18 ஆம் நூற்றாண்டு – யார் கைகளில் கடற்ப்படை இருந்ததோ அவர்களுக்குத் தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது.

19 ஆம் நூற்றாண்டு – விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள் தான் உலகை தீர்மாணிக்கும் சக்தியாக இருந்தன.

ஆனால் 20 ஆம் நூற்றாண்டு – “உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுபட்டதாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்” என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் மகாதீர் அவர்கள்.

இன்று உலகளாவிய ஊடகங்கள் தான் ஆதிக்க சக்தி எது என தீர்மானிக்கிறது. அமெரிக்கா மற்ற நாடுகளின் நிகழ்வுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்றால், உலகளாவிய ஊடகங்கள் அமெரிக்காவில் இருந்து உலகை இயக்குவதால் தான் சாத்தியமானது.

மனிதனின் குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், நாகரிகங்கள் எல்லாமே புற சிந்தனைகளின் கருத்துத் திணிப்புகளால் உருவாக்கப்படுகிறது. தொடர் பதிவுகளின் மூலம் உருவாக்கப்படும் புறக்கருத்து திணிப்புகளே பிறகு சுய சிந்தனைகளாகவும், சித்தாந்தங்களாகவும் உருமாற்றம் அடைகிறது. 

பொதுவாக ஒளி, ஒலி மற்றும் எழுத்து- ஊடகங்களின் தொடர் பிரச்சாரங்களின் பாதிப்புகள் காலங்கள் கடந்தும் நம் சமுக வாழ்வியலில் பலவித நேர், எதிர் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மனித சமுகத்தின் எல்லா சமுக மாற்றங்களுக்குப் பின்னாலும் ஊடகங்களின் பெரும் பங்களிப்பு இருக்கிறது. இந்த ஊடகங்கள் தனக்குள் உள்வாங்கி மென்று துப்பும் கருத்தாக்கங்கள்தான் மனித சமுகத்தை தீர்மானிக்கின்றது.

எல்லைகள் தாண்டி, வக்கிரங்களை விதைத்து, உயிர்கள் பறித்து, நாடு பிடித்து வளங்கள் சுரண்டிய காலங்கள் எல்லாம் வரலாற்று தடயங்களாகிவிட்டது. எல்லா நாடுகளுமே அணுகுண்டினை முழுங்கி விட்டு தொட்டால் வெடித்து விடுவேன் என்ற சராசரி மிரட்டலுடன் இருக்கும் இந்த காலகட்டத்தில் உலகம் தழுவிய பெரும் போர்கள் என்பது சாத்தியம் இல்லை. எல்லை தாண்டும் பயங்கரங்கள் இல்லை, உலகை அழிக்கும் பேரழிவு ஆயுதங்களுக்கு வேலை இல்லை, இரத்தமும் இல்லை, சத்தமும் இல்லை. ஆனாலும் உலகத்தை தனதாக்கி கொள்ளும் பயங்கரவாதம் ஊடகங்களின் துணையுடன் நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை மனித இனம் சந்திக்காத பேரழிவு ஆயுதங்கள் என்றால் அது இன்றைய ஊடகங்கள் தான் (என். எஸ் கிருஷ்னன் அவர்கள் இருந்திருந்தால் உலகத்திலேயே கொடிய மிருகம் ”நாக்கு” என்பதை மாற்றி ”ஊடகம்” தான் என்றிருப்பார்)

ஊடகத்தின் ஆக்கமும் அழிவும் எடுத்தவன் கையைப் பொருத்து அமைகிறது. உலக ஊடகங்கள் அமெரிக்க சியோனிஷ்டுகள் கையில் இருப்பதால் 20ஆம் நூற்றாண்டும், 21ஆம் நூற்றாண்டும் அமெரிக்க- யூத சியோனிஷ்டுகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளது.

இந்த நூற்றாண்டில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரல்கள் எல்லாம் தீவிரவாதக் குரலாக மாற்றப்படுகிறது. முதலாளித்துவத்தின் மலக்குளியலை நாட்டின் வளர்ச்சிக்கான சந்தன குளியலின் குறியீட்டு அடையாளமாக காட்டப்படுகிறது. இவையெல்லாம் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ ஊடகங்களின் மாயக்கண்ணாடி விளையாட்டில் சாத்தியமாக்கப்படுகிறது.

சியோனிஸம் என்பது ஒரு யூதப் பரவலாக்க இயக்கம்; உலகை யூதர்களின் நிழலில் இயக்க வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருப்பவர்கள். இஸ்ரேல் என்று தான் கையகப்படுத்திய நிலப்பரப்புடன் நின்று விடாமல் அமெரிக்க அய்ரோப்பா கண்டங்களை தங்களது ஆட்சி அதிகாரங்கள் மூலம் தன் வசமாக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் உலகம் முழுவதும் ஒரே ஏகாதிபத்திய யூத ஆட்சி வரவேண்டும் என்று திட்டத்துடன் பூமியின் எல்லா இடங்களிலும் அவர்களின் எல்லைகளை விரித்து வருகிறார்கள்.

”Zionism is more accurately described as a strategy for targeting thought and emotion as a means to influence behavior”

சியோனிஸம் என்பதை மிகவும் துல்லியமாக விளக்கினால் அது மனிதர்களின் எண்ண‌ங்களையும் உணர்ச்சிகளையும் குறிவைத்து செயல்படும் வேலைத் திட்டங்களை கொண்டதாகும். அது ஒருவனின் இயல்பான வாழ்க்கைக்குள் ஊடுறுவி செயல்படும்.

மனிதனின் எண்ண‌ங்களையும், உணர்ச்சிகளையும் தனது திட்டமிட்ட கருத்தாக்க ஊடுருவல்கள் மூலம் தாக்குவதால், சுய சிந்தனைத் திறனை இழந்த மனித இனமாக மாற்ற முயற்சிகள் நடந்தவண்ணம் உள்ளது.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான நாடுகளை பயங்கரவாதத்தின் கோர முகமாக காட்டும் 'புஸ்'ஸின் கருத்தாக்கம் ஊடக எந்திரங்களில் செறிவூட்டப்பட்டுள்ளது - இது ஊடகத் தீவிரவாதமாகும்.

ஊடகங்கள் காட்டும் நிகழ்வுகள் என்பது எதுவும் தானாக நடப்பது இல்லை; அது செய்திகளாக உருவாக்கப்படுகிறது. தனக்கு சாதகமான அல்லது எதிரியென தீர்மானிக்கபட்டவர்களின் அழிவுக்கான வேலைத் திட்டமாகவும் சியோனிஸ ஏகாதிபத்திய கூட்டமைப்புகள் அதை பயன்படுத்திக் கொள்கிறது.

முதலாளித்துவத்தின் பொருளாதாரப் பேரழிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களின் குரல்களை பிரதிபலிக்க வேண்டிய ஊடகங்கள் சொந்த நாட்டிலேயே அவர்களின் வாழ்வாதார செய்திகளை புறக்கணிப்பதும், அவர்களின் வாழ்வுரிமை அழிக்கப்பட்டு வருவதை வெளி உலகிற்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்வதும் நடந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான வேலையிழப்புகளையும், சொத்துகள் பறிக்கப்படுவதையும், விரக்தியினால் ஏற்படும் பல ஆயிரம் பேரின் தற்கொலைகள் என அமெரிக்காவின் பாதாளத்தினை நோக்கிய பயண‌த்தை ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்து வருவதும் அமெரிக்காவை தொடர்ந்து ஒரு வல்லரசு நாடு என்று காட்டுவதும் கூட ஊடகத் தீவிரவாதம் தான். ஆனாலும் ஊடகங்கள் ஆப்கானையும், ஈரானையும், ஈராக்கையும், வட கொரியாவையும் உலக அச்சுறுத்தலாக்குவதன் மூலம் அமெரிக்காவின் தேசபக்தி உருவாக்கப்படுகிறது. சொந்த நாட்டு மக்களின் பிரச்சனைகள் குழி தோண்டி புதைக்கப்படுகிறது.

தனது தொடர் பிரச்சாரங்களால் கம்யூனிசத்தினை துண்டாடிய பின் இன்றைய முதல் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பது இசுலாமியர்கள். உலகளாவிய இசுலாமிய எதிர்ப்பு என்பதை மேலைநாட்டினர் தங்களின் முக்கிய செயல்திட்டமாக கொண்டுள்ளனர்.

இசுலாமிய எதிர்ப்பு என்பது தீவிரவாத எதிர்ப்பாக மாற்றப்பட்டு அமெரிக்க சியோனிச ஏகாதிபத்திய பேரழிவு ஊடக கூட்டணியில் அந்தந்த நாட்டின் ஃபாஸிச சார்பாளர்களும் சேர்ந்து கொண்டு பெரும் அச்ச உணர்வை மக்கள் மனங்களில் ஏற்படுத்துகின்றனர்.

இந்த எல்லை தாண்டிய ஊடகத் தீவிரவாத்த்தில் உள்ளூர் ஊடகங்களும் இயல்பாகவே கை கோர்க்கும் நிலை உருவாகியுள்ளது. அனிச்சையாக நாம் பார்க்கும் ஒரு உருவம் தாடியுடனும் தொப்பியுடனும் இருந்தால் போதும் அவர் பயங்கரவாதியாகத்தான் இருப்பார் என்ற எண்ணத்தை சாதாரண‌ மக்களிடம் தோன்ற வைப்பதுதான் இந்த உலக ஊடக தீவிரவாதக் கூட்டனியின் நோக்கமாக இருக்கிறது. இந்த கொடூர பண்பாட்டு தாக்குதலினால் இசுலாமியர்கள் தங்கள‌து சொந்த அடையாளத்தை மறைத்து அச்ச உணர்வுடன் வாழும் சூழல் உலகம் முழுதும் உள்ளது.

ஊடகத்தீவிரவாத்தின் ஊற்றுக்கண்கள்

கிரஹாம்: ஊடகங்களின் மீதான யூதர்களின் ஆளுமையை நாம் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையென்றால் அது அமெரிக்காவை அழிவிற்கு இழுத்துச் செல்லும்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: நீங்கள் அதை நம்புகிறீர்களா?

கிரஹாம்: ஆம் நான் அதை உறுதியாக நம்புகிறேன்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: ஆம். அதை நான் ஒரு போதும் சொல்ல முடியாது, ஆனால் நானும் அதை நம்புகிறேன்.

‍ மதத் தலைவர் பில்லி கிரஹாம்(Billy Graham) மற்றும் அமெரிக்க முன்னால் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன் (Richard Nixon) இருவரின் பேச்சின் ஒலி நாடாப் பதிவு இது.

இன்றைக்கு இந்த எச்சரிக்கை எல்லையைக் கடந்து அமெரிக்கா தனது முழு ஆழுமையையும் யூதர்களின் இரும்பு பிடிக்குள் இழந்து சியோனிஷ்ட்களின் அமெரிக்காவாகி விட்டது.

உலகின் தலைசிறந்த மின்னணு செய்தி ஊடகங்களும், காகித செய்தி ஊடகங்களும் மற்றும் உலக சினிமாக்களின் தலைநகரமான ஹாலிவுட்டும் அமெரிக்க சியோனிஷ்டுகளால் நிர்வாகிக்கப்படுகிறது. திரைப்படங்களின் மூலமாகவும், செய்தி நிறுவனங்களின் மூலமாகவும் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துப் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றது.

ஹாலிவுட்டின் தலைசிறந்த திரைப்பட நிறுவனமான வால்ட் டிஸ்னி(Walt Disney Television ) மற்றும் பல செய்தி, விளையாட்டு தொலைக்காட்சிகள், திரைப்பட நிறுவனங்களையும் நிர்வகிப்பது மிச்சேல் ஈஸ்னர் (Michael Eisner) என்ற சியோனிஷ்ட் யூதர் தான். (Touch stone television ,Buena Vista television,ABC, ESPN, A&E, Lifetime, Miramax Films, Caravan Pictyures, Touchstone Pictures) குழந்தைகளுக்கான கார்ட்டூன்களிலும், கேளிக்கைப் படங்களிலும் சியோனிஸ கருத்துத் திணிப்புகளை உருவாக்குவதோடு இல்லாமல் இப்பொழுது அதி நவீன கிராபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் graphic sex and gratuitous violence video games. , 3D virtual world படங்களையும், மின்னணு விளையாட்டு ஊடகங்களினாலும் இளைஞர்களிடயே வன்முறையையும், கொடிய பாலுணர்வுக் கிளர்சிகளையும் தூண்டி நிரந்த மன போதையாளர்களாய் ஆக்கிவிடுகிறது. இவர்களின் மிகப் பெரிய நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன‌.

பல முன்னணி ஹாலிவுட் திரைப்பட நிறுவனங்களின் அதிபரான ஜொய் ரோத் (Joe Roth) போன்றவர்களும், ஜெரால்ட் எம். லெவின் (Gerald M. Levin CEO ) போன்றவர்களும் அமெரிக்காவின் தலைசிறந்த செய்தி நிறுவனங்களையும் பல முன்னனி திரைப்பட குழுமங்களையும் நிறுவனங்களையும் நிர்வகிக்கின்றார்,(TV Networks, Movie Companies & Publishers,HBO, TNT, TBS, CNN, TCM, Warner Brothers, Time Inc. ,Time warner,Warner Bros. Records) . சன்மர் ரெட்ச்டோன் (Sumner redstone) இந்த யூத சியோனிஷ்டின் நிறுவனங்கள்,CBS, Paramount, MTV, Nickelodeon, Showtime, Country Music Television, Nashville Network Cable, Infinity Broadcasting (radio), Pocket Books, Free Press,Viacom ,Inc Prentice Hall,Simon&Schuster. ரொனால்ட் பெர்ல்மேன்(Ronald Perelman ) அமெரிக்காவின் அமைப்பு சாரா தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் ஆவார். இவர் New world entertainment என்ற முன்னணி ஊடக நிறுவனத்தை இயக்குகிறார்.

ஹாலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் (Steven Spielberg) ஒரு சீயோனிஸ்ட் யூதர் ஆவார். மேலும் David Geffen, Jeffrey Katzenberg இவர்கள் எல்லோரும் திரைப்பட துறையை சார்ந்த யூதர்கள் ஆவார்கள். பிரமாண்டங்களுக்கு பெயர் போன இவர்களின் திரைப்படங்கள் முழுவதும் யூத சியோனிஸக் கருத்துக்களை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. உலகின் நான்காவது பெரிய செய்தி ஊடக நிறுவன குழுமம் எட்ஜர் பிரான்மன்(Edgar Bronfman ) என்ற யூதரின் ஆளுமையில் உள்ளது.

தலைசிறந்த அமெரிக்கப் பத்திரிக்கையான வால் ஸ்டீரிட் ஜோர்னல்(Wall street Journal), பீட்டர் ஆர் கன் (Peter R Kann) என்பவராலும் உலகின் முன்னணி ஊடகமான CNN journalist Wolf Blitzer நடத்தப்படுகிறது. மேலும் US News & World report அமெரிக்க ஊடகமானது யூதரான Mortimer B. Zucherman என்பவரால் நட்த்தப்படுகிறது.

அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கை The New York post -Peter Kalikow என்பவரால் நட்த்தப்படுகிறது. இசுலாமியர்களுக்கு எதிரான நிகழ்ச்சிகளை நடத்தும் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் ஹோவார் ஸ்டெம். இவரின் நிகழ்சிகள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானது.

ரோபெர்ட் முர்டஷ்க் (Robert Murdoch-) இந்த யூதர் உலகின் 5வது பெரிய ஊடக குழுமங்களின் உரிமையாளர் (Murdoch's News Corporation,Fox Television Network, 20th Century Fox Films, Fox 2000, New York Post, TV Guide. )

அமெரிக்கன் ஃஃபில்ம் மேகசின் கணக்கெடுப்பின்படி உலகின் தலைசிறந்த பத்து திரைப்பட நிறுவனங்களில் முதல் 8 திரைப்பட நிறுவனங்கள் யூதர்களுக்குச் சொந்தமானது. 

(மேலும் பல யூத கிளை நிறுவனங்கள்-Warner Bros. , Barry Meyer, CNN/US, Walter Isaacson; Walt Disney Studies, Caravan Pictures,Miramax Films, ESPN CBS,; New World Entertainment; Fox Group; Fox Entertainment. New York Times and the Boston Globe, Arthur Sulzberger, publisher; Wall Street Journal, Kann; US World and News Report, The Atlantic, and the NY Daily News, US News and World Report,Comcast, the largest TV cable network in America; Sony of America; Verizon, the largest American wireless phone company; Corporation of Public Broadcasting, Hollywood Pictures, , Bonnier Group )

பத்து ஆண்டுகளில் வெளிவந்த 1000 ஹாலிவுட் திரைப்படங்களில் 90% வீதம் இசுலாமியர்களையும் கம்யூனிஸ்ட்களையும் தீவிரவாதிகளாகவும் அவர்களின் நாடுகளை பயங்கரவாதங்களின் உற்பத்தி இடமாகவும் காட்டியுள்ளன. இந்த திரைப்பட ஊடகங்கள் கொடூரமான எண்ண அலைகளை மக்களிடம் உண்டு பண்ணியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான மற்றும் கம்யூனிசத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை ஊடகங்களின் மூலம் பரப்புகிறார்கள் அமெரிக்க சியோனிஷ பேரழிவாளர்கள்.

மேலும் அமெரிக்காவின் முக்கிய செய்தி நிறுவனங்களான ஏ. பி. சி, சிபிஎஸ் மற்றும் என்பிசி (American Broadcasting Companies (ABC), Columbia Broadcasting System (CBS), and National Broadcasting Company (NBC) போன்ற நிறுவனங்கள் முழுமையாக யூத சியோனிஷ்ட்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

உலகம் முழுவதும் இயங்கும் பிரபலமான முதல் மூன்று பத்திரிக்கைகள் The New York Times, the Wall Street Journal, and the Washington Post இங்கு தான் உலக செய்திகள் கட்டமைக்கப்படுகிறது; உருவாக்கப்பட்ட செய்திகளை உலகம் முழுவதும் பரப்புகின்றன. மற்ற எல்லா பத்திரிக்கைகளுமே இதே செய்திகளை வேறு வடிவங்களில் அப்படியே பிரசுரம் செய்கிறது. அமெரிக்காவின் எல்லா பிரபல கேபிள் நிறுவனங்களும் யூதர்களுடையது.

மேலும் தலைசிறந்த எல்லா பதிப்பகங்களும் யூதர்களுடையது. ( Random House. . . Simon & Schuster , and Time Inc. Book Co. ) இதில் வெஸ்டன் பப்ளிஸிங் Western Publishing நிறுவனம் தான் உலகில் குழந்தைகளுக்கான தலைசிறந்த புத்தக பதிப்பாளர்கள். இந்த யூதப் பதிப்பாளர்கள் இசுலாமியர்களையும் அவர்களின் பண்பாடுகளையும் மிகவும் கேவலமான வடிவில் சித்தரிக்கிறார்கள். மேலும் சியோனிஸ கருத்துத் திணிப்புகளையும், ஃபாசிச சிந்தனைகளையும் தேசபக்தி போன்ற கருத்து மாற்றங்களுடன் சிறு குழந்தைகளின் மனங்களில் நச்சு விதைகள்களாக விதைக்கிறார்கள்.

மேலும் அமெரிக்காவிலுள்ள‌ ஐரோப்பிய நாடுகளின் பல பத்திரிக்கையாளர்கள், நிருபர்கள் எல்லோரும் சியோனிஷ்ட் சிந்தனை உள்ளவர்கள். இவர்கள் கொடுக்கும் எல்லா செய்திகளும் சியோனிஸத்தின் கருத்தாக்க‌ங்களை மட்டுமே பிரதிபலிக்கும்.

ஊடகங்களில் மிகச்சிறந்த ஆறு சியோனிஸ ஊடகங்கள் தான் இன்று உலகின் ஒட்டுமொத்த (96% விழுக்காடு) உலக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. இதில் நமக்கு வரும் எல்லா செய்திகளுமே யூத சியோனிஷ்டுகள் மென்று தின்று கழித்த எச்சங்கள் தான்.

இஸ்லாமிய தலைமைத்துவம் தகர்த்தப்பட்ட பிறகு அதன் வளர்ச்சியை முழுமையாய் ஒடுக்குவதற்கும், இஸ்லாமிய நாடுகளிடையே உறவுகளைத் துண்டிப்பதற்கும் ஊடகத்தின் துணையுடன் இஸ்லாமியர்களை சமுக நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தி இன, கலாச்சார அழிப்பு வேலைகளை செய்து வருகிறது. செய்தி ஊடகங்கள் மட்டும் இல்லாமல், திரைப்படங்கள், கார்ட்டுன் சித்திரங்கள், விளையாட்டு ஊடகங்கள் எல்லாவற்றிலுமே இசுலாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், பண்பாடற்ற பயங்கரவாதிகள் போலவும், கல்வியறிவு இல்லாதவர்கள், பெண்ண‌டிமை வலியுறுத்தும் பிற்போக்குவாதிகள் என்றும் தொடர் கருத்துத் திணிப்புகளை நடத்தி வருகிறது. அது என்னவோ தெரியவில்லை, இந்த ஊடகங்களில் காட்டப்படும் எல்லா இசுலாமிய தீவிரவாதிகளும் ஒருவனின் கழுத்தை அறுக்கும்போது இசுலாமிய வேதங்களை ஓதிக் கொண்டும், குரானை கையில் ஏந்துவதற்கும் தவறுவதே இல்லை. அதே போல் எந்த குண்டுவெடிப்பாக இருந்தாலும் தீயினால் சிறிதும் பாதிக்கப்படாத குரான் பிரதிகள் தவறாமல் இருக்கும். இவையெல்லாம் இசுலாமிய தீவிரவாதிகளின் இருப்பை உறுதி செய்யும். தாய்நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்க கூட்டுப்படைகளை நோக்கி குண்டு வெடிப்புகளை நிகழ்த்தாமல் தன் சொந்த நாட்டினர் மேல் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகளை நடத்துவது தான் புரியாத விசயமாகும். வெடித்த குண்டுகள் பாதிக்குப் பாதி கூட அமெரிக்கர்களை மட்டும் கொல்லாதது தொழில் நுட்பப் புதிராக இருக்கிறது.

