

அக்கறையோடும் அறிவிக்கிறார்

தெருக்களில் படுத்துறங்கி

தினம் வீதிகளில் பிச்சையெடுத்து

நெருக்கும் விலைவாசியில்

நெஞ்சாங்குழி நொறுங்க

அரசு பாரின் சரக்குக் கரைசலில்

தன்னுடல் கரைத்து

ஒரு இலட்சத்து எழுபத்தியாறாயிரம் கோடியின்

கழியன்களை எண்ணிபடி

இருட்டு எனக்குப் பிடிக்குமென்று

மின்வெட்டுப் பழகி

தொழில் வெட்டுப் பழகி

கட்டுமரக் கதைகள் பழகி

மானாட மயிலாடப் பார்த்துப் பழகி

ஒரே வார்த்தையில் ஓஹோண்ணு வாழப் பழகி

தற்கொலை விவசாயிகளையும்

செய்திகளாய்ப் பார்த்துப் பழகி

ஒரே வார்த்தையில் ஓஹோண்ணு வாழப் பழகி

தற்கொலை விவசாயிகளையும்

செய்திகளாய்ப் பார்த்துப் பழகி

பன்னாட்டு நிறுவனங்களோடு போடப்பட்ட

தேசம் விற்கிற ஒப்பந்தங்கள் அறியாமல்

அகதிகளாய் முகாம்களிலும்

கதியற்றவர்களாய் வீதிகளிலும்

காலங் கழிக்கும் தமிழர்களின்

கருணை மிது உலகத் தலைவர்...

 
இலவசங்கள் தொடரவென்று

ஏழ்மையும் தொடருமென்று

வரிசைகளில் முண்டும்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே

முன்தோன்றிய மூத்த குடியினர்

எவரறிவார்?