குழந்தைகள் வாழும் உரிமையைப் பாதுகாப்போம்... வாரீர்!
Dr.S.வெங்கடாசலம்
ஆங்கில தடுப்பூசி மருத்துவக் கோட்பாடு நான்கு அடிப்படைக் கருத்துக்களை முன்னிறுத்துகிறது. 1. தடுப்பூசி மருந்துகள் ஆற்றல் மிக்கவை. 2. ஒப்பிட்டளவில் தடுப்பூசிகள் தீமையற்றவை 3. பல தொற்று நோய்களின் வீழ்ச்சிக்கு தடுப்பூசி களே காரணம் 4. கொள்ளை நோய்கள் மற்றும் ஆபத்தான நோய்களைத் தடுக்க நடைமுறைச் சாத்தியமான ஒரேவழி தடுப்பூசி களே.
சுற்றிச்சூழ்ந்த மரணத்திலிருந்து மனித குலத்தை காப்பாற்ற வந்த தேவமைந்தர்களின் சொற்களைப் போல உதிர்க்கப்பட்ட இக்கருத்து களில் ஒன்றில் கூட உண்மை கிடையாது. இவை அனைத்தும் அழகிய பொய்கள்.
பிஞ்சுக் குழந்தைகளிடம் காணப்படும் திடீர் மரண நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்த மேனாட்டு மருத்துவ நிபுணர்கள் “Sudden Intants Death Syndrom (SIDS) ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகளோ, தடுப்பு மருந்துகளோ அடுத்தடுத்து அளிக்கப்படுவதின் விளைவு” என்று சுட்டிக் காட்டு கின்றனர். இது மட்டுமா? சிறுபிராயத்திலேயே உடலில் முதுமை ஏற்படுதல், ஒவ்வாமைகள், புற்று, குருதிப்புற்று, பக்கவாதம், சதைக்கட்டிகள் தோன்றுதல், மூட்டுவாதம், மூளை-நரம்பியல் கோளாறுகள் தோல்நோய்கள்... என ஏற்படுத்தும் விளைவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
DPT Vaccineல் ஓர் அங்கமாகிய கக்குவான் இருமலுக்கான தடுப்பு மருந்தால் எண்ணில டங்காத நரம்பியல்சிக்கல்களும், பரவலாக மரணங்களும் ஏற்படுகின்றன. DPT தொடர்ந்து சம்பவித்த மரணங்கள் (SIDS) குறித்து உலகம் முழுவதும் பல்வேறு புகார்கள் குவிந்து கிடக் கின்றன. DPTஐத் தொடர்ந்து சில குழந்தைகள் அழுது கொண்டேயிருக்கிறது; சில குழந்தைக ளுக்கு வலிப்பு வந்துவிடுகிறது.
“அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகளால் 10,000 திடீர் சாவுகள் நிகழ்கின்றன. Pertussis vaccine is the most likely villain” என்று புகார் கூறுகிறார் DR. Mendal Sohn M.D., (காண்க www.vaclib.org)
“மனித வாழ்வின் விலைமதிக்க முடியாத செல்வம் குழந்தைகளே. நாம் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியவர்கள் அவர்களே. தயது செய்து தடுப்பூசிகள் போடும் முன் நன்கு ஆராய்ந்து செயல்படுங்கள்” என்று வேண்டுகோளை முன் வைக்கிறது VRAN என்ற கனடா தேசத்தின் அமைப்பு. இதன் விரிவாக்கம் Vaccination Risk Awareness Network. தடுப்பூசிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உருவாக்கிய ஓர் பிரச்சார நிறுவனம். (இதன் பணிகள், செய்திகள் அறிய உதவும் வலைதள முகவரி www.vran.org)
தடுப்பூசிகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் முக்கிய நரம்பியல் பாதிப்புகள் ADHD & AUSTISM. ஏற்கனவே இத்தகைய கோளாறுகள் ஓரளவு உள்ள குழந்தைகள் தடுப்பூசிகளுக்குப்பின் அதிகளவு பாதிக்கப்படுவதையும் ஆரோக்கியமான குழந்தை களிடம் இந்நோய்கள் புதிதாக ஏற்படுவதையும் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அமெரிக்காவின் தடுப்பூசி வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் (U.S. Vaccine Court) 4800 குடும்பங்கள் நஷ்டஈடு கோரி விண்ணப்பித்துள்ளன. 1980ல் தோற்றுவிக்கப்பட்ட தடுப்பூசி பாதிப்பு நிவாரணத் திட்டம் அடிப்படையில் நிவாரணமும், நஷ்டஈடும் கோரி ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்தியாவில் இத்தகைய சிறப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் இல்லை. ஏழை இந்தியர்கள் எங்கு போய் முறையிடு வார்கள்?
எதிர்கால சந்ததியினரின் உயிரோடு விளையாடும் தடுப்பூசி எனும் மரண விளையாட்டை இனி எத்தனை காலம் நாம் அனுமதிப்பது? ஆங்கில மருத்துவமும், பகாசுர மருத்துவக் கம்பெனிகளும் கைகோர்த்து பொய் பிரச்சாரங்கள் மூலமாகவும், அதிகாரங்கள் மூலமாகவும் நடைபெறும் தடுப்பூசி மருத்துவத் தாக்குதலிருந்து எப்படி விடுபடுவது?
மாற்றுமருத்துவத் தடுப்பு மருந்துகளை ஊரறிய, உலகறிய எடுத்துச் செல்லவேண்டும். இலவசமாகவோ, மிகக் குறைந்த கட்டணத் திலோ சூழலுக்கேற்ப மாற்றுமருத்துவத் தடுப்பு மருந்துகளை குழந்தைகளுக்கும், மாணவ மாணவியர்களுக்கும், பொதுமக்களுக் கும் வழங்கவேண்டும். மக்களும் அரசுகளும் மாற்று மருத்துவ தடுப்பு மருந்துகளையே முழுமையாய் நம்பிப் பயன்படுத்தும் காலம் மலரச் செய்ய வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|