ஈராக்கிலும், ஆஃப்கானிஸ்தானிலும் நாள் ஒன்றுக்கு கணிசமான பிணக்குவியல்கள் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு தேவைப்படுகிறது. அவைதான் அமெரிக்கா நேச நாடுகளின் இருப்பை நீட்டிக்கும். ஈராக், ஆஃப்கான் மட்டும் அல்ல அழிக்கப்பட வேண்டிய நாடுகளின் எண்ணிக்கை தொடர்கிறது.

ஏகாதிபத்திய ஊடகங்களின் தொடர் தாக்குதல்களால் இசுலாமியர்கள் மட்டும் என்றில்லை, உள்நாட்டு அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட பழங்குடிமக்களும், ஆதிக்கசக்திகளால் நிலங்களை இழந்து நிற்கும் மக்களும், ஏகாதிபத்திய சுரண்டலுக்கு உள்ளான நாடுகளும் தொடர்பாதிப்புகளை சந்தித்து வருகின்றன‌.

ஊடகங்கள் உருவாக்கும் நாகரீக மோகத்தால் இன்று பரவலாக உலக நாடுகள் தனது சுய அடையாளங்களை இழந்து வருகின்றன‌. ஊடகங்கள் விதைத்தவற்றில் நாம் இழந்தது தான் அதிகமாக உள்ளது. மக்களின் போராட்ட உணர்வுகள் மழுங்கடிப்பட்டுள்ளன; உலகமயமாதலில் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பங்குபெற செய்துள்ளது; அதன் பாதிப்பால் உலக பொருளாதார பாதிப்புகள் ஒவ்வொரு மனிதனின் முதுகெழும்பையும் உடைத்துவிடுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தை பெருக்கியும் மறைமுகமாக மக்களின் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் சூழல்களையும் உருவாக்கியுள்ளது.

நம் நிலங்களை இழந்து வருகிறோம்; கலாச்சாரத்தைத் தொழைத்து விட்டோம்; மொத்தத்தில் நாம் சிந்திப்பது நமது சிந்தனைகள் அல்ல - அது எங்கிருந்தோ உருவாக்கப்பட்டது. நாம் மூளைச்சாவு வந்தவர்களாகத்தான் அலைந்துகொண்டுள்ளோம்.

இனம் காக்க, மீண்டும் சமுக உரிமை பெற, நாம் நாமாக வாழ இந்த நூற்றாண்டின் சர்வ வல்லமை படைத்த ஊடக ஆயுதத்தை நாம் கையாள வேண்டும்.

தனதாக்கிக் கொள்ளும் ஊடகப் போராட்டமும் ஒரு சுதந்திரப் போராட்டம் தான்.

- இராசகம்பீரத்தான் மால்கம் X (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

+91 97909 29735

Pin It

நமக்குத் தெரியும் - ஏன் இங்கு கிராமங்கள் இரண்டாகப் பிரிந்திருக்கின்றன என. நமக்குத் தெரியும் மனிதரை மனிதர் ஏன் வணங்குகிறார்கள் என, வதைக்கிறார்கள் என. நமக்குத் தெரியும், நம் ரத்தமல்லாத ஒருவரை ஏன் ஒடுக்க வேண்டுமென. நமக்குத் தெரியும், ஏன் கருப்பும் வெள்ளையும் கலக்கக் கூடாதென. நமக்குத் தெரியும், ஏன் அதிகாரமும் அடிமைத்தனமும் அழியக் கூடாதென. நமக்குத் தெரியும், மதமும் சாதியும் ஏன் நீடித்திருக்க வேண்டுமென. இங்கு எல்லா அநீதிகளும் தெரிந்தேதான் நடந்தேறுகின்றன. நாம்தான் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவற்றை நடத்துகிறோம். ஆனால் எதுவுமே நடவாதது போல் நடிப்பதே நலமாகத் தெரிகிறது!

விரும்பியபடியே மிக வசதியான ஒரு வாழ்க்கையை வாழ்வதாக நாம் கற்பனை செய்து கொண்டுள்ளோம். சாதி, மத, பாலின மற்றும் வர்க்க ரீதியான பாகுபாடுகள் மலிந்திருக்கும் ஒரு சமூகத்தில் - இக்கற்பனை மிக மூர்க்கமானது, சுயநலமிக்கது. சுயநலங்கள் எப்போதும் தற்காலிக சுகங்களை மட்டுமே அளிக்கின்றன. இந்த உண்மையை ஏற்க மறுத்து வாழ்கிறோம். பிறரையும் அப்படி வாழ அறிவுறுத்துகிறோம். நமக்கு நேராத எதுவும் நம் துயரமல்ல. நமக்கு நேராத வரை, எந்த அநீதியும் ஏதோவொரு வகையில் நீதியே! கண்களும் காதுகளும் உணர்வுகளும் மரத்துப் போயிருந்தால் மட்டுமே இங்கு "நல்வாழ்வு' சாத்தியப்படுகிறது.

amina_lavalசட்டப்பூர்வமாக ஜனநாயகத்தைக் கொண்டாடும் ஒரு நாட்டில் தன் கருத்தை சொல்வதோ, விரும்பிய வாழ்க்கையை வாழ்வதோ, சுய மரியாதையோடு தலை நிமிர்வதோ அத்தனை எளிதானதாக இல்லை. காரணம், ஆழமாக நீண்டு கிடக்கும் பாகுபாட்டின் வேர்கள், ஒவ்வொருவர் கால்களையும் கழுத்தையும் இறுக்கிப் பிடித்திருக்கின்றன. மத நம்பிக்கைக்கு புறம்பாகவோ, சாதியை மீறியோ ஒருவர் செயல்பட விளைந்தால், இந்த வேர்கள் இரக்கமில்லாமல் முறுக்கிக் கொல்கின்றன.

கவுரவக் கொலைகளாக இன்று ஊடகங்கள் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கும் சாதி - மத வக்கிரக் கொலைகள் நவீனக் குற்றமல்ல. பல நூற்றாண்டுகளாக பல நாடுகளிலும் ஊறிக் கிடக்கும் கொடுமைதான். விலங்குகளைப் போல வாழ்ந்து வந்த மனிதர்கள், சில நெறிகளோடு வாழத் தலைப்பட்டு, மதங்களையும் குடும்ப அமைப்பையும் உருவாக்கினர். குழுக்களாக வாழ்ந்து வந்த மனித இனத்தில் பலமுள்ள, தகுதியுள்ள யாரும் தனிக் குழுவை அமைத்து தலைமையாக மாறிவிட முடிந்த காலத்தில் - தனக்கு சேவை செய்ய அடிமை வேண்டுமென நினைத்தவர்களும், உலகின் வளங்களை தான் மட்டுமே அனுபவிக்க விரும்பியவர்கள், மதங்களையும் குடும்ப அமைப்பையும் பயன்படுத்திக் கொண்டனர்.

மதங்கள் மனிதர்களைப் பாகுபடுத்தி பிரித்து வைத்தன. குடும்ப அமைப்பு பெண்களை சிறைப்படுத்தியது. மதங்கள் மனிதர்களை ஆளத் தொடங்கிய பின்னர், குடும்ப அமைப்பு வலுப்பெறத் தொடங்கிய நிலையில், பெண்கள் சக உயிரினம் என்பதே ஆண்களுக்கு மறந்து போனது. ஒரு பண்டத்தைப் போல, சொத்துகளைப் போல பெண்கள் கருதப்பட்டனர், பாதுகாக்கப்பட்டனர்.

ஒவ்வொரு ஆணும், தான் சார்ந்த மதத்தின் அடையாளச் சின்னங்களாக, தன் மதம் போதிக்கும் கட்டுப்பாடுகளைத் தாங்கி நிற்கும் பண்பாட்டுத் தூண்களாக பெண்கள் திகழ வேண்டுமென எதிர்பார்த்து, அதை செயல்படுத்தவும் செய்தனர். தனிப்பட்ட முறையில் தனக்கென உரிமைகளோ, மரியாதையோ வேண்டுமென கருதவில்லை. மத விதிமுறைகளைப் பின்பற்றுவதே தனக்கான கவுரவமாக ஆண்கள் கருதத் தொடங்க, அந்த பாரம் முழுவதும் பெண்கள் மேல் விழுந்து அழுத்தியது. வீட்டை விட்டு வெளியேறவும், உடலைப் பேணவும், பேசவும், சிரிக்கவும், நிமிரவும், கற்கவும், அறிவைப் பெருக்கவும் தடை விதிக்கப்பட்டது. பெண்களை அடிமைப்படுத்துவதிலும் கவுரவச் சின்னமாக வளர்ப்பதிலும் உலகின் எந்த மதமும் எதற்கும் சளைத்ததில்லை என்றாலும், கவுரவக் கொலைகள் பெருமளவில் நடந்தேறுவது - இஸ்லாத்திலும் இந்து மதத்தின் சாதியக் கட்டமைப்பிலும்தான்.

குடும்பத்திற்கோ, சாதிக்கோ, மதத்திற்கோ "களங்கம்' உண்டாகும் வகையில் ஒரு பெண் நடந்து கொண்டால், அந்தப் பெண்ணை குடும்பத்தினரோ, சாதிக்காரர்களோ, மதத்தினரோ வெளிப்படையாகவே கொலை செய்யலாம். இக்கொலைகளை சட்டத்திற்கு அஞ்சி, மறைமுகமாக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை. குடும்ப மற்றும் சாதி - மத மரியாதையைக் காப்பாற்ற நிகழ்த்தப்படும் இக்கொலைகளை, குற்றமாக சாதி - மத ஆதிக்கவாதிகள் கருதுவதில்லை. குடும்பத்திற்கும் சாதிக்கும் மதத்திற்கும் களங்கம் ஏற்படுத்துபவரை கொல்வதன் மூலம், இழந்த கவுரவத்தை திரும்பப் பெறுவதாக ஆறுதலடைகின்றனர். உறவுகள் மற்றும் சக சாதிக்காரர்கள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நடக்க இந்த கவுரவக் கொலைகள் உதவுகின்றன!

கவுரவக் கொலை என்பது, எந்தப் பாலினத்தையும் குறிக்காத பொது சொல்லாடல். ஆனால் 99 சதவிகிதம் இதற்கு பலியாவது பெண்களே! இஸ்லாமிய மதத்தைப் பொருத்தவரை, மதக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பெண்களை குறி வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதால், பெரும்பாலும் இந்த கவுரவக் கொலைகளுக்கு பலியாவது முஸ்லிம் பெண்கள்தான். எகிப்து, ஜோர்டான், மொராக்கோ, பாகிஸ்தான், துருக்கி, ஏமன், அரபு நாடுகள் மற்றும் பிற பெர்ஷிய, வளைகுடா நாடுகளிலும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்களிடமும் கவுரவக் கொலை செய்யும் பழக்கம், மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அசைவும் நெருங்க கண்காணிக்கப்பட்டு, மத விதிமுறைகளில் இருந்து இம்மி பிசகினாலும் சொந்த உறவுகளாலேயே மரண தண்டனை பெறுகின்றனர் பெண்கள். உடைக் கட்டுப்பாட்டில் குறை வைத்தாலோ (இங்கு குறை என்பது பர்தா அணியாததையோ, நாகரிக உடைகளில் நடமாடுவதையோ குறிக்கவில்லை. கால் சுண்டுவிரல் தெரிந்தாலும் அது கொலைக் குற்றமே) குடும்பத்தினரால் நிச்சயிக்கப்படும் திருமணத்தை மறுத்தாலோ, தன் விருப்பத்திற்கு திருமணம் செய்ய முயன்றாலோ, திருமணத்தை மீறிய பாலியல் உறவுகளில், ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டாலோ, கொடுமைக்கார கணவனோடு வாழ மறுத்தாலோ - மதக் கட்டுப்பாடுகளை மீறியதாக கொலை செய்யலாம்.

இதில் கொடுமை என்னவென்றால், ஒரு பெண் வல்லுறவுக்கு ஆளானாலும் கவுரவம் பறிபோனதாக, பாதிக்கப்பட்ட பெண் கவுரவக் கொலை செய்யப்படுவார். பத்தாண்டுகளுக்கு முன்னர், உலக நாடுகளிடம் அடைக்கலம் கேட்டு அலைந்த அமினா லாவல் என்ற நைஜீரியப் பெண்ணை எவரும் மறந்திருக்க முடியாது. மனித உரிமைகளை மதிப்போரை பதற்றத்திற்குள்ளாக்கிய கொடூரம் அது. கணவனை இழந்த அமினா, முகம் தெரியாத நபரால் வல்லுறவு செய்யப்பட்டு, கர்ப்பமடைந்த நிலையில், இஸ்லாமிய சமூகத்திற்கு களங்கம் உண்டாக்கியதாக அமினாவை கல்லால் அடித்துக் கொல்லத் துடித்தனர் மதவாதிகள். குழந்தை பிறக்கும் வரை அவருக்கான தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. உயிர் வாழ வேண்டிய கட்டாயத்தில் உலகத்தின் முன் மன்றாடினார் அமினா. தன் குழந்தையை இறுக அணைத்தபடி போராடிய அமினாவின் முகம், இரக்கம் கொண்ட இதயங்களை சஞ்சலப்படுத்தியது. கடைசி வரை அவரை கொன்று விடத் துடித்த மதவாதிகளிடமிருந்து தப்பித்தார் அமினா. கவுரவக் கொலை அச்சுறுத்தலுக்கு, அமினா தொடக்கமும் அல்ல முடிவும் அல்ல.

மதவெறியும் ஆணாதிக்கமும் எத்தனை கொடூரமானது என்பதற்கும், அவை ஒருபோதும் மனித உரிமைகளை மதிப்பதில்லை என்பதற்கும் வெட்ட வெளிச்சமான எடுத்துக்காட்டுதான் கவுரவக் கொலைகள். இது ஏதோ என்றோவொரு நாள் உலகின் ஏதோவொரு மூலையில் நடக்கும் அவலம் அல்ல. அய்க்கிய நாடுகள் அவை - ஒவ்வொரு ஆண்டும் அய்யாயிரம் கவுரவக் கொலைகள் நடந்தேறுவதை உறுதி செய்துள்ளது. துருக்கியில் வாரம் ஒரு கொலை, லெபனானில் மாதம் நான்கைந்து கொலைகள், பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் கொலைகள் என ஒவ்வொரு நாடும் அளிக்கும் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சியில் உறையச் செய்கின்றன.

கவுரவக் கொலைகள் மத நலனுக்காகவும் கவுரவத்தை மீட்கவுமே நடத்தப்படுவதால், அது குற்றச் செயலாகக் கருதப்படுவதில்லை. இக் குற்றம் மிகத் தீவிரமாக நடந்தேறும் பல நாடுகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை அல்லது குறைந்த அளவிலான சிறை தண்டனையோடு தப்பித்து விடுகின்றனர். தண்டனைகள் கடுமையாக இல்லாததால், கொலை செய்தாலும் ஓரிரு ஆண்டுகளில் வெளி வந்துவிடலாம் என்ற துணிச்சல் மதவாத ஆண்களின் கவுரவ உணர்வை மேலும் தூண்டுகின்றன. பதினெட்டு வயதிற்குட்பட்ட குடும்ப உறுப்பினரைக் கொண்டு கொலை செய்தால், குழந்தைகள் சட்டப்படி தண்டனை கிடைக்கும் எனக் கருதி, சிறுவர்களைக் கொண்டு கொலை செய்வதும் நடக்கிறது.

1999 இல் வடமேற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்டாள். உடனே காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், உள்ளூர் பஞ்சாயத்து கூடி, பாதிக்கப்பட்ட சிறுமி கற்பை இழந்து குடும்பத்திற்கு அவமானத்தை உண்டாக்கி விட்டதாக கொதித்தனர். எல்லோர் முன்னிலையிலும் சிறுமியை அடித்துக் கொல்ல முடிவு செய்து, சிறுமியின் பருவ வயது சகோதரர்களைக் கொண்டே அக்கொடுமையை நடத்தினர்.

பெரும்பாலான கவுரவக் கொலைகள் தற்கொலைகளாகவும் விபத்துகளாகவும் சித்தரிக்கப்பட்டு, புள்ளிவிவரங்களுக்குள் அடங்காமல் போகின்றன. பாகிஸ்தானில் "கரோ கரி' என்ற பெயரில், துளி கருணையுமின்றி பெண்களை கொலை செய்வது தொடர்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்ததற்காக, மூன்று பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்ட கொடுமையும், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த மகளை மாமனார் சந்தேகப்பட்டதால் தகப்பனே கொடுமைப்படுத்தி, கொலை செய்ததும் மனித உரிமை ஆர்வலர்களை உறைய வைத்தாலும் மத நம்பிக்கை கொண்ட மக்களையும் அரசையும் எந்த விதத்திலும் அது அசைக்கவில்லை. ஆண் எனும் சர்வாதிகாரி மதம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு தன்னை ஒடுக்குகிறான் என்ற புரிதலின்றி பெண்களும் இந்த கொடூரத்தை ஆதரிக்கவே செய்கின்றனர். "குடும்பத்தில் உள்ள பெண்கள் - தாய், மாமியார், சகோதரி - கவுரவக் கொலைகளை ஆதரிக்கின்றனர். இது அவர்களது சமூக மனநிலை' எனப் பதிவு செய்கிறது அம்னஸ்டி இன்டர்நேஷனல். தங்கள் மீதான ஒடுக்குமுறைகளை ஒடுக்கப்பட்டோரே நியாயப்படுத்தும் பாடத்தை, மதங்கள் எப்போதோ கற்றுக் கொடுத்துவிட்டன.

சமூக இணையதளமான "பேஸ்புக்' கில் ஆணுடன் உரையாடியதற்காகவும், வானொலியில் நண்பர் ஒருவரால் பாடல் சமர்ப்பிக்கப்பட்டதற்காகவும் தந்தையரே மகள்களை கொன்றிருக்கின்றனர். மத அடிப்படைவாதிகளைப் பொருத்தவரை, பெண்கள் ஆண்களின் உடைமை. அவ்வளவே. அவர்களுக்கென தனியாக உயிர் இருக்கிறது என்பதைக் கூட ஆண்களின் ஆதிக்க மனம் ஏற்றுக் கொள்வதில்லை என்பதையே இந்த கொடூரங்கள் உணர்த்துகின்றன. இஸ்லாமிய நாடுகளில் புரையோடிப் போன கவுரவக் கொலை வழக்கம், இந்தியாவில் படிந்திருப்பது ஜாதி வடிவத்தில். உலகளவில் எந்த அநீதியை சுட்டிக்காட்டினாலும் அது சாதிக் கொடுமையில் இடம் பிடிக்காமல் போகாது.

இந்தியாவிற்கு வெளியே நடக்கும் கவுரவக் கொலைகள், மதக் கட்டுப்பாடுகளையும் ஆணாதிக்கத்தையும் நிலைநிறுத்த நடத்தப்படுகின்றன. இந்தியாவில் அவை இடம்பெறுவது சாதிக்காக. இங்கு எந்தவொரு மனிதருக்கும் சாதிதான் முதல் அடையாளம். பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லா நிகழ்வுகளிலும் சாதியை அழுந்த பதித்துவிட, ஒவ்வொரு சாதியினரும் முனை கின்றனர். இவர்கள் தங்கள் சாதி அடையாளத்தையும் கவுரவத்தையும் அழுந்த பதிப்பது திருமணங்களில்தான். தன் சாதிக்காரரை வரன் பார்த்து, தன் சாதிக்காரர்களை அழைத்து, தன் சாதிக்குரிய சடங்குகளோடு, தன் சாதி தலைவர் தலைமை தாங்க திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடிப்பதை, ஆதிக்க சாதியினர் வாழ்வின் லட்சியமாகவே கொண்டிருக்கின்றனர். திருமணத்தை மீறியதோர் சாதிய நிகழ்வு அவர்களுக்கு இல்லை. பிள்ளைகளின் காதல் செயல்பாடுகளால் இந்த லட்சியத்திற்கு இடையூறு நேரும் போது, சொந்த சாதிக்காரர்களிடம் தலைகுனிவு உண்டாவதாகப் பதறுகின்றனர்.

ஆதிக்க சாதியினரைப் பொருத்தவரை, காதல் என்பது கெட்ட வார்த்தை! சாதி மறுப்புத் திருமணம் செய்த மகன்/மகளை அல்லது அவர்கள் நேசித்தவரை அல்லது இருவரையும் கொலை செய்வதன் மூலம் - சாதியின் மீது படிந்த கரையைத் துடைப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். சாதியின் பெயரால் நடக்கும் இந்த கவுரவக் கொலைகளுக்கு காலங்காலமாக பலிகள் விழுகின்றன. வட இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களிலேயே கவுரவக் கொலைகள் அதிகம் நடப்பதாக சுட்டிக் காட்டப்பட்டாலும், உண்மையில் சாதி எங்கெல்லாம் வேரூன்றி இருக்கிறதோ, அங்கெல்லாம் கவுரவக் கொலைகள் நடந்திருக்கும்/நடந்து கொண்டிருக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியும்.

கிராமப்புறங்கள் சாதியின் பிறப்பிடமாகத் திகழ்கின்றன. இன்றும் சாதிக்கு கட்டுப்பட்டுதான் கிராமப்புற மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு அரசமைப்புச் சட்டமெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஊராகவும் சேரியாகவும் பிரிந்து கிடக்கும் கிராமங்கள் முழுக்க முழுக்க, ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரிலும், சாதி வழக்கம் என்ற முறையிலும் இங்கு நடந்தேறும் அநீதிகள், கற்காலத்திற்கும் ஒத்துவராத உரிமை மீறல்கள். சாதி விதிகளை ஒடுக்கப்பட்டவர்கள் மீறினால், அவர்களுக்கு மிகக் கொடுமையான தண்டனைகளை வழங்குகிறது ஊர் பஞ்சாயத்து.

