மரங்கள் நம்மை இளமையாய் உணரச் செய்கின்றன. மரங்கள் எவ்வளவு வயதானதோ அவ் வளவு இளமையாக நம்மை உணரச் செய்யும்.

தொஉற்ராவின் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைச் சந்திப்பின் அருகே உள்ள பழைய புளியமரத்தின் அடியில் நான் பயணிக்கும் போதெல் லாம் ஆண்டுகள் கழிந்து போய் என் இளமைக் கால நினைவுகள் என்னை ஆட்கொள்கின்றன. அலகாபாத் வங்கியில் கணக்கு வைத்துள்ள என் பாட்டி, வங்கிக்கு செல்லும் போதெல்லாம் நான் அந்த புளியமரத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கும் திண்ணையில் அமர்ந்திருப்பேன்.

அந்த வங்கி இன்னமும் அங்கேயே இருக்கிறது. ஆனால் அதன் சுற்றுப்புறம் தான் பெரிதும் மாறி விட்டது. அதனை சுற்றி நடக்கும் போக்குவரத்தும் ஏற்படும் சகிதமும் முன்பிருந்ததைவிட சகிக்க முடியாத அளவு கூடிவிட்டது. முன்பு போல இயல்பாக அங்கு சுற்றித் திரிவதை என்னால் கனவில் கூட நினைக்க முடியவில்லை. கடந்த நாற்பது ஆண்டுகளில் இது போன்ற பல வட மாநிலங்களிலும் மக்கள் தொகை பன்மடங்காகிப் போனதை ஜன நெருக்கடி உணர்த்தியது. ஆனால் அத்தனையையும் சமாளித்துக் கொண்டு அந்த பழம் புளியமரம் இன்னமும் இருக்கிறது என்று வரை அப்புளியமரம் தெஉற்ராவின் வளமான மண்ணி லிருந்து வேரறுக்கப்படாமலிருக்கிறதோ அன்று வரை இந்த சமவெளி நகரோடு என் வேர்களும் ஆழ்ந்திருப்பதாக உணர்வேன். ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும்பான்மையான கிராமங்களில் இருந்த பரந்து விரிந்த ஆலமரங்களின் செழிப்பான நிழலில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதுண்டு, கிராம பெரியவர்கள் பல விஷயங்கள் குறித்து விவாதிக்க கூடுவதுண்டு. ஒரு சில நேரங்களில் வியாபாரிகள் கடை விரிப்பதும் உண்டு. பல வகையான பறவைகள், பெரியவண்டுகளும் அணில்களும் இந்த கண்ணி யமான ராட்சசனில் வாழும் உயிரினங்களின் ஓர் அங்கமே.

பழமையான ஆலமரங்கள் நாட்டின் பல பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. ஆனால் கிராமங்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகி விட்ட சூழலில் ஆலமரங்கள் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. ஆலமரங்கள் கிளை விட்டு பரவ பெரும் இடப்பரப்பு தேவையாய் இருக் கிறது. ஆனால் இடப்பரப்போ இன்று பெரும் மதிப்புடையதாய் இருக்கிறது.

ஆலமரம் இல்லாவிட்டால் நண்பகல் வேளையில் காலார நடக்க மாந்தோப்பு அமைதியான சிறந்த இடம். நம் பாரம்பரிய ஓவியங்களில் இளம் காதலர் கள் அடிக்கடி சந்திப்பது மாந்தோப்புக்களில் தான். ஆனால் மா பழமானபின் சூழல் அமைதி யாக தனிமையாக இருக்காது குரங்குகள், கிளிகள், காக்காக்கள் மற்றும் சிறு வாண்டுகள் எப்படி யாவது காவலாளியை ஏமாற்ற முயல காவலாளி காலிடப்பாவை தட்டிச் சத்தமெழுப்பி நுழை பவர்களை பயமுறுத்தி விரட்ட முயல்வார்.

ஆலமரங்களும், மாமரங்களும் மலைகளில் வளர்வதில்லை. மலைகளுக்கு இமாலய கருவாலி (ஓக்) மரங்கள், ஹர்ஸ் செஸ்ட் நட்கள், ரோபோடோரன் பசுமை மாறா செடிவகை பைன்கள் மற்றும் தேவதாரு (தியோதர்) மரங்களே பழக்கமானவை. கடவுளின் மரம் என்ற அர்த்தம் தரும் “தேஷ் தாரு” என்று சமஸ்கிருத வார்த்தைகயிலிருந்து பெயர் பெறும். தேவதாரு மரம் லெபனானின் சேடார் மரத்தை போன்றே இருக்கும். தேவதாரு மரங்கள் சில நூறு ஆண்டுகளில் பெரும் உயரம் வளரும். நான் வாழும் முஸோரி நகர்ப்புற எல்லையில் நிறைய தேவதாரு மரங்கள் உண்டு. அம்மரங்களே முஸோரி நகரை இளமையாக வைத்திருக்கின்றன. முஸோரி நகர் 160 ஆண்டு பழமையானது. ஆனால் தேவதாரு மரங்களே குறைந்தபட்சம் அதைவிட இருமடங்கு பழமையானது.

