இளம் பெண்களின் அகில இந்திய சிறப்பு மாநாடு ஐதராபாத் நகரில் வரலாற்று சிறப்புமிக்க தோழர் அயிலம்மா அவர்களின் நினைவரங்கத்தில் 2009 நவ. 10, 11 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு உட்பட 19 மாநிலங்களில் இருந்து,  115 பிரதிநிதிகள் பங் கேற்றனர். குறைந்த வயதுடைய பிரதிநிதியாக திருச்சியை சேர்ந்த தோழர். ஸ்ரீமதி வயது 17, ஜார்கண்ட்டை சேர்ந்த சுமித்ரா 17 பங்கேற்றனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் பிரதிநிதி 21 முறை இரத்ததானம் செய்திருந்தார். மேற்கு வங்கத்தின் இன்னொரு பிரதிநிதி 150 நாட்கள் சிறையில் இருந்துள்ளார் என்ற தகவல்  மெய்சிலிக்க வைத்தது. பாதிக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உயர்கல்வி பயின்றவர்கள். 35 பிரதிநிதிகள் 2000, ஆண்டிற்கு முன்னரும், 2001, 2005இல் 41 பேரும், 2006, 2009இல் 39 பேரும் டிஒய்எப்ஐ யில் இணைந்துள்ளனர். முக்கியமாக சங்கத்தில் முழுநேர ஊழியர்களாக 31 பேர் உள்ளனர் கல்வி, வேலை, சுகாதாரம் அடிப்படை உரிமைகளை கிடைக்காமல் செய்வதை எதிர்த்துப் போராட வேண்டும். நுகர்வு பொருளாக பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தில் ஏராளமான தலைவர்கள் பெண் விடுதலைகளுக்கு குரல் கொடுத்த பெரியார், பாரதியார், ஜோதிபா பூலே இவர்களின் வீர முழக்கத்தினை ஏற்றுக்கொண்டு மாற்று சமூதாயத்துக்கு போராட்டம் புரிய வேண்டும்.

டி.ஒய்.எப்.ஐ , அனைந்திந்திய மாதர் சங்கத்திற்கு இரண்டும் பல புதிய பிரச்சனைகளை எடுத்து ஒன்றாக இணைந்து பல போராட்டங்களை நடத்த வேண்டும் என  பேசினார்கள்.

நிலத்திற்காகவும், நிலப்பிரப்புக்களின் கொடுமைகளிலிருந்து விடுபடுவதற்காகவும், தெலுங்கானா மக்கள் நடத்தியப் போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு அழியா இடம் பெற்றுள்ளது. இதில் நிஜாம் மன்னனின் கொடுமைகள் என்பது மிக கொடூரமானது. அதிலும், நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் வீட்டு வேலைகளுக்கு பலவகையில் சுரண்டப்பட்டவர்களாக இருந்ததுள்ளனர். மேலும், அடிமை கூலி ஆட்களாக நிலப்பிரபுக்களின் வீட்டில் அனைத்து வேலை களிலும் கட்டாய வேலை சுரண்டல் என்ற கொடுமைகள் நடந்தது.

இதில், படிப்பு அறிவு இல்லாத பல பேர் கலந்து கொண்ட போராட்டமாக இருந்தது இவர்களது போராட்டம் வெட்டி முறையை ஒழிக்க பெரும் உழைப்பு செலுத்தினார்கள். இப்போது சமூக மாற்றத்துக்கும், பொருளாதார மாற்றத்துக்கும் மற்றும் அரசியல் மாற்றத்துக்கும் பேராடவேண்டியுள்ளது.

மாநில அளவில் விவாதம் நடைபெற்றது. இதில் நமது மாநிலத்தில் இருந்து தோழர். கல்பனா (மதுரை), தோழர் பார்கவி (வடசென்னை) விவாதத்தில் பங்கேற்றார்கள் இதை தொடர்ந்து தெலுங்கான போராட்ட தோழர்.. மல்லு சுராஜ்யம் பெண்களை தைரியத்தை பற்றியும், அவர்கள் பங்கேற்ற தெலுங்கானா போராட்டத்தைப் பற்றியும் கூறினார். மேலும், பெண்கள் சமூகத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கு தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும், தைரியமுள்ள பெண்களாக திகழ வேண்டும் என பேசி கூட்டத்தை உற்சாகப்படுதினார்.

இறுதியாக, அகில இந்திய செயலாளர். தோழர். தபஸ் சின்கா புதிய இளம்பெண்கள் உபகுழுவை அறிவித்து முடிவுரை செய்தார். அகில இந்திய இளம் பெண்கள் கன்வீனர் தோழர் ராமாதேவி (மணிப்பூர்) இரண்டு நாள் மாநாட்டின் சிறப்பு என்பது, கலந்து கொண்ட இளம் பெண்கள் தங்கள் மாநிலத்தில் மற்றும் மாவட்டங்களில் சிறப்பான முறையில் செயல்படுவதில்தான் உள்ளது என்றார்.