காதல் கொண்டு, உயர்த்தப்பட்ட சாதியினரும் தாழ்த்தப்பட்டோரும் திருமணம் செய்தால், அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொலை செய்துவிட வெறியோடு அலைகின்றனர். வேற்று சாதியைச் சேர்ந்த காதலர்கள் ஊரைவிட்டு ஓடிவந்து நகரத்தின் நெரிசலில் முகம் தெரியாத மனிதர்களிடையே வாழ்ந்துவிட சிறிதளவேனும் இன்று வாய்ப்பிருப்பதாக நாம் நம்புகிறோம். அது உண்மையல்ல. காதலுக்காக உயிரை விட்டவர்களுக்கும் உயிருக்காக காதலை விட்டவர்களுக்கும் இடையில் - சாதி மட்டும் தன் இருப்பை நிலைநாட்டியிருப்பது கண்கூடாகத் தெரியும். ஆதிக்க சாதியினர் தலித்துகளை கொன்றால் அது வன்கொலை. ஆதிக்க சாதியினர் சாதிக்காக தன் சாதியினரையே கொன்றால் அது கவுரவக் கொலை. வித்தியாசம் அவ்வளவே. விளைவு ஒன்றுதான்.

மதுரை மாவட்டம் கட்டிக்குளத்தை சேர்ந்த மேகலாவும் எம். புட்டுக்குளத்தைச் சேர்ந்த சிவக்குமாரும் காதலித்து வந்தனர். ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் வசதியில் குறை இருந்ததால், தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் சூழ வேறொருவருக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். மேகலா சில வாரங்களில், சிவக்குமாருடனேயே புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டார். இருவரும் அங்கேயே தங்கியிருந்த நிலையில், தீவிர தேடுதலுக்குப் பின்னர் மேகலாவின் தந்தை விஜயன் அவர்களை கண்டுபிடித்து, இருவரையும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சேர்த்து வைப்பதாகக் கூறி அழைத்து வந்தார். சிவக்குமாரை அழைத்துச் சென்ற விஜயன் திரும்பி வரும் போது, அவர் அணிந்திருந்த சட்டை முழுவதும் ரத்தக்கறை.

சிவா எங்கே என்று கேட்டு மேகலா கதற, குடும்ப மானத்தை கெடுத்துவிட்டதாக சாடியபடி எல்லோருமாக சேர்ந்து, மேகலாவை மிக மோசமாகத் தாக்கத் தொடங்கினர். கட்டிக்குளத்திலேயே சிவாவை கொன்றுவிட்டு தந்தை விஜயனும் அண்ணன் பிரபாகரனும் தலைமறைவாக, மேகலாவால் இழந்த சாதி கவுரவத்தை சிவாவைக் கொன்று மீட்டுவிட்டதாக சாதிக்காரர்கள் பெருமைப்படுகின்றனர். "கல்யாணத்துக்கப்புறம் மக ஓடிப் போனா, விஜயன் எப்படி தலை நிமிர்ந்து நடக்க முடியும்? கொலை செஞ்சதுக்கப்புறம் ஜாதி கவுரவத்தை காப்பாத்திட்டதா எல்லோரும் பெருøமப்படுறாங்க' என்கிறார், கட்டிக்குளத்தைச் சேர்ந்த முதியவர்.

அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சொல்லும் நியாயம், சாதிக்கு இன்னும் வலு சேர்ப்பதாக உள்ளது. "சிவக்குமார் தாழ்த்தப்பட்டவனா இருந்திருந்தா, அவனை கொலை செய்றதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா ஒரே ஜாதியில் இருந்துட்டு அவனை கொன்னது சரியில்லை' என்கிறார்கள். "எவிடன்ஸ்' என்ற அமைப்பின் பாதுகாப்பில் இருக்கும் மேகலா, தன் உறவுகளால் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூலை 18, 2010). மகளின் வாழ்வே சிதைந்தாலும் சரி, கொலைப்பழியில் சிறைக்கு சென்றாலும் சரி, சாதி கவுரவமே முக்கியம் என்று கருதும் மனநிலையை எந்த வக்கிரத்தில் சேர்ப்பது?

அழுந்த வேரூன்றியிருக்கும் சாதியை அழிக்கவல்ல ஆயுதமாக - காதலும் சாதி மறுப்புத் திருமணங்களும் இருப்பதாலேயே இந்த சாதிய சமூகம் அதை எதிர்க்கிறது. முன்பைப் போல அல்ல. இன்றைய இளைஞர்களுக்கு சந்திப்பதற்கும், பேசிக் கொள்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். சாதியில் ஊறிய மனதை காதல் மட்டுமே தூய்மைப்படுத்த வல்லது என்ற நிலையில், சாதி மாறி காதலிப்பவர்களுக்கான எச்சரிக்கையாகவே கவுரவக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணம் செய்கிறவர்களின் குடும்பத்தை தள்ளி வைப்பதும், வீட்டிலிருக்கும் மற்ற பெண்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என கற்பனை செய்து கொள்வதும் காதலர்களை உடனே தண்டிக்க விரட்டுகிறது.

வீட்டுப் பெண்களுக்கு சாதி ஒழுக்கத்தையும் குடும்ப கவுரவத்தையும் கற்றுக் கொடுக்காமல் வளர்த்துவிட்டதாக உண்டாகும் பழியில் இருந்து தப்பிக்க அரிவாளைத் தூக்குகின்றனர். வேறு என்ன செய்தாலும் சாதி வெறியை திருப்திப்படுத்த முடியாது என்பதாலேயே கொலை செய்து கோபத்தை ஆற்றிக் கொள்கின்றனர். தனிமனித கவுரவத்தோடு சேர்த்து ஊட்டி வளர்க்கப்படும் சாதியை, காதல் எனும் கால்களால் மிக எளிதாக எட்டி உதைப்போர் அதற்கு கொடுக்கும் விலை அவர்களது உயிர்.

காதல் என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம். அது பிரச்சனைக்குரியதானால், அதிகபட்சமாக அந்த குடும்பம் மட்டுமே எதிர்வினையாற்ற வேண்டும். ஆனால் இங்கு ஏன் எட்டுப்பட்டி ஜனங்களும் கூடி முடிவெடுக்கிறார்கள்? ஏனென்றால், சாதியால் தனியாக இயங்க முடியாது. அதுவொரு கும்பல் மனப்பான்மை. தனியாக இயங்க நேர்ந்தால் அது அழிந்து போகும். தனிமனித விருப்பங்களை சாதி விருப்பங்களாக மாற்றுவதும், சாதி கட்டுப்பாடுகளைக் கொண்டு தனிநபர் விருப்பங்களை முடக்குவதுமாக - மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்திற்கும் கடுமையான சவாலாகத் திகழ்கிறது சாதி. சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்போருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என ஒன்று கிடையவே கிடையாது. எல்லாமே பொது. எல்லாமே சாதிக்கானது. அதனால்தான் குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றாலும் ஊரே உள்ளே நுழைந்து உசுப்பேற்றி விடுகிறது. இது போன்ற காட்சிகளெல்லாம் திரைப் படங்களில் மட்டுமே நடப்பதாக நாம் நம்பினால், அது முட்டாள்தனம்.

நிலக்கோட்டை வட்டம் மலைப்பட்டியைச் சேர்ந்த சங்கீதாவின் காதலும் மரணமும், சாதி என்பது இழப்புகளையும் இழிவுகளையும் மட்டுமே உண்டாக்கும் கும்பல் மனப்பான்மை என்பதை உணர்த்தும் பாடம். கம்பளத்து நாயக்கராகப் பிறந்த சங்கீதா, கல்லூரிக்குப் போகும் பேருந்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலச்சந்தரை சந்தித்து காதல் கொண்டார். இரண்டாண்டுகள் கடந்த நிலையில் சங்கீதாவின் வீட்டிற்கு இது தெரிய வந்தது. அன்று முதலே சங்கீதா பல வகைகளிலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாலச்சந்தரை ரகசியமாக சந்தித்த சங்கீதா, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்த, இருவரும் ஊரைவிட்டே சென்றனர். பாலச்சந்தரின் ஊரான எத்திலோட்டிற்கு சங்கீதாவை தேடி வந்த உறவினர்களிடம், எப்படியேனும் கண்டுபிடித்து அனுப்பி வைப்பதாக சமாதானப்படுத்தினார், பாலச்சந்தரின் தாய் லீலாவதி. ஆனால் சங்கீதா பெற்றோருடன் போக மறுக்கவே, உதவி கேட்டு நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு போனார் லீலாவதி. ஆனால், அங்கு சங்கீதா அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் வைத்தே சங்கீதாவை அடித்து உதைத்தனர் உறவினர்கள். பதினைந்து ஊர்களைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர்கள் ஒன்று கூடி, சங்கீதாவிற்கு தகுந்த பாடம் புகட்ட முடிவு செய்தனர். அதன்படி, மாட்டுக் கொட்டடியில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கிடத்தப்பட்டார். நாய் தட்டில்தான் அவருக்கு உணவு கொடுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவரை காலித்ததால், சாதிக்கு களங்கம் உண்டானதாக ஊரையே கழுவி சுத்தம் செய்தனர். ஊர் கோயிலுக்கு வெள்ளையடிக்கப்பட்டது. சரியாக மூன்றாவது நாள், சங்கீதாவிற்கு விஷ ஊசி போட்டுவிட்டு உயிர் பிரிவதற்கு காத்திருந்தனர். ஆனால் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் போதே, தோட்டத்தில் வைத்து எரித்து, அந்த சாம்பலை "கெட்ட ஆவிகள்' தாக்காமல் இருக்க ஊரைச் சுற்றி தூவினார்கள் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்' சூலை 18, 2010).

கிராமப்புறங்களில் கல்வியறிவு பெறாமல் இன்றும் மரத்தடியில் அமர்ந்து நீதிபதிகளைப் போல தீர்ப்பு சொல்லும் மக்கள் மட்டுமல்லர்; படித்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியானாலும் நாட்டின் முதல் குடிமகனாக அமர்ந்தாலும் சாதிக்குதான் முதல் மரியாதை அல்லது அவமரியாதை. கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த செய்தியாளர் நிருபமா பதக், அவரது வீட்டிலேயே சடலமாகக் கிடந்தார். நிருபமா மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக முதலில் தெரிவித்த பெற்றோர், பின்னர் ஒரு தற்கொலை கடிதத்தை காண்பித்து, அவர் மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டதாகக் கூறினர். ஊடகங்களில் நிருபமாவின் மரணம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வந்து சேர்ந்தது. இறக்கும் போது நிருபமா மூன்று மாதங்கள் கர்ப்பமாக இருந்ததாகவும், அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு, அதன் பின்னரே இது கவுரவக் கொலை என தெரிய வந்தது. பார்ப்பனரான நிருபமா, வேற்று சாதியை சேர்ந்த ஒருவரை காதலித்து கர்ப்பமடைந்திருக்கிறார். இதை சகிக்க முடியாத தாய் சுதா தேவியே மகளை கொன்றிருக்கிறார். சாதி ஆதிக்கத்தை கட்டிக் காப்பாற்றுவதில் பெண்களும் ஆண்கள் அளவிற்கு வெறியுடனேயே இருக்கிறார்கள் என்பதற்கு சுதா தேவி ஓர் எடுத்துக்காட்டு.

அநீதி என்பது ஒன்றே ஒன்றுதான். உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, சமூக ரீதியாகவோ மனிதரை மனிதர் ஒடுக்கும் அவலம். அதற்கு வேறு முகங்களோ, வடிவங்களோ இல்லை. அது மதத்தாலோ, சாதியாலோ, இன, பாலின, வர்க்க வேறுபாடுகளாலோ விழைந்திருக்கலாம். ஏதோவொரு வரையறைக்குள் அநீதியை எதிர்ப்பவர்களுக்குதான் குழப்பம். ஆனால் அநீதியை நிகழ்த்துவோருக்கு, எந்தப் பாகுபாடுமில்லை. ஆதிக்கம் கொண்ட ஓர் மதவாதி பிற மதத்தினரை அழிப்பதையும், ஒடுக்கப்பட்டோரை வன்கொடுமைகள் செய்து துன்புறுத்துவதையும், பெண்களை அடிமைப்படுத்துவதையும் ஒருசேர செயல்படுத்துகிறார். ஆனால் அநீதியை எதிர்ப்போர் தங்களது எதிர்ப்பை பங்கிட்டுக் கொள்கின்றார்; வரையறைப்படுத்தி வைத்திருக்கின்றனர். விளைவு, மத ஆதிக்கத்தை எதிர்ப்போர் சாதியை சாடுவதில்லை. சாதியை அழிக்க விழைவோர் மதத்தை எதிர்ப்பதில்லை. இவ்விரு பிரிவினருக்கும் பெண்ணடிமைத்தனம் ஒரு பொருட்டே அல்ல. அதனாலேயே இங்கு ஆதிக்கவாதிகள் வலிமைமிக்கப் பிரிவினராக வளர்ந்து கொண்டே இருக்கின்றனர்.

என்ன மனிதர்கள் நாம்? சாதி எனும் இழிவை கட்டிக் காக்க, இன்னும் எத்தனை கொடுமைகளை சக மனிதருக்கு எதிராக இழைக்கப் போகிறோம்? இல்லையெனில், மனித உரிமைகளை சிதைக்கும் இது போன்ற கொலைகளை, இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப் போகிறோம்? இதுதானா கவுரவம்? ஓர் உயிரை அழித்து, வாழ்வின் நிம்மதிகளைத் தொலைத்து, கவுரவமென்று எதை அடைகிறோம்? வீட்டை விட்டு ஓடி வரும் காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தால், அங்கும் சாதி உணர்வாளர்களே அதிகாரிகளாக இருக்கின்றனர் அல்லது லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு காதலர்களைப் பிரிப்பதில் காவல் துறையே முன்னின்று செயல்படுகிறது. காதலர்களுக்கு பாதுகாப்பளிக்கவென இங்கு அமைப்புகள் இல்லை. கவுரவக் கொலை, கவுரவக் கொலை என கத்திக் கொண்டிருக்கிறோமே தவிர, சாதி வேலியைக் கடந்து ஊருக்குள் சென்று சட்டத்தாலும்கூட அவற்றைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

சாதி விஷயத்தில் தலையிட்டு கலவரம் உண்டானால், ஆட்சிக்கு களங்கம் உண்டாகுமோவென இது போன்ற விஷயத்தில் எப்போதும் அமைதி காக்கிறது ஆளும் அரசு. முன்பெல்லாம் ஊரைவிட்டு செய்தி கசியாமல் காதோடு காது வைத்தாற் போல நிகழ்த்தப்பட்ட கவுரவக் கொலைகள், தற்பொழுது காட்சி ஊடகங்களின் வெளிச்சத்தில் சர்வதேச கவனத்திற்கு வருகின்றன. கவுரவக் கொலைகள் இதுவரையிலும் கொலை என சட்டத்தால் வரையறுக்கப்படவில்லை. இது வரையிலும் இந்த வகையான கொலைகள், அந்தந்த சாதிக்காரர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையாகவே இருந்து வருகின்றன. மத்திய அரசு சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக எட்டு பேர் கொண்ட அமைச்சர் குழுவை நியமித்திருக்கிறது. கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்துவதற்காக, இருக்கும் சட்டத்திலேயே கவுரவக் கொலைகளையும் கொலைகளாக சேர்க்கவும் கொலை செய்யும் குடும்பத்தார் மட்டுமின்றி, அதற்கு ஆணையிடும் சாதி பஞ்சாயத்தில் இடம் பெறுவோரையும் குற்றவாளிப் பட்டியலில் இணைக்க இக்குழு பரிந்துரைத்துள்ளது.

கவுரவக் கொலைகளுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க தனிச் சட்டம் இயற்றப்பட்டாலும், அது இந்த சாதி வக்கிரக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துவிடாது. காரணம், சாதிய அத்துமீறல்களுக்கும், தீண்டாமைக் கொடுமைகளுக்கும் கடுமையான தண்டனைச் சட்டங்கள் இருந்தும் - அவை எந்த விதத்திலும், இந்த சமூகத்தில் மாற்றங்களை உண்டாக்கிவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகள் சாதிப் பெரும்பான்மை பார்த்து, அந்த சாதிக்கேற்ற வேட்டபாளர்களையே நிறுத்துகின்றன. கல்வி நிறுவனங்களை நடத்துவோர் தங்கள் சாதி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. தனியார் நிறுவனங்கள் சாதி பார்த்தே வேலைக்கு ஆளெடுக்கின்றன. பதவிகளும் உயர்வுகளும் சாதியாலேயே சாத்தியமாகின்றன. சாதி அடையாளத்தை நூறு சதவிகிதம் முழுமையாக எல்லோரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சாதியை தன் உணர்வுகளுக்குள் சுமந்து கொண்டிருக்கையில், எப்படி ஒழியும் இது போன்ற கொடுமைகள்?

சாதியும் காதலும் இருவேறு எல்லைகள். சாதி என்பது சர்வாதிகாரம். காதல் என்பது ஜனநாயகம். இந்த இரண்டுமே இந்த சமூகத்தில் அழிக்க முடியாததாக நிலைத்திருக்கின்றன. மனிதர்களுக்குள் இயற்கையாக அமைந்துவிட்ட ஜனநாயக உணர்வான காதலை, போலியாக வளர்த்தெடுக்கப்படும் சர்வாதிகாரச் சாதி குணம் வென்றுவிடத் துடிக்கிறது. இப்போராட்டத்தில் செத்து மடிகின்றன உயிர்கள்.

காதலுக்காக, கள்ளக் காதலுக்காக என நாம் படிக்கும் செய்திகள் பெரும்பாலும் சாதியால் நிகழ்ந்தவையாக இருக்கின்றன. ஆனால், உண்மையானக் காரணம் மறைக்கப்பட்டு அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டு, அது வெறும் உணர்ச்சிவசப்பட்டக் கொலைகளாக சித்தரிக்கப்படுகின்றன. பணத்துக்காகவும், முன் விரோதத்திற்காகவும் நடக்கும் கொலைகளைவிட, உறவுச் சிக்கலால் உண்டாகும் கொலைகளே இங்கு அதிகம். இதற்கான காரணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். மிக நிச்சயமாக, சாதிக்கு அதில் பெரும்பங்கு இருப்பது தெரியவரும். காதலர்களுக்கு இந்த சமூகத்தில் ஆதரவு, இல்லை, பாதுகாப்பு இல்லை. சாதியை வெல்ல முடியாத நிலையில் அவர்கள் கொலை செய்யத் துணிகிறார்கள் அல்லது அவை குடும்பத்தாரால் கவுரவக் கொலைகளாக நிகழ்த்தப்படுகின்றன.

எப்படிப் பார்த்தாலும் சாதியால் இந்த சமூகத்திற்கு அழிவும் இழப்புமே மிஞ்சுகிறது. ஒவ்வொரு இழையிலும் சாதி படிந்திருக்கிற நிலையில், காதலை வளர்த்தெடுக்கவும், காதலர்களுக்கு பாதுகாப்பளிக்கவும், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கவும் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். காவல் நிலையங்கள், உள்ளூர் ஆலமரத்தின் கட்டட வடிவமாகவும், காவலர்கள் சாதி பஞ்சாயத்து செய்வோரின் சீருடை வடிவமாகவும் இயங்குகின்றனர். மாற்று சாதியில் காதலிப்பவருக்கு வேலியாக காவல் நிலையங்களே செயல்படுகின்றன. எனவே சிறப்பு அதிகாரங்கள் கொண்ட சமத்துவ மய்யங்களை உருவாக்கி, காதலர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்கலாம். சமத்துவ மய்யங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சாதி ஒழிப்புப் பற்றிய கலந்தாய்வும் தொடர்ச்சியான பயிற்சியும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். கல்வியறிவை விடவும் பகுத்தறிவின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டு, இந்த மய்யங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இதெல்லாம் கனவுதான். நாடாளுமன்றத்தின் இந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் கவுரவக் கொலைகள் விவாதங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறுமனே தண்டனைச் சட்டத்தை மட்டும் இயற்றாமல், சீர்திருத்த நோக்கோடும் சட்டங்களை இயற்ற வேண்டும். மனித நேயத்திற்கும், உரிமைகளுக்கும், வளத்திற்கும் கடும் சவாலாக இருக்கும் சாதியை முடக்கவென முழு வீச்சாக யாரும் செயல்படவில்லை. சாதியை ஒட்டுமொத்தமாக அழிக்காமல், கவுரவக் கொலை என கவுரவமாக அழைக்கப்படும் - சாதி வக்கிரக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

- மீனா மயில்

(தலித் முரசு ஜூலை 2010 இதழில் வெளியானது)

Pin It

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் ஈழரின் படைப்பிலக்கியத்திற்கு நிறை பங்களித்துள்ளவன் என்கிற முறையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் படைப்பு தமிழ் இலக்கியத்தில் புதிய பரிமாணமும் கூறும் என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊழியம் செய்தவன் என்கிற உரிமையிலும் என் சந்தேகங்கள் சிலவற்றை தமிழ்ப் படைப்பாளர்கள் முன்னர் சமர்ப்பிக்கும் கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன்.

eelam_tamils_380அண்மையில் இலங்கை நாடாளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் தில்லியிலுள்ள அரசியல் தலைவர்களையும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களையும் சந்தித்து ஈழத் தமிழனத்தின் சோகங்களுக்குப் பரிகாரம் தேடித் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தரும் தகவல்கள் தமிழ் ஈழரை மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்களையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருக்கின்றன. தமிழ் ஈழரின் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்து ஓராண்டு காலத்துக்கு மேலாகிவிட்டது. தமிழ் ஈழரின் புனர்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் இந்தியா கொடுத்துள்ள 500 கோடி ரூபாயும் தமிழ் இனத்தைத் தமிழ் மண்ணிலே நிரந்தர அடிமைகளாக்குவதற்கு ராஜபக்சே அரசு செலவு செய்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுவரை நான்கு லட்சம் சிங்கள இராணுவக் குடும்பத்தினர் தமிழ் மண்ணிலே குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

தமிழ்ப் பெண்கள் தாம் பிறந்த மண்ணிலே தமது மானத்தையும் கற்பையும் காப்பாற்றி வாழ முடியாத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலம் தொடர்கதை என்பதுதான் சோகத்தின் உச்சம்.

