புற்றுநோயை சரியான சமயத்தில் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்று தொடர்ந்து மருத்துவமனைகள் கூறிவருகின்றன. புதிய தொழில்நுட்பம் தங்களிடம் இருக்கிறது என்று பறைசாற்றும் மருத்துவமனைகள் பெருகி வருகின்றன.

 இருதயக் கோளாறுக்கு உடனடி சிகிச்சை, மூன்று நாட்களில் நடக்கலாம் என்றெல்லாம் மருத்துவமனைகள் பிரகடனம் செய்து கொள்கின்றன.

 சிறுநீரக மாற்று, டயாலிசிஸ் மருத்துவம் என்று பல்வேறு கோணங்களில் சிகிச்சை முறைகள் விளக்கப்படுகின்றன.

 இவற்றிற்கு ஆகும் செலவு என்ன என்பதை மருத்துவமனைகள் கூறுவதில்லை. தனியார் அரசு மருத்துவமனைகளில் வசதி, மருத்துவ மனைகளின் செலவு மூச்சை முட்டுகிறது. வசதிகள் பெருகினாலும் உயிருக்கு உத்திரவாதம் இருப்பதில்லை. ஏழைகள் சென்றடைந்து உயிரைச் சோதித்துக் கொள்ளும். பணம் இருப் பவர்கள் தனியார் மருத்துவமனை களை இடங்களாக அரசு மருத்துவ மனைகள் இருக்கின்றன. அடைந்து உயிர் பிழைக்க நினைக்கிறார்கள்.

 புற்றுநோய் தாக்கி உயிர் பிழைத்தவர்கள் இருக்கிறார்கள். புற்றுநோயால் இறந்தவர்களும் அதிகம். பரவாமல் இருப்பது. புற்றுநோயில் பல வகைகள் இருக்கின்றன, உடனடி பரவுவது, மெதுவாகப் பரவுவது, வெளிக் காட்டிக் கொள்வது, வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது என்று பல வகைகள் இருக்கின்றன. அடைந்து பல ஆண்ட முழுக்கு குணம்கள் கழித்து மீண்டும் புற்றுநோயால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம்.

 புற்றுநோய்க்கு ஆகும் செலவு கடுமையானது. எத்தனையோ நடுத்தர குடும்பங்கள் தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை பெற்று சொத்தை இழந்து வறுமையில் சிக்கி வாழ்வதே வீணோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

 உலகில் எத்தனையோ நோய்கள் இருக்கின்றன. வாழவேண்டும் என்றால் மருத்துவம் பார்க்கவேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒவ்வொருவருக்கும் மருத்துவக் காப்பீடு உண்டு. இந்தியாவில் அது போல் இல்லை. அரசு மருத்துவ மனைகளில் இன்னும் உயிருக்கான நம்பிக்கை இல்லை. ஏழைகள் சென்று மருத்துவம் பெறலாம். வசதி இருப்பவர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குச் சென்று பணம் இழந்து உயிர் பெறலாம். அல்லது உயிர் இழக்கலாம்.

  ஒவ்வொரு தனி மனிதனுக்கான மருத்துவச் செலவுகளை அரசு ஏற்பது இன்னும் சாத்தியம் ஆகாமல் இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் அத்தனை அரசுகளும் ஒன்றிணைந்தால் அத்தனை மனிதர்களுக்கும் மருத்துவச் சேவை வழங்க முடியும். மனித இனம் வளர்ந்துவிட்டதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் இன்னும் சக மனிதனை சாக அனுமதிக்கும் மனப்போக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

 உயிர் படைக்கும் ஆசை மனிதனுக்குள் இருக்கிறது. மனிதன் மனிதனைப் படைக்க விரும்புகிறான். இது போன்ற விருப்பம் ஏன் உருவாகிறது என்பதை ஆராய இன்னும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படலாம்.

 உயிர் படைப்பதால் பொருள் படைக்க வேண்டியிருக்கிறது. பொருள் படைக்க தனி விதிமுறைகள் பொருள் படைக்க இருக்கின்றன. பணி சரியாகச் செயல்படுகிறதா என்று அரசு இயந்திரம் கண்காணிக்கிறது.

 உயிர் பெற்றுவிட்டதால் உயிர் இழக்க மனிதன் விரும்புவதில்லை. யாரும் விரும்ப மாட்டார்கள். போர் புரிந்து எப்படியாயினும் உயிர் வாழ்ந்தாக வேண்டும், அதிகாரம் செலுத்தி, பிச்சை எடுத்து உயிர் வாழ்ந்தாக வேண்டும்.

 உயிர் வாழ விரும்பினால் சிக்கல் வரும். நோய் வரும். அதையெல்லாம் வெற்றிக்கொள்ள ஆசை வரும். இவற்றைத் தீர்க்க அதிகாரம் தேவை. அரசாங்கங்கள் தேவை. தேசியமயம், உலகமயம் போன்ற அமைப்புகள் தேவை.

 உலகமயமாதல் என்பது பெரும் பணக்காரர்கள் பரிமாற்றம் செய்து லாபம் அடையும் வழிமுறையாக இருக்கிறது அல்லது உலகமயமாதல் என்பது பெரிய நிறுவனங்கள் ராணுவ ஆயுதங்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வணிகமாக இருக்கிறது.

 பசித்த மனிதரைக் காப்பாற்ற உலகமயமாதல் உதவுவதில்லை. வறுமையால் மனிதன் இறப்பது குறித்து பதிற்கு வெட்கம் இல்லை. உலக சமூகச் சித்தவர்களைவிட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலகம் முழுதும் குறைவாகத்தான் இருப்பார்கள்.

 ஒரு நாடு மற்ற நாட்டு நோயாளியை பராமரிக்காது. தனிநாடு, தனி இனம், தனி மதம், தனி ஜாதி என்ற பிரிவுகள் இன்னும் ஆதிகாலத்தை கழிக்க நினைக்கும் மனித இனத்தின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. பசியாலும் நோயாலும் பாதிக்கப்பட்டவர்களைப் பேணுதல் சமூக சேவையாக, பொதுச்சேவையாகக் கருதப்படுகிறது. அது மனித இனத்தின் வழிமுறை, கடமை என்று அடையாளப்படுத்தப்படுவதில்லை.

 அரசாங்கங்கள் மொத்த பொருளாதார வளர்ச்சியின் (ஜிடிபியின்) மையமாகிவிட்டன. தனி மனித இருப்பு என்பது ஒரு மாயையாக இருக்கிறது. இந்த மாயை கலைய பல ஆண்டுகள் ஆகலாம்!

Pin It