பசுமை வாயுக்கள் வந்தவிதம்!

பூமிப்பந்தை சூடாக வைத்திருக்கும், உயிர்களின் வாழ்க்கையைத் தக்க வைத்திருக்கும், பசுமை இல்ல/பசுமையக வாயுக்கள் பற்றிய தகவலே சுமார் 175 ஆண்டுகட்டு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆம் நண்பர்களே கி.பி 1824ல் தான், முதன் முதலில் ஜோசப் பூரியர் என்பவர் தான் கண்டுபிடித்தார் என்ற உண்மை நமக்குத் தெரியும். இவைமூலம் பூமிப்பந்தின் வெப்பம் உயர்வதைக் கண்டறிந்தவரும் அவரே..! பசுமைக்கூடத்தை சோதனைப் பொருளாகக் கொண்டு, இந்த வாயுக்களின் வெளியேற்றதைக் கண்டறிந்ததால் பசுமையக வாயுக்கள் என்றும் பெயரிட்டார். பசுமையக வாயுக்களின் மிக முக்கியமானது கரியமில வாயுதான்.

கரியமில வாயுவின்..காரணிகள்

நண்பா.. கடந்த 150 ஆண்டுகளில்தான் நாம் நமது செயல்பாடுகளால் ஏராளமாகன கரியமில வாயுவைக் கொட்டி பூமியைச் சூடாக்கிக் கொண்டே இருக்கிறோம். எவ்வளவு உயர்ந்துள்ளது தெரியுமா? கடந்த 150 ஆண்டுகளில் சுமார் 39% கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 4,20,000 ஆண்டுகளில் கரியமிலவாயு உயர்ந்த அதிகபட்ச அளவாகும். எப்படி இப்படி உயர்ந்தது என்கிறீர்களா? மனிதனின் நவீனப்படுத்துதல் செயல்பாடுதான் கடந்த 150 ஆண்டுகளில், பூமியின் எண்ணையின் அளவு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து அதனைப் பயன்படுத்தி ரயில், கார், பேருந்து, இருசக்கர, மூன்றுசக்கரவாகனங்கள் ஓட்டுதல், தொழிற்சாலை சக்கரங்கள் தொடர்ந்து இயக்கும் ஓசை இவையெல்லாம் ஒன்றிணைந்து பூமியின் மேலே கரியமில வாயுவாகக் கக்குகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் 74டன்கள் கரியமிலவாயு பூமியின்  மேற்பரப்பில் உருவாகுகிறது.

கிடு, கிடு வென உயர்ந்த கரியமில வாயு....

கடந்த 6,50,000 ஆண்டுகளில் உருவான கரியமில வாயுவின் அளவு 180 றிறிவி தான் (றிகிஸிஜிஷிறிணிஸி விமிலிலிமிவி என்பது பத்து இலட்சத்தில் ஒரு பங்கு) இயற்கை நிகழ்வுகளின் காரணமாக 280றிறிவி லிருந்து இப்போது 2005ல் 383றிறிவி ஆக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் மீதேன் வாயுவும், 6,50,000 ஆண்டுகளிகளில் 320றிறிவி ஆக இருந்தது, 2005ல் 700றிறிவி ஆக உயர்ந்துவிட்டது. கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது. இவைகள் போலவே நைட்ரஸ் ஆக்ஸைடு அளவும் உயர்ந்துவிட்டது. இப்படி கரியமில வாயு, மீதேன், நைட்ரல் ஆக்ஸைடு வாயுக்களின் அளவு வளிமண்டலத்தில் கலந்ததன் விளைவாக வெப்பம் 150 ஆண்டுகளில் 0.7சி      உயர்ந்  துவிட்டது. இதே நிலை நீடித்தால் கி.பி 2100க்கு 3சி யிலிருந்து 5சி வரை வளிமண்டல வெப்பம் அதிகரிக்க அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.

