இளைஞர் முழக்கம் 25 ஆண்டுகளைத் தொடுகிற போது, துவக்கத்தின் வித்தாக இருந்த சிலரில், 10 ஆண்டு காலம் இந்த இதழின் ஆசிரியராக இருந்த தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

விடுதலைத் தழும்புகள், மனித உரிமை வரலா றும் அரசியலும், சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள், கீதை தரும் மயக்கம், ஆப்கன் வரலா றும் அமெரிக்க வல்லூறும், காதலும் வாழ்வும், கேள்விக்கு என்ன பதில், பாசிசம் பழையதும், புதியதும் (மொழிபெயர்ப்பு), சு.சமுத்திரத்தின் படைப்புலகம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஸ்தாபகத் தலைவராகத் திகழ்ந்தவர்.

தற்போது தீக்கதிர் நாளிதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

இளைஞர் முழக்கம் என்ற பத்திரிகை எந்தத் தேவையின் பின்னணியில் உருவானது?

1980இல் வாலிபர் சங்கம் ஆரம்பித்த பின் இரண்டு ஆண்டுகள் கழித்து துவக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு, 1984இல் வெளியிடப் பட்டது. நமது கருத்துக்களை ஒருங்கிணைக்கவும், இயக்கச் செய்திகளை அனைத்து கிளைகளுக்கும் கொண்டு செல்லவும், அரசியல் விவாதங்களை உருவாக்கிட பத்திரிக்கை இன்றியமையாதது என்று பட்டதால் இளைஞர் முழக்கம் உருவானது. ஆனால், 1980களில் எங்களிடமிருந்த கருத்து, அதற் கான செலவை நம்மால் தாக்குபிடிக்க முடியுமா? என்பதுதான்.

இந்த விவாதத்திலேயே 2 ஆண்டுகள் ஓடிவிட் டன. ஆயிரம் சந்தா சேகரித்தபிறகு தான் தொடங்கு வது என்று மாநிலக்குழுவில் முடிவு செய்யப்பட் டது. துவக்க ஆண்டிலேயே 700 சேர்த்தது எங்க ளுக்கு நம்பிக்கை உருவாக்கியது. பத்திரிகை இரண்டு வகையில் செயல்பட வேண்டிய கட்டா யத்தில் இருந்தது. ஒன்று வாலிபர் மத்தியில் வரக் கூடிய கருத்துக்களை விவாதமாக மாற்றுவது, அடுத்து திறமைகளை ஊக்குவிப்பது. ஆனால், இதைச் செய்வதற்கு 16 பக்கம்தான் இருந்தது. அதற்கு மேல் கொண்டு போக பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை. முதல் இதழ் 1984 நவம்பர் 3ஆம் தேதி கேரள சமாஜத்தில் வெளியிடப் பட்டது.

அந்த காலத்தில் தொழில்நுட்பம் எப்படி யிருந்தது?

முதல் இதழ் வெளியிட்ட போது கனிணி வசதிகள் கிடையாது. கையால் அச்சு கோர்ப்பது தான் அப்போது பழக்கம். அதிலேயும் படங்கள் போடவேண்டும் என்று சொன்னால் அந்த படங்களை பிளாக் செய்து அச்சடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கடுமையான உழைப்பை செலுத்தினால்தான் குறைந்த செலவோடு பத்திரி கையை கொண்டு வர இயலும்.

அந்த நேரத்தில் இளைஞர்களுக்கான பத்திரிக்கை வேறு ஏதாவது வெளிவந்ததா?

நிச்சயமாக இல்லை. அமைப்பு சார்ந்து இளை ஞர்களுக்கான பத்திரிகை வெளியிட்டது டிஒய்எப்ஐ தான். இளைஞர் முழக்கம் மட்டுமே இந்தப் பெரு மையை பெறுகிறது. வாலிபர் சங்கத்தின் பாரம் பரியம் சுதந்திரப்போராட்ட காலத்திலிருந்து இருக்கிறது. டிஒய்எப்ஐக்குப் பிறகுதான் மற்ற கட்சிகளின் வாலிபர் அணிகளை உருவாக்கின. அந்த இளைஞர் அமைப்புகளுக்கான பத்திரிகை எது வும் வெளிவரவில்லை. லயோலா கல்லூரி அமைப்பு களால் சிறு பத்திரிகைகளும், தேன்மழை போன்ற பத்திரிக்கைகளும், அதிதீவிர அமைப்புகளால்  சிவந்த சிந்தனை, எழுச்சி போன்றவை நடைபெற்று வந்தன.  எனவே, இளைஞர்களின் அமைப்பு சார்ந்து இளைஞர்களுக்காக முதலில் வந்த பத்திரிகை இளைஞர் முழக்கம் தான் என்பதே வரலாற்று உண்மை.