‘இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட தமிழ் ஈழருடைய மண் சிங்களருக்குச் சொந்தமானது' என்று ராஜபக்சே கொக்கரிப்பதாகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமுறினார்கள். தமிழ் ஈழர் நிரந்தரமாக அடிமைகளாக்கபட்டுள்ள ஒரு சூழலிலே உலகத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் மாநாடு நடத்துவது அவசியமானதா? உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா மனச்சாட்சியாகவும், இனத்தின் சுதந்திரத்திற்காக மூர்க்கங் கொண்ட விடுதலை வெறியனாகவும் வாழ்தல் அவசியம். அவற்றை எல்லாம் தொலைத்து விட்டு, இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று போக்குக் காட்டுவதற்காகவா இந்த உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பில் நடத்தப்படுகிறது?

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ள தமிழ்ப் படைப்பாளிகள், அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் ராஜபக்சே அடாவடிகளுக்கு எதிராகக் குரலும் குமுறலும் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தமிழ் ஈழருடைய இழந்துபோன உரிமைகளை மீட்டெடுக்கும் பணியிலே புலம்பெயர்ந்த தமிழர்கள் வீறுமிக்க அக்கறை கொண்டவர்களாக வாழ்வதாகவும் சாட்சியம் கூறுகின்றார்கள். இத்தகைய சூழலிலே ஒரு மாநாடு கொழும்பில் ஏன் நடத்தப்படுகிறது என்ற கேள்வி தமிழ்ப் படைப்பாளிகள் அனைவர் மத்தியிலேயும் எழுதல் நியாயமானது.

1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது.

சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீனக்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்காவா இந்த மாநாடு?

மனித உரிமை மீறல்களும், யுத்த தர்ம மீறல்களும் சிங்கள ராணுவத்தினரால் ஏராளமாக நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பலவும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை நீதியின் முன்னர் நிறுத்தி விசாரிக்க வேண்டுமென்று உலக மாந்த நேயர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையிலே தான் ராஜபக்சே அரசு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினை முரட்டுத்தனமாகத் தாக்கி உள்ளார்கள். சர்வதேச சமூகத்துகே சவால்விடும் சிங்கள இனவாத அநாகரிகத்தினைக் கண்டு உலகின் மாந்த நேயர்களும் அறிவுஜீவிகளும் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். இத்தகைய அவலச்சூழலிலே, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பிலே மாநாடு கூடுதல் நியாயமானதா? அதுவும் மிக அவசர கதியில்?

சர்வதேச சமூகம் இலங்கையில் நடைபெற்ற இன சங்காரத்துக்கும், நரபலி வெறி யாட்டத்திற்கும் எதிராக இலங்கைமீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்து வருகிறது. இலங்கையின் முக்கியமான வருவாய், சுற்றுலாப் பயணிகளின் மூலமே கிடைக்கின்றது. சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டினால் இந்தச் சுற்றுலா வருவாய் பெரிதும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தடித்த சிங்கள அரசு இந்த இழப்புகளைச் சந்திக்கக் கூடாது என்கிற அவசரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பது போல தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பிலே நடத்தப்படுகிறது என்று எழும் சந்தேகமும் நியாயமானதே.

சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் தமிழ்ப் பகுதிகளில் நடைபெறும் சிங்கள ராணுவமயமாக்கலைத் தடுத்து நிறுத்த முடியுமா? தமிழ் ஈழருக்கு இலங்கையில் சாதாரணமான மனித உரிமைகளை வென்றெடுத்துத் தரமுடியுமா? அன்றேல், இன்றும் கொலை வெறித் தாக்குதனின் இரத்தத்தினால் கறை படிந்து கிடக்கும் இலங்கை ஆட்சியாளரின் மனநிலையில் அற்ப மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா? இவை சாத்தியப்படாவிட்டால், கொழும்பில் நடத்தப்பட இருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் யாது பயன்?

ராஜபக்சே சகோதரர்களுடைய அராஜகத்தைக் கொழும்பிலே தட்டிக் கேட்கக்கூடிய ‘தில்' உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் யார் கொழும்பிலே கூடுகிறார்கள்? ‘சிங்கள அரசு பற்றி எத்தகைய விமர்சனமும் செய்ய மாட்டோம்' என்கிற உறுதிமொழி வழங்கித்தான் மாநாடு நடத்துவதற்கான அனுமதியே பெறப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.

தமிழ் ஈழர் அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டார்கள். தமிழச்சிகள் தங்கள் கர்ப்பப் பைகளில் சிங்களக் குழந்தைகளைச் சுமக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். சொந்த மண்ணில் அநாதைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடி, விவசாயம் ஆகிய சகல ஜீவாதாரங்களும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. கல்வி கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையிலே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கூட்டி தமிழர்களுக்கு இலவச கதைப் புத்தகங்கள் கொடுக்கப் போகிறோம் என்று வலைச் செய்திகள் பரப்புவது எவ்வளவு கேலிக்குரியது?

espo_350பிரான்சு நாட்டு ராணி ஒருத்தி அகங்காரத்துடன் கேட்டாளாம், "தின்பதற்கு ரொட்டியில்லாவிட்டால் கேக் சாப்பிட வேண்டியதுதானே' என்று! எல்லாம் இழந்து பரிதவிக்கும் தமிழ் ஈழச் சிறாருக்கு குச்சி ஐஸ் கொடுப்பதற்கா இந்த மாநாடு நடத்தப்படுகிறது?

காட்டுபிராண்டிகள் வாழும் ஆப்பரிக்காக் கண்டம் என்று சொல்வார்கள். நைஜீரியாவில் இபோ இன மக்கள் தனி நாடு கோரிப் போராடினார்கள். அந்த விடுதலைப் போராட்டம், இபோ மக்களுக்கு தோல்வியில் முடிந்தது. ஆனால் ஓராண்டுக்கிடையில் போரினால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளும் மறக்கப்பட்ட நைஜீரியாவில் இவர்கள் இப்பொழுது தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள். புத்தர் பெயரால், நீச ஆட்சி நடத்தும் ராஜபக்சே ஆட்சி நிலவும் வரையில் இலங்கை யுத்தக் குற்றவாளிகள் வாழும் ஒரு மயான பூமி என்று வெறுத்து ஒதுக்கப்படுவதுதான் தர்மம்.

இந்த ஆட்சியினரால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை என்ன? எழுத்துச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு எதிராகக் கருத்துச்சொன்னது என்பதற்காக சிங்களனுக்குச் சொந்தமான ஓர் ஒளிபரப்பு நிலையமே சாம்பலாக்கப்பட்டுள்ளது. காட்டாட்சி நடக்கும் மயான பூமியிலே, ஏன் அவசரமாகச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல்?

இலங்கையில் வெளிவரும் தினசரிகள் இராஜபக்சே புகழ்பாடுவதினால் மட்டுமே உயிர் வாழ்வதாகவும் நான் அறிகின்றேன். ஏன் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை? புகழ் ஆசையா, பதவி ஆசையா, அன்றேல் தனக்கு ஒரு மனித முகம் அருள வேண்டுமென்று ராஜபக்சே கொடுத்துள்ள லஞ்சத்தின் மீதுள்ள ஆசையா? மாநாடு கூட்டுவதற்கு முன்னர், இதனை உலகப் படைப்பாளிகள் சமூகத்திற்கு விளக்க வேண்டிய தார்மீகக் கடமை அந்த மாநாட்டினைக் கூட்டும் அமைப்பாளருக்கு உண்டு. தங்கள் பக்கத்து நியாயங்களை ஏனைய தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் முன்வைக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஈழருடைய மூத்த படைப்பாளி என்கிற உரிமை கோரலுடன் முன் வைக்கின்றேன்.

- எஸ்.பொ.
தொடர்புக்கு: +919176333357

Pin It

மூன்றாவது அணி என்பது தமிழகத்தை தற்போது ஆளும், இதற்கு முன் ஆண்ட தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு அப்பால் உருவாகும், உருவாக்க கோரும் அணி பற்றியதாகும். இதுவே மாற்று அணி என்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏன், தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகளுக்கு என்ன? இந்தக் கட்சிகளுக்கு அப்பால் மாற்று அணிக்கான தேவை என்ன என்று கேள்வி எழுமானால், இதற்கான காரணங்கள் பல. இவற்றைப் பலரும் பலமுறை மேடையில் பேசியிருக்கிறார்கள், இதழ்களில் எழுதியிருக்கிறார்கள். எனினும் இது பற்றிச் சுருக்கமாகச் சில:

1. 1967இல் தி.மு.க ஆட்சி பீடம் எறியது தொடங்கி இன்று இந்த 2010 வரையான இடைப்பட்ட 43 ஆண்டுகளில் சில அவசர நிலைக்காலம், சில ஆளுநர் ஆட்சிக்காலம் போக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க அ.தி.மு.க கட்சிகளே தமிழகத்தை ஆண்டு வந்திருக்கின்றன. எனினும் இவர்கள் ஆட்சிக் காலத்தில் இவர்கள் எவருமே தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை. தமிழர்களின் நலன்களைப் பேணவில்லை.

2. 1926 இல் பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் 1944இல் திராவிடர் கழகமாக பரிணமித்து செயல்பட, அதிலிருந்து பிரிந்து வந்து 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி பார்ப்பன எதிர்ப்பு பகுத்தறிவுக் கொள்கைகளுடன் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற முழக்கத்தை முன்வைத்து தமிழர்களிடையே மொழிப்பற்று இனப் பற்றை ஊட்டி வளர்ந்து அதையே மூலதனமாக்கி மக்கள் ஆதரவுடன் ஆட்சி பீடம் ஏறியவர்கள் 1968இல் அண்ணா மறைவுக்குப்பிறகு அடுத்த மூன்றாண்டுகளுக்குள்ளேயே 1971இல் இந்திரா காங்கிரசுடன் கூட்டு வைத்தனர். ஆதாவது எந்த காங்கிரசை எதிப்பதே என் இலட்சியம் என்று 1925 இல் பெரியார் சொன்னாரோ, எந்த காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்து தி.மு.க ஆட்சிக்கு வந்ததோ, எந்த காங்கிரஸ் 1965 இல் இந்த திணிப்பைக் கொண்டு வந்ததோ அதே காங்கிரசோடு இவர்கள் கூட்டு வைத்தார்கள்.

3. தி.மு.க. தலைவர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட இப்போக்கு 1971 இல் அ.தி.மு.க. உருவெடுத்து அதன்பின் எம். ஜி. ஆர். ஜெயலலிதா என இவர்கள் தமிழக முதல்வர்களாக வந்த போதும் அப்படியே தொடர்ந்தது. அதாவது எந்த காங்கிரஸ் அரசால் தமிழகம் தேய்வதாகக் குற்றச் சாட்டப்பட்டதோ அதே காங்கிரசோடு இவர்கள் கூட்டு சேர்ந்து தமிழகம் தேய்வதற்கும் தமிழர் கள் தேய்வதற்கும் துணை போனார்கள்.

முதலில் காங்கிரஸ் ஆட்சியோடு கூட்டு எனத் தொடங்கி வைக்கப்பட்ட இப்போக்கு பிறகு ஜனதா ஆட்சி, பின் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி என தில்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அககட்சியோடு கூட்டு சேர்ந்து கொள்வது, சில அமைச்சர்கள் பதவிகளைப் பெறுவது, தில்லியோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளை நடத்துவது, சுயலாபம் பெறுவது என்கிற நிலைக்குத் தாழ்ந்தது. இதன் வழி இவர்கள் தங்கள் வேட்டை பரப்பை விரிவாக்கிக் கொண்டு அதற்கு பதிலுதவியாக தில்லிக்குக் காவடி து£க்கி அதற்குச் சேவை செய்வது தமிழகத்தை தமிழக உரிமைகளை. தமிழர் நலன்களை அதற்குத் காவு கொடுப்பது என்கிற நிலைக்குச் சீரழிந்தார்கள்.

4. இந்த நாற்பது ஆண்டுகால ஆட்சியில் இவர்கள் சாதித்தது என்ன தமிழகத்தின் காவிரியுரிமை பறி போனது. காவிரி கன்னடர்களால் சிறைபிடிக்கப்பட்டு , அதில் உபரி நீர் வந்து கன்னடர்களுக்கு ஏதும் ஆபத்து என்றால் மட்டுமே அதைத் திறந்து விடுகிற நிலைக்குத் தமிழகத்தைக் காவிரியின் வடிகாலாக மாற்றி விட்ட அவலமே தொடர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாறு மலையாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த ஆற்று நீர் உரிமையும் மறுக்கப்பட்டு தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. வட மாவட் டங்களில் பெருக்கெடுத்து ஓடவில்லையானாலும் நிலத்தடி நீர் வளத்தையாவது பாதுகாத்து வந்த  பாலாற்று வளம் முற்றாகப் பறிக்கப்படுகிறது. பண்டைத் தமிழகத்தின் அறவுரிமைப் போராட்ட காவிய நாயகி கண்ணகி கோயில் கேரள அரசால் கைப்பற்றப்பட்டு அவர்களால் சொந்தம் கொண்டாடப்படுகிறது தமிழக மீனவர்கள் வாரக்கட்டளை மாதக் கட்டளைபோல் அவ்வப்போது சிங்களக் கப்பற்படையால் தாக்கப்பட்டு, மீன்கள் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சுட்டு வீழ்த்தப்பட்டு உயிர் பறிக்கும் கொடுமையும் தொடர்ந்து வருகிறது.

இவையனைத்தும் தி.மு.க அ.தி.மு.க ஆகிய கழக ஆட்சிக்காலங்களில் நடை பெற்று வந்தவை, இப்போதும் நடை பெற்று வருபவையே என்பதுடன், எல்லாவற்றினதும் உச்சமாக தமிழீழத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த ஆண்டு குருரமாக ஒடுக்கப்பட்டு இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலரும் கொடூரமாகக் கொல்லப்பட்ட கொடுமையும் நடந்தேறியது

5. இப்படிப்பட்ட கொடுமைகள், தமிழக, தமிழின உரிமைப் பறிப்புகள், பல இவர்கள் ஆட்சியில் நடைபெற்றதுடன். இவற்றை மக்கள் அறியா வண்ணம், உணரா வண்ணம் தடுக்கவும் அவர்கள் என்றென்றைக்கும் அறியாமையிலேயே முழ்கி தங்களுக்கு வாழ்க சொல்லவும் வாக்க ளிக்வும் மட்டும் பயிற்சி பெற்றி ருந்தால் போதும் என முடிவு செய்து சீரிய சிக்கல்கள் எதன் மீதும் மக்களது கவனம் திரும்பாதிருக்கவும், அவர் களைப் போதையில் ஆழ்த்தி மயக் கத்தில் கிடத்தவும் மதுபானக் கடைகள், காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் தொலைக் காட்சிகள், நாளேடுகள், வார, மாத இதழ்கள் என எல்லா வகையான சாதனங்களின் மூலமும் தமிழர்களின் மீது கருத்தியல் தாக்குதல் தொடுத்து வருகின்றன.

இந்நிலையில்தான் இதற்கு மாற்றாகத்தான் மூன்றாவது அணி என் பதற்கான கருத்தாக்கம் தோன்றுகிறது. அதற்கான தேவையும் வலுப் பெறுகிறது.

அணியின் கட்டமைப்பு: மூன்றாவது அணி மாற்று அணி என்ப தற்கான நியாயங்களெல்லாம் சரிதான் ஆனால் இந்த அணியில் யாரெல்லாம் இடம் பெற வாய்ப்புண்டு என்று யோசித்தால். தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வுக்கு மாற்றாக தமிழக நலன்களில் தமிழர் நலன்களில் அக்கறையுள்ள கட்சிகளாகக் கருதப்படுபவை ம. தி.மு.க. , பா. ம. க, வி. சி. க, இத்துடன் புதியதாக தோற்றம் பெற்றுள்ள சில கட்சிகள். மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள், தமிழ்த் தேசியம் பேசும் பெரியாரிய மற்றும் மார்க்சியக் கட்சிகள், ஆகியனவே. எனவே இக் கட்சிகள் இதில் இடம் பெற வாய்ப் புண்டு.

அகில இந்தியக் கட்சிகள் இதில் இடம் பெற வாய்ப்புண்டா என்றால் காங்கிரஸ் பா. ஜ. கட்சிகளுக்கு நிச்ச யமாக இதில் இடம் இல்லை. அகில இந்திய இடது சாரிக் கட்சிகளான இ. க. க மற்றும் இ. க. க. மா ஆகியன இதில் இடம் பெறலாம். எனினும் இக்கட்சிகளின் அகில இந்தியத் தலைமை இதன் நடவடிக்கைகளின் பால் எப்படிப்பட்ட அணுகு முறை யைக் கைக்கொள்கிறது என்பதைப் பொறுத்தது இது. அப்படி முடிவு செய்தால் இவையும் இதில் இடம் பெறலாம். ஆகஇப்படிப்பட்ட கட்சிகளே இம் மூன்றாவது அணியில் இடம் பெறும் வாய்ப்போடு உள்ளன.

புற நிலையும் வாய்ப்பும்: மேலே குறிப்பிட்டுள்ள கட்சிகள் மூன்றாவது அணியில் இடம் பெறும் வாய்ப்போடு இருக்கின்றன என்னும் போது அவை இந்த அணியில் இடம் பெறும் விருப்பத்தோடு இருக்கின்றன என்பதாகப் பொருள் கொண்டு விடக் கூடாது. புற நிலையும் அப்படி இல்லை.

ஏனெனில், தமிழகத்தில் தமிழ்த் தேசிய சமத்துவ உணர்வாளர்களால் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட வி. சி. க, தமிழீழப் போர் உச்சக் கட்டத்தை அடைந்த நிலையில் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் கூட்டணி வைத்து தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நொறுக்கி தமிழர்களுக்கு மாபெரும் வஞ்சகம் இழைத்ததோடு இன்னமும் அந்தக் கூட்டணி விசுவாசத்திலேயே வச முண்டு கிடக்கிறது.

தமிழீழ விடுதலையே இலக்காய், போராளிகள் ஆதரவு நிலையே குறிக் கோளாய், இடுக்கண் எது வரினும் எதிர் கொண்டு உறுதியோடு போராடி வந்த, வருகிற ம. தி.மு.க தேர்தல் காலத்தில் மட்டுமே போராளி ஆதரவு நிலை எடுத்து, மற்ற நாளெல்லாம் போராளி அமைப்பின் மீது வசை பாடியோ, அல்லது அவர்கள் மீது அவது£று பரப்பியோ தமிழீழ மக்களுக்கு எதிராக இயங்கி வரும் சர்வாதிகார, அகங்கார, ஆணவ அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறது.

அதேபோல பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமைக்கும், தமிழின அடை யாள மீட்பிற்கும், தமிழீழ விடுதலைப் போருக்கும் குரல் கொடுத்து தமிழ் உணர்வாளர்கள், சமூகநீதி ஆர்வலர் களின் மத்தியில் மிகுந்த நம்பிக்கைக் குரிய எதிர்பார்ப்பாய் உருப்பெற்று வந்த பா. ம. க. வோ இப்போதைக்கு எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனித்திருப்பதானாலும், அது தி.மு.க. வுடனான கூட்டணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் பேசி முடிக்கப்பட்டன என்று ஒரு செய்தியும், இருந்தும் மீண்டும் அ.தி.மு.க கூட்டணிக்கே அன்பு அழைப்பு விடுக்கப்பட்டுள் ளதாக மற்றொரு செய்தியும் உலா வருகின்றன. இச்செய்திகள் எப்படியானாலும் இது தி.மு.க அல்லது அ.தி.மு.க என ஏதாவது ஒரு கூட்ட ணியில் அங்கம் பெறும் நிலையே ஏற்படப்போகிறது.

ஆக தமிழகத்தின் முக்கிய மூன்று பெரும் கட்சிகளும் இப்படி ஆளுக்கு ஒரு கூட்டணியில் அங்கம் வகிக்க அப்புறம் மூன்றாவது அணி என்பது எப்படி, எந்தெந்த கட்சிகளைக் கொண்டு அமையும். அமைய சாத்தியமா என்பதுதான் அடுத்த கேள்வி. எனவே, இந்த மூன்று கட்சிகளுக்கு அப்பால் மற்ற கட்சிகளைப் பற்றி யோசிப்போம்,

இதர கட்சிகள் : இக்கட்சிகளுக்கு அப்பால் தேர்தல் களம் நோக்கிய குறியோடு இருப்பவை இ. க. க, இ. க. க. மா, தே. மு. தி. க, சமத்துவ மக்கள் கட்சி இன்னும் பல உதிரிக் கட்சிகள் அமைப்புகள். தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘நாம் தமிழர் இயக்கம்’ முதலானவை.

தேர்தல் கட்சிகள் என்றாலே யாரோடு கூட்டு சேரலாம், எத்தனை இடங்கள் கோரிப் பெறலாம், வெற்றி பெறுவதற்கு என்னென்ன தந்திரங்கள் வகுத்து செயல்படலாம் என்கிற நோக் கில் இயங்குபவை என்பதால் இப்ப டிப்பட்ட கட்சிகள் எதுவும் தேர்தல் நேரத்தில் மேற்குறிப்பிட்ட இரண்டு அணியில் எதாவது ஒரு அணியில்தான் போய்ச் சேரும், அதன் மூலம் எதாவது பலன் பெறத்தான் முயலுமேயல்லாது மூன்றாவது அணியைப்பற்றி எல்லாம் சிந்திக்காது அந்தப்பக்கமெல்லாம் தலை வைத்தும் படுக்காது என்பது தெளிவு.

