கலைஞரின் காமெடி 

சென்னை - தூத்துக்குடி இடையே பயணிகள் கப்பல்1975ல் டிசம்பர் 31ம் தேதி சென்னையில் உள்ள போர் நினைவு சின்னம் எதிரில் உள்ள சுற்றுலா வர்த்தக கண்காட்சி நடைபெற்ற போது சுற்றுலா துறை அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமை தாங்க அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள் விழா சிறப்புரையாற்றினார். சென்னை ராமேஸ்வரம் இடையே பயணம் செய்ய பயணிகள் கப்பல் இயக்கப்படும். அதனை பூம்புகார் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கிடுவது. அது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வரையில் கடலூர், புதுச்சேரி, நாகை வழியாக ராமேஸ்வரம் செல்ல, இன்றிரவு புறப்பட்டால் நாளை பகலில் ராமேஸ்வரம் போய்ச் சேரலாம் என்ற அளவுக்கு அப்படிப்பட்ட போக்குவரத்துக் கப்பலை வாங்குவதற்கு நாம் திட்டமிட்டிருக்கிறோம். தூத்துக்குடி வரையிலே கூட செல்லலாமா என்று பார்த்தோம். சேது சமுத்திர திட்டம் நிறைவேறாமல் அது இயலாது, அது வரையில் தூத்துக்குடிக்கு செல்வதாக இருந்தால் இலங்கையை சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். தூத்துக்குடிக்கு செல்வது என்பது இயலாத காரியம் என்பதால் இராமேஸ்வரம் வரையில் சுற்றுலாப் பயணிகளை கப்பல் மூலமாக அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் என்றார். மேலும் தமிழக சுற்றுலா மையங்களுக்கு விமான போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்றார். (1.1.1976 முரசொலி )

அழகிரியால் ஏற்படும் அவலம்..... மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரம்மாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான இந்தக் கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் செயல்படத் தொடங்குமாம்..தயா இன்ஜினீயரிங் கல்லூரி குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் 2011 மார்ச் 9 முதல் பக்கத்திலேயே சில அதிர்ச்சித் தகவல்களை அளித்துள்ளது... இதன் சுருக்கம்.தயா இன்ஜினீயரிங் கல்லூரியின்உரிமையாளர்: எம்.கே. அழகிரி கல்வி அறக்கட்டளைபரப்பளவு : 400 ஏக்கர்அமைந்துள்ள இடம்: கவுண்ட நதிக் கரையோரம் சதுப்பு நிலம், 2008 ஏப்ரல் 3 ல் ஊலுக்ஷநுசு ஞஹசுமு நிறுவ காந்தி அழகிரி (அமைச்சரின் மனைவி) இந்நிலப்பகுதியை வாங்கியதாக சப். ரிஜிஸ்டிரார் அலுவலகத் தகவல். பின்னர் அழகிரி டிரஸ்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.இங்கு எழுப்பப்பட்டு வரும் கட்டடப் பணிகளால் 43 பாசன அணைக்கட்டுகள் அடங்கிய நதியின் ஓட்டம் பாதிக்கப்படும்.350 ஏக்கர் சதுப்புநிலம் றுநுகூ டுஹசூனு விழுங்கப்படும். அமலில் உள்ள உலக வங்கி உதவியுடன் மேம்படுத்தப்பட்ட விவசாயத் திட்டமும் வீணாகும்.ரூ, 35 லட்சம் செலவில் தூய்மைப்படுத்தும் திட்டம், கல்லூரி அமையவுள்ள பகுதிகளை பலப்படுத்த திசை திருப்பப்பட்டுள்ளது. சுற்றுப்புற சூழல் நிபுணர் நித்யானந்த ஜெயராமன் இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்கிறார்.