பத்திரிகை விற்பனையை பரவலாக்க என்ன செய்தீர்கள்?

நம்முடைய பத்திரிகை பிற முதலாளித்துவ பத்திரிகைகள்போல் அல்ல. இது முழுக்க முழுக்க அமைப்பின் மூலம் விற்பனை செய்கின்ற பத்தி ரிகை. எனவேதான், ஆண்டு சந்தா என்ற விசயத்தில் மிகுந்த அக்கறை செலுத்தினோம். முகவர்களோ, அலுவலக நிர்வாக ஏற்பாடோ இல்லாத சூழலில் தான் உருவாக்கம் நடந்தது. ஒரு கட்டத்தில் 13 ஆயிரம் புத்தகம் வரை விற்பனை ஆனாது. அப் போது நடந்த அகில இந்திய மாநாட்டையொட்டி 18 ஆயிரம் பிரதிகள் வரை சென்றது. புத்தகத்திற்கு புதிய வடிவமும் கிடைத்தது. அன்று தமிழ்நாட்டி லேயே சென்னையில் தான் சந்தா அதிகமாக இருந்தது.

அன்று தாங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

இளைஞர் அமைப்பின் பத்திரிகை என்ற பொழுது, பொதுவாகவே இளைஞர்கள் ஒவ் வொரு மாவட்டத்திலும் தங்களது எழுத்துக் களில், எண்ணங்களில். ரசணைகளில், வண்ணங் களில் மாறுபட்டே இருப்பார்கள். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரத்தில் உள்ள இளைஞர்களின் பார்வைக்கும், கிராப்புறம் சார்ந்த மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் பார் வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இருவரையும் ஈடுகட்டும் வகையில் பத்திரிகை நடத்த முயற்சி செய்தோம். நான் குறிப்பாக சொல்லவிரும்புவது நமக்குத் தெரிந்த எல்லாவற் றையும் எழுதுவதைவிட, பெரும்பாலான வாசகர் களுக்கு எது தேவை என்று தெரிந்து அதை எழுத வேண்டும். அதனால் தான், இளைஞர் முழக்கம் வெளிவரும் நேரத்தில் நாங்கள் மாவட்டங்களுக்கு கூட்டங்களுக்குச் சென்றால் புதிய விசயங்களை தயார் செய்து கொண்டு போவோம். ஏனெனில் இளைஞர் முழகத்தில் வந்த  கட்டுரைகளை, செய்திகளை நம்முடைய தோழர்கள் பொதுக் கூட்டம், பேரவைக் கூட்டங்களில் பேசிக்கொண் டிருப்பார்கள் ஆக, பத்திரிகையை படித்தார்கள். படித்ததுமட்டுமல்ல கூட்டங்களில் அதை பயன் படுத்தினார்கள். இதை நான் வெற்றியாகப் பார்க்கி றேன். இந்தத் தேவைக்காகத் தான் நம்முடைய பத்திரிகை நடந்துவருகிறது. இந்த பத்திரிகையை கிளை அளவில் கொண்டு செல்லவேண்டும் என்று தொடர்ந்து ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், எந்தவொரு இயக்கத்திற்கும் அந்த இயக்கத்திற்கான அரசியல் தேவையை கிளையள வில் புரியவைத்துவிட்டால் தோழர்கள் திரண்டு வருவார்கள். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் சமா ளித்து நிற்பார்கள். எனவே, அரசியல் ரீதியாக கிளைகளை பயிற்றுவிக்க இளைஞர் முழக்கம் அங்கு செல்வது முக்கியம்.