பனிஉருகல், கடல்மட்டம் உயருதல்

பூமி சமீப காலமாக வேகமாக வெப்பமடைவதன் காரணமாக துருவப் பகுதியிலுள்ள பனியாறுகள் உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனால் கடல்மட்டம் 18_35 செ.மீ உயருகிறது. கடற்கரைப் பகுதியிலுள்ள நிலத்தை கடல் விழுங்குகிறது. கடற்கரைப் பகுதி மக்களின் வாழ்நிலை பாதிப்புக்குள்ளாகிறது. இந்நிலை தொடர்ந்தால் நாம் விஞ்ஞானிகள் கணித்ததை விட மூன்று மடங்கு அளவில் வடதுருவ பனி உருகிக் கொண்டிருக்கிறது. இதை நாம் கவனிக்க மறந்தால், தவறினால் இன்னும் 35 ஆண்டுகளில் வடதுருவமோ இமயமலைகளோ பனியை முழுதும் இழந்துவிடலாம். பாரதி வெள்ளிப் பனிமலை மீது உலாவுவோம் என்ற பாடலை மாற்றி மொட்டை இமயமலை மீது உலாவுவோம் என்று பாடவேண்டியதுதான். இப்போது அண்டார்ட்டிகாவின் மேற்குப் பகுதியில் இந்தியா பரப்பிலுள்ள பாதி பனிக்கட்டிகள் உருகி வழிந்து கொண்டிருக்கின்றன.

தடுமாறும் காலநிலை..

கரியமில வாயு கக்கப்படுவதற்கும், அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. அதன் காரணமாக பருவநிலை, காலநிலையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நீளமான கோடைக்காலம் கடும் வறட்சி, காலத்தில் மழை பெய்யாமை, எதிர்பாராத புயல், வெள்ளம், கனமழை, வெள்ளத்தால் பயிர்கள், உயிர்கள் பாதிப்பு, நிலநடுக்கம், சுனாமி என எதிர்பாராத இயற்கைப் பேரிடர்கள் 66% ஏற்படுகின்றன. அனைத்துக்கும் காரணம் புவி வெப்பமடைதலே எனத் தெளிவாகக் கூறலாம் எந்தெந்த நாடுகள் எவ்வளவு புகையைக் கக்குகின்றன எனப் பார்க்கலாமே?

கார்பன் கக்கும் நாடுகள்

நாடு - வெளியிடும் கரியமில வாயு

அமெரிக்கா - 30.3%

ஐரோப்பிய யூனியன் - 27,3%

ரஷ்யா - 13.7%

இந்தியா, சீனா

மற்றும் வளரும்

ஆசிய நாடுகள் - 12.27%

ஜப்பான் -        3.8%

தென்&மத்திய

அமெரிக்கா - 3.8%

மேற்கு ஆசியா - 2.6%

ஆப்பிரிக்கா - 2.5%

கனடா - 2.3%

ஆஸ்திரேலியா - 1.1%

யார் கொட்டியது

தொழிற்புரட்சி ஏற்பட்டதிலிருந்து வளர்ந்த நாடுகளே 83% கரியமில வாயு வெளியேற்றத்துக் காரணம். உலக மக்கள் தொகையில் 4% உள்ள அமெரிக்கா 30.3% கரியமில வாயுவும், உலக மக்கள் தொகையில் 17%கொண்ட இந்தியா 2.4% கரியமிலவாயுவும் வெளியேற்றுகிறது. ஒவ்வொரு வரும் எவ்வளவு கரியமில வாயு வெளியேற்றுகின்றனர் என ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் 1.15டன் என்றாகிறது. ஆனால் தனித்தனியாக அமெரிக்காவுக்கு எவ்வளவு இந்தியருக்கு எவ்வளவு என்று கணக்கு போட்டால் கதை வேறாகிறது நண்பா..! இந்தியரின் பங்கு 0.9டன்தான், அமெரிக்க நண்பர்களின் பங்குதான் 6.10டன்! போதுமா நியாயம்.

வெப்பமான ஆண்டுகள்

சர்வதேச காலநிலை கணிப்புக்கென்ற பன்னாட்டு கண்காணிப்புக்குழு 2007இல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 150 ஆண்டுகளில், மிக வெப்பமான 12 ஆண்டுகள் என்பவை, சமீபகால 20 ஆண்டுகளுக்கு முன்புதான் நிகழ்ந்துள்ளன அவையாவன. 1990, 1995, 1997, 1998, 1999, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006 இவை வெப்ப அதிகரிப்பு வரிசையில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த வெப்பநிலை உயர்வுக்கு யார் காரணம்? அதிக கரித்தடம் பதிப்பவர் யார்?

(வெப்பம் தொடரும்......)

பேரா.சோ.மோகனா

Pin It