இவையும் போக எஞ்சியிருப்பது என்ன? இவற்றை அடுத்து தமிழ்த் தேசிய மார்க்சிய பெரியாரியக் கட்சிகள், அமைப்புகள். இவற்றிலும் சில தேர்தலில் நிற்கவில்லையென்றாலும் தேர்தலில் யாரையாவது ஆதரிக்க வேண்டும் என்கிற நிலையெடுத்து, அந்த அடிப்படையில் செயல்படுகிற கட்சிகள். இவற்றுக்கு அப்பால் தேர்தல் மற்றும் வாக்கெடுப்புகளிலேயே பங்கு பெறவேண்டாம் என்று தேர்தல் புறக்கணிப்பை முன்வைத்து செயல் படுகிற கட்சிகள்.

இப்படிப்பட்ட புறச்சூழலில் தான் மூன்றாவது அணி பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அல்லது மூன்றா வது அணி பற்றிய சிந்தனைகளில் இப்படிப்பட்ட புறச்சூழலையும் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.

மக்கள் திரள் பிரிவினர் : தமிழக உரிமைகளில், தமிழக நலன் களில் அக்கறையுள்ள எவருக்கும் மூன் றாவது அணியின் தேவை குறித்தோ, அது காலத்தின் கட்டாயம் என்பது குறித்தோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவர்கள் அனைவருமே தி.மு.க அ.தி.மு.க. இரண்டுமே தமிழகத்தின் சாபக்கேடு. எனவே இவ் விரு கட்சிகளுக்கும் மாற்றாக, மூன்றா வதாக ஓர் அணி உருவாக வேண்டும் என்று விரும்புபவர்களே.

இவர்கள் மக்களில் ஒரு சிறு பகுதியினரே என்றாலும் இவர்கள் மக்களில் முன்னோடிப் பிரிவினர். மக்கள் நல நோக்கில் சிந்திக்கிற, மக்களுக்கு வழிகாட்ட முனைகிற பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக மக்கள் திரளினரை மூன்று வகையாகக் கொள்ளலாம். ஒன்று திட்டமிட்டே ஆதிக்கத்திற்குச் சேவை செய்து அதன் மூலம் பலன் பெற்று மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுபவர்கள். தன்னலமே குறியாய் மக்களை அடக்கியாண்டு, அதி காரம் செலுத்தி வாழ முயல்பவர்கள்.

மற்றொன்று மக்கள் நலனே குறியாய், அதுவே இலக்காய் மக்களுக்குத் தொண்டாற்ற முனைபவர்கள். நியாயம், நீதி, நேர்மைக்காகப் போரிட்டு. அதற்காக எப்படிப்பட்ட சோதனை வந்தாலும் எதிர் கொண்டு ஏற்று அர்ப்பணிப்போடு வாழ முனைப வர்கள், வாழந்து வருபவர்கள்.

இவ்விரண்டு பிரிவினர்க்கும் இடைப்பட்டவரே பெரும்பான்மை மக்கள் திரளினர். ஒன்று உண்மை எது என்று உணராமலும் அப்படியே உணர்ந்தாலும், உண்மையின் பக்கம் நிற்கத் திராணியற்றும் அதிகாரத்திற்கு அடிபணிந்தும் அஞ்சி அஞ்சி வாழ்ப வர்கள். அந்தந்த பகுதியில் உள்ள செல்வாக்கு மண்டலத்தைப் பகைத்துக் கொள்ள விரும்பாமலோ, அல்லது அதைச் சார்ந்தோ, அல்லது எதையும் கண்டு கொள்ள விரும்பாமலோ, எதிலும் ஈடுபாடு காட்டாமலோ வாழ்பவர்கள், வாழ விரும்புபவர்கள். என்றாலும் சில கொந்தளிப்பான தருணங்கள் நேரும்போது, அதற்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று முன் வருபவர்கள்.

இவர்களது அச்சமெல்லாம் ஆதிக்கங்களால் தங்களுக்கு ஏதும் ஆபத்து வந்து விடக் கூடாது என்பது தானே, அதற்கான எச்சரிக்கைதானே தவிர, மற்றபடி ஆதிக்கத்திற்கு அடி பணிவதோ துணைபோவதோ இவர் களது விருப்பம் அல்ல. போக்கும் அல்ல. நல்ல நம்பிக்கையும் பாதுகாப் பும் இருந்தால், அதாவது ஆதிக்க எதிர்ப்பு சக்திகள் வலுவோடு இருந்தால் அதனோடு சேர்ந்து ஆதிக்கத்தை எதிர்க்கிற அளவிற்கு நியாய உணர்ச் சியும் நேர்மையும் கொண்டவர்கள் இவர்கள். எனவே வரலாற்று எழுச்சியின் போக்கிற்கு வளைந்து கொடுத்தோ, தங்களை உட்படுத்திக் கொண்டோ நெளிவு சுளிவோடு வாழ்பவர்கள் வாழ்ந்து வருபவர்கள் இவர்கள்.

காட்டாக தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த ஆண்டுகளில் கடும் நெருக்கடிக்கு உட்பட்டிருந்த போது, அதற்காக தமிழகத்தின் பல் வேறு பிரிவு மக்களும் அவரவர் களுக்கு இயன்ற வாய்ப்புகளில், வடிவங்களில் அம்மக்களுக்காகப் போராடியதை நினைவு கூர இம்மக்கள் பிரிவினரின் போக்கைப் புரிந்து கொள்ளலாம்

கட்சித் தொண்டர்கள்: இம் மக்கள் திரளினரை அடுத்து நாம் கவனம் கொள்ள வேண்டியது கட்சித் தொண்டர்களே. மக்கள் திரளினரை மேற்குறித்தவாறு வகைப்படுத்தியது போலவே ஒவ்வொரு கட்சியிலும் உள்ள தொண்டர்களையும் மூன்று பிரிவினராக வகைப்படுத்தலாம். முதல் பிரிவு, அவரவர் தகுதிக்கேற்ப கட்சியின் செல்வாக்கு மண்டலத்தில் அங்கம் வகித்து, எந்தெந்த வழிகளிலெல்லாம் சுருட்டமுடியுமோ, கொள்ளையடிக்க முடியுமோ, மக்கள் மேல் அதிகாரம் ஆதிக்கம் செலுத்த முடியுமோ அந்தந்த வழிகளையெல்லாம் கையாண்டு, தன்னலமே, தன் வாழ்க்கை வளமே குறியாய் வாழ்பவர்கள்.

அடுத்த பிரிவினர் கட்சியில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காகவே உழைத்து, தலைவர்கள் மேல் விசுவாசமாய் அவர்கள் நலனே குறியாய் அதுவே உயிர் மூச்சாய் அதற்காகவே வாழந்து அதிலேயே தங்களைக் கரைத்துக் கொள்பவர்கள். கட்சித்தலைவர்களுக்காக தீக்குளிப்பவர்கள். தேர்தல் தோல்விக்காக மொட்டைப் போட்டுக் கொள்பவர்கள் போன்ற கண்மூடிப் பக்தர்கள் பிரிவினரும் இதில் அடக்கம்.

இவ்விரு பிரிவினருக்கும் அப்பால் கட்சி எப்படி இருக்கிறது, என்ன செய்கிறது எதை நோக்கிப் போகிறது என்பதை நன்கு புரிந்து அதன் குறை நிறைகளை மதிப்பீடு செய்து வைத்திருந்தாலும், குறைகளைத் தட்டிக் கேட்கவோ, தவறுகளைத் திருத்தி, போகும் பாதையை மாற்றியமைக்கவோ இயலாதவர்களாய், அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கினால் சந்திக்க நேரும் இடுக்கண்கள் தங்கள் வாழ்வுக்கு நேரும் சோகங்கள் எல்லா வற்றையும் கருத்தில் கொண்டு எந்த வம்பும் வேண்டாம் என்று வாழ்பவர்கள்.

Anna_09ஆனால், இவர்களும் மக்கள் திரளின் மூன்றாம் பிரிவினரைப் போலவே, இயலாமையினாலும், தேவையற்ற தொல்லைகள் எதுவும் வேண்டாம் என்கிற அச்சத்தினாலும் தான் கட்சியின் போக்குகளைச் சகித்துக் கொண்டு, அதிலே இருந்து கொண்டிருக்கிறார்களே தவிர, மற்ற படி நியாயம் எது நேர்மை எது என்பது இவர்களுக்குத் தெரியாமல் இல்லை. அதற்காக வாழவேண்டும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு இல்லாமல் இல்லை. ஆனால் எல்லாம் இருந்தும் இவ்வளவு காலம் பழகிய கட்சியில் அறிமுகப்பட்ட மனிதர்களை விட்டு இனி புதிதாக வேறு எங்கே போகப் போகிறோம். அப்படிப் போவதற்குத் தகுதியான இடம் என்பதுதான் வேறு என்ன இருக்கிறது, அப்படியே இருந்தாலும் அங்கு தான் போய் நாம் என்ன செய்யப் போகி றோம், என்ன செய்ய முடியும் என்கிற ஆற்றாமையில் இருக்கிற இடத்திலேயே முடங்கிக் கிடக்க முனைபவர்கள் இவர்கள்.

உணர்வாளர்கள், அமைப்புகள், தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்துக் காக நடத்திய நடத்துகிற போராட்டங்களில், இவர்கள் தாங்கள் அங்கம் வகிக் கும் கட்சி எதுவாக இருந்தாலும். அந் நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்து, ஆதரவு அளித்து, வாழ்த்தும் தெரிவிப்பவர்கள். பலர் தங்கள் பெயரைக் கூடத் தெரிவிக்க வேண்டாம் என்று, தங்களால்தான் நடத்த முடியவில்லை. நீங்களாவது நடத்துங்கள் என்று, பாராட்டு தெரிவிப்பவர்கள். இவர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் மிக்க ஓர் இயக்கம் உருவானால் அதோடு தம்மைச் சேர்த்துக்கொள்ள எப்போதும் தயாராய் இருப்பவர்கள் இவர்கள். இவர்களைப் பொறுத்த வரைக்கும் பலரும் தி.மு.க. அ.தி.மு.க. வுக்கு எதிராக ஒரு மாற்று அணி உருவாக வேண்டும் என்கிற விருப்புக்கொண்டவர்கள். அப்படிப்பட்ட ஓர் அணிக்கான தேடல் கொண்டவர்களே என்பதில் ஐய மில்லை.

ஆக மூன்றாவது அணி என்கிற கருத்தாக்கத்திற்கு மக்கள் தயார், கட்சித் தொண்டர்கள் தயார், என்பது தெளிவு. ஆனால் இதற்கு கட்சிகளின் தலைவர்கள் தயாரா என்பதுதான் தற்போது கேள்வி.

பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என்கிற இவர்களையடுத்து, இவர்களை வழி நடத்தும் இவர்களுக்கு வழிகாட்டும், இடத்தில் இருப்பவர்கள் கட்சித் தலைவர்கள்தாம். தலைவர்களைப் பொறுத்த வரையில் பெருபாலும் தனிப்பட்ட முறையில் எல்லோரும் மிக நல்லவர்களே. மக்களுக்குத் தங்களால் இயன்றதைச் செய்யவேண்டும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க வேண்டும். மக்க ளிடையே தங்கள் பெயர் நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்களே.

ஆனால் கட்சி என்கிற நிறுவனம், அந்த நிறுவனத்தை நடத்த அதைக் காப்பாற்றிக் கொள்ளத் தேவைப்படும் சாகசங்கள். கட்சி அணிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடிகள் இவை எல்லாமுமாகச் சேர்ந்துதான் அவர்களை எப்படிப்ட்ட சமரசத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இட்டுச் செல்கின்றன.

கட்சிகள் என்றால் பொதுவில் அவற்றை இரு வகைப்படுத்தலாம். ஒன்று தேர்தல் கட்சிகள். மற்றொன்று தேர்தலை நம்பாத, தேர்தல் பாதையை நிராகரிக்கிற அல்லது தேர்தல் சாகசங்களுக்கும் சமரசங்களுக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ளாத போராட்டக் கட்சிகள்.

இப்படிப்பட்ட போராட்ட கட்சிகள் தொடக்க முதலே, அதாவது உறுப்பினர் தேர்வு முதலே அவர் களைக் கொள்கைப் பிடிப்புடனும் அர்ப்பணிப்பு தியாகம் மக்கள் தொண்டு முதலான பண்புகளுடனும் தெரிந்தெடுத்து வளர்ந்து பயிற்று வித்து விடுவதால், இங்கு பதவி, பந்தா சம்பாத்தியம் போன்ற போக்குகளுக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் பாலும்இடமில்லாமல் போகிறது. பெரும்பாலும் யாரும் அதற்கு இரையாகாமலும் பார்த்துக் கொள்ள முடிகிறது,

ஆனால் தேர்தல் கட்சிகள் நிலை அப்படியல்ல. கட்சித் தலைவரை, அல்லது பகுதித் தலைவரை ஏற்று அவர் வாழ்க என்று சொல்லும் தகுதி இருந்தால் போதும், யாரும் அதில் உறுப்பினராக்கி விடலாம். இப்படிச் சேரும் உறுப்பினர்களுக்குத் தேவைப் படுவ தெல்லாம் இவர்களது நடவடிக்கைகளுக்கு கட்சியின் ஆதரவு பாதுகாப்பு அவ்வளவுதான் . இதை வைத்து அவர் தன் சாமர்த்தியத்துக்கு தன்னாலானதைச் சம்பாதித்துக் கொள்ளலாம். சாதித்துக் கொள்ளலாம். அது உள்ளூர் கட்டைப் பஞ்சாயத்தோ, கான்ட்ராக்ட் ஊழலோ, பிற காவல் நிலைய, வட்ட, மாவட்ட ஆட்சியர் அலு வலகக் காரியங்களோ எதுவானா லும். தன் பங்குக்கு உரிய வரும் படியைஅவர்பார்த்துக் கொள்ளலாம். இவை எல்லாவற்றுக்கும் கட்சி அடையாளம் அவருக்குத் துணை புரியும். பதிலுக்கு இவர் கட்சிக்கு நிதியுதவி, கட்சி மாநா டுகள் நிகழ்ச்சிகளுக்கு ஆட்களைத் திரட் டுதல், தலைவர்கள் வருகையை அவரவர் பெயரில் சுவரொட்டி போட்டும், நவீன பதாகைகள் வைத்தும் கொண்டாடுவது முதலான திருப்பணிகளைச் செய்வார்.

தேர்தல் கட்சிகளின் கட்ட மைப்புகள் செயல்பாடுகள் பெரும ளவும் இவ்வாறே இருப்பதனால்தான் இக்கட்சிகள் தங்கள் அணிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், அவற்றுக்குத் தீனி போடவும் கட்சியின் தலைவர்கள் அதிகாரப் பதவிகளை வேட்டையாடி வென்று தம் அணிகளுக்குத் தர வேண்டியிருக்கிறது. இந்த நெருக்கடி தேவைதான் சில சட்ட மன்ற, நாடளுமன்ற, உறுப்பினர் பதவிகளை, பல்வேறு வாரிய, மற்றும் குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர் பதவிகளைப் பெற எப்படிப்பட்ட சமரசத்துக்கும் சந்தர்ப்ப வாதத்திற்கும் தலைவர்கள் இறங்கி வரச் செய்கிறது. இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்சி அமைப்பு இவர்களை இப்படிச் செய்ய நிர்பந்தப்படுத்துகிறது. தலைவர் களும் அதற்கு இறங்கி வரும் நிலையில் இருக்கிறார்கள். எனவே இப்படிப்பட்டநெருக்கடிகளில் இக்கட்சிகளின் தலைவர்கள் மூன்றாவது அணிக்கு வருவார்களா, வர இசைவார்களா என்பதுதான் கேள்வி.

பொதுவில் இப்படிப்பட்ட மூன்றாவது அணிக்கு வர விரும்புபவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களா இருக்க வேண்டும். இழக்க எதாவது வைத்திருப்பவர்கள் நிச்சயம் இந்த அணிக்கு வரமாட்டார்கள். இந்நிலையில் இந்தத் தலைவர்கள் தி.மு.க. அ.தி.மு.க. அணியோடு சேர்ந்து ஏதாவது ஆதாயம் தேட முற்படுவார்களா, அல்லது இருப்பதையும் இழந்து, அல்லது இழக்க நேரும் என்று அறிந்தே மூன்றாவது அணிக்கு வருவார்களா என்று கேட்டால் நிச்சயம் வர மாட்டார்கள் என்பதுதான் தர்க்க ரீதியான முடிவு.

இவர்கள் இதையெல்லாம் தாற்காலிகமாக இழந்து சில சோதனைகளுக்கு உள்ளானாலும், உருவாக்கப்படும் மூன்றாவது அணி தொடக்கத் தில் சில இழப்புகளைச் சந்தித்தாலும் எதிர்காலத்தில் தமிழகத்தின் நம்பிக்கை மிக்க அணியாக, தமிழக உரிமைகளை யும், தமிழர் நலன்களையும் பாதுகாக்கும் அணியாக அது உருவாகும், உருவாக வேண்டும் என்பதுதான் உணர்வாளர்களது பெரும்பான்மை மக்களது விருப்பம் என்றாலும் புறச்சூழல் அதற்கு கிஞ்சித்தும் வாய்ப்பாக இல்லை, யாரும் இதற்குத் தயாராயும் இல்லை என்பதே யதார்த்தம்.

யாராவது ஒருவர் அப்படி இச்சோதனைகளை எதிர்கொள்ளத் தயாராக முன் வருவதானாலும் மற்றவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்த முயற்சி ஈடேறும். இல்லா விட்டால் முன்வருபவர் ஏமாளியாகவும் மற்றவர்களெல்லாம் காரியவாதிகளாகவும் ஆகிவிடுவர். அப்புறம் அவர் தன் கட்சியைக் காப்பாற்ற கட்சி அணிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எல்லாம் பசையுள்ள இடத்தை நோக்கிப் பாயத் தொடங்கிவிடும். இந்த நிலைக்குக் காரணம் இது வெறும் நபர் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல கட்டமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை

இப்படிப்பட்ட சூழலில் அப்புறம் யாரை, எந்த அமைப்புகளை வைத்து மூன்றாவது அணியை உருவாக்குவது? இவற்றைத் தாண்டி இருப்பவை பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த் தேசிய அமைப்புகள்தான் இவற்றை வைத்துதான் மூன்றாவது அணி. இது எந்த அளவு சாத்தியம் என்று யோசிப்போம்.

கடந்த கால அனுப வங்கள்: தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. வுக்கு மாற்றாகத் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் விழிப்புள்ள பெரும் பான்மை மக்களது கட்சித் தொண்டர்களது கருத்து என்றாலும், தேர்தல் கட்சிகள் எதுவும் இதற்குத் தயார் இல்லை என்கிற நிலையில், இத்தேர்தல் கட்சிகளுக்கு அப்பால் உள்ள இதர கட்சிகளாவது ஒன்று சேர்ந்து ஓர் அணியை உருவாக்காதா என்றால் அதற்கான வாய்ப்பும் மிகவும் அரிதாகவே தெரிகிறது.

தேர்தல் பாதை அல்லாத போராட்டக்கட்சிகளின் கடந்த பத்தாண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் அவை மார்க்சிய அமைப்புகளோ, அல்லது பெரியாரிய அமைப்புகளோ எதுவானாலும் அவை மேலும் மேலும் பிளவுபட்டோ, உடைந்தோ, சிறு சிறு அமைப்புகளாகப் பிரிந்தோதான் சென்றிருக்கின்றனவேயின்றி எதுவும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பில் இல்லை. ஒவ்வொரு அமைப்பின் சமீபகால வரலற்றையும் எடுத்துக் கொண்டு யோசிக்க இதுபுரியும். தனித் தனியாகப் பட்டியலிட வேண்டும் என்கிற தேவை இல்லை.

தனித்தனிக் கட்சிகளின் கதை தான் இப்படி என்றால், இது போன்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் உருவாக்கிய கூட்டமைப்புகளின் கதையும் இதுதான். சாதாரண காலங்களில் ஈழத்துக்காக ஒரு குரலில் ஓர் அணியில் நின்று போராடிய கட்சிகள்தான் நெருக்கடியான தருணத்தில் பல கூட்ட மைப்புகளாகப் பிரிந்தன. ஒவ்வொன் றும் தனித்தனிக் கூட்டணியாகப் பல போராட்டங்களை நடத்தின.

kalaingar_260இவை ஏன் இப்படி நேர்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதாவது கொள்கை பூர்வமாய் எல்லோரும் ஓர் இலக்கில் இருக்கி றார்கள். ஆனால் அனைவரும் ஒரு அமைப்பில் இல்லை. தனித் தனியாக இருக்கிறார்கள். ஏன் என்று சிந்தித்துப் பார்த்தால். இவையனைத்திற்கும் நமக் குத் தெரியும் ஒரே காரணம் அமைப்புகளின் சனநாயகமற்ற தன்மைதான். எவரும் எந்த அமைப்பும் மாற்றுக் கருத்தை மாற்றுச் சிந்தனைகளை மதிப்பதில்லை. மாற்றுக் கருத்துகளுக் கான விவாதத்திற்கு கட்சியில் இட மளிப்பதில்லை. கட்சிகளின் உடைவு களுக்கான காரணங்களானாலும் சரி, கூட்டமைப்புகளின் உடைவுகள் பெருக்கங்களுக்கான காரணங்களா னாலும் சரி எல்லாவற்றுக்கும் அடிப்படை இதுவேதான் என்று தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம் கட்சிகளின் பொறுப்பாளர்கள் காலப் போக்கில் தங்களைக் கட்சியின் உரிமை யாளர்களாக் கருதிக் கொண்டு அனைத்தும் தாங்கள் விரும்பியபடி தான், நடக்கவேண்டும் தங்கள் சொற்படி தான் செயலபட வேண்டும் என் கிற சர்வாதிகாரப் போக்கிற்கு இரையா கிறார்கள். இதனால் கட்சியின் பொறுப்பாளர்கள் சக தோழர்க ளையும், கூட்டமைப்பின் தலைமைக் கட்சிகள் சக கட்சிகளையும் மந்தை களாய் பாவித்து நடத்த முயல்கின்றன அறையில் சில பேர் கூடி முடிவு செய்து கொண்டு அப்புறம் பேருக்கு ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி முடிவுகளை அறிவிக்கும் சனநாயக மற்ற போக்கு தலைதூக்குகிறது. மொத்தத்தில் தாங்கள் நினைப்பது தான், தாங்கள் எடுக்கும் முடிவுதான் சரியாய் இருக்க முடியும் என்று கருதுவதின் வெளிப்பாடு இது. ஆக இப்படிப்பட்ட கடந்த கால அனுப வங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அதன் படிப்பினைகளி லிருந்து தெளிவு பெற்று, நாம் தி.மு.க அ.தி.மு.க. வுக்கு மாற்றான மூன்றாவது அணியை உருவாக்க முயல வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன: மூன்றாவது அணிக்கான தேவைக ளையும், அதற்கான நியாயங்களையும் முன்வைத்து பலமுறை பேசப்பட்ட, தொடக்கத்தில் குறிப்பிட்ட கூட்டங் களில் பரிசிலனைக்காக முன்வைக்கப் பட்ட அதே கருத்துகளே இங்கே மீண் டும் பரந்துபட்ட வாசகர்களின் சிந்த னைக்கும் முன் வைக்கப்படுகின்றன.