திராவிட இயக்க வரலாற்றில் நிறைய பத்திரிகைகள் அவர்களால் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது கலைஞர் என்ற காரணியால் இயங்கும் முரசொலியைத் தவிர வேறு பத்திரிகைகள் வெளிவரவில்லை. ஆனால், அதிகார பலமோ, பணபலமோ இல்லாத இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து பத்திரிகை நடத்தி வருகின்றனர். இதை எப்படி புரிந்து கொள்வது?

இந்திய, தமிழக வரலாற்றில் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கியது சுதந்திர போராட்ட காலத்தோடு இணைந்தது. குறிப்பாக பத்திரிகை கள், தேசியம், சமயம், மொழி இவைகளைச் சார்ந் தேதான் வந்தன. அன்றைக்கு அச்சுக்கூலி குறிப் பிட்ட அளவுதான். எனவே, தனிநபர்களோ, ஓரிரு நபர்களோ சேர்ந்தால் ஒரு பத்திரிகை நடத்திவிட முடியும். குறிப்பாக இந்தியாவில் தமிழகத்தில் தான் பத்திரிகைகள் உருவானபோதே நாத்திகத்திற்கான பத்திரிகையும், தலித்துகளுக்கான ஒரு பைசா தமிழன் போன்ற பத்திரிகைகளும் உருவானது. அதன் தொடர்ச்சியாகத் தான் திராவிட இயக்கம் ஏராளமான பத்திரிகை நடத்தின. அவர்கள் மட்டுமல்ல பொதுவுடமையாளர்களும் பத்தி ரிகை நடத்தினார்கள். திராவிட இயக்கத்தினர் ஆட்சிக்கு வந்த பிறகு ஊடகத் தன்மை மாறியது. அதுமட்டுமல்ல இன்றைக்கு அதுபெரும் செலவு பிடிக்கின்ற விவகாரமாக மாறிவிட்டது. அதனால் தான் தனிநபர் சார்ந்த பத்திரிகைகள் மறைந்து விட்டன. இன்று நிறுவனம் சார்ந்துதான் பத்தி ரிகை நடத்த முடியும். இடதுசாரிகள் பொறுத்த வரையில் அமைப்பு சார்ந்த பத்திரிகைகளை நடத் துவதால் அவர்களால் தொடர்ந்து நடத்த இயல் கிறது. ஊடகம் இன்று வேறு வடிவத்திற்கு; வேறு கட்டத்திற்குப் போய்விட்டது. இடதுசாரிகளுக்கு கருத்து சொல்ல வேறு வழியில்லை. சொந்த பத்திரிகை தேவையிருக்கிறது. உதாரணமாக கடந்த 27ஆம் தேதி நடந்த தலித் பேர ணியை எந்தப் பத்திரிகையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், சிறு சாதி, மத பூசல்கள் நடந்தால் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகின் றனர்.

இளைஞர் முழக்கத்தின் பயணம் எப்படி தொடர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

உலகமயம் விதைக்கிற சுயம் சார்ந்த சிந்தனைகளை உடைத் தெறிகின்ற வகை யில் அமைத்துக் கொள்ள வேண்டும். அனைத்துதரப்பு இளை ஞர்களையும் ஈர்க்கின்ற வகையில் பத்திரிகை நடத்த வேண்டும் என்றா லும், கிராமப்புற அடித் தட்டில் இருக்கிற ஊழியனுக்கோ அல்லது இளை ஞனுக்கோ புரிகின்ற மொழி யில் எழுதுவதுதான் இன் றைய தேவை. அவர்களுக்கு தான் இந்த பத்திரிகை மற்றவர்களைவிட அதிகம் தேவைப் படுகிறது. உதாரணத்திற்கு வேலை என்கின்ற கோஷத்தை மாவட்டம் சார்ந்து அங்கிருக்கிற தேவையை விவாதித்து எழுதும்போதுதான் அந்த கோஷத்திற்கு உயிர் உண்டா கும். உலகமயத்தை எதிர்த்த உள்ளூர் போராட்டம் என்பது தான் இன்று தாரக மந்திரமாக இருக்க முடியும். ஆக உள்ளூர் சமூகத்தில் இயங்குகிற இளை ஞர் குழுக்களின் ஆயுதமாய் இளைஞர் முழக்கம் திகழவேண் டும் என்று ஆசைப்படுறேன்,. இதழ் தொடர்ந்து வளர வேண் டும் என்று வாழ்த்துகிறேன்.