தேவதாரு மரங்கள் இருக்கும் இடத்தில் வேறு மரங்கள் இருக்காது அவை கூடி வாழும் குணம் கொண்டவை. தேவதாரு மரங்களைக் கொண்ட காடு நம்மை ஆட்கொள்ளக்கூடிய கவர்ச்சியைக் கொண்டது. அவை பெருமளவில் இருக்கும்போது அணிவகுத்து நிற்கும் படையைப் போன்ற தோற்றத்தை அளிக்கும் அதுவே. மலை மீது நாம் விரும்பக்கூடிய அணிவகுப்பாக இருக்கும். பூமி தன் வனப்பகுதிகளில் பாதியை இழந்த பின்னும், ஒரு பாதி வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், இந்த ராட்சச தேவதாரு மரங்கள் நீண்ட காலம் நிலைக்கும் போல் தோன்றுகிறது. உலகின் பழமையான பைன் மரங்களை கலி போர்னியாவில் காணலாம். அவை பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக கூறப்படுகிறது. கலிபோர் னியா இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமோ?

இமாலய மலையில் இருக்கும் “ஜோஷிமாதி” என்று சிறு கோயில் நகரில் இருக்கும் பழமையான “மலபரி” மரமே நான் கண்டதிலேயே பழமையானது. அம்மரம். “கல்பவிருஷம்” என்ற பெயரில் அறியப் படுகிறது. இந்த முனிவர் சங்கராச் சாரியார் 16ம் நூற்றாண்டில் இம்மரத்தின் அடியில் தவமிருந்ததாக கூறப்படுகிறது. பழங்கால முனிவர்கள் இம்மர நிழலை தவமிருக்க சிறந்த இடமாகக் கருதினர். புத்தர் அரச மரத்தை விரும்பினார். இந்து மத துறவிகளோ, அரச மரத்தடியில் தவமிருக்கவே விரும்புவார். கோடை காலங்களில் அரச மரங்களே தியானமிருக்க சிறந்தவை. அதன் மெல்லிய செங்கோண வடிவ இலைகள் மிகச்சிறிய தென்றல் காற்றையும் இழந்து சிந்தித்துக் கொண்டிருப்பவர் மீது குளிர்ந்த காற்றை வீசும்.

தனிப்பட்ட முறையில் நான் தவத்தைவிட சிந்தனையையே விரும்புகிறேன். ராட்சச மல்பரி மரத்தின் கீழ் நின்று கொண்டு அதன் பிரம்மாண்ட பரிமாணத்தைக் காண்பதிலேயே மகிழ்ச்சிக் கொள்கிறேன். அதன் பிரம்மாண்டம் உயரத்தில் அல்ல. அதன் சுற்றளவில், முசோரியில் உள்ள மூன்று அறை கொண்ட என் வீட்டில் கச்சிதமாக இடம் கொள்ளக்கூடும். அதன் அருகில் இருந்த கோயில் ரொம்பவே சிறியதாக காட்சியளித்தது. அதன் புறந்தள்ளிய வேர்கள் மீது விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளோ பூனைக்குட்டிகள் போலத் தெரிந்தனர்.

நான் முன்பு கூறியதுபோல, அம்மரங்களின் கீழ் தவமிருப்பது என்னால் ஆகக்கூடிய காரியம் அல்ல. ஏனெனில் தான் தவமிருக்க முயலும் போதெல்லாம் என்னுள் என்னவோ ஏற்படுகின்றது. மரத்திலிருந்து சிறு குரங்கொன்று எட்டிப் பார்க்கையிலே அல்லது ஹர்ர்ஸ் செஸ்ட்நட் மரம் என் முன் ஆடும் போதோ அல்லது தேவதாரு மரத்திலிருந்து மேகம் போல மகரந்தம் என் சட்டை மீது விழும் போதோ அல்லது நாள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து ஒரு சில அடிகள் மேலே மரங்கொத்தி டொக் டொக் என கொத்தி கொண்டிருக்கும்போதோ என்னால் எப்படி மனதை ஒருமுகப்படுத்த முடியும். நான் நினைக்கிறேன். அம்முனிவர்கள் எல்லாம் இவற்றிலிருந்து மனதளவில் விலகியே இருந்திருப்பர். ஆனால் நானோ இயற்கையை நேசிப்பவன். ரயில் பூச்சி என் காலில் ஏறினால் கூட நான் என் கவனத்தை இழப்பேன்.

அதனால் ஆர்எல். சிறுகதை ஒன்றில் வெளிக் கிரக மனிதர் கூறுவது போல இந்த “பச்சைத் தொப்பி நண்பர்களின்” பிரம்மாண்டங்களை அதிலும் குறிப்பாக பழமையானது. மரங்களின் பிரம்மாண்டங்களைக் கண்டு வியப்பதிலும், பாராட்டுவதிலும் தான் மகிழ்ச்சியடைகிற«ன். அவை நிறைய மனிதர்கள் வருவதையும், போவதையும் பார்த்திருக்கும், நான் முனிவராகும் எந்த பாசாங்கையும் செய்யாத அறுபது வயது பையன் என்று அதற்குத் தெரியும்.

தமிழில் எஸ். செந்தில்குமார்

நன்றி த இந்து

Pin It