மூன்றாவது அணி என்பது முக்கி யமான இரு கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம். ஒன்று இந்த அணிக்கு வரும் நோக்கோடும் முனைப்போடும் இருக்கிற கட்சிகளின் சேர்க்கை. அதாவது அணியின் உருவாக்கம். மற்றொன்று இப்படிச் சேரும் கட்சிகளைக் கொண்டு அமையும் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அதன் செல்பாடுகள் இதனடிப்படையிலான சில ஆலோசனை கள் மட்டும் பரிசீலனைக்காக இங்கு முன்வைக்கப்படுகின்றன.

1. தமிழக உரிமைகளை மீட்கவும், தமிழர் நலன்களைப் பாதுகாக்கவுமான ஓர் நிலைத்த கூட்டமைப்பை உருவாக்க, தமிழகத்தில் உயிர்ப்போடு போராடி வருகிற கட்சிகள் அமைப் புகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்து முதலில் இது தொடர்பான விரிவான ஒரு ஆலோசனைக் கூட் டத்தை நடத்தவேண்டும்.

2. இப்படிக் கூட்டப்படும் முதல் கூட்டத்தில். அனைத்து அமைப்பு களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விரிவான குறைந்த பட்சச் செயல் திட்டத்தை வரையறுத்து இத்திட் டத்தின் அடிப்படையில் அதில் சேர விரும்பும், அனைத்து, அமைப்புகளை யும் இணைத்து ஓர் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

3 இந்தக் கூட்டமைப்புக்கான பெயர், அமைப்பு விதிமுறைகள் அனைத்தும் அந்தக் கூட்டமைப்பில் சனநாயக முறைப்படி விவாதிக் கப்பட்டு, பெரும்பாலும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் உருவாக் கப்பட வேண்டும்.

4 கூட்டமைப்பை வழிநடத்த ஒரு தலைமைக் குழுவை சனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்து. அதி லேயே ஓர் ஒருங்கிணைப்பாளர், அல்லது தலைவர், செயலார், பொரு ளாளர் செயற்குழு உறுப்பினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

5 கூட்டுத் தலைமையின் வழி காட்டலிலும் , சனநாயக முறைப்படி விவாதித்து எடுக்கப்பட்ட கூட்டு முடிவுகளின் அடிப்படையிலும் அமைப்பு இயங்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இக் கூட்டமைப்பின் குறைந்த பட்சத் திட்டத்தை ஏற்கும் எந்த அமைப்பும் இதில் இடம் பெறலாம் ஆனால் அகில இந்திய ஆதிக்க கட்சிகளோ, அல்லது அந்த ஆதிக்க கட்சிகளோடு கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளோ இக் கூட்டமைப்பில் நிச்சயம் இடம் பெற இயலாது என்கிற புரிதலில் இதற்கான விதிமுறைகள் செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் ஏதாவது மாற்று முயற்சிகளில் இறங்கினால் தான் தமிழனுக்கு தமிழகத்துக்கு ஒரளவாவது விடிவு காலம் பிறக்கும். அல்லாது இதே நிலையை நீடிக்க விட்டால் தமிழகம் காலா காலத் துக்கும் தில்லியின் கொத்தடிமையாகவே கிடந்து அண்டை மாநிலங்களால் வஞ்சிக்கப்பட்டும் அண்டை சுண்டைக்காய் நாட்டவர்களால் தாக்கப்பட்டும் தமிழனை யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அளவுக் குத் தமிழன் அனாதையாகத் திரிய வேண்டிய அவலமே தொடரும். எனவே, தலைவர்கள் காலத்தே சிந்தித்து நல்லதொரு முடிவை விரைந்து எடுப்பது நல்லது. இந்த நல்ல முடிவவைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மக்களும் தொண்டர்களும்.

(தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் எழுதிய ‘மூன்றாவது அணி மக்கள் தயார் கட்சிகள் தயாரா’ என்கிற தலைப்பிட்டது உள்ளிட்ட பல்வேறு கட்டுரைகள் அடங்கிய நூல் தொகுப் பின் அறிமுகக் கூட்டங்கள் தமிழகமெங்கும் வாய்ப்புள்ள இடங்களில் நிகழ்த்தப்பெற்றன. அப்படி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மதுரை, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய இடங்களில் இந்நூலை அறிமுகம் செய்து உரையாற்றும் வாய்ப்பு கிட்டிது. அதன்படி அந்நூலை அறிமுகம் செய்து ஆற்றிய உரையின் சுருக்கத்துடன் நேரம் கருதி முழுமையாக அங்கு வெளிப்படுத்த வாய்க்காது மனத்திலேயே தங்கிப்போன சில கருத்துகளையும் சேர்த்து தற்போது இதழுக்கான கட்டுரையாக இது இங்கே தரப்படுகிறது.

நூல் பற்றி: நூலாசிரியர் பல்வேறு தருணங்களில் தினமணி, தென்செய்தி மற்றும் தமிழன் எக்ஸ்பிரஸ் ஆகிய இதழ்களில் எழுதிய கட்டுரைகள் ஒரு மொத்தமாகத் தொகுக்கப்பட்டு ‘மூன்றாவது அணி - மக்கள் தயார் கட்சிகள் தயாரா’ என்கிற தலைப்பில் வெளிவந்துள்ளது.)

Pin It

குடிஅரசு வெயியீட்டு விழாவில், “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு நேரடியாக பெரியாரால் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்” என்று பெரியார் திராவிடர் கழகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதைக் கண்டித்து திராவிடர்கழகம் சார்பில் கவிஞர் கலி. பூங்குன்றன் பூனைக்குட்டி வெளியே வந்தது! என்ற தலைப்பில் விடுதலையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது இலட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு திராவிடர்கழகப் பொதுக்கூட்டங்களிலும், புத்தகச் சந்தைகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

பெரியார் சொத்துக்களை அரசு எடுத்துக்கொண்டால் கடவுள் மறுப்புத் தத்துவங்களைப் பிரச்சாரம் செய்வார்களா? விடுதலை நாளிதழ் வருமா? பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு எனப் பிரச்சாரம் செய்வார்களா? அரசு கையில் உள்ள செங்கல்வராயன் அறக்கட்டளை, பச்சையப்பன் அறக் கட்டளைகளின் நிலைபோல ஆகாதா? பார்ப்பன அரசு வந்தால் பெரியார் கொள்கையைப் பரப்புமா? என்றெல்லாம் ஆணித்தரமான வாதங்களை வைத்து பெ.தி.க வை அதிர வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்குமுன் வீரமணி அவர்களோ பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணியை “வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்தவர்”,  “துள்ளும் துரோகத்தின் முதுகெலும்பை ஒடிப்போம்” என்றெல்லாம் இ.கு.க கட்சியின் வட்டச்செயலாளர் வண்டுமுருகனைப் போல முழங்கி வருகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்லி தமது தரத்தைத் தாழ்த்திக்கொள்ள விரும்பாமல் பெ.தி.க எந்த மறுப்பும் வெளியிடாமல் அமைதியாக இருக்கிறது.  எனவே பெரியார் அறக்கட்டளைக்கு நன்கொடை கொடுத்த இலட்சக்கணக்கான தமிழர்களின் சார்பில் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறேன்.

நாய் பெற்ற தெங்கம்பழம்

திருச்சி ஓயாமாரிச் சுடுகாட்டில் பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி என்ற இரண்டு சட்ட எரிப்பு வீரர்களின் நினைவிடம் இருக்கிறது. இவற்றிற்கு ஒரு வரலாறு இருக்கிறது. இவர்கள் இருவரும் 1957 ஆம் ஆண்டு ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்தை எரித்து கடுங்காவல் தண்டனை பெற்றவர்கள். சிறைக்குள்ளேயே சிறைக் கொடுமைக்குப் பலியானவர்கள். இப்போராளிகளின்  உடலைக்கூட அப்போதைய காங்கிரஸ் அரசு வெளியில் தோழர்களிடம் தராமல் சிறைக்குள்ளேயே  புதைத்தது. அன்னை மணியம்மையார் வீராங்கனையாக வெகுண்டெழுந்தார். “ உயிருடன் அனுப்பினோம் - பிணத்தையாவது கொடுங்கள்” எனப் போராடி, அரசு கொடுத்த சிதைந்த  உடல்களை இலட்சக்கணக்கான தோழர்கள் புடைசூழ தனது தலைமையில்  திருச்சி ஓயாமாரிச் சுடுகாட்டில் புதைத்து அங்கே ஒரு நினைவுச் சின்னத்தையும் உருவாக்கிவைத்தார். ஆயிரக்கணக்கான தோழர்கள் அப்போராளிகளின் உடலின் முன்பு எங்கள் வாழ்வில் எங்கள் குடும்பத்தில் இனி ஜாதி மறுப்புத் திருமணங்களைத்தான் செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டு நடத்தியும் காண்பித்தனர். அப்போது சிறையில் இருந்த பெரியார் விடுதலை ஆனபிறகு அந்த நினைவிடங்களில் தானே தலைமையேற்று கல்வெட்டுக்களைத் திறந்து வைத்துள்ளார். இப்படி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராளிகளின் நினைவிடத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? இதோ கீழேயுள்ள படத்தைப் பாருங்கள். 

 periyarists_cemetry_1
.ஈழத்தில் புலிகளின் ஆட்சிக் காலத்தில் வீரஞ்செறிந்த யுத்தங்களுக்கு இடையே எதிரிகளின் குண்டுமழை பொழிந்துவந்த காலத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வளவு கவனமாக பேணி பாதுகாக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். தற்போதைய களத்தில் புலிகள் பின்னடைவான பிறகு மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களன் சீரழிக்கிறான். ஆனால் எந்த முக்கிய வேலையும் இல்லாமல் ஆட்சிகளுக்கு காக்காய் பிடிப்பதையே முழுநேரப் பணியாகச் செய்துவரும் திராவிடர் கழகத் தலைமை - பெரியார் ட்ரஸ்ட் தலைமை - அரசுக்கு சொத்து போய் விட்டால் சொத்து நாசமாகிவிடுமே என கவலைப்படும் வண்டுமுருகன்கள், இந்த இயக்கத்துக்காக கொள்கைக்காக உண்மையாகவே உயிர்விட்ட போராளிகளின் நினைவிடத்தை - பெரியாராலும் அன்னை மணியம்மையாராலும் உருவாக்கப்பட்ட நினைவிடத்தை எதிரிகளால் இல்லாமல் தாமே அழித்துச் சிதைத்துவிட்டனர்.

பெரியார் காலத்தில் திருச்சி மாநகரத்தில் மாபெரும் செயல்வீரராகத் திகழ்ந்தவர் பெரியாரின் போர்ப்படைத் தளபதி திருச்சி பிரான்சிஸ். திருச்சியை பெரியாரின் கோட்டையாக வைத்திருந்த தளபதி பிரான்சிஸ். ஆசிட் தியாகராசன், குடந்தை ஜோசப் போன்ற பல செயல்வீரர்களின் பாசறையாகத் திருச்சியை உருவாக்கி வைத்தவர் பிரான்சிஸ். அவரது மறைவுக்குப் பிறகு பெரியாரே நேரடியாக பிரான்சிஸ் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று அந்த வீட்டருகே பிரான்சிஸ் நினைவுப் படிப்பகத்தைத் திறந்து வைத்தார். திருச்சியின் மையப்பகுதியான உப்புப்பாறையில் பெரியார் திறந்துவைத்த அந்த பிரான்சிஸ் நினைவுப் படிப்பகம் இப்போது அந்தப் பகுதி மக்களின் கழிப்பிடமாக மாறிவிட்டது. பிரான்சிஸ் வாழ்ந்த வீடு குட்டிச்சுவராக இடிந்து மண்ணாகிப் போய்விட்டது.  இப்படிப்பட்ட கொள்கை அடையாளங்கள் தரைமட்டமாகிப் போய்விட்டன.

சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனை பெற்று சிறை சென்றதால்  திருச்சியில் தான் சொந்தமாக நடத்திவந்த இரண்டு உணவுவிடுதிகளையும் இழந்து குடும்பத்தினரை வறுமையில் வாடவிட்டு இன்னும் மீடேற முடியாமல் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த அதே இடத்தில் அதே பகுதியில் கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு அதன்மூலம் கிடைக்கும் மிகச்சிறு வருமானத்தைக்கொண்டு வாழ்க்கையின் மீதிக் காலத்தைக் கடத்தி வருகிறார் 80 வயதைக் கடந்த சட்ட எரிப்புவீரர் மாரியப்பன்.  இவரது நிலை குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும், பல இணையதளங்களிலும், வலைப்பூக்களிலும் பதிவாகி உள்ளது. வெளி உலகுக்கும் வந்துள்ளது. இவற்றைப் பார்த்து பார்ப்பன சிரிப்பு நடிகன் எஸ்.வி.சேகர் கூட ஒரு இலட்ச ரூபாய் தரமுன்வந்தான். பெரியார் அறக்கட்டளை ? ? ?

இதே காலகட்டத்தில் இலட்சக்கணக்கில் வருமானம் வரக்கூடிய பெரியார் கல்விநிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நவீன கட்டிடங்கள் கட்டப்பட்டு பேணிப்பாதுகாக்கப்பட்டு அவற்றுக்கு வாரிசாக ஒரு 'மாபெரும் தத்துவவாதி', 'ஆற்றல்மிக்க செயல்வீரன்', 'போராளி' அன்புராஜ் நியமிக்கப்படுகிறார். 

கொள்கையையும் கொள்கைக்காரர்களையும் பாதுகாக்கத்தான் பெரியார் சொத்துக்களைச் சேர்த்தார். மறைந்த போராளிகளின் நினைவிடத்தையும் அந்த சொத்தால் பாதுகாக்க முடியவில்லை, சுயமரியாதைக் காலத்தின் அடையாளங்களாக இன்னும் வாழ்ந்துவரும் மாரியப்பன் போன்ற போராளிகளையும் காப்பாற்றப் பயன்படவில்லை என்றால் அந்தச் சொத்து அரசுக்குப் போனால்தான் என்ன தவறு? ஆயிரங்கோடி சொத்து இருந்தும் கழக வளர்ச்சிக்காக பெரியாராலேயே உருவாக்கப்பட்ட படிப்பகங்கள் கழிப்பிடங்களாகவும், மணியம்மையாரால் உருவாக்கப்பட்ட நினைவிடங்கள் உருக்குலைந்து முட்புதர்களாகவும், செயல்வீரர்களின் பாசறைகள் குட்டிச்சுவர்களாகவும் சிதைந்துபோய்க் கிடப்பதை திருச்சியில் நேரில் இன்றும் காணலாம். நாய்பெற்ற தெங்கம்பழமாக - நாய்க்குக் கிடைத்த தேங்காய் போல எதற்கும் பயன்படாத சொத்துக்கள் அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசுக்குப் போய்விட்டால்...

அரசுக்குப் போய்விட்டால் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்வார்களா? என்று கேட்டுள்ளனர். மலையாளி என உங்களால் இகழப்பட்ட எம்.ஜி.ஆர் தனது ஆட்சிக்காலத்தில் மாவட்டந்தோறும் பெரியார் நினைவுச்சுடரை நினைவுச் சின்னத்தை உருவாக்கினார். பெரியார் பெயரில் மாவட்டத்தை அமைத்தார். அவரது வாரிசாக வந்த பார்ப்பன ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் பெரியாரின் குடிஅரசு இதழ்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழியாக அரசு சார்பாக அச்சிட்டு மக்களிடம் கொண்டு செல்ல உத்தரவைப் பிறப்பித்தார். அப்போது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இராமர் இளங்கோ அவர்களுக்கு ஒப்புதலை அளித்தார். அந்நிறுவனத்தின் நடவடிக்கைக் குறிப்புக்களில் ஆதாரம் இருக்கிறது. அப்போது அந்த அரசு குடி அரசை வெளியிட்டுவிடக் கூடாது என இரகசியமாகத் தடை போட்டவர் பெரியார் ட்ரஸ்டை இயக்கும் தமிழர் தலைவர் தானே? அரசு செய்யும் பெரியாரியல் பணிகளைத் தடை போடத்தானே ட்ரஸ்ட் பயன்பட்டுள்ளது?

“பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும்புலி வாழும் காடு” என அட்சரம் பிசகாத பெரியாரின் இந்த முழக்கம் மத்திய பார்ப்பன அரசாங்கத்தில் அனுமதி பெற்றுத்தானே அச்சிடப்படுகிறது. தனியாக யாருக்கும் தெரியாமல் அடர்ந்த காடுகளில் அச்சிடப்பட்டு, உழைக்கும் அடித்தட்டு மக்களிடம் இரகசியச்சுற்றாகவா விடுதலை விநியோகிக்கப்படுகிறது? பார்ப்பனமயமாக உள்ள மத்திய அரசுதானே பார்ப்பன எதிர்ப்புக் கருத்துக்கள் அடங்கிய விடுதலைக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது. அந்த பதிவு எண்ணை தினமும் விடுதலையில் 8 ஆம் பக்கத்தில் போட்டுத்தானே  பத்திரிக்கை நடத்துகிறீர்கள்?

பெரியார் பார்வையை அடிப்படையாகக்கொண்ட பெண்விடுதலை, ஜாதி ஒழிப்பு, பொதுவுடைமை பூத்த தனித்தமிழ்நாட்டுக்காக அந்தக் கொள்கைகளை மக்களிடையே தினந்தோறும் பரப்பிவரும் வீரமணியின் விடுதலை, உண்மை இதழ்கள் அரசே நடத்தும் நூலகங்களில் அவசியம் வாங்கப்படவேண்டுமென அரசாலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வாங்கப்பட்டுத்தானே வருகின்றது?

பெரியார் தி.க கொடுத்த நெருக்கடியால் தற்போது நீங்கள் வெளியிடுட்டுவரும் குடியரசு தொகுப்புகள் கூட தமிழ்நாட்டு அரசின் அனைத்து நூலகங்களிலும் வாங்கப்படுகின்றனவே? பார்ப்பன ஜெயலலிதாவின் ஆட்சியிலும் நூலகங்களில் விடுதலை, உண்மை இதழ்கள் தொடர்ந்து வாங்கப்பட்டுத்தானே வந்தன? பிறகென்ன அப்பாவித் தொண்டர்களிடம் நாடகம்? அரசுக்குப் போய்விட்டால் பிரச்சாரமே நடக்காது; பெரியார் கருத்துக்கள் பரவாது என பித்தலாட்டப் பிரச்சாரம். அரசுக்குப் போனாலாவது பெரியார் கருத்துக்களால் பலனடைந்தவர்கள் பலமுறை பொறுப்புக்கு வருவார்கள். உங்களைவிட சிறப்பாக பணிகள் நடக்கும்.

அரசைவிட அறக்கட்டளையில்தான் சமூகநீதிக்குப் பஞ்சம்

பெரியார் கல்வி நிறுவனங்கள் சமூகநீதிக்கண்ணோட்டத்தில் செயல்படுகிறதா? அரசு நடத்தும் கலை, பொறியியல், மருத்துவக்கல்லூரிகளில் இன்றும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.  தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காக அரசு ஒதுக்கீட்டுக்கு பாதி இடங்களை கேட்டுள்ளது அரசு. அரசுக்கு இடங்களைக் கொடுத்தால் அவற்றில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட்டிருக்கும்.  சமூகநீதியை அரசு செய்யுமா என தற்போது கேள்வி எழுப்பும் மடாதிபதிகள் இன்றுவரை பெரியார் கல்வி நிறுவனங்களில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவே இல்லை. தெம்பிருந்தால் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு நிலையை வெளிப்படையாக நாணயமாக அறிவியுங்களேன்? ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற மத்திய அரசு கல்விநிறுவனங்களே அவற்றை வெளிப்படையாக இணையதளங்களில் வெளியிடுகின்றன. இந்திய ஆட்சிப்பணிக்கு அதிகாரிகளைத் தேர்வு செய்யும் நிறுவனமே ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு நிலை என்ன என விளக்கமாகப் பட்டியலோடு வெளியிடுகிறது.  அரசைவிட அதிகமாக சமூகநீதியை நிலை நாட்டவேண்டிய பெரியார் ட்ரஸ்ட் நடத்தும் கல்விநிறுவனங்கள் இடஒதுக்கீட்டு நிலையை வெளிப்படையாக அறிவிக்குமா?

பெரியார் கல்விநிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு இல்லை. அது போகட்டும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இருக்கிறதா, தமிழ்நாடு முழுவதுக்கும் 31 சி சட்டத்தைக் கண்டு பிடித்து இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தோம் என மார்தட்டிக்கொள்ளும் அறக்கட்டளைத் தலைவர் வீரமணி அவர்களே!

முதலில் இதுவே பித்தலாட்டம். 31 சி சட்டத்தின் அடிப்படையில் 69 விழுக்காட்டு இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவேண்டும் என்ற சட்டமுன்வரைவைத் தயாரித்தவர் நீதியரசர் வேணுகோபால்தான். வீரமணி அல்ல. நீதியரசர் உருவாக்கிய சட்ட முன்வடிவைச் சட்டமாக்கியவர் அப்போதைய முதல்வர் பார்ப்பன ஜெயலலிதா. இடையில் இவர் செய்தது போஸ்ட்மேன் வேலை மட்டுமே. இந்த ஒரு எளிமையான செயலை பெரியார் 1951 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தையே முதன்முதலாகத் திருத்திய போராட்டத்தோடு தொடர்புபடுத்திப் பிரச்சாரம் செய்வது என்ன பிழைப்போ தெரியவில்லை. அது கிடக்கட்டும்.

தோழர் வீரமணியின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியார் அறக்கட்டளையிலாவது சமூகநீதி உள்ளதா? அங்கு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவாரா?  ஒரே ஒரு தாழ்த்தப்பட்டவராவது அறக்கட்டளை யில் உறுப்பினராக உள்ளாரா? சட்ட எரிப்புப்போராட்ட வீரர்களாவது யாராவது அறக்கட்டளையில் இருக்கிறார்களா?  மூச்சுக்கு மூச்சு கலைஞர் ஆட்சியைக் காப்பாற்றத் துடிப்பவர்கள் கலைஞரையாவது அவர் குடும்பத்தையாவது அறக்கட்டளையில் சேர்ப்பார்களா?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவோ, இணைவேந்தராகவோ வரமுடியுமா? சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கும் பக்தசிகாமணி வி.கே.என். கண்ணப்பனை விட இயக்கத்துக்கு இன்னும் உழைத்து உழைத்து கருப்பு மெழுகுவர்த்திகளாக உருகும் கவிஞர்.கலி. பூங்குன்றன், உரத்தநாடு குணசேகரன் போன்றவர்கள் தாழ்ந்தவர்களா? இப்படி தற்போது உழைக்கும் தோழர்களும் இல்லாத, உழைத்து ஓய்ந்த போராளிகளும் இல்லாத, இவர்கள் யாருக்கும் பயன்படாத, அரசு நிறுவனங்களில் உள்ள சமூகநீதிகூட நடைமுறைப்படுத்தப் படாத அறக்கட்டளை சொத்துக்கள் அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசு சார்பில் சாலைபோடுதல், தொழில்நிறுவனங்கள் உருவாக்குதல் போன்ற பல பணிகளுக்காக நிலங்களை வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு அந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அல்லது தொழில் வாய்ப்புகளை அரசு வழங்குகிறது. ஆனால் பெரியார் அறக்கட்டளைக்குச் சொத்துக்களை வழங்கியவர்களின் வாரிசுகளின் நிலை என்ன? அரசுக்குக் கொடுத்திருந்தாலாவது அவர்களுக்கு ஒரு பயன் இருந்திருக்கும். அல்லது சொத்துக்களைக் கொடுக்கும் நோக்கங்களாவது நிறைவேறியிருக்கும்.

இது எங்கள் சொத்து, இதையெல்லாம் கேட்க நீயார் எனக் கேட்கலாம். அவை உங்கள் சொத்து அல்ல; அன்புராஜ் ரிலையன்ஸ் அம்பானியுடன் ஒப்பந்தம்போட்டு சம்பாதித்துக் கொடுத்த சொத்து அல்ல; ஹிந்துஸ்தான் லீவரோடு இணைந்து சம்பாதித்துக் கொடுத்த சொத்து அல்ல. எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் ஊர் ஊராக துண்டேந்தி, பிச்சை எடுத்து சேர்த்துக் கொடுத்த நிதி. திருமண வயதில் வீட்டில் பெண் இருக்கும்போதுகூட தான் அணிந்திருந்த ஒரே ஒரு நகையையும் கழட்டிக் கொடுத்து சேர்ந்த நிதி. தன் வாரிசுகளை நடுத்தெருவில் பிச்சை எடுக்க வைத்துவிட்டு பெரியார் கொள்கையைப் பரப்ப சொத்துக்களை கொடுத்து சேர்ந்த நிதி. உங்களைவிட ஆயிரம் மடங்கு கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு.

தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கேட்கும் யோக்கியதை உங்களுக்கு உண்டென்றால் இந்த தனியார் அறக்கட்டளையிலும் சமூகநீதியைக் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்காதா? அரசின் உதவியில்லாமல் அரசின் தயவில்லாமல் தனியாக வானத்திலா மிதக்கிறது இந்த அறக்கட்டளை? அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்தித்தானே அறக்கட்டளை நடத்துகிறீர்கள்?  உங்கள் அறக்கட்டளையின் அனைத்துப் பணிகளும் அரசின் கண்காணிப்புக்கு உட்பட்டுத்தானே நடக்கிறது. இது மக்கள் அரசல்ல, மக்களுக்கான அரசல்ல, இந்த அரசைப் பெரியார் ஏற்கமாட்டார் என கொள்கைத் துணிச்சலுடன் அறிவித்து அரசுக்கு வருமானவரி கட்டாமல், தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யாமல், அரசின் சலுகைகளைப் பெறாமல், அறக்கட்டளையை அரசின் கண்காணிப்புக்கு உட்படுத்தமாட்டோம் என அறிவிக்கத்தயாரா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? இப்போதும் அரசுக்குக் கட்டுப்பட்டுத்தான் எந்த அறக்கட்டளையும் செயல்படமுடியும். அது முழுமையாக அரசுக்குப் போனால்தான் என்ன தவறு? நீங்கள் பொறுக்கித் தின்ன முடியாது என்ற ஒரே ஒரு குறைதான். அதைத் தாங்கமுடியாமல்தான் “விநாசகாலே விபரீத புத்தி” என சமஸ்கிருத புத்திமதிகள்.

இந்து அறநிலையத்துறை

இந்துக் கோவில்களில் கோவில் சொத்துக்களை நிர்வகிக்கும் பார்ப்பனக் கும்பல்களின் கொட்டத்தை அடக்க வந்ததுதான் இந்து அறநிலையத்துறை. அதனால்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோதே அதன் எதிர்க்கட்சியான நீதிக்கட்சி கொண்டுவந்த தேவஸ்தான மசோதாவை - சென்னை இந்துபரிபாலன மசோதாவை பெரியார் ஆதரிக்கிறார்.

“ இந்தச் சட்டமானது மேலே குறிப்பிட்டபடி  தர்ம சொத்துக்களை அதன் கிரமமான உபயோகத்திற்கு  அன்றி, தங்களுடைய சுயநலத்துக்காக உபயோகித்துக்கொண்டு வந்த சில மடாதிபதிகளுக்கும், பொதுமக்கள் தர்ம சொத்தைத் தங்கள் வகுப்பார்களே உண்ணவேணும் என்னும் கருத்தின் பேரில் சூழ்ச்சி செய்து  பொது மக்களிடம் பணம்பறித்து, தங்கள் வகுப்பார்க்கே பொங்கிப்போட்டுக் கொண்டிருந்த சில சமயாச்சாரிகளென்போரான சில பிராமணர்களுக்கும், அதன் பலனாய்த் தின்று கொழுத்துத் திரிந்து கொண்டிருக்கும் சில திண்ணைத் தூங்கிகளுக்கும், இவர்களின் தீச்செயல்களுக்கு அனுகூலமாயிருந்து பணம் பறித்துக் கொண்டிருந்த வக்கீல்கள், பஞ்சமகா பாதகத் தரகர்கள் முதலியவர்களுக்கும் விரோதமாயிருந்தபடியாலும் இக்கூட்டத்தார் பெரும்பாலும் பிராமணர்களென்று சொல்லப்படுவோராயிருந்து விட்டபடியாலும், இவைகளுக்கு ஏராளமான சொத்துக்கள் விட்டவர்களும், இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கிறவர்களும், பிராமணரல்லாதாராயிருப்பதனாலும் இந்த சட்டமானது பிராமணர்களுக்கு விரோதமாகவும் பிராமணரல்லாதார்களுக்கு அனுகூலமாகவும் இருப்பதாக ஏற்பட்டுப் போய்விட்டது. ..."

என்று குடி அரசில் பெரியார் எழுதுகிறார். இந்தப் பத்தியில் பிராமணர் என்ற சொல் வரும் இடங்களில் வீரமணி குடும்பம் என்ற சொல்லைப் போட்டுப் பாருங்கள். இன்றைய சூழல் புரியும்.

....“ மதம் போச்சு ; தர்மம் போச்சு; இந்துமதத்தில் சர்க்கார் பிரவேசிக்கிறார்கள்”   என்று பொய்யழுகை அழுகிறது தவிர வேறொன்றும் சொல்வதே கிடையாது. எந்த உலகத்தில் மதவிஷயங்களை அரசாங்கத்தார் திருத்த பிரவேசிக் காதிருக்கிறார்கள்? 1817 - லும், 1863 - லும் பிரவேசித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போயிருந்தார்கள். அரசாங்கத்தார் தாமதமின்றி உடனே பிரவேசித்துத் தக்கது செய்யவேண்டும் என்று காங்கிரசிலும், கான்பரன்ஸிலும் தீர்மானித்த காலத்தில் இந்த ஜாதியார் எங்கு போனார்கள்?" என்றும் குடி அரசில் பெரியார் எழுதினார்.

இதே போலத்தான் இப்போது தோழர் வீரமணியும் பொய்யழுகை அழுகிறார். கோடிக்கணக்கான மக்களின் சொத்துக்களை ஒருசில பார்ப்பனர்கள் கொள்ளையடிப்பது தவறு எனும்போது அப்படிச்சொன்ன பெரியாரின் சொத்துக்களை ஒரு சிலர் கொள்ளையடிப்பது நியாயமா? கோவில்களை நிர்வகிக்க தனி அறவோர் வாரியம் அமைக்கவேண்டும்; கோவில் நிர்வாகங்களில் அரசு  தலையிடக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் போராடி வருவதற்கும் பெரியார் அறக்கட்டளையில் அரசு தலையிடக்கூடாது என வீரமணிகள் துடிப்பதற்கும் என்ன வேறுபாடு?

உச்சநீதி மன்ற வழக்குக்கு பார்ப்பன உதவி

சொத்துக்களை அரசுடமையாக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என பெ.தி.க அறிவித்தது  அதற்கு விடுதலை எழுதுகிறது,  “உச்சநீதிமன்றம்வரை போவார்களாம் அந்த அளவுக்கு அவர்களுக்குப் ‘பொருளாதாரப் பின்னணி’ இருக்கிறது. இப்படி ஒரு முயற்சி மேற்கொண்டால் காஞ்சிமடம் வரை கைவாகு கொடுக்க மாட்டார்களா?”

அட அறிவாளிகளா! உச்சநீதிமன்றம் போவதற்கு என்ன பொருளாதாரப் பின்னணி வேண்டியிருக்கிறது? சென்னையில் இருந்து தொடர்வண்டியில் 400 ரூபாய்க்கு டிக்கட் எடுத்து மாதத்திற்கு ஒருமுறை புதுடில்லிக்குப் போய் வழக்கை கவனித்து வருகிறார்கள் பல வழக்கறிஞர்கள். உங்களைப்போல கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸில் எக்ஸ்சிக்யூட்டிவ் க்ளாசில் பறந்து  உச்சநீதிமன்றத்துக் போவதற்குத் தான் சங்கரமட ஆதரவுகள் தேவை. கல்விநிறுவனப் பித்தலாட்ட வழக்குகளை நடத்த நீங்கள் அப்படித்தான் போய்வருவீர்கள் போலுள்ளது. கல்வி நிறுவனங்களுக்காகவும், அறக்கட்டளைகளுக்காகவும், இயக்கத்துக்காகவும் பலமுறை உச்சநீதிமன்றத்துக்கு நீங்கள் போய்வருகிறீர்களே, காஞ்சி மடங்களின் கைவாகு தான் காரணமோ? “தான்திருடி அச  (அண்டை) வீட்டை நம்பமாட்டாள்” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

புதுடில்லியில் புறநகர்ப் பகுதியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட போது அதற்குப் பதிலாக புதிதாக இந்தியத் தலைநகரின் மய்யப் பகுதியில் பல நூறு கோடி மதிப்புள்ள இடத்தையும் கட்டடத்தையும் உங்களுக்கு - பெரியார் ட்ரஸ்ட்டுக்கு வழங்கிய அகில இந்திய அரசுக்கான அமைச்சரான எல்.கே.அத்வானி தஞ்சை மாவட்டத் தமிழனா? பார்ப்பனன்தானே!!  அதுவும் லல்லு பிரசாத், கன்ஷிராம் போன்ற உங்கள் நண்பர்களான சமூக நீதித் தலைவர்கள் அல்ல. நீங்கள் பரம வைரியாக கருத வேண்டிய ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நம்பிக்கை நட்சத்திரமான அத்வானி. அந்தப் பார்ப்பானே உங்கள் ட்ரஸ்ட்டுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்துள்ளானே! பார்ப்பான் இந்த ட்ரஸ்ட்டால் தனக்கு தீமை என்றால்  பலநூறு கோடிகளை அள்ளிக்கொடுப்பானா?

மத்திய பார்ப்பன அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தோடு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஒரு ஒப்பந்தம்போட்டு கோடிக்கணக்கான ரூபாய்களை பல்கலைக்கழகத்துக்குப் பெற்று டி.ஆர்.டி.ஓ (DRDO) நிறுவனத்தின் ஆராய்ச்சிகள் நடக்கின்றனவே? பெரியார் நிறுவனத்தால் தனக்கு உண்மையில் ஆபத்து என்றால் பார்ப்பான் பல கோடிகளை உங்களுக்குத் தருவானா? பார்ப்பன அரசின் பாதுகாப்பு அமைச்சகம் உங்களோடு ஒப்பந்தம் போடுமா?

பல்கலைக்கழகத்தை உருவாக்கியபோதும் கல்லூரிகளை உருவாக்கியபோதும் பெரியார் மற்றும் பெரியார் மணியம்மை அறக்கட்டளைகளின் பதிவுப்பத்திரங்கள், சொத்துவிபரங்கள், வங்கிக்கணக்கு விபரங்கள் அனைத்தையும் காட்டித்தான் மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் அனுமதி வாங்க முடியும். இந்த அறக்கட்டளைகள் பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பானவை என்றால் அந்தத் துறையிலும் மத்திய அரசின் உயர் பதவிகளிலும் நிரந்த ஆட்சி புரியும் பார்ப்பனர்கள் - நம்பூதிரிகளிடம் நீங்கள் அனுமதியே வாங்கியிருக்க முடியாது.

“தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழர்நாட்டையும், தமிழ் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான்” என்று முழங்கியவர் பெரியார். அந்த இந்திய பார்ப்பன அரசிடம் அடைந்த சரணாகதிக்கு - சமரசத்துக்கு அடையாளந்தான் “ பெரியார் தனித்தமிழ்நாட்டுக்கொள்கையை தன் காலத்திலேயே  கைவிட்டுவிட்டார்” என்ற திரிபுவாதக்கருத்துப் பிரச்சாரமும், அந்தத் திரிபுக்கு எதிராக தோழர் எஸ்.வி. இராஜதுரை எழுதிய மறுப்புக்கு இன்றுவரை பதில் தராததும்.

“காஷ்மீர் விடுதலைப் பிரச்சனையைக் காஷ்மீரிகளே தீர்மானித்துக்கொள்ள விட்டுவிட வேண்டும்” என்றவர் பெரியார். ஆனால் காஷ்மீரிகளை ஒடுக்க நடந்த கார்கில் போரில் இந்திய இராணுவத்துக்கு உங்கள் அறக்கட்டளை நிதி அளிக்கிறது.  அதற்குக் கைமாறுதான் பாதுகாப்பு அமைச்சகம் உங்களுக்கு அளித்த ஆராய்ச்சி நிதிகள்.

இப்படி பார்ப்பனர்களை அனுசரித்து, அவாளின் அகில இந்திய ஜோதியில் கலந்து அவர்களிடமிருந்து கோடிகோடியாக பொருளாதாரப்பலத்தைப் பெருக்கிவரும்  நீங்கள் ஒரு உச்சநீதி மன்ற வழக்குக்குப் போவதையே பார்ப்பனக் கைவாகு என சொல்வதைப் பார்த்து நாடே சிரிக்காதா?

வீரப்பன் காட்டில் பெய்த மழை

வீரப்பன் காட்டில் பெய்தமழையில் நனைந்தவர் என்று கொளத்தூர் மணியை விமர்சிக்கிறார் வீரமணி. வீரப்பன் காட்டில் உண்மையாகவே மழை பெய்தபோது, வீரப்பன் உண்மையாகவே சந்தனக் கட்டைகளைக் கடத்தி, யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்தியபோது, கோடி கோடியாகப் பொருளீட்டியபோது கொளத்தூர் மணி உங்கள் தி.க வில் மாநில அமைப்புச்செயலாளராகத் தானே இருந்தார். தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்பட்டதும், மேட்டூரில் 200 பவுன் தங்கம் வழங்கப்பட்டதும் வீரப்பன் காட்டில் மழை பெய்த போதுதானே? அந்த எடைக்கு எடை வழங்கிய விழாவில் வரவுசெலவுக் கணக்குப் பார்த்து இரண்டரைக் கோடி என கணக்கு முடித்துக் கொடுத்தவர் கொளத்தூர் மணி தானே? அவரது நெருங்கிய நண்பரான தோழர் பொத்தனூர் சண்முகம்தானே தற்போதும் உங்கள் அறக்கட்டளையின் தலைவர்? நியாயமாக ஒரு விசாரணைக் குழுவை அரசே அறிவிக்க வேண்டும். மேட்டூரில் 200 பவுன் தங்கம் யார் வழியாக உங்களுக்குக் கிடைத்தது என ஆராய வேண்டும்.
 
வீரப்பன் இராஜ்குமாரைக் கடத்திய விவகாரத்தில் பலகோடிகளைச் சுருட்டியதாகப் பரவலாகக் குற்றம்சாட்டப்பட்ட நக்கீரன் கோபால் தமிழர் தலைவருக்கு நெருங்கிய நண்பர்தானே? கோபாலுக்கு தமிழ்நாடு அரசின் பெரியார் விருது வழங்கப்பட்டபோது “வீரப்பன் காட்டில் பெய்த மழையில் நனைந்தவருக்கு” பெரியார் விருதா என ஏன் கேட்கவில்லை? கேட்காவிட்டாலும் பரவாயில்லை. நக்கீரன் கோபாலுக்கு பாராட்டுப் பத்திரமே வாசித்தீர்களே! வீரப்பன் காட்டு மழைச்சாரலில் கொஞ்சம் நனைந்துவிட்டீர்களோ?  அந்த மழையைப் பெய்வித்த மூலவரான தமிழினத்தலைவர் செம்மொழிகொண்டார் கலைஞரை பக்கத்தில் வைத்துக் கொண்டு கொளத்தூர் மணியை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?  வீரப்பன் பிடியில் இருந்த இராஜ்குமாரை மீட்டால் அதற்கு வீரப்பன் எப்படி பணம் தருவான்? இராஜ்குமாரோ அல்லது இந்தக் கடத்தலால் ஆட்சி போய்விடக்கூடாதே என்று நடுங்கிக்கொண்டிருந்த கலைஞரோ, எஸ்.எம். கிருஷ்ணாவோ தான் கொளத்தூர் மணி உள்ளிட்ட மீட்புக்குழுவுக்குப் பணம் கொடுத்திருக்க முடியும்.

“கலைஞர் ஆட்சியைக் காப்பாற்ற நீங்கள் யார்? உங்களால் இந்த ஆட்சி காப்பாற்றப்பட்டால் ஜெயலலிதா கோபித்துக்கொள்வார். காட்டுக்குள் போக வேண்டாம் மணி” என கொளத்தூர் மணியை நீங்கள் எச்சரித்தும் இருமாநிலங்களில் வாழும் தமிழர்களின் உயிரை மனதில்கொண்டு இராஜ்குமாரை மீட்டு வந்ததற்காக - கலைஞர் பாராட்டியதற்காகத்தானே கொளத்தூர் மணியை நீக்கினீர்கள்?  உங்களால்  கலைஞர் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என சிவாஜிகணேசன் பாணியில் நடிக்கத்தான் முடியும். அன்றைய காலத்தில் அதைச்செய்து காட்டியவர் கொளத்தூர் மணி. அதற்குப் பரிசாக கலைஞர் வேண்டுமானால் கொளத்தூர் மணிக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்திருக்கலாம். அந்தப் பணத்தில்தான் குடி அரசு வெளியிட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறீர்கள். வீரப்பன் காட்டில் மழை பெய்தது என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது. எனவே வீரமணி அவர்களே துணிச்சலுடன், அறிவு நாணயத்துடன் இந்த இரண்டும் உங்களுக்கு இருந்தால் கிடைத்த தகவலை வெளியிடுங்கள்.

இராஜ்குமார் மீட்பில் பணம் விளையாடியது உண்மையானால் அதற்கு மூல காரணம் கலைஞராகத்தான் இருக்கமுடியும். அப்படிக் கொடுக்கப்பட்ட பணம் அரசுப்பணமா? யாருடைய வங்கிக்கணக்கில் இருந்து சென்றது? அரசின் எந்தத் துறையில் அந்தக்கணக்கு காட்டப்பட்டுள்ளது? அல்லது கணக்குக் காட்டாமல் பணம் கொண்டுசெல்லப்பட்டது உங்களுக்கு எப்படித் தெரியும்? யாருடைய கருப்புப் பணம்? தெளிவாகத் தெரியாவிட்டால் உங்கள் நெருங்கிய நண்பர் தமிழக முதல்வரிடம் கேட்டுச் சொல் லுங்கள். அல்லது அவரது நண்பர் மத்திய அமைச்சர் கிருஷ்ணாவிடம் கேட்டுச் சொல்லச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால்கூட கொள்ளைக்காரன் வீரப்பன் பணம்கூட குடியரசு வெளியிடப் பயன்பட்டுள்ளது. கொள்கைக்காரர் பெரியாரின் பணம் அதற்குப் பயன்படவில்லையே. அப்படிப் பயன்படாத பணம் அரசுக்குப் போனால்தான் என்ன?

“தான் திருடி அச வீட்டை நம்ப மாட்டாள்” என்ற பழமொழி பலமுறை உங்களுக்குப் பொருந்திப் போகிறது. கலைஞர் சொன்னதற்காக இராஜ்குமார் மீட்கப்பட்டதில் நமக்குத் தெரியாமல் பெட்டி வாங்கியிருப்பாரோ என யோசிக்கும் சின்னப்புத்தி உங்களுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. அந்தக்காலத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை இரகசியமாகச் சந்திக்கச் செல்லும்போதுகூட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களையும் உடன் அழைத்துச் செல்வீர்கள். ஆனால் ஜெயலலிதாவைச் சந்திக்கச் செல்லும்போது மட்டும் தனிஆளாக - டிரைவராகக்கூட வேறு யாரும் வராமல் உங்கள் நிழலான ஜெகவீரபாண்டியனை வண்டி ஓட்டச்செய்து அவரையும் வெளியில் நிற்கவைத்துவிட்டு தனியாகச் சென்றீர்களே, ஏன்? அப்படிப்பட்ட ஜெ. சந்திப்புகளால்தான் நீலாங்கரையில் ஒரு பங்களா உருவானது என்றெல்லாம் அப்போது சிக்கல்கள் வெடித்தனவே! அந்த ஜெயலலிதாவைப்போல கலைஞரை நினைத்துவிட்டீர்கள் போலுள்ளது.       

எது வளர்ச்சி?

ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள் என அறிக்கை வெளியிட்டீர்கள். நாங்கள் புத்தகச் சந்தை நடத்துகிறோம். இலட்சக்கணக்கில் புத்தகம் போடுகிறோம் என்றீர்கள்.  குடியரசு வெளியிட்டால் மக்களுக்குப் பயன்படாது என்றீர்கள். அதன்பிறகு நீங்களே வெளியிடுகிறீர்கள். பெரியார் திராவிடர் கழகம் குடியரசுக்கு அறிவிப்பு வெளிட்ட பிறகுதானே நீங்கள் போட்டிக்கு வெளியிட்டீர்கள்? அதுவும் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே 10 ஆண்டுகளுக்கான குடியரசு இதழ்கள் எங்களிடம் இல்லை. யாராவது அனுப்பி உதவுங்கள் என விடுதலையில் அறிவிப்புக் கொடுத்தீர்கள். பெரியார் இதழ்களை 10 ஆண்டு புத்தகங்களைத் தொலைத்துவிட்ட நீங்களா பெரியார் கருத்தைப் பாதுகாக்கமுடியும்? 

தமிழ்நாட்டில் 1  கோடி மக்கள் தொகை இருந்த காலத்தில் 2  விழுக்காடு மக்கள் மட்டுமே அதாவது சுமார் 2 இலட்சம் படித்த தமிழர்கள் இருந்த காலத்தில் 20 ஆயிரம் குடி அரசு இதழ்களை அச்சிட்டுப் பரப்பியவர் பெரியார். இன்று மக்கள் தொகை 7 கோடி. எழுதப் படிக்கத் தெரிந்தோர் 90 விழுக்காடு. இன்றைய நிலையில் விடுதலை சுமார் 5 கோடி சந்தாக்களை  வைத்திருந்தால் அந்த நிலையை பெரியார் காலத்தை அப்படியே தக்க வைத்துள்ளீர்கள் என்று சொல்லலாம். 5 கோடிக்கு மேல் ஆறு கோடி சந்தாக்கள் வைத்திருந்தால் அதைத்தான் வளர்ச்சி என்று சொல்ல முடியும். வெறும் 5000 சந்தாக்களை வைத்துக் கொண்டு ஊன்றிப்படியுங்கள், ஊன்றிப் படியுங்கள் என்றால்? முதலில் ஊன்றி எழுதுங்கள்.

குடியரசு 27 தொகுப்புக்களையும் 11,000 பக்கங்களையும் இணையதளத்தில் ஏற்றி, இலவசமாக யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை வழங்கியுள்ளதே பெரியார் தி.க!  உங்கள் இணையதளத்தில் பெரியார் ட்ரஸ்ட்டால் இயக்கப்படும் இணையதளத்தில் ஒரே ஒரு 32 பக்க புத்தகத்தையாவது  பதிவிறக்கம் பண்ண முடியுமா?  இதற்குக்கூட பயன்படாத சொத்து அரசுக்குப் போனால்தான் என்ன தவறு?

அரசுடடைமை ஆகிவிட்டால் பெரியார் பிரச்சாரங்கள் நடைபெறுமா எனக் கேள்விகேட்பவர்களே, உலகில் எந்தப் போராளி இயக்கம் ட்ரஸ்ட்டை நம்பி உள்ளது? பெரியார் ஒரு புரட்சிக்காரர், சமுதாயத்தை அடியோடு மாற்ற விரும்பியவர், சமுதாயப் புரட்சிக்கு வாய்ப்பாக ட்ரஸ்ட்டோ, அரசோ எதையும் பயன்படுத்தியவர். ட்ரஸ்ட் இல்லாவிட்டால் இயக்கமே நடத்தமுடியாது எனப் புலம்பியவர் அல்ல. 1952 வரை ட்ரஸ்ட் இல்லாமல்தானே இயங்கியுள்ளார். அவர் மட்டுமல்ல உலகின் எந்தப் புரட்சி இயக்கமும் அறக்கட்டளை இல்லாவிட்டால் செயல்படவே முடியாது என அலறித்துடிக்காது. அறக்கட்டளைகள் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் இயக்கத்தை கருவியாக்கி அறக்கட்டளையைக் காப்பற்றுவதையே கொள்கையாக்குகிறீர்கள்.

பெரியார் தி.க எந்த அறக்கட்டளையை வைத்து குடியரசை வெளியிட்டது?  அறக்கட்டளையில் இருந்து பணம் கொடுத்துத்தான் திராவிடர் கழகத் தோழர்கள் இயங்குகிறார்களா? சொந்தச் சோற்றைத் தின்றுவிட்டு மக்களுக்கு வேலை செய்பவர்கள் மட்டும் இங்கே வாருங்கள் என அறிவித்து வேலை வாங்கினாரே பெரியார்! நீங்கள் தி.க தோழர்களுக்குப் பணம் கொடுத்துத்தான் வேலை நடக்கிறதா? அப்படி இல்லையே. தி.க தோழர் களும் கடுமையாக உழைத்து தத்தம் சொந்தச் செலவில்தான் இயக்கம் நடத்துகின்றனர். பிரச்சாரம் செய்கின்றனர். அறக்கட்டளை இல்லாவிட்டால் பிரச்சாரமே நடத்தமுடியாது எனக்கூறி அந்தச் சக தோழர்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள். சொத்து இல்லாவிட்டால் இயக்கமே இருக்காது எனக்கூறி உங்களையும் எங்கள் சகோதரர்களையும் கேவலப்படுத்தாதீர்கள்.

நீ யாரடா வழக்குப் போடுவதற்கு? நானே அரசுக்கு வீசி எறிகிறேன். இதேபோல் ஆயிரம் மடங்குச் சொத்துக்களை பெரியாருக்காக - பெரியார் கொள்கைக்காக நான் உருவாக்குவேன் என அறிவித்திருந்தால் நீங்கள்தான் பெரியாரின் வாரிசு என தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியிருப்போம். பிரபாகரன் எந்த அறக்கட்டளையை வைத்து அமைப்பைத் தொடங்கினார்? தனிஅரசை நடத்தினார்? எப்படி அனைத்தையும் தானே உருவாக்கினார்? பெரியார் எப்படி ஒரு அறக்கட்டளையைப் புதிதாக உருவாக்கி வளர்த்தார். அந்தத் தெம்பு, திராணி உங்களுக்கு இருக்க வேண்டாமா? அப்படிப்பட்ட  ரோசக்காரனாக - சுயமரியாதைக்காரனாக - எதையும் உருவாக்குபவனாக உங்களைப் பார்க்க முடிந்தால் அதற்குப் பெயர்தான் வளர்ச்சி.

மணியம்மையார் கவசம்

மிகப்பெரிய குற்றம் ஒன்றை கவிஞர் பூங்குன்றன் கண்டுபிடித்துள்ளார். திருச்சி செல்வேந்திரன் என்ற தி.மு.ககாரர் எழுதிய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் குறித்த சிறு கட்டுரையில் பெரியாரையும் மணியம்மையாரையும் சிறுமைப்படுத்தி எழுதி அதை பெரியார் தி.க வெளியிட்டதாம். அது மாபெரும் தவறாம். மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தியிருந்தால் அது யார் செய்திருந்தாலும் தவறுதான். குற்றம் தான். ஆனால் அந்தக் குற்றச்சாட்டைச் சொல்லும் யோக்கியதை வீரமணியாருக்கு  உண்டா?

தி.மு.க என்ற ஒரு கட்சி உருவானது ஏன்? எதற்கு? பெரியாரையும் மணியம்மையாரையும் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி உருவானதுதானே தி.மு.க?  தி.மு.க என்ற ஒரு அமைப்பு இருக்கும்வரை, அந்த தி.மு.க வுக்கு தி.க ஆதரவாக இருக்கும்வரை மணியம்மையாரைப் பற்றி பாராட்டிப்பேசக்கூட உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அறிவு நாணயம் இருந்தால், நீங்கள் பெரியார் வாரிசாக இருந்தால், துணிவிருந்தால் தி.மு.க தலைவர் கருணாநிதியை அறிவிக்கச் சொல்லுங்கள். “தி.மு.க தொடங்குவதற்கு நாங்கள் சொன்ன காரணம் மிகப்பெரும் தவறு. அதற்காக வருந்துகிறோம். மணியம்மையாரையும் பெரியாரையும் கேவலப்படுத்தி அதனால் உருவான இந்த அரசியல்கட்சியை இன்றே கலைக்கிறேன்” என அறிவிக்கச் சொல்ல முடியுமா?

சரி, அது வேண்டாம். தி.மு.க இல்லாவிட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத சமுதாயம் படுபாதாளத்தில் வீழ்ந்துவிடும்! எனவே, “தி.மு.க ஒரு தவறான முடிவால், தவறான பார்வையால்  உருவாக்கப்பட்டுவிட்டது.  பெரியார் மணியம்மை திருமணம் மிகச்சரியானது; பொருந்தாத்திருமணம் என அன்று விமர்சித்தது மிகப்பெரும் தவறு; அத்திருமணத்தைக் காரணமாகச் சொல்லிதி.மு.க தொடங்கியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்” என ஒரு சிறு அறிவிப்பாவது அறிவிக்க வைக்கத்தயாரா? இதுமுடியாவிட்டால் பெரியார் தி.க வைக் குற்றம் சொல்லும் யோக்கியதை உங்களுக்கு இல்லை என்பதுதானே உண்மை?

மணியம்மையாரை காலம்பூராவும் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் தோழர் ஆனைமுத்து. அவருக்கு பெரியார் தனது கைப்பட புத்தகங்கள் அச்சிட அனுமதி கொடுத்தார் என நீதிமன்றத்தில் சொல்கிறீர் களே? அவரது வெளியீடுகளுக்கு நீங்கள் எந்தத் தடையும் சொல்லவில்லையே? அவரது புத்தகங்களை உங்கள் நண்பர் கலைஞர் வெளியிட்டாரே? மணியம்மையாரைக் கொச்சைப்படுத்தியவரோடு உங்களுக்கென்ன நெருக்கம் என கலைஞரை ஏன் கேட்கவில்லை? தி.மு.கவின் மாநில வெளியீட்டுச்செயலாளர் செல்வேந்திரன் எழுதிய கட்டுரையை பெ.தி.க வெளியிட்டதே தவறு என்றால், அதை எழுதிய செல்வேந்திரன் அவர்கள்  மீது தி.மு.க தலைமை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கைகூட வைக்காதது ஏன்? இதனால் மணியம்மையாரைக் கொச்சைப்படுத்துவதற்கு நீங்களும் துணைபோகிறீர்கள் என்பதுதானே உண்மையாகிறது?

மணியம்மையாருக்கு இணையாக பெரியாருக்கு இயக்கப்பணிகளில் தோளோடு தோள் நின்றவர் அன்னை நாகம்மையார். சுயமரியாதைக் காலத்தில் கடுமையான நெருக்கடிக்காலங்களில் வெள்ளைக்கார அரச பயங்கரவாதத்தையும், பார்ப்பனகூட்டத்தின் சகுனிவேலைகளையும், ஜாதி மத வெறிக்கூட்டங்களின் எதிர்ப்பு களையும் ஒருசேர எதிர்த்துப் போராடிய வீராங்கனை நாகம்மையாரின் பெயரில் உங்கள் காலத்தில் பெரியார் அறக்கட்டளை சார்பில் ஏதாவது ஒரு நிறுவனமாவது உருவாக்கினீர்களா? நாகம்மையார் குழந்தைகள் இல்லமும், நாகம்மையார் பயிற்சிப் பள்ளியும் பெரியார் காலத்தில் பெரியார் உருவாக்கியவை. பெரியாருக்குப் பிறகு மணியம்மையாருக்குப் பிறகு நாகம்மையார் பெயரில் எந்தநிறுவனமும் உருவாகவில்லை. இயக்கப் பணிகளிலும் நாகம்மையார் நினைவுதினமோ, பிறந்ததினமோ நினைவுகூறப்படுவதில்லை. இன்றுவரை அவரது செயல்பாடுகள், பணிகள் பதிவுசெய்யப்படவில்லை. பெரியாரின் தங்கை கண்ணம்மாளின் செயல்பாடுகள் நினைவுகூறப்படுவதில்லை. உங்களுக்குச் சொத்துக் கொடுத்ததற்காக - அந்தக் காரணத்துக்காக - அந்த நன்றிக்காக மட்டும் மணியம்மையாரை உயர்த்திப் பேசுகிறீர்களே ஒழிய பெரியாருடன் இணைந்து பணியாற்றி சக போராளி மணியம்மையார் என்ற நோக்கில் அல்ல. அதற்கு ஆதாரம் தான் நாகம்iமையாரை நீங்கள் புறக்கணித்திருப்பதும், அவரது புகழை, பணிகளை மறைத்திருப்பதும்.

தோழர் வீரமணியின் நாடகம்

தோழர் வீரமணி அவர்களின் உச்சக்கட்ட பித்தலாட்ட நாடகம் ஒன்று அம்பலமாகியுள்ளது. பெ.தி.க கோரிக்கையாக சொல்லப்படுவது என்ன? அறக்கட்டளையை அரசு ஏற்கவேண்டும் என்பதா? இல்லை. அப்படி ஒரு கருத்து அவர்களால் வைக்கப்படவே இல்லை. பெரியாரால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிரச்சாரத்துக்கு வாய்ப்பாக உருவாக்கப்பட்டபெரியார் அறக்கட்டளையை அரசு ஏற்க வேண்டும் என்றோ, அந்த அறக்கட்டளை சார்பில் செயல்படும் விடுதலை, உண்மை, திராவிடன் புத்தக நிலையம் ஆகியவற்றை முடக்கவேண்டும் என்றோ பெரியார் திராவிடர் கழகத்தினர் யாரும் பேசவில்லை; கோரவில்லை; யோசிக்கவே இல்லை. அவர்கள் கோரிக்கையெல்லாம், பெரியார் தனது பெயரிலிருந்து அறக்கட்டளைக்கோ, வேறு எந்த வாரிசுகளுக்குமோ மாற்றாத சொத்துக்களை - தனிப்பட்ட கூட்டமொன்றின் பிழைப்புக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் சொத்துக்களை அரசு காப்பாற்றி மக்களுக்கு என ஆக்க வேண்டும் என்பதுதான். அப்படி யாருக்கும் எழுதிவைக்கப்படாத சொத்துக்களை அரசு ஏற்க வேண்டும் என்பதே தவறு என்றால், அப்படிப்பட்ட வாரிசற்ற சொத்துக்களைத் தனியார்களுக்கு விற்று காசாக்கிக் கொண்டிருப்பது நியாயமா? 

சட்ட எரிப்புப் போரில் 6000 பேர் கைதான இலால்குடியில் இன்று அறுபது பேர்கூட இல்லையே? ஆனால் அதே ஊரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் அறக்கட்டளைக்கு உள்ளது. பெரியார் காலத்தில் திரும்பிய திசையெல்லாம் திராவிடர் கழகக்கொடி பறந்த திருச்சியில் இன்று பள்ளிக்கூடப் பிள்ளைகளை வைத்துத்தான் கூட்டம் காட்டவேண்டிய அவலநிலைதான் உள்ளது.  பெரியார் தன் சொந்த ஊரைவிட்டு திருச்சிக்கு வந்து பணியாற்றவேண்டிய அளவுக்கு தொண்டர்கள் பலம் நிரம்பியிருந்த திருச்சி ஜில்லா - பலகோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள திருச்சி ஜில்லா, இன்று ஐம்பதுபேர்கூட இல்லாத நிலைக்கு வந்து விட்டதே. பெரியாரது சட்டஎரிப்புப் போராட்ட அறிவிப்பு மாநாட்டில் ஒரு இலட்சம் பேர் கூடியுள்ளனர். மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனைக்குத் தயாராக  பத்தாயிரம் தோழர்கள் வந்துள்ளனர்; கைதாகினர்.  அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக இந்திய தேசப்பட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு, பிள்ளையார் உடைப்பு, காந்தி பொம்மை உடைப்பு எனக் கடுமையான போராட்டங்கள் நடந்துள்ளன. அனைத்திலும் ஆயிரக்கணக்கில் தோழர்கள் சிறைசென்றனர்.

ஆனால் இப்போது? மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை என அறிவித்தால் போராட்டத்திலிருந்து பின்வாங்காமல் சிறைசெல்ல ஒரே ஒரு வீரமணியாவது தயாரா? 15 நாள் சிறை என்றால்கூட ஒரு நூறுபேரைத் தயாரிக்க முடியுமா உங்களால்? ஆயிரங்கோடி சொத்துக்கள் இருந்தும் என்ன பயன்? இயக்கத்தை வளர்க்கக்கூட வேண்டாம். பழைய நிலையைக்கூடத் தக்க வைத்துக்கொள்ளக்கூட முடியவில்லையே!

படிப்பகங்களாக, மனையடிகளாக, நஞ்சை நிலங்களாக, வீடுகளாக பெரியாருக்கு சொத்துக்கள் நன் கொடையாக வழங்கப்பட்டதன் நோக்கம் அந்த சொத்துக்கள் வழங்கப்பட்ட பகுதிகளில் இயக்கம் நன்றாகச் செயல்பட வாய்ப்பாக சொத்துக்கள் பயன்படவேண்டும் என்பது தான். அந்த சொத்துக்கள் வழங்கப்பட்டதன் நோக்கங்களுக்கு மாறாக இப்போது அவற்றை யாருக்கும் தெரியாமல் தனியார் நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட நபர்களுக்கும்  திருட்டுத்தனமாக விற்பனை செய்வதைத்தானே பெரியார் தி.க விமர்சித்தது.

ஏதோ அறக்கட்டளையை அரசு கையகப்படுத்தப்படுத்த வேண்டும் என சொன்னதைப் போல, விடுதலை இதழ் இயங்குமா? உண்மை இயங்குமா? பார்ப்பன எதிர்ப்பு புத்தகங்களை அரசு அச்சிடுமா? என்றெல்லாம் யாரும் எழுப்பாத கேள்விகளுக்கு தேவையில்லாமல் பதில் கேள்விகள் கேட்பது ஏன்? திருடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் திருடன் ஒருவன், தானே “ அய்யோ திருடன் ஓடுகிறான், பிடியுங்கள், பிடியுங்கள்” என சத்தம் போட்டுக்கொண்டு ஓடினானாம். பின்னால் துரத்திக்கொண்டு வந்தவர்கள் திருடனை விட்டுவிட்டு இல்லாத யாரையோ தேடி ஓடினார்களாம். அப்படி தி.க தோழர்களை யாரையோ நோக்கி ஓடவிடப் பார்க்கிறார் தமிழர் தலைவர்.

இந்த அறக்கட்டளை அரசுக்குப் போகவேண்டும் எனச் சொல்லவரவில்லை.  எத்தனையோ சாமியார்கள், எத்தனையோ பார்ப்பனர்கள் இந்த நாட்டில் கல்விநிறுவனங்களை வைத்துக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பெரியார் அறக்கட்டளை தோழர் வீரமணி காலத்தில்  பெரியார் தொண்டர்களுக்குப் பயன்படவில்லை. பெரியார் கொள்கை பரவ போதிய அளவு பயன்படவில்லை. ஏதோ வேலை நடக்கிறது. கடவுள் மறுப்பை முன்னிறுத்தி இன்றும் பிரச்சாரம் நடக்கிறது. “பார்ப்பான்” என்ற சொல்லை இன்னும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இந்த அளவுக்காவது பணியாற்ற இன்று வேறொரு அமைப்பு இல்லை. பெரியாரை முன்வைத்து ஒரு போராளிக்கூட்டம் பெரியார் தி.க.வாக வளர்கிறது. அரசை அனுசரித்து காரியம் சாதிக்கும் அமைப்பாக தி.க இருந்துவிட்டுப் போகட்டும். பெரியாரால் முறையாக அறக்கட்டளையாக எழுதி பாதுகாக்கப்பட்டுள்ள சொத்துக்களும் அப்படி எழுதி வைக்கப்படாத வாரிசற்ற சொத்துக்களும் உங்களுக்கே பக்கபலமாக இருக்கட்டும். ஆனால் பெரியார் அந்தச் சொத்துக்களை எந்த நோக்கத்திற்காக உருவாக்கினாரோ அந்த நோக்கங்களுக்கு இனியாவது பயன்படவேண்டும். அப்படிப் பயன்படாவிட்டால் அது அரசுக்குப் போனால்தான் என்ன தவறு என்பதையும், அரசுக்குப் போவதற்கு பல நியாயங்கள் இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டவே இதைச் சொல்கிறோம். பூனைக்குட்டிகள் வெளியேறிவிட்டன; பெருச்சாளிகளைப் போல விழிபிதுங்கி நிற்கவேண்டாம்.  

 - கருப்புப்பூனை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

உட்பிரிவுகள்