ஒரே இடத்தில் 1000 மூலிகைகளை வளர்த்து அடையாளங் காட்ட வேண்டும், அதன் மூலம் இளைய தலைமுறையினர் பயன்பெற வேண்டும் எனும் இலக்குடன் கடந்த 2008ஆம் ஆண்டில் பாபநாசத்தில் தொடங்கப்பட்ட ‘பதினென் சித்தர் மூலிகைப் பொழில்’ பணி நிறைவடைந்துள்ளது

சித்தர்கள் உலவி வரும் பொதிகை மலை, தென்மலை, அச்சன்கோயில், மகேந்திரகிரி, சதுரகிரி, கொல்லிமலை, ஏலகிரி, ஜவ்வாது மலை, ஏற்காடு எனப் பல்வேறு மலைகளிலும் தரைக் காடுகளிலும், வயல்வெளிகளிலும் சேகரிக்கப்பட்ட பல்வேறு மூலிகைக் கன்றுகள் வளர்க்கப் பட்டு, தெப்பக்குள கரைகளை சரிசெய்து தண்ணீர் தேக்கி வைத்து ஊட்டுக் கால்வாய் மேல் பாலம் அமைத்து, வேலியை ஒட்டிப் பின் வரிசையில் 2 அடுக்கு-களாக 300க்கு மேற்பட்ட புதர் தாவரங்களையும், முன்னிலையில் 300 பெரிய தொட்டிகளில் ஒரு பருவத் தாவரங்களையும், 100க்கும் மேற்பட்ட மூலிகைக் கொடிகளையும், தெப்பக்குளம் சுற்றுவட்டத்தில், பழைய சாலைப் போக்கில் 200க்கும் மேற்பட்ட மரவகைகள் நடப்-பட்டுள்ளன. தமிழும் தமிழ் மருத்துவமும் தோன்றியதாகக் கருதப்படுகிற பொதிகை மலை அடிவாரத்தில் இருந்து உலகத் தமிழ் மருத்துவக் கழகம் தனது இறைச்சூழல் பணியை இவ்வாறாக தொடங்கியுள்ளது.

வருகிற 2012ஆம் ஆண்டு சனவரி மாதம் 6ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று பாவநாசம் பதினென் சித்தர் முலிகைப் பொழிலை உலகத் தமிழ் சமுதாயத்திற்கு அர்ப்-பணிக்கும் நாளாக திருவிழாக் கொண்டாட உள்ளது. ஓலைச் சுவடிகள் மூலம் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்டு வந்த அரிய பல மூலிகைகளின் மருத்துவப் பயன்பாடுகள் குறித்த செய்திகள் ‘தமிழர்களின் உயர்நிலை அறிவுப் புதையல்’ ஆகும். இம்மாபெரும் கடமையை உணர்த்தும் வகையில் மூலிகைப் பெயர் பலகைகள் ஓலைச்சுவடி வடிவில் அமைத்துள்ளோம். பொன் மொழிகள் நோயணுகா விதிகள் என பொதிகை மலையடிவாரத்தில் ஒரு சித்த மருத்துவக் கருத்துருப் பூங்கா (ஷிவீபீபீலீணீ ஜிலீமீனீமீ றிணீக்ஷீளீ) உருவாக்கும் பணியும் தொடங்கி-யுள்ளது.

தொடர்புக்கு :

‘கற்ப அவிழ்தம்’ மரு.பி.மைக்கேல் செயராசு